அருந்ததிராய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருந்ததிராய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்

26IN_ROY_275742e

ஹைதராபாத்:அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிராக பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ஹஸாரேவின் வழிகள் காந்திய வழியாக இருக்கலாம். ஆனால் அவரது கோரிக்கைகள் ஒருபோதும் காந்தியக் கொள்கை அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

’தி ஹிந்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை ஹசாரே மீது சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: ‘நாட்டில் அவசரமாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு விஷயத்தில் கூட ஹஸாரே குரல் எழுப்பவில்லை. தனது மாநிலமான மஹாராஷ்ட்ராவில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக ஹஸாரே வாயை திறக்கவில்லை. ஹஸாரே முன்வைக்கும் லோக்பால் மசோதா காந்தியடிகளின் அதிகார பரவலாக்கல் கொள்கைக்கு எதிரான அடக்கியாளும் சட்டமாகும்.

அரசின் பாரம்பரிய பொறுப்புகள் கார்ப்பரேட்டுகளுக்கும், அரசு சாரா நிறுவனங்களுக்கும் பெருமளவில் பகிர்ந்தளிக்கும் சூழலில் ஹஸாரேவின் லோக்பால் மசோதா கார்ப்பரேட்டுகளையும், அரசு சாரா நிறுவனங்களையும் முற்றிலும் தவிர்த்துள்ளது.

கார்ப்பரேட் ஊடகங்கள் பொதுமக்களின் விருப்பங்களை கட்டுப்படுத்த முயலும் வேளையில் ஊடகங்களையும், கார்ப்பரேட்டுகளையும், அரசு சாரா நிறுவனங்களையும் லோக்பால் மசோதாவின் வரம்பிற்குள் கொண்டுவருவதற்கு பதிலாக ஹஸாரே இவற்றை முற்றிலும் தவிர்த்துள்ளார்.

இடஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ள ’யூத் ஃபார் இக்யுவாலிட்டி’ என்ற அமைப்புடன் ஹஸாரே குழுவினருக்கு தொடர்புள்ளது. இவ்வமைப்பின் கீழ் செயல்படும் அமைப்புகளுக்கு கொக்கோ கோலா, லெமன்ப்ரதர்ஸ் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து பெருமளவிலான பணம் கிடைக்கிறது.

ஹஸாரேவின் குழுவைச் சார்ந்த அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பு ஃபோர்ட் ஃபவுண்டேசனிலிருந்து நான்கு லட்சம் அமெரிக்க டாலரை பெற்றுள்ளது. ஹஸாரேவின் போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் ’இந்தியா எகைன்ஸ்ட் கரப்ஷன்’ என்ற அமைப்பு பெரும் இந்திய நிறுவனங்களிடமிருந்து உதவி பெற்றுவருகிறது. இப்பொழுது ஊழல் வழக்கிலும், இதர குற்றங்களிலும் சிக்கி விசாரணையை எதிர்கொள்பவர்களும் இதில் உட்படுவர்.

ஹஸாரே கைதுச் செய்யப்பட்டவுடன் ஊழலுக்கு எதிரான போராட்டம் எதிர்ப்பு தெரிவிப்பதற்குரிய உரிமைக்கான போராட்டமாக மாறிவிட்டது. ஆனால், இந்த ஆதரவு, போராடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரிஸ்ஸாவின் போஸ்கோ நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலத்தை திரும்ப பெறுவதற்காக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அருந்ததிராய் கூறியுள்ளார்.

வியாழன், 28 அக்டோபர், 2010

68 ஆயிரம் கஷ்மீரிகளை கொன்ற நாடு ஜனநாயக நாடா? குஜராத்தில் 2500 முஸ்லிம்களை கொன்ற நாடு மதச்சார்பற்ற நாடா? அருந்ததிராய் ஆவேசம்...!

டெல்லியில் ‘காஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றினார்.அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக காஷ்மீரிகளின் மூத்த தலைவரான சையத் அலிஷா கிலானி மீது வெறியர்கள் சிலர் காலணி வீசி ரகளை செய்தனர். அதனை முன்னதாக குறிப்பிட்ட அருந்ததி ராய் “என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுது எறிந்து கொள்ளுங்கள்” எனக் கூறியவாறு தனது உரையைத் தொடங்கினார். காஷ்மீரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இடத்தை இந்திய காலனி யாதிக்கம் பிடித்துக் கொண்டது. காஷ்மீர், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி அல்ல. காஷ்மீர் ஒருபிரச்சனைக்குரிய பகுதி தான் என்பதை ஐக்கிய நாடு கள் அவையில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. 68 ஆயிரம் கஷ்மீரிகளைக் கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாயக நாடு என்று கூற உரிமையில்லை.


குஜராத்தில் 2500 முஸ்லிம்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுகூற தகுதியில்லை. வல்லமை மிகுந்த இந்திய ராணுவத்தினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும் கஷ்மீரி இளைஞர்களையும், பெண் களையும், குழந்தைகளையும் பார்த்து ராயல் சல்யூட் செய்யா மலிருக்க முடியவில்லை என அருந்ததிராய் நிகழ்த்திய உரை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இக்கருத்தரங்கில் கவிஞர் வரவரராவ், மனித உரிமை ஆர்வலர் கள் ஷேக் ஷவ்கத் ஹுசைன், அமீத் பட்டாச்சார்யா, என்.வேணு, மாலெம், நஜீப் முபாரகி, சுஜாதோ பத்ரா, பேராசிரியர்கள் எஸ்.எ.ஆர் கிலானி மற்றும் ஜி.என்.ஸாயிபாபா ஆகியோர் உரையாற்றினர். இதனிடையே அருந்ததி ராய் உள்ளிட்டோரின் உரையை வைத்து பாஜக சர்ச்சையை கிளப்பியதை அடுத்து இந்த கருத்தரங்கில் உரையாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தலைநகர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


-அபுசாலிஹ்