புதன், 3 ஆகஸ்ட், 2011

RSS இயக்கத்தின் தலைவர் இந்திரேஷ்குமார் விரைவில் கைது!


AUG 03, புதுடெல்லி: அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் விரைவில் கைது செய்யப்படுவார்.

இவ்வழக்கை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு ஏஜன்சி (NIA) சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரி கையில் குண்டு வெடிப்பில் இந்திரேஷ் குமாரின் பங்கினைக்குறித்து குறிப்பிட்டிருந்தது. இதனைக் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என NIA நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குண்டு வெடிப்பிற்கு முன்பு நடந்த சதித்திட்டத்திற்கு தலைமை வகித்தது, அஜ்மீர் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு நிதியுதவி அளித்தது RSS யின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார்தான் என்பதற்கான ஆதாரங்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்திருப்பதன் அடிப்படையில் அவரை கைதுச்செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. குண்டு வெடிப்பு சதித்திட்டம் தீட்டப்பட்ட ரகசிய கூட்டத்தில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரும் பங்கேற்றுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களில் ஒருவரான சுவாமி அஸிமானந்தா அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாவார். இவர் அளித்துள்ள குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில், இந்திரேஷ்குமார்தான் குண்டுவெடிப்புகளுக்கு தேவையான நிதியுதவியை அளித்ததாக மற்றொரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில்ஜோஷி தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் குண்டு வெடிப்புகளில் இந்திரேஷ்குமாரின் பங்கினைக்குறித்த ஆதாரங்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்தன. பல்வேறு குண்டுவெடிப்புகளில் குற்றவாளியான சுனில்ஜோஷியை ரகசியம் கசிந்துவிடும் என்ற பயத்தில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளே கொலைச்செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது இயக்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ரகசியம் வெளியே வந்து விடக்கூடாது என்பதால் கொலை செய்துள்ளார்கள். மேலும் ஹிந்துத்துவா சித்தாந்தாம் என்பது ஹிட்லர் மற்றும் யூத பயங்கரவாதத்தை ஒத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது.