சனி, 29 டிசம்பர், 2012

தஞ்சை நகர ஐக்கிய ஜமாத் சார்பில் `இஸ்லாமிய திருமணங்களும், இன்றய நடைமுறை சிக்கல்களும்’ நிகழ்ச்சி - பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு

தஞ்சை நகர ஐக்கிய ஜமாத் சார்பில் `இஸ்லாமிய திருமணங்களும், இன்றய நடைமுறை சிக்கல்களும்’ என்ற தலைப்பில் தஞ்சாவூர் கீழவாசல் பாம்பாட்டித் தெரு பள்ளிவாசல் 23.12.12 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு, அனைத்து ஜமாத் பொறுப்பாளர்கள் மற்றும் பிரமுகர்களுக்கான சிற்ப்புக் கூட்டம் நடைப்பெற்றது.
ஐக்கிய ஜமாத் தலைவர் சகோ.என்.ஷேக் சிராஜுதீன் தலைமையேற்க, பள்ளி இமாம், மெளலவி மன்சூர் ஆலிம் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. மாவட்ட அரசு டவுன் ஹாஜி சகோ.சையத் காதர் உசேன் முன்னிலைவகிக்க, பள்ளிவாசல் பொறுப்பாளர் வழக்கறிஞர் பசீர் அஹமது வரவேற்ப்புரையாற்றினார்கள், திருமறையும், நபிவழி கூறும் திருமணங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவர் சகோ.மெளலவி அஹமது மிஸ்பாஹி விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
இஸ்லாமிய திருமணங்களில், இன்றைய நடைமுறைச் சிக்கல்கள் என்ன? அவற்றை கலைய எடுத்திருக்கும் முயற்சிகள், ஜமாத்துகள் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி மமக சட்டமனற குழு தலைவர் முனைவர்.டாக்டர். எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் விபரமாக உரையாற்றி அதன் பின் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஜமாத்தார்களின் சந்தேகங்களுக்கு பதில்கூறினார்கள்.
அல் எஹ்சான் ஜமாத் தலைவர் சகோ.எஸ்.முஹம்மது பாருக் நன்றி கூறினார்கள். ஐக்கிய ஜமாத் செயலாளரும், மனிதநேய வனிகர் சங்க மாநிக செயலாளருமான சகோ.ஜெ.கலந்தர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள். ​

கருத்துகள் இல்லை: