ஞாயிறு, 6 ஜூன், 2010

கர்கரே கொலை:நீதிமன்றத்தின் விமர்சனம் பத்திரிகைகள் மூடிமறைத்தன

மும்பை:கடந்த மாதம் மும்பை தாக்குதல் வழக்கில் தீர்ப்பு வழங்கும் பொழுது ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே கொலைத் தொடர்பாக நீதிமன்றத்தின் விமர்சனங்களை பத்திரிகைகள் மூடிமறைத்துள்ளன.



மே 6 ஆம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எல்.தஹ்லயானி தீர்ப்பு வழங்கும் பொழுது பாகிஸ்தானைச் சார்ந்த அஜ்மல் கஸாபிற்கு தூக்குத்தண்டனை வழங்கியதை மட்டுமே பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றன என ஹார்ட் நியூஸ் மாகஸின் தெரிவிக்கிறது.


கொலை வழக்கு, தேசத்திற்கெதிரான போர், சட்டவிரோத செயல்பாடுகள் தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் செய்தது ஆகியவைதான் கஸாபிற்கெதிரான குற்றச்சாட்டுகள்.


ஹேமந்த் கர்காரேயின் உடலிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் எவருடைய துப்பாக்கியிலிருந்து வெளிவந்தது என்பதை கண்டறிவதில் பாலிஸ்டிக் வல்லுநர்கள் ஏன் தோல்வியடைந்தனர் என நீதிபதி தஹ்லயானி தீர்ப்பு வழங்கும் வேளையில் மும்பை போலீசாரிடம் வினா தொடுத்துள்ளார்.


கர்காரே, விஜய்சாலஸ்கர், அசோக் காம்தே ஆகியோரின் கொலைக்கு சாட்சியான கான்ஸ்டபிள் ஜாதவ் வாக்குமூலத்தை மாற்றிக் கூறியதுக் குறித்தும் நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.


உயர்போலீஸ் அதிகாரிகளின் கொலையை நேரில் கண்ட ஒரே சாட்சியான ஜாதவ் பல முறை தான் முதலில் அளித்த வாக்குமூலத்திலிருந்து பல்டியடித்திருந்தார்.


உயர்போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட காமா மருத்துவமனையில் உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதனை ஜாதவின் வாக்குமூலத்திலிருந்து புரிந்துக்கொள்ள முடியவில்லை.


கர்காரேயை கொன்றது கஸாபும், அபுஇஸ்மாயிலும் இல்லாவிட்டால் யார் கர்காரேயைக் கொன்றார்? என நீதிபதி வினா எழுப்பியுள்ளார்.


2008 ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பிற்கு பின்னணியில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் உள்ளனர் என்பதை முதன்முதலில் கண்டறிந்தவர் கர்காரேயாவார்.


அதனைத் தொடர்ந்து அவருக்கு பல முறை மிரட்டல்கள் வந்தன. தேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஹிந்துத்துவாவாதிகள் தான் என்பதை கர்காரே கண்டறிந்ததைத் தொடர்ந்து தற்பொழுது அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித் ஆகிய குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் என்பது புலனாய்வில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.


கர்காரேயின் புல்லட் ஃப்ரூஃப் ஜாக்கெட்டும், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் காணாமல் போயின. கர்காரேயின் மனைவி கவிதாவும், காம்தேயின் மனைவி வினிதாவும் நடத்திய முயற்சியின் பலனாக இச்சம்பவம் வெளியானது.


கர்காரேயின் உடலிலிருந்து இரண்டு தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த தோட்டாக்கள் எங்கே?என்பதுக் குறித்தோ கர்காரேயின் உடலில் பாய்ந்திருந்த இதர மூன்று தோட்டாக்கள் குறித்தோ எந்த விபரமும் இல்லை என ஹார்ட் நியூஸ் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
அரசு தரப்பால் உதாசீனப்படுத்தப்பட்ட நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்கள்

(பழையச்செய்திதான் என்றாலும் மூடி மறைக்கப்பட்டசெய்தி என்பதால் இங்கு பதிவிடப்படுகிறது)

மும்பைத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளல்ல, மாறாக யூதர்களே என்றும் அவர்கள் நரிமன் ஹவுசில் தங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

26/11 அன்று லியோபோல்டு கஃபேயில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட அனாமிகா குப்தா என்பவர் கோர்ட்டில் அளித்த சாட்சியத்தை காவல்துறை கண்டுகொல்லாததேன்? தீவிரவாதிகளின் அடையாள அணிவகுப்பிற்கு நேரடி சாட்சிகளை அழைக்காததேன்? என்று பலவித கேள்விகள் மக்களிடத்தில் எழுந்துள்ளன.

கடல் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் வந்திறங்கினர் என காவல்துறை சொல்ல, அனாமிகா குப்தா, அஜ்மல் கஸாபை தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே யூதர்களின் இருப்பிடத்தில் வைத்து பார்த்தேன் என்று சாட்சி கூறியுள்ளார். ஆனால் அதை போலீசார் கண்டுகொள்ளவே இல்லை. போலீஸ் மட்டுமல்ல, தொலைக்காட்சி சேனல்கள் கூட அவரது பேட்டியை ஒளிபரப்பவில்லை.

மும்பையில் பியூட்டிசியனாக இருக்கும் அனாமிகா குப்தா, மும்பை தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அஜ்மல் கஸாப் உட்பட நான்கு பேரை கொலாபா பகுதியிலுள்ள யூதர்களின் தலைமையகமான நரிமன் ஹவுசில் வைத்து பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நரிமன் ஹவுசும் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தது. தாக்குதலை நடத்தியது நரிமன் ஹவுஸ் தான் என்றும் அதுபற்றிய விசாரணையில் போலீஸ் கண்களை மூடிக்கொள்கிறது என்றும் அந்த விசாரணையில் என்னுடைய சாட்சியத்தை ஏன் ஏற்கவில்லை என்றும் அனாமிகா கேள்வி எழுப்பி உள்ளார். நரிமன் ஹவுசின் அடுத்து இருக்கும் கோளிவாடாவிலுள்ள ஆஸாபாய் கட்டிடத்தில்தான் அனாமிகா வசித்து வந்தார். அவரும் அவரது தோழிகளான ரசிகா உபாத்யாய், மீனாக்ஷி தத்தானி ஆகியோர் லியோபோல்டு கஃபேயின் தினசரி வாடிக்கையாளர்கள்.

வழக்கம் போல 2008 நவம்பர் 26ம் தேதி இரவில் அனாமிகாவும் தோழிகளும் அங்கு பேசிக்கொண்டிருந்த வேளையில்தான் வெடிகுண்டு தாக்குதலும் துப்பாக்கிசூடும் நடைபெற்றது. அந்த தாக்குதலில் அனாமிகாவின் வயிற்றில் மூன்று புல்லட்டுகள் துளைத்தன. வெடிகுண்டுகளால் கால்களிலும் காயம் ஏற்ப்பட்டது. ரசிகாவின் இடது கையிலும் குண்டு பாய்ந்தது. வெடிகுண்டுகளால் சரிகாவின் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் மறு வாழ்வு பெற்ற அனாமிகா,தான் மீண்டு வந்தது முதல் சில உண்மைகளை சொல்லி வருகிறார். ஆனால் போலீஸ் அதை சட்டை செய்யவில்லை.

அதுமட்டுமல்ல நரிமன் ஹவுசில் தீவிரவாதிகளை கண்டேன் என்று வெளியில் சொல்லாதீர்கள் என்று உபதேசமும் செய்துள்ளது.
நடந்த சம்பவத்தை அவரே கூறுவதை கேளுங்கள்.





STAR TV, NDTV, ZEE NEWS, TIMES OF INDIA, HINDUSTAN TIMES போன்றவற்றிற்கு இந்த உண்மைகளை நான் கூறியபோதும் அவர்கள் அதை ஒளிபரப்பவில்லை. ஏன் என கேட்டபோது நீங்கள் சொன்னதை நாங்கள் நம்புகிறோம், ஆனால் எங்களுடைய மேலிடம் அதை அனுமதிக்கவில்லை என்று சொன்னார்கள்.

ONE NEWS தொலைக்காட்சியில் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியவுடன் போலீஸ் வந்து என்னை விசாரித்தார்கள். எனினும் எதுவும் நடந்திடவில்லை. நவம்பரில் இரண்டாவது விசாரணை என்னிடம் நடந்தது. குற்றப்பிரிவின் அடிஷனல் போலீஸ் கமிஷனர் தேவன் பாரதியின் தலைமையில் நடந்த அந்த விசாரணையில் நான் இவற்றை சொன்னபோது, போலீஸ் ஏற்கனவே இது பாகிஸ்தானியரின் சதி என முடிவு செய்துவிட்டதால் அதிகபிரசங்கித்தனமாக செய்திகளை சொல்லி போலீசை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று தேவன் பாரதி குறிப்பிட்டார்.

பின்னர் எனக்கு மனநிலை சரியில்லை என்றும் இவர் விளம்பரத்திற்காக இவ்வாறு சொல்கிறார் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. எனது தாய் உட்பட எனது குடும்பத்தினரை மிரட்டுகின்றனர்.

கஸாப், லியோபோல்டில் தாக்குதல் நடத்தியவன், பைக்கில் வந்தவர்கள் போன்ற தீவிரவாதிகளை எனக்கு தெரியும் என்றபோதும் தீவிரவாதிகளை அடையாளம் கட்டும் அணிவகுப்பிற்கு போலீஸ் என்னை அழைக்கவில்லை என்றும் அனாமிகா குறிப்பிடுகிறார்.

source:rediff,nidur

கருத்துகள் இல்லை: