ஞாயிறு, 6 ஜூன், 2010

'நாங்கள் தீவிரவாதிகள் அல்ல;- குமுறும் பட்கல் மாவட்ட முஸ்லீம்கள்

பெங்களூர்:பட்கல் மாவட்டத்தின் பெயரை கெடுப்பதற்காகத்தான் அப்துஸ்ஸமத் பட்கல் மும்பை ஏ.டி.எஸ்ஸால் சதி செய்து கைது செய்யப்பட்டதாக பட்கல் மாவட்ட மதத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அப்துஸ்ஸமதின் கைதை உதாரணம் காட்டி அத்தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்;"முஸ்லீம் இளைஞர்கள் எப்பொழுதும் தன் தாய், தந்தையர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் சந்தேகம் கொள்ளும் வகையில் உள்ள நபர்களிடமோ அல்லது வகுப்புடனோ பழகுவதிலிருந்து இளைஞர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் மூலம், நமக்கு எதிராக சதிகள் நடந்தாலும் ஓர் அளவு நம்மைக் காப்பாற்றி கொள்ள இயலும்" என்றும் அத்தலைவர்கள் கூறியுள்ளனர்.அதேபோல பெற்றோர்களும் அவர்களின் பிள்ளைகளுடன் தொடர்பில் இருக்கும் படி அவர்கள் மேலும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பட்கல் மக்களுக்கெதிராக பெரிய அளவில் சதிகள் திட்டமிடப்பட்டு வருவதாக தெரவித்த 'ராஷ்ட்ரிய சஹாரா' நாளிதழ் நிருபர் அஜீஸ் பரணி இன வெறியர்கள் இன்று முஸ்லீம் இளைஞர்களை குறிவைத்து செயல்படுவதாக தெரிவித்தார். இன்னும் குறிப்பாக வளைகுடாவில் வாழும் இளைஞர்களைத் தான் அவர்கள் குறிவைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று ஊடகமும் உண்மைகளை மறைத்து வருவது துரதிஷ்டவசமானது என்றார். பட்கல் முஸ்லீம்கள் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும், தங்கள் இஸ்லாத்தின் பெயரை கெடுப்பதற்காக அவர்கள் ஒரு போதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடவே மாட்டார்கள் என்று அஜீஸ் சூசகமாகத் தெரிவித்தார்.

அஜீஸ் பரணி தன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,'பட்கல் முஸ்லீம்கள் அமைதி, இணக்கம் மற்றும் மனித நேயம் கொண்டவர்கள். ஆனால் இன்று இம்மாவட்டத்தை 'தீவிரவாதிகளின் கூடம்' என்று சித்தரிக்கும் போக்கு நிலவுவதாக அவர் கூறினார்.

'இந்த சதிகளை நாம் தைரியமாக சந்திக்க வேண்டும். இன வெறியர்களின் இக்கூற்றுக்கள் நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்க கூடாது' என்றும் கூறினார் அஜீஸ்.

குஜராத், பெங்களூர் போன்ற மாநிலத்தில் தாக்குதல் நடத்தியதாக ரியாஸ் பட்கல் மற்றும் அவர் சகோதரர் இக்பால் பட்கலின் மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அப்துஸ்ஸமத் பட்கல் ரியாஸ் பட்கலின் சகோதரராவார்.
source:Siasat

கருத்துகள் இல்லை: