ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஏப்ரல், 2012

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காவல்துறை

இந்தியாவில் காவல்துறையும், உளவுப்பிரிவும் முஸ்லிம்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்து செயல்பட்டு வருகிறது. எந்தப் பகுதியில் குண்டுவெடித்தாலும், விசாரணை துவங்குவதற்கு முன்பே முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்தி ஊடகங்களின் மூலமாக செய்திகளைப் பரப்பும் நிலையை காவல்துறை அதிகாரவர்க்கம் செய்து வருகிறது.

இதன்மூலம் பொதுமக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற நிலையைக் காவல்துறையும், ஊடகங்களும் உருவாக்குகின்றன. பின்னர் எவ்வித ஆதாரமுமின்றி அப்பாவி முஸ்லிம்களைக் காவல்துறையினர் கைது செய்கின்றனர். 2011 டிசம்பர் 6ம் தேதியன்று அனைத்து பத்திரிக்கைகளும், ‘‘பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இரண்டு பேர் டெல்லியில் கைது, தற்கொலைப் படை பெண் தீவிரவாதியும் கைது என்றும், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொல்ல சதித்திட்டம்’’ என்றும் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டன. முந்தைய நாட்களில் 24 மணிநேர செய்திச் சேனல்களும் பரபரப்பு செய்திகளாக இதனை ஒளிபரப்பின.

இதைப்பற்றி டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிசிபி) அசோக் சாந்த் பத்திரிக்கையாளரிடம் கூறுகையில், ‘பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரண்டு ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இம்ரான் (40), சூஃபியா கன்வான் (38) ஆகியோர் நேபாளம் வழியாக டெல்லிக்கு வந்துள்ளனர். இவர்களை டெல்லி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளோம். இவர்களின் சொந்த ஊர் பாகிஸ்தானிலுள்ள சரீபாபாத். இவர்களை ஐ.எஸ்.ஐ. நன்கு பயிற்சி கொடுத்து இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். இவர்கள் இருவரும் கணவன், மனைவி போன்று போலியான திருமணப் பதிவு நகல் வைத்துள்ளனர்’ என்று குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்றும் டி.சி.பி. அசோக் குறிப்பிட்டார். அதன்பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நான்கு மாதமாக சிறையில் அடைபட்டு பின்னர் 2012 மார்ச் 27ம் தேதி அன்று கடுமையான காயத்தோடு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் இர்பான் மற்றும் சூஃபியா ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதை டெல்லி மாவட்ட தலைமை நீதிபதி விநோத் யாதவ் விசாரித்தார். அந்த விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட இர்பான், தனக்கு நேர்ந்த அவலத்தை நீதிபதியிடம் கதறினார். அவர் கூறியதாவது:

‘‘என்னுடைய சொந்த ஊர் இந்தியாவின் மாநிலமான குஜராத்தில் உள்ள அஹமதாபாத். என்னுடைய தந்தையும், தாயும் வயது முதிர்ந்த நிலையிலும் அஹமதாபாத்திலுள்ள டெல்லி நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். என்னுடைய தந்தை பெயர் யூசுப். என்னுடைய குடும்பம் கடுமையான பொருளாதார கஷ்டத்தில் இருந்த நிலையில் நான் 15 வயதிலேயே பாகிஸ்தானுக்குச் சென்று, துணி வியாபாரம் செய்து வந்தேன். அங்கேயே திருமணமும் முடித்துக் கொண்டேன். என்னுடைய மனைவிதான் சூஃபியா. நான் துணி வியாபாரம் மூலம் செல்வந்தர் ஆனேன். நான் பலமுறை வியாபார நிமித்தமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளேன். நான் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்துள்ளேன்.

உலகளாவிய அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது எனக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஐரோப்பாவிலுள்ள என்னுடைய நண்பர்கள் இந்தியாவிலுள்ள குஜராத் தான் துணிக்கு பிரபலமான இடம், அதனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்கள். இதனால் 2009 ஆகஸ்ட் 3ம் தேதியிலிருந்து 2010 அக்டோபர் 2ம் தேதி வரை இந்தியாவில் தான் விசா எடுத்து தங்கியிருந்தேன். இங்கு தங்கியிருந்த நாட்களில் இந்தியக் குடியுரிமை கோரி குஜராத் அரசு மூலமாக விண்ணப்பித்தேன். மும்பை தாக்குதலைத் தொடர்ந்து எனக்கு விசா மறுக்கப்பட்டது. இதனால் நான் நேபாளில் இருந்து துணி வியாபாரம் செய்ய திட்டமிட்டேன். அதனால், பாகிஸ்தானிலிருந்து நேபாளம் சென்றேன்.

நேபாளுக்கு வந்தவுடன் குஜராத்தில் உள்ள எனது வீட்டுக்கு தொலைபேசியில் பேசினேன். அந்த தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டு, நான் ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் என குற்றஞ்சாட்டி நவம்பர் மாதம் நேபாளத்தில் இருந்து என்னையும் எனது மனைவியையும் டெல்லிக்கு அழைத்து வந்தார்கள். பின்னர் ஒரு மாதம் கழித்து டிசம்பர் 5ம் தேதி நரேந்திர மோடியைக் கொல்ல வந்த பயங்கரவாதி என்று குற்றம்சாட்டி கைது செய்தனர். எங்களை சட்டவிரோத காவலில் வைத்திருந்த நேரத்தில், கடுமையான சித்ரவதை செய்தார்கள்’’ - என்று கண்ணீர்மல்க இம்ரான் கூறினார். நாங்கள் மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்தோம். இன்றைய நிலையோ சமைக்க மண்ணெண்ணெய் கூட வாங்க முடியாமல் கஷ்டத்தில் உள்ளோம் என இர்பானின் தந்தை யூசுப் நீதிமன்றத்தில் கண்ணீர் வடித்தார்.

காவல்துறையின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு பொங்கியெழுந்த நீதிபதி வினோத் யாதவ், சொந்த நாட்டில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்திருப்பவரையே பயங்க ரவாதிகளாக சித்தரிக்கும் காவல்துறையின் செயலைக் கடுமையாகக் கண்டித்ததோடு, நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு செயல்படாது என்று குறிப்பிட்டார்.

இம்ரானின் வழக்கை எடுத்து நடத்த மனிதநேயத்தின் அடிப்படையில் வாதாட வழக்கறிஞர்கள் தயாரா? என வழக்கறிஞர்களைப் பார்த்து கேட்டார். உடனே, வழக்கறிஞர் சுனில் திவாரி இம்ரானுக்காக வாதாட தன்னார்வத்தோடு முன்வந்தார். பின்னர், இந்தியக் குடியுரிமை ஆவணங்களை சமர்ப்பிக்க, இம்ரானுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்மூலம் காவல்துறையின் முஸ்லிம் விரோதப் போக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். இதுபோன்ற காவல்துறை ஓநாய்களின் மீது எந்த நடவடிக் கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால் முஸ்லிம்களுக்கு எதிரான காவல்துறையின் கொடுமைகள் தொடர்கதையாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி குண்டுகளுக்கு பயந்து டெல்லிக்கு வந்து வேலையோ, வியாபாரமோ செய்துவரும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து பொய் வழக்குப் போட்டு, சித்ரவதை செய்து காவல்துறையினர் கைது செய்து நிரந்தரமாக சிறைச்சாலைகளில் தள்ளுகின்றனர்.

இப்போது நடைபெற்று வருகிற ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் செயலாளர் கூறுகையில், இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராகப் பல்வேறு கொடுமைகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளைக் களைய எந்தவொரு முன்முயற்சியையும் காங்கிரஸ் அரசு எடுக்க முன்வருவதில்லை. மத்திய அரசிலும், கேரள மாநிலத்திலும் காங்கிரஸோடு கூட்டணி வைத்திருக்கும் கேரளா முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி கேரள முஸ்லிம் லீக்கின் மத்திய அமைச்சர் இ.அஹமது, சமுதாய உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் ஒருமுறை கூட பேசியதாக தகவல் இல்லை.

முஸ்லிம் லீக்கின் தலைவராக இருந்த பனாத்வாலா சாஹிப் அவர்கள் பலமுறை சமுதாய உரிமைக்காக பாராளுமன்றத்தில் கர்ஜித்துள்ளார். இப்படிப்பட்ட கண்ணியம் மிகுந்த தலைவரான பனாத்வாலா சாஹிப் அவர்க ளையே பாராளுமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுத்தவர்தான் இன்றைய தலைவர் இ.அஹமது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அநீதியை பாரபட்சமின்றி மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். முஸ்லிம் களின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பாதுகாப்புத் துறைகளின் அனைத்து உயர்மட்ட பொறுப்புகளில் முஸ்லிம்களை இடம்பெறச் செய்தால் மட்டுமே ஒரு சமூகத்திற்கு எதிரான கொடுமைகள் குறையும்.

மதத் துவேசத்தோடு நடந்துகொள்கிற காவல்துறை அதிகாரிகளைக் கைது செய்து சிறையில் தள்ளினால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.

--என்.ஏ.தைமிய்யா

நன்றி : http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=1912:2012-04-10-12-52-08&catid=82:indiia&Itemid=199

வியாழன், 5 ஜனவரி, 2012

ஆர்.எஸ்.எஸ்-ன் இரட்டை முகம்



கர்நாடக மாநிலத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சி - காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டது ,

கர்நாடகத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தகி நகரத்தின் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் நாட்டினுடைய கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இதனை மர்ம நபர்கள் செய்துள்ளனர். இதனைக் கேள்விப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து பாகிஸ்தான் கொடியை கீழே இறக்கினர்.
கர்நாடகத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தகி நகரத்தின் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் நாட்டினுடைய கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இதனை மர்ம நபர்கள் செய்துள்ளனர்.

இதனைக் கேள்விப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து பாகிஸ்தான் கொடியை கீழே இறக்கினர். கொடியை பறக்க விட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பொது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் இந்த சம்பவத்தை காரணமாக வைத்து வன்முறையில் ஈடுபட்ட ஹிந்துத்துவ பயங்கரவாத கும்பல் சிந்தகி நகரில் வாகனங்களைத் தாக்கினர்.
மேலும் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள முத்ஹல் என்ற இடத்திலுள்ள ஒரு பள்ளிவாசலும் தாக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கும் பதற்றம் நிலவியது. வன்முறையில் ஈடுபட்ட கும்பல் டயர்களை எரித்து சாலையில் வீசினர். இதனால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு பேருந்துகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் பாகிஸ்தான் கொடியை பறக்கவிட்ட சம்பவத்தில், ரோஹித் இஷ்வர் நவி (18), சுனில் மடிவலப்பா அகசர் (18), அருண் வக்மோரே (20), ராகேஷ் சித்தரமையாஹ் (19), மல்லன் கௌடா (19) , பரசுராம் அசோக் (20) ,ஆகிய தீவிரவாதிகளை போலிஸ் நேற்று கைது செய்தது,
கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக்கொண்டு மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்று கலவரத்தை உண்டாக்க முயற்சித்தது போல் மீண்டும் கலவர வெறியுடன் நாடகமாடிய இந்துத்துவ வெறியர்களின் நாடகம் அம்பலமானது ..
இவர்கள் நினைத்தது நடக்க வேண்டுமென்றால் இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்கவும் தயங்கப்போவதில்லை , மத்திய அரசு தலையிட்டு காவி தீவிரவாதத்தை இந்தியாவில் உடனடியாக தடை செய்ய வேண்டும்...

புதன், 3 ஆகஸ்ட், 2011

RSS இயக்கத்தின் தலைவர் இந்திரேஷ்குமார் விரைவில் கைது!


AUG 03, புதுடெல்லி: அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் விரைவில் கைது செய்யப்படுவார்.

இவ்வழக்கை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு ஏஜன்சி (NIA) சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரி கையில் குண்டு வெடிப்பில் இந்திரேஷ் குமாரின் பங்கினைக்குறித்து குறிப்பிட்டிருந்தது. இதனைக் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என NIA நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குண்டு வெடிப்பிற்கு முன்பு நடந்த சதித்திட்டத்திற்கு தலைமை வகித்தது, அஜ்மீர் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு நிதியுதவி அளித்தது RSS யின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார்தான் என்பதற்கான ஆதாரங்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்திருப்பதன் அடிப்படையில் அவரை கைதுச்செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. குண்டு வெடிப்பு சதித்திட்டம் தீட்டப்பட்ட ரகசிய கூட்டத்தில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரும் பங்கேற்றுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களில் ஒருவரான சுவாமி அஸிமானந்தா அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாவார். இவர் அளித்துள்ள குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில், இந்திரேஷ்குமார்தான் குண்டுவெடிப்புகளுக்கு தேவையான நிதியுதவியை அளித்ததாக மற்றொரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில்ஜோஷி தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் குண்டு வெடிப்புகளில் இந்திரேஷ்குமாரின் பங்கினைக்குறித்த ஆதாரங்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்தன. பல்வேறு குண்டுவெடிப்புகளில் குற்றவாளியான சுனில்ஜோஷியை ரகசியம் கசிந்துவிடும் என்ற பயத்தில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளே கொலைச்செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது இயக்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ரகசியம் வெளியே வந்து விடக்கூடாது என்பதால் கொலை செய்துள்ளார்கள். மேலும் ஹிந்துத்துவா சித்தாந்தாம் என்பது ஹிட்லர் மற்றும் யூத பயங்கரவாதத்தை ஒத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது.

திங்கள், 7 மார்ச், 2011

கத்தரில் நிதி திரட்டும் ஆர்.எஸ்.எஸ்

தோஹா,மார்ச்.7:ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் ஏராளமான நாடுகளில் ரகசியமாக நிதியை திரட்டி வருகிறது. பல்வேறு இயக்கங்களின் திரைமறைவில் இத்தகைய நிதித்திரட்டும் பணி நடந்துவருகிறது.


இந்த நிதியெல்லாம் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காகத்தான் அவ்வியக்கம் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரபல தலைவரான ஒ.கே.வாசு என்பவர் கத்தரின் பல்வேறு வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து நிதித் திரட்டுவதாக கத்தரில் வாழும் கேரள மக்கள் புகார் அளித்துள்ளனர்.

வியாபாரிகளிடமிருந்து இவர் வலுக்கட்டாயமாக நிதி திரட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வருகிற கேரள சட்டமன்றத் தேர்தலில் குஞ்சுபரம்பு என்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில் பரிசீலனைக்குரிய நபராக இவர் உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இவர் கத்தருக்கு நிதித்திரட்டுவதற்காக வருகைபுரிந்தார். அப்பொழுது எதிர்ப்பு கிளம்பியதால் நிதித்திரட்டுவதை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பினார்.

செய்தி:பாலைவனத் தூது

சனி, 19 பிப்ரவரி, 2011

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரா? ஆர்.எஸ்.எஸ் ரவிசங்கரா?


ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் போனால் “வன்முறை இல்லாத, மனஇறுக்கம் இல்லாத உலகே எனது லட்சியம்” எனும் வார்த்தைகள் பளிச்சிடுகின்றன. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்குப் போய் ரவிசங்கர் ராட்டை நூற்கிற படம் இருக்கிறது. பெங்களூரிலிருந்து 36 கி.மீ தூரத்தில் இவரது ஆசிரமம் இருக்கிறது. தமிழகத்தின் பாபநாசத்தில் பிறந்தவராம். அங்கு போய் செட்டில் ஆகியிருக்கிறார். தனது பெயரான ரவிசங்க ரோடு ஸ்ரீஸ்ரீயைச் சேர்த்திருக்கிறார்.

“வாழுங் கலை சர்வதேச மையம்”, “வேத விஞ்ஞான மகாவித்யா பீடம்” இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் இந்தியாவில் மட்டு மல்லாது, பல நாடுகளிலும் விரவிக் கிடப்பதை இணைய தளம் விவரித்துக் கொண்டே போகிறது. இணைய தளத்தைப் பார்க்க பார்க்க, படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது. தென்னிந்தியா விலிருந்து ஒரு “ மகாகுரு” கிளம்பி சர்வதேசப் புகழ் பெற்றிருக்கிறார். இது அதிகாரப்பூர்வ பிம்பம். நெருங்கிப் பார்த்தால் தெரியும் உண்மை முகம் என்ன?

“ஃபைனான்சியல் டைம்ஸ்” எனும் உலக அளவில் பிரபலமான பத்திரிகையின் தெற்காசியப் பிரிவின் தலைவராக 2001-2005 ல் தில்லியிலிருந்து பணியாற்றியவர் எட்வர்ட் லூசே. இந்தியாவில் தனக்கேற்பட்ட அனுபவத்தை “கடவுளர்கள் இருந்தாலும்” என்று ஒரு நூலாக எழுதியிருக்கிறார். இது 2006 ல் லண்டனில் வெளியானது. இதன் மலிவுப் பதிப்பு 2007ல் வெளியானது. இதில், தான் ரவிசங்கரை சந்தித்தது பற்றியும், அதன் பிறகு நடந்த சில விஷயங்கள் பற்றியும் சொல்லியிருக்கிறார் லூசே. அவை சுவாரசியமானவை மட்டுமல்ல, இந்த நாட்டின் முற்போக்காளர்களால் கவலையோடு கவனத்தில் கொள்ளத் தக்கவை.

ரவிசங்கரின் ஆசிரமம் எப்படி இருக்கிறது தெரியுமா? ஆசிரமம் என்றால் நம் மனதில் ராமாயண காலத்து குடில், அல்லது காந்தி காலத்து எளிய ஓட்டு வீடு எழும். இது அப்படி அல்ல. லூசே கூறுகிறார் “இந்த ஐந்து மாடிக் கட்டடம் முழுக்க முழுக்க மார்பிள் கல்லால் கட்டப்பட்டது, ஒரு தாமரை வடிவில் உள்ளது.” பி.ஜே.பி.யின் தேர்தல் சின்னத்தை இவர் எடுத்துக் கொண்டது யதேச்சையானதாக இருக்க முடியாது என்பதைப் பிந்தைய நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் பற்றிய ஒரு வலைத்தளச் செய்தியில் பெங்களூரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மத்தியில் இது தீவிரமாக இயங்குவதாகவும், வாரம் ஒரு முறை கூடி இந்த அமைப்பின் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி உற்சாகமாக விவாதித்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தகையவர்களின் நிதி உதவி ரவிசங்கருக்கு கிடைத்துள்ளது.

நூலாசிரியர் லூசேவுடனான பேட்டி துவங்கியது: அப்போது காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைதாகியிருந்தார். இது பற்றிய ரவிசங்கரின் கருத்தைக் நூலாசிரியர் கேட்டார். அதற்கு அவரின் பதில் அதிர்ச்சியாக இருந்தது. இந்துக்கள் பெரிதும் அசமந்தமானவர்கள். நாங்கள் அஹிம்சாவாதிகள் இதனாலேதான் இப்படி நடக்கிறது என்று பதில் சொன்னார். ஓர் இந்து மடாதிபதி கைதானால் இந்து வெகுமக்கள் பொங்கி எழ வேண்டும், கலவரத்தில் ஈடுபட வேண்டும் எனும் உள்ளார்ந்த எதிர்பார்ப்பு இந்த “ஆன்மிகக்” குருவுக்கு இருப்பதைத் தெளிவாக இவரது பதிலில் இருந்து உணரலாம். பாகல்பூர் முதல் பீவாண்டி, மீரட், குஜராத், மும்பை வரை நடத்திய கலவரங்கள் போதாது. இந்துக்கள் அஹிம்சாவாதிகளாக இருக்கிறார்களே என்று ஏகமாயக் கவலை!

இங்குள்ள சாதிப்பிரச்சனையும் இதற்குக் காரணமோ என்று இவர்களுக்குள் குடைகிறது. காஞ்சி மடம் நடைமுறையில் ஓர் உயர்சாதியினரின் மடமாக இருக்க, பிற பகுதி மக்கள் அதன்பால் அக்கறை காட்டாததில் ஆச்சரியம் இல்லை என்றும் படுகிறது. இதை மனதில் கொண்டுதான் ரவிசங்கர் போன்றவர்கள் தியானம், யோகா என்று பல தரப்பாரையும் ஈர்க்கிற புதுவித மடத்தை உருவாக்குகிறார்கள் என்பதும் இதில் நிச்சயமாகிறது. உத்தியை மாற்றிப் பார்க்கிறார்கள்.

இதெல்லாம்கூட பிரச்சனை இல்லை. இந்த நவீன சாமியாரின் சமூக-அரசியல் சிந்தனை மற்றும் புறவுலகத் தொடர்புதான் சிக்கலானது. பாபர் மசூதி-ராமர்கோவில் பற்றி நூலாசிரியர் லூசே கேள்வி கேட்க ரவிசங்கர் சொன்ன பதிலை நோக்குங்கள்- “இயேசு அல்லது முகம்மது பிறந்த இடம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? அந்த இடத்தின் மீது இன்னொரு கட்டுமானம் இருப்பதை நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா? ராமருக்கு ஒரு கோவில் கட்டுவோம். ஒரு நல்லெண்ணச் செய்கையாக முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கட்டும். அப்போது அந்தக் கோவில் அல்லாவுக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் கூடச் சொந்தமாக இருக்கும்.”

இந்தப் பதிலைக் கேட்டு அசந்து போனார் லூசே. அவர் மட்டுமா நாமும்தான். விஷயத்தையே தலைகீழாக்கி விட்டார். ஆன்மிகக் குரு அல்லவா சித்துவேலை காட்டிவிட்டார். அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்கிறார்கள் சரித்திரஞானிகள். 450 ஆண்டுகளாக இருந்த மசூதிக்குள் 1949 ல் கள்ளத்தனமாக ராமர் சிலையை வைத்துவிட்டு, அது ராமருக்கே சொந்தம் எனச் சொன்னார்கள் இந்துத்துவாவாதிகள். இந்த அடாவடித்தனத்தைக் கண்டிக்காமல் முஸ்லிம்களை விட்டுத்தரச் சொல்கிறார். விட்டுத் தந்தால் ராமர் கோவில் முஸ்லிம் களுக்கும் சொந்தமாக இருக்குமாம்! விக்கிரக ஆராதனை செய்யாத முஸ்லிம்களை இது கேலி செய்கிற வேலை.

நூலாசிரியர் லூசே எழுதுகிறார்- “இது நிறைய ‘இந்து முஸ்லிம்களும் இந்து கிறிஸ்தவர்களும்’ உருவாக வேண்டும் என்கிற அத்வானியின் ஆசையை குருஜியின் வார்த்தைகள் நினைவு படுத்தின. குஜராத்தின் நரேந்திர மோடியோடு நான்கண்ட பேட்டியையும் அவை நினைவுபடுத்தின.” அஹா! ஆன்மிகக் குருவின் வார்த்தைகள் இந்துத்துவா அரசியல் தலைவர்களை நினைவு படுத்தின என்றால் என்ன பொருத்தம் இப் பொருத்தம்!.

எனினும் இது உச்சம் அல்ல. அது அடுத்து வருகிறது. நூலாசிரியர் லூசே முத்தாய்ப்பாக நடந்த அந்த நிகழ்வைக் கூறுகிறார். “சில வாரங்களுக்குப் பிறகு நூலாசிரியர் லூசேக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தேசியச் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவிடமிருந்து வந்தது. மாதவ் கூறினார் - ‘ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பற்றிப் பேசவே கூப்பிட்டேன். அவரோடு பேசிக் கொண்டிருந்த போது ஃபைனான்சியல் டைம்சில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரை திருப்தியாக இல்லை என்று அவர் என்னிடம் கூறினார். அரசியல் மற்றும் சங்கராச்சாரியார் பற்றி அவர் கூறிய கருத்துக்களை மட்டுமே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். சகிப்புத் தன்மை மற்றும் ஆன்மிகம் பற்றிய அவரது கருத்துக்களை நீங்கள் குறிப்பிடு வீர்கள் என்று அவர் நம்பியிருந்ததாக அவர் கூறினார்’. உண்மைதான், இந்த விஷயங்கள் பற்றிய குருஜியின் கருத்துக்களைக் குறிப்பிட எனது கட்டுரையில் இடம் இல்லாமல் போயிருந்தது. ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்தப் புகாரைச் சொல்ல அவர் இதர அமைப்புகளை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ்.சைத் தேர்ந்தெடுத்தது!”

தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி சொல்லித் தருகிற ஓர் ஆன்மிகக் குரு என்று ரவி சங்கரை நம்பிக் கொண்டிருக்கிறோம். அவரோ ஆர்.எஸ்.எஸ்.சின் கோட்பாடுகளை எதிரொலிக்கிறார். அயோத்தி விவகாரத்தில் என்பது மட்டு மல்லாது, அந்த அமைப்பின் தலைவர்களோடு நெருங்கிய உறவு கொண்டிருக்கிறார். எந்த அளவுக்கு என்றால் இவருக்காக அவர்கள் பத்திரிகையாளர்களோடு பேசுகிற அளவுக்கு அல்லது மறைமுகமாக மிரட்டுகிற அளவுக்கு! “ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு யோகி தாராள சித்தம் கொண்டவர் எனும் பிம்பம் இருக்கிறது. ஆனால் அதிகம் அறியப்படாத விஷயம் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ்.சோடு குருஜிக்கு உள்ள நெருங்கிய தொடர்பு மற்றும் பொது மேடைகளில் வி.எச்.பி தலைவர்களோடு அவர் இடம் பெறுவது.”

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரா? ஆர்.எஸ்.எஸ் ரவிசங்கரா?- என்பதுதான் இவற்றிலிருந்து எழுப்பப்பட வேண்டிய கேள்வி. யோகா-மூச்சுப் பயிற்சி என்பது இந்தியர்கள் வளர்த்த ஒரு நல்ல உடல்கலை. ஆனால், அதைச் சொல்லிக் கொண்டு சில குருமார் களை ஆர்.எஸ்..எஸ் உருவாக்கி உலாவவிடக் கூடும். அவர்களை அடையாளங்கண்டு மக்களுக்குச் சொல்லுகிற வேலையும் முற்போக்காளர்களுக்கு உண்டு.

நன்றி : அருணன். நன்றி: கீற்று.

சனி, 15 ஜனவரி, 2011

குடிக்காமல் உலறும் காஞ்சி சங்கராச்சாரியார்!!!


காஞ்சிபுரம்,ஜன.15:பொங்கல் திருநாளையொட்டி காஞ்சிபுரத்தில் பேட்டியளித்த காஞ்சி காமக்கோடி ஜெயேந்திரனின் உளறல்கள்.

உளறல் 1. விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வருமான வளர்ச்சியால்தான் விலைவாசி உயர்ந்ததாக கூறக் கூடாது. விலைவாசியைக் குறைக்க காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்கள் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும். அவைகளை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் உரம் முதலிய மூலப் பொருள்களுக்கும் அதிக அளவு மானியம் வழங்க வேண்டும்.

உளறல் 2. அயோத்தி பிரச்னை சுமூகமாக தீர வேண்டும் என்பதற்காக கடந்த மாதம் 27-ம் தேதி புனேவில் நான் இமாம்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். முதலில் அயோத்தி பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்வோம். பின்னர் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்த முடியாத நிலை உள்ளது. அங்கு தொழுகை நடத்துவதற்கு அனுமதி வாங்குவதற்கான முயற்சிகளை எடுப்போம் என்றேன். அவர்கள் முதலில் உடன்பட்டு சென்றனர். பின்னர் அவரவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு சென்று விட்டனர். அதனால் பேச்சு வார்த்தை பலனில்லாமல் ஆகிவிட்டது.

உளறல் 3. ஆந்திரத்தை பிரிக்கலாம்' தெலுங்கானா கோரிக்கை என்பது நீண்ட நாள் கோரிக்கை. சண்டிகரைப்போல் ஹைதராபாதை தெலுங்கானாவுக்கும், ஆந்திரத்துக்கும் பொது தலைநகராக வைத்து ஆந்திரத்தைப் பிரிக்கலாம். ஹைதராபாத்தை தெலுங்கானாவுடன் மட்டும் சேர்த்து தனி தெலுங்கான உருவாக்குவது ஆபத்தானது. ஹைதராபாத் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறும் அபாயம் ஏற்படும் என்றார் ஸ்ரீஜயேந்திரர்.

காம...கோடியின் காறி உமிழவைக்கும் உளறல் பேட்டியை பற்றி அலசுவோம்:

1.விலைவாசி உயர்வதற்கு வருமான வளர்ச்சி என்று கூறக்கூடாதாம். அது சரி அப்ப காரணம் என்னவென்று சொல்ல வேண்டியதுதானே? நீ என்ன பதுக்கல் காரர்களுக்கும், வெளிநாட்டு தரகு முதலாளிகளுக்கும் பினாமியா?

அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வுக்கு காரணம் பதுக்கலும், அரசின் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடியும்தான். அதுமட்டுமல்லாமல் இந்த விலைவாசி உயர்வுக்கு, வெளிநாட்டு தரகு முதலாளிகளான வால்மார்ட்டையும், டெலஸ்கோவையும் சில்லரை வியாபாரத்தில் நுழையவிடுவதற்கான தந்திரம் என்றுதான் நடுநிலையாளர்கள் கூறுகிறார்கள்.

உரத்தையும்,மூலப்பொருட்களையும் மானியமாக வழங்க வேண்டுமென்று கூறும் நீ இந்நாட்டில் பல ஆண்டுகளாக எத்தனையோ விவசாயிகள் தற்கொலைச் செய்ததற்கு ஏதாவது பரிகாரம் கூறினாயா? அல்லது திருஷ்டிதான் கழித்தாயா? அல்லது இந்தியாவில் ஏழைகள் படும் அவஸ்தைக்கு தீர்வைக் கண்டறிந்தாயா? உனக்கும் உனது அவாள்களுக்கும் காய்கறி வேண்டுமென்பதற்காக இப்பொழுது ரொம்ப கரிசனம் வந்துவிட்டதோ?

2.அயோத்தி பிரச்சனையில் வி.ஹெச்.பியின் பினாமிதான் நீ என்பது ஊரறிந்த ரகசியம். இந்நிலையில் சமாதானம் பேசலாம் என நாடகமாடி சதிவேலை செய்ய நீ திட்டமிட்டதை உணர்ந்துக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள் மேல் முறையீடு செய்வதுதான் ஒரே வழி என புரிந்துக் கொண்டனர். இதற்கிடையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பினாமியான உனக்கு ஏன் பொத்துக்கொண்டு வருகிறது?

3.தெலுங்கானாவை பிரிக்கும்பொழுது ஹைதராபாத்தை அத்துடன் சேர்க்கக் கூடாதாம். தீவிரவாதிகளின் மையமாகிவிடுமாம். கூ முட்டை! உனக்கு புத்தி எங்கடா போச்சு! பத்திரிகையையெல்லாம் படிப்பதே கிடையாதா? உனக்கு கூத்தடிக்கவே நேரம் பத்தலை! பத்திரிகை படிக்க எங்க நேரம்! உனது உற்றத் தோழர்களான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்தார்கள் என்பது உனக்கு தெரியாதா என்ன? அப்ப நீ ஹிந்துத்துவாவின் பயங்கரவாத மையமாக ஹைதராபாத் மாறிவிடும் எனக் கூறவருகிறாயா? நீயே ஒரு பயங்கரவாதி! சங்கரராமன் கொலை வழக்கையையும் நீ போட்ட காம, கொலை வெறியாட்டங்களையும் தமிழக மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தாயோ?
முட்டாள் கம்முனு கிட

செவ்வாய், 11 ஜனவரி, 2011

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் & தினமலர் ஒரு சமூக பார்வை.



குஜராத் மாநிலம் சூரத்தில், "மகர சங்கராந்தி திருவிழா' தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எ ஸ்.எ ஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசுகிறார். இது ஜனவரி 10 தேதி தினமலரில் படத்துடன் வந்த செய்தி. இதுதான் தினமலரின் மத துவேச சிந்தனை.
இந்தியா முழுவதும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் இருப்பதும், இவர்கள் தீட்டிய திட்டத்தின் அடிப்படையில் 'தான்' இந்த குண்டு வெடிப்புகள் நடந்தது என்றும் நிருபிக்கபட்டு உள்ள இந்த சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தை பற்றியோ, அல்லது அவர்களின் ஆணைபடி நடத்தபட்ட குண்டு வெடிப்புகள் பற்றியோ, எந்த செய்தியும் வெளியிடாமல் தினமலர் அமைதி காத்துவருகிறது. இது மட்டும் இல்லாமல் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்ற எண்ணத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாட்டை ஹிந்து மதத்தோடு தொடர்பு படுத்துவது போல் அவர்கள் 'தான்' ஹிந்து மதத்தின் ஒட்டு மொத்த பாதுகாவலர்கள் என்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்த இந்த பயங்கரவாத இயக்கத்தின் தலைவரை ஏதோ ஹிந்து மத சாது போல சித்தரிக்கும் வேலையை செய்து வருகிறது தினமலர் நாளேடு. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்ற குரல் இந்தியா முழுவது ஒழிக்க துடங்கி இருக்கும் இந்த நிலையில் தினமலர் அமைதிகாப்பது பத்திரிகை தர்மம் இல்லை.

அதுபோல் இந்த செய்திகளை வெளியிடாத, இதுபற்றி பேசாத யாரும், எந்த அமைப்பும், எந்த கட்சியும் நடுநிலை தவறியவர்களே. அது மட்டும் அல்லாமல் இவர்கள் இப்படி செயல் படுவதன் மூலம் இந்த பாசிச பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாகவே கருதபடுவர். அது மட்டும் அல்லாமல் இவர்களது தேசபக்தியை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு இவர்கள் உள்ளாக்க படுகிறார்கள். ஏன்? என்றால் இப்படி பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் பெரும் சவால் ஆகும். இதை சம்மந்த பட்டவர்கள் உணர்ந்து இது போன்ற செய்திகளை வெளிக்கொண்டு வருவது,அதை எதிர்ப்பது ஒவ்வொரு இந்தியன் மீதும் கடமையாகும். இவர்கள் இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஆபத்தானவர்கள். இவர்கள் செய்யும் மத தீவிரவாதம் இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊரு விளைவிக்கும் என்பதனை உணர்ந்து எல்லோரும் ஒன்று பட்டு குரல் கொடுப்போம். ஆர்.எஸ்.எஸ். என்ற நச்சு செடியை பிடுங்கி இந்தியா சிறப்பாக ஒளிர பாடுபடுவோம். மதசார்பின்மை காப்போம். வேற்றுமையில் ஒற்றுமை அதுவே இந்தியா!! என்று பெருமையோடு சொல்லுவோம். இதை செய்யவேண்டியது பொறுப்புள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமை.

அன்புடன் : ஆசிரியர் சிந்திக்கவும்.

இந்துக்களை பயமுறுத்தவே ஆஜ்மீர் தர்காவில் குண்டுவைக்கப்பட்டது-சாமியார் அசீமானந்த் வாக்குமூலம்


டெல்லி: ஆஜ்மீர் தர்காவுக்கு பெருமளவிலான இந்துக்களும் வருவதால் அதைத் தடுக்க, இந்துக்களைப் பயமுறுத்தும் நோக்கில்தான் தர்காவில் குண்டுவைக்கப்பட்டதாக கைதாகியுள்ள இந்து தீவிரவாத சாமியார் அசீமானந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

புகழ் பெற்ற ஆஜ்மீர் தர்காவில் கடந்த 2007ம் ஆண்டு குண்டுவெடித்தது. இந்த சம்பவத்திற்கு இந்து தீவிரவாதிகளே காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாமியார் அசீமானந்த் உள்ளிட்டோர் பிடிபட்டுள்ளனர்.

இவர்களில் அசீமானந்த்துக்கு, பாகிஸ்தானுக்கான சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார் அசீமானந்த். அதில், இந்த சம்பவத்தில் பெரும்பான்மையினரும், சிறுபான்மையினரும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ஆஜ்மீர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். பிரசாரகரான சுனில் ஜோஷி என்னை வந்து சந்தித்தார். (இந்த சுனில் ஜோஷி பின்னர் கொல்லப்பட்டு விட்டார்) அவருடன் ராஜ் மற்றும் மெஹல் என்ற இருவரும் வந்திருந்தனர்.

ஜோஷி என்னிடம் கூறுகையில், தனது ஆட்கள்தான் குண்டுவெடிப்பை நடத்தியதாகவும், சம்பவம் நடந்தபோது தான் தர்காவில்தான் இருந்ததாகவும் கூறினார். மேலும், இந்த சம்பவத்தை நடத்துவதற்காக இரண்டு முஸ்லீம் சிறுவர்களை தன்னிடம் இந்திரேஷ் (மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்) அனுப்பி வைத்ததாகவும் ஜோஷி தெரிவித்தார். இந்த சிறுவர்கள்தான் குண்டை உள்ளே போய் வைத்ததாகவும் அவர்கூறினார்.

ஆஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் பெருமளவில் வருவதால் அதைத் தடுக்க, இந்துக்களை பயமுறுத்த இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார் அசீமானந்த்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

சங்க்பரிவாரை தடைச் செய்க - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருவனந்தபுரம்,ஜன.9: தேசத்தை நடுங்கச் செய்த ஏராளமான குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்க்பரிவார் அமைப்புகள்தான் என்பதை நீதிமன்றம் கண்டறிந்த சூழலில் தேசத்துரோக, நாச வேலைகளில் ஈடுபடும் சங்க்பரிவார அமைப்புகளை தடைச்செய்ய வேண்டுமென மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்துவரும் குண்டுவெடிப்புகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியதுதான் என்பது தெளிவாகியுள்ள சூழலில் அவற்றின் மறைவில் வேண்டுமென்றே கொடிய சித்திரவதைகளுக்கு ஆளாக்கிய முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டுமெனவும், அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச்செய்ய வேண்டுமென காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரே கூறியிருப்பது தேசத்தின் பாதுகாப்பில் கவலைக் கொண்டவர்களுக்கு ஆறுதலை தருகிறது.

ஆனால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த அமைப்புகளை தடைச் செய்வதற்கு காலதாமதம் செய்யக்கூடாது. நீதிமன்றத்தின் முன்பு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ள கொடிய பயங்கரவாதியான சுவாமி அஸிமானந்தாவின் பெயரை மாற்றி 'ஆஸிஃப் கஸ்மானி' என்ற முஸ்லிம் பெயரை சூட்டி சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பின் விசாரணையை திசை திருப்பிய வெளிநாட்டு சக்திகளைக் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

குஜராத்தை மையமாக வைத்து செயல்படும் கேரள மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் நாயரின் கேரள மாநில செயல்பாடுகளைக் குறித்து விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.

சுரேஷ்நாயரை 'நய்யார்' என மாற்றி விசாரணையை திசை திருப்ப முயற்சிப்பவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்.

காவி பயங்கரவாதத்திற்கு உத்வேகமளித்துக் கொண்டிருக்கும் மலையாள சினிமாத் துறையில் செயல்படும் பிரமுகர்களின் பொருளாதார பின்னணியைக் குறித்து விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்களான பேராசிரியர் டி.பி.விஜயகுமார், டாக்டர் பீம்ஜெயராஜ், ரமேஷ் நன்மண்டா, டாக்டர்.எஸ்.எம்.ஜெயப்பிரகாஷ், கஃபூர், முகுந்தன், பேராசிரியர் ராஜூ தாமஸ், ஜாஃபர்,வழக்கறிஞர் பி.ஆர்.சுரேஷ், பேராசிரியர் பஷீர், வழக்கறிஞர் எஸ்.பிரகலாதன், டாக்டர் உஸ்மான், வழக்கறிஞர் டி.எஸ்.ஜோஷி, அஷ்ரஃப், டாக்டர்.பி.கே.சுகுமாரன், வழக்கறிஞர் எ.ஜெயராம், வழக்கறிஞர் கெ.சுபாஷ் சந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வியாழன், 23 டிசம்பர், 2010

பள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்

கொல்கத்தா,டிச.23:சாதாரணமான ஒரு பிரச்சனையை காரணமாக வைத்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் பள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்துள்ளனர்.

கொல்கத்தாவிற்கு அடுத்துள்ள பீவிஹகோலா ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 12 மாணவிகள் ஆர்.எஸ்.எஸ் வெறிக் கும்பலின் பாலியல் பலாத்காரத்திற்கு பலியாகியுள்ளனர்.
கடந்த நவம்பர் 9 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தபொழுதிலும் ஊடகங்கள் இச்செய்தியை மூடி மறைத்துள்ளன. காளி பூஜைக்காக பள்ளிக்கூட சுற்றுப்புற பகுதியை அலங்காரம் செய்ததுத் தொடர்பாக இச்சம்பவத்தின் துவக்கம் அமைந்துள்ளது.

பூஜை கொண்டாட்டங்கள் முடிந்து பள்ளிக்கூடம் திறந்த பொழுதிலும் பள்ளிக்கூட காம்பவுண்டில் கட்டிய பந்தல் மாற்றப்படவில்லை. மேலும் பள்ளிக்கூட கேட்டில் மூங்கிலால் கட்டப்பட்ட வேலி மாணவ மாணவிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கூட நிர்வாகிகள் பாஞ்ச்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த 4 பேரைக் கொண்ட போலீஸ் குழு மூங்கில்களை மாற்றுவதற்கு ஆசிரியர்களிடம் கூறினர். ஆனால், அவர்கள் அதற்கு தயாராகவில்லை. பின்னர் அவ்விடத்தில் நின்றுக் கொண்டிருந்த மாணவிகளின் உதவியுடன் மூங்கில்கள் மாற்றப்பட்டன. ஆனால், நாங்கள் கட்டிய மூங்கில்களை மாற்றிவிட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் அங்கு வந்து சம்பவ இடத்திலிருந்த ஆசிரியர்களையும், மாணவிகளையும் தாக்க ஆரம்பித்தனர். பின்னர் 12 மாணவிகளை பள்ளிக்கூட குளத்தின் அருகிலுள்ள கட்டிடத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளது இந்த பயங்கரவாத காம வெறிப்பிடித்த கும்பல்.

இதில் ஷப்னம் ஹாத்தூன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத காமவெறி இயக்கத்தைச் சார்ந்த தகப்பனும், மகனும் உட்பட 8 பேர் சேர்ந்து வன்புணர்வு கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதனை பாதுகாவலர்கள் போலீசாரிடம் புகாராக அளித்துள்ளனர்.

ராஜ்குமார், அவனுடைய மகன் சுஜித் கொல்லா, பினோய் மண்ணா, பொய்கோந்தா ஆகியோரின் தலைமையில்தான் இந்த பயங்கரத்தை
நடத்தியுள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

இந்தக் கொடூரத்தை தடுக்கவந்த பள்ளி தலைமை ஆசிரியரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தாக்கியுள்ளனர். கடுமையாக காயமுற்ற இவர் தற்பொழுதும் ஹவ்ரா பொது மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வருகிறார்.

பாலியல் வன்புணர்வுக்கு இரையான மாணவிகள் பலரும் தற்பொழுது மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களுடைய பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர்.

துவக்கத்தில் வழக்கை பதிவுச்செய்ய தயங்கிய போலீசார் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத காம வெறிக்கும்பல் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்தனர்.

ஜாமீன் பெற இயலாத குற்றம் என்ற பொழுதிலும் ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் ஜாமீன் கிடைக்க தடையில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவிகளுக்கு நடந்த இந்த கொடூரத்தைக் குறித்து தேசிய ஊடகங்கள் மெளனம் சாதிக்கின்றன. பல நாட்களுக்கு பிறகு 'கலம்' என்ற வங்காள பத்திரிகைதான் இச்செய்தியை முதலில் வெளிக்கொணர்ந்தது.

தொலைக்காட்சி சேனல்களையும், நாளிதழ்களையும் நேரில் அழைத்து இச்சம்பவம் குறித்து அறிவித்த பொழுதிலும் அவர்கள் இதனை செய்தியாக வெளியிட மறுத்துள்ளனர். இத்தகவலை 'வாரிகா' என்ற பத்திரிகையின் எடிட்டர் அஹ்மத் ஹஸன் தெரிவிக்கிறார்.

இச்சம்பவத்தின் பின்னணியில் மதவெறிதான் காரணமென பலரும் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தைக் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கு மகளிர் உரிமை கமிஷன் தலைவி மாலினி பட்டாச்சார்யா உள்ளிட்டவர்கள் களமிறங்கியுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,