நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த புகாரி மகன் சாகுல்ஹமீது. இவர் பாளை மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். இவரைப் பார்க்க நேற்று தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், மாவட்ட செயலாளர் காசிம் பிர்தௌசி, மமக மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் ஆகியோர் சென்றனர். அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த வார்டனுக்கும், அவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த தமுமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் சிறை வளாகத்தில் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.
பின்னர் தமுமுகவினர் சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அதில், "பாளை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருக்கும் சாகுல்ஹமீது என்பவரைப் பார்க்க மதியம் 12.30 மனு எழுதி கேட் அருகில் சென்றோம். ஆனால் கேட்டில் பாதுகாப்புக்கு நின்ற வார்டன் நேரம் முடிந்து விட்டதாக கூறி எங்களை ஒருமையில் திட்டினார். எங்களில் ஒருவரது சட்டையைப் பிடித்து வெளியில் தள்ளினார்.
பொதுஇடத்தில் ஒரு அரசு ஊழியர் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டதற்குத் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்
தமுமுகவினரின் திடீர் போராட்டத்தால் பாளை சிறைப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
புதன், 10 ஆகஸ்ட், 2011
சிறை வார்டனைக் கண்டித்து தமுமுக ஆர்பாட்டம்!
பாளையங்கோட்டை சிறைவார்டனைக் கண்டித்து தமுமுகவினர் திடீர் ஆர்பாட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.