பெங்களூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெங்களூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஆகஸ்ட், 2010

மஃதனி கைது - விமானம் மூலம் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார்

கொல்லம்,ஆக17:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியைக் கைது செய்வது தொடர்பாக கடந்த பத்து நாட்களாக நீடித்து வந்த இழுபறி இன்று பிற்பகலில் முடிவுக்கு வந்தது.அவரை கைது செய்த கேரள போலீஸார், கர்நாடக தனிப்படையிடம் ஒப்படைத்தனர். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மஃதனி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார் மஃதனி. ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை.இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் மஃதனியைக் கைது செய்ய டிஎஸ்பி சித்தராமையா தலைமையிலான போலீஸ் படையினர் கொல்லம் வந்து கடந்த ஒரு வாரத்திற்கும மேலாக கைது செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்றுடன் மஃதனியை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கெடு முடிவடைகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென மஃதனிக்கு உடல் நலம் சரியில்லை என்று தகவல் பரவியது. ஆம்புலன்ஸும், டாக்டர்களும் வரவழைக்கப்பட்டனர். இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப் போவதாக செய்திகள் பரவியது.

ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ரத்த மாதிரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினர். தற்போதைக்கு அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. ரத்த சோதனைக்குப் பின்னரே முடிவு செய்வோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பெங்களூர் இணை ஆணையர் அலோக் குமார், துணை ஆணையர் ஓம்காரய்யா ஆகியோர் கொல்லம் வந்தனர். மாவட்ட எஸ்.பி. ஹர்ஷிதாவை சந்தித்த அவர்கள், மஃதனியைக் கைது செய்ய வேண்டியது அவசியம். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த கால அவகாசம் குறைந்து கொண்டே வருகிறது. ஒன்று அவர் சரணடையட்டும் அல்லது நாங்கள் கைது செய்ய வேண்டும். இரண்டில் ஒன்று நடந்தாக வேண்டும். இனியும் தாமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று காலை செய்தியாளர்களை அழைத்துப் பேசினார் மஃதனி. அப்போது அவர் கூறுகையில், நான் சட்டத்தை மதிக்கிறேன். இதனால் கோர்ட்டில் சரணடைவேன் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து அன்வருசேரியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றிலும் போலீஸார் பெருமளவு குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் பலத்த இழுபறிக்குப் பின்னர் அவரை கேரள போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர் அவர் கர்நாடக தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து இன்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் பெங்களூர் கொண்டு சென்றனர் கர்நாடக போலீஸார்.

திங்கள், 28 ஜூன், 2010

பி.ஜே.பி-யின் ஒருதலைபட்சக் கொள்கை: கர்நாடக லோகயுக்தா நீதிபதி ராஜினாமா

பெங்களூர்:கர்நாடகா லோகயுக்தா பதவியிலிருந்து நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தீடீர் ராஜினாமா செய்துள்ளார்.

பெருகிவரும் ஊழல்களுக்கெதிராக பி.ஜே.பி. அரசின் ஒருதலைபட்சமான கொள்கையை காரணம் காட்டி, தன் பதவி ஆயுள் இன்னும் ஓர் ஆண்டு இருக்கும் நிலையில், ஹெக்டே ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் மாற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஹெக்டே தன் ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், இவ்வேண்டுகோளை ஹெக்டே நிராகரித்து விட்டதாக தெரிகிறது.

கடந்த 2006ம் ஆண்டு ஹெக்டே லோகயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டார். சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டு பி.ஜே.பி. அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களின் ஊழல்களை நிரூபித்தும், ஆளும் பி.ஜே.பி. அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பல அமைச்சர்களின் அலுவலகத்தை ரெய்டுகள் செய்துள்ள ஹெக்டே, பி.ஜே.பி. எம்.எல்.ஏ. சம்பங்கிவிற்கு எதிராக வழக்கையும் தொடர்ந்துள்ளார். ஆனால் ஹெக்டேவின் அனுமதி இல்லாமலேயே இவர்கள் அனைவரும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் சிலருக்கு பதவிகளும் , பரிசுகளும் கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே லோகயுக்தா பதிவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இதனிடையே, பி.ஜே.பி. அரசின் ஒருதலைபட்ச கொள்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊழல்கள், பொய் வழக்குகள், பாலியல் குற்றச்சாட்டுக்கள், விவசாயிகளை கொல்லுதல், மதக்கலவரத்தை தூண்டுதல், மதக்கலவரத்தை தூண்டும் சமூக விரோதிகளின் மேல் நடவடிக்கை எடுக்காமை, லோகயுக்தா பதவிகளை பறித்தல் என நீண்ட ஒருதலைபட்ச பட்டியல் நிறைந்த கர்நாடக அரசை மத்திய அரசு உடனே தூக்கி எறியவேண்டும் என்றும் பி.எஃப்.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது.
Twocircles

செவ்வாய், 18 மே, 2010

கர்நாடகா உள்ளாட்சித் தேர்தல்:65 இடங்களில் எஸ்.டி.பி.ஐ வெற்றி

பெங்களூர்:கர்நாடகாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா 65 இடங்களில் இதுவரை வெற்றிப்பெற்றுள்ளது. முழுமையான விபரம் நாளைத் தெரியவரும்.

10 மாவட்டங்களில் 368 வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். தெற்கு கர்நாடகா-39, குர்க்-8, உடுப்பி-11, தும்கூர்-3, ஹம்ஸூர், ஹாஸன், ராம்நகர், கோலார் ஆகிய இடங்களில் ஒரு வார்டிலும் எஸ்.டி.பி.ஐ வெற்றிப் பெற்றுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த மே மாதம் 8.12 தேதிகளில் 80,159 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் 2.32 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

கண்ணீர் விட்ட தம்பி காவேரி தண்ணீர் தர சம்மதிப்பாரா?

பெங்களூர்: எனக்கு வயது 86, எதியூரப்பாவுக்கு 67. நான் அவரை தம்பி என்றும் அழைக்கலாம் என்று முதல்வர் கருணாநிதி கூறியதைக் கேட்டு, கர்நாடக முதல்வர் எதியூரப்பா கண் கலங்கினார்.

பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறப்பு தமிழக, கர்நாடக மாநில உறவுகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக வாழ் தமிழர்கள் பெரும் எழுச்சியுடன் கலந்து கொண்டனர்.

அனைவரும் மிகுந்த நெகிழ்ச்சியுடனும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் காணப்பட்டனர். இது விழா மேடைக்கும் பரவியது.

முதல்வர் கருணாநிதி சிறப்புரை நிகழ்த்துகையில், எதியூரப்பாவை தனது தம்பி என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்தார்.

கருணாநிதி பேசுகையில், எனக்கு வயது 86. இவருக்கு (எதியூரப்பா) 67. நான் இவரைத் தம்பி என்றும் அழைக்கலாம்.

எனவே, மூத்த சகோதரரும், இந்த இளைய சகோதரரும் சேர்ந்து திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து புதிய முன்னோடியை ஏற்படுத்தியுள்ளோம். வரலாறு படைத்துள்ளோம்.

இதில் எந்த அரசியலும் இல்லை. அற இயல்தான் உள்ளது. இதை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள முன்வர வேண்டும் என்றார் கருணாநிதி.

கருணாநிதியின் பேச்சை வாய் விட்டு சிரித்து மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த எதியூரப்பா, தன்னைத் தம்பி என்று கருணாநிதி அழைத்ததைக் கேட்டதும் கண் கலங்கினார்.
விவசாயின் கண்ணீர் துடைக்க காவேரி தண்ணீர் தந்தால் நெஞ்சில் ஈரமிருப்பதாக ஒத்துக்கொள்ளலாம் காவிகள் வடிப்பதெல்லாமே நீலிக்கண்ணீர் அல்லவா?