திங்கள், 22 ஆகஸ்ட், 2011

துபாய் சர்வதேச அல் குர்ஆன் பரிசை இலங்கை மாணவர் வென்றார்

துபாயின் இடம் பெற்ற 15 வது சர்வதேச அல் குர்ஆன் அவாட் Dubai International Holy Quran Award (DIHQA) பரிசை இலங்கையை சேர்த்த அப்துல் காதர் முகம்மத் அஸ்மி பெற்றுக்கொண்டுள்ளார். என்று துபாய் தகவல்கள் தெரிவிக்கின்றது. கொழும்பு மாளிகாவத்தை சேர்ந்த இவர் மிகவும் சிறந்த முறையில் போட்டில் கலந்து கொண்டு நான்காம் இடத்தை பெற்றுகொண்டதன் மூலம் ரூபா 1,950,000 பரிசையும் வென்றுள்ளார்.

இந்த Dubai International Holy Quran Award (DIHQA) என்ற துபாய் சர்வதேச அல் குர்ஆன் அவாட் 1997 ஆம் ஆண்டு தொடக்கம் 15 ஆண்டுகளாக துபாய்யில் இடம்பெற்று வருகின்றது. இந்த ஆண்டு இடம்பெற்ற போட்டியில் 92 வீதமான புள்ளிகளை பெற்று லிபியா நாட்டை சேர்ந்த போட்டியாளர் காலித் முகம்மத் முதலாமிடத்தை பெற்று 250,000 திர்கம் பரிசு தொகையை வென்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை கட்தார் நாட்டு அப்துல்லாஹ் ஹாமத் அபூ ஷாரிதா பெற்று 200,000 திர்கம் பரிசுத் தொகையையும் துருக்கி நாட்டைச்சேர்ந்த அஹமத் ஷரிகை மூன்றாம் இடத்தைபெற்று 150,000 திர்கம் பரிசுத் தொகையையும் வென்றுள்ளார்கள். இலங்கையை சேர்ந்த ஹாபிழ் அப்துல் காதர் முஹம்மத் கனி முகம்மத் அஸ்மி நான்காம் இடத்தை பெற்று 65,000 திர்கம் பரிசுத் தொகையை வென்றுள்ளார். முகம்மத் அஸ்மி கொழும்பு மருதானை குல்லியதுள் இமாம் ஷாபி மதரசாவை சேர்ந்த மாணவர். இவர் இந்த மதரஸாவின் பதி நான்கு வயது ஹிப்ழ் – அல் குர்ஆன் மனனம் மற்றும் முரத்தல் பிரிவு மாணவனாவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை இடம்பெற்ற போட்டில் முதல் தடவையாக இரண்டு போட்டியாளர்கள் பார்வை குறைபாட்டுடன் கலந்துகொண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளார்கள் என்பது குறிபிடதக்கது. இந்த மாணவனுக்கு அவரின் மதரஸாவுக்கும் lankamuslim.org, knrtimes.blogspot.com தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றது



நன்றி : lankamuslim.org