ஃபேஸ்புக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஃபேஸ்புக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 மார்ச், 2013

இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும் - எம். தமிமுன் அன்சாரி

எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங் களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு.

இரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்பு களை இழந்தவர்களின் பட்டியலில்தான் இடம் பெறுவார்கள்.

பேச்சாளர்களை விட நாட்டில் எழுத்தாளர்கள் அதிகம். கவிதை, கட்டுரை, இலக்கியம் என பல்வேறு தளங்களில் இவர்களின் பங்களிப்புகள் அமைகின்றன. சிறந்த பேச்சு ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, சிறந்த எழுத்து ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாகும்.

அது நின்று; நிதானித்து; யோசித்து; ஒரு மனிதனை நீண்டகால சிந்தனைப் போராட் டத்திற்கு வழிவகுக்கும்.

இன்று சமூக இணையதளங்கள் வந்தபிறகு அதைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் தங்களை எழுத்தாளர்களாக உருவாக்கிக் கொள்கிறார்கள். அத்தகைய நல்வாய்ப்பை இணையதளங்களும், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களும் வழங்குகின்றன.

ஒரு புத்தகம் அல்லது பத்திரிக்கையில் எழுதும் கருத்துகள் போய்ச் சேரும் வாசகர் எண்ணிக்கையை விடக் கூடுதலான இலக்கை இவைகள் அடைய வழிவகுக்கின்றன. அதுவும் விரைவாக!

இந்தியாவில்; தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் ஒரு காலத்தில் தங்களது கருத்துக்களைப் பரப்பவும், வாதிடவும், தவறான கருத்துகளுக்கு பதில் சொல்லவும் வாய்ப்புகளும், வழிகளும் இல்லையே என ஏங்கியது.

அந்த ஏக்கத்தை இணைய தளங்களும், ஃபேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களும் ஓரளவு நிவர்த்தி செய்திருக்கின்றன. படித்தவர்களும், வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்பவர்களும் இதில் பெரும் பங்காற்றுகிறார்கள்.

இதில் ஆறுதல் அடையும் அதேநேரம், துயரமடையச் செய்யும் சில நிகழ்வுகளும் நடக்கின்றன.

சில இளைஞர்கள் உணர்ச்சிப் போக்கில் கருத்துக்களைப் பதிகிறார்கள். சிலர் தாங்கள் ஏதோ ‘முஸ்லிம் நாடுகளில்’ வாழும் மன நிலையிலும் கருத்துக்களைப் பதிகிறார்கள். சிலர் தங்களது கருத்துக்களை முஸ்லிம்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்ற மனநிலையில் பதிகிறார்கள். சிலர் நடுநிலையாளர்களையும் எதிரிகளாக்கும் வகையில் பொறுப்பற்றத்தனமாக கருத்துக்களைப் பதிகிறார்கள்.

இது சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. பண்பாடு இல்லாமல், நாகரீகம் இல்லாமல், ஒரு உன்னதமான சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்ற பொறுப்பு இல்லாமல் சிலர் வெளியிடும் கருத்துக்களும், ஆவேசமானப் பதிவுகளும் இதை கவனிக்கும் பிற சமூக மக்களை மட்டுல்ல; சொந்த சமூக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

இவர்களிடம் பக்குவம் இல்லையா? பண்பாட்டுடன் கூடிய அறிவு இல்லையா? என பிறர் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இயக்க வேறுபாடுகள் & மோதல்கள்

தலைவர்களின் மீதான எதிர் கருத்துக்கள்

பிற சமூகங்களைப் பற்றிய மதிப்பீடுகள்

அரசியல் தலைவர்கள் குறித்த விமர்சனங் கள்

பொது அரங்கில் நடைபெறும் சம்பவங்கள்

சர்வதேச நிகழ்வுகள்

போன்றவை குறித்து சிலர் பக்குவமில்லாமல் எழுதும் கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தின் மீதான மதிப்பீடுகளைக் குறைக்கிறது.

நாம் பன்முக சமூகங்கள் வாழும் உலகத்தில் வாழ்கிறோம் என்பதையும், நம்மைச் சுற்றிலும் நல்லெண்ணம் கொண்ட சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்பதை யும், நாம் பதியும் கருத்துக்கள் எதிரிகளின் எண்ணிக்கையை கூடுதலாக உருவாக்கி விடக் கூடாது என்பதையும் மறந்து விடுகிறார்கள். அல்லது இதைப் புரியாமல் வாழ்கிறார்கள்.

அநாகரீகமான சொல்லாடல்களும், முரட்டுத்தனமான விமர்சனங்களும்; நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய ஆதரவுகளை ஒரு சமூகமே இழக்க வேண்டிய சூழல் உருவாவதை அப்படிப்பட்ட சகோதரர்கள் உணர வேண்டும்.

தாலிபான்கள் விவகாரமாக இருக்கட்டும்; திரைப்படங்கள் குறித்த சர்ச்சைகளாகட்டும்; விடுதலைப் புலிகள் குறித்த விமர்சனங்களாக இருக்கட்டும்; சவூதியில் தலை துண்டிக்கப்பட்ட இலங்கைச் சிறுமி ரிசானா விவகாரமாக இருக்கட்டும்; சமீபகாலமாக ஃபேஸ் புக்கில் பரிமாறப்படும் எதிர்வினைகள் முஸ்லிம் சமூகத்திற்கு வலுவான ஆதரவை ஏற்படுத்துவதற்கு பதிலாக, பெருவாரியான ஆதரவாளர்களை எதிர் முகாமுக்கு தள்ளியிருக்கிறது என்ற பொதுவான கருத்து குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்.

எதிரிகளிடம் விவாதம் புரியுங்கள். ஆனால் கண்ணியத்தை கடைப்பிடியுங்கள். நமது கருத்தை ஆழமாக வாதிடுங்கள். ஆனால் தரத்தைப் பின்பற்றுங்கள்.

அறிவை உணர்ச்சி வென்றுவிடக் கூடாது. கோபம் பண்பாட்டை குலைத்துவிட அனுமதிக்கக் கூடாது. விமர்சனங்கள் எல்லை மீறிவிடக் கூடாது. திருக்குர்ஆன் ‘உண்மையைப் பேசுக (3:17), நேர்மையாகப் பேசுக (33:70), நீதமாகப் பேசுக (6:152), நல்லதைப் பேசுக (2:83), மிக அழகியதைப் பேசுக (17:53), மரியாதையாகப் பேசுக (17:23)’ என மனிதர்களுக்கு அறிவுரை வழங்குகிறது. இதை சற்று எண்ணிப் பாருங்கள்.

நமது கருத்துப் பதிவுகள் எதிரிகளின் மனப்போக்கை மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். நடுநிலையாளர்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியதாக இருக்க வேண்டும். பதிலடி களைக் கூட நிதானமாகவும், அறிவுப்பூர்வ மாகவும் பதியுங்கள்.

மாறாக, நமது கருத்துப் பதிவுகள் எதிரிகளுக்கு ஆதரவையும், அனுதாபத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துவிடக் கூடாது. நமது நியாயங்களை பலமிழக்க செய்துவிடக் கூடாது.

சமூக ஊடகங்களும், இணைய தளங்களும் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப் படுகிறது என்பதையும், நமது கருத்துக்கள் நம் சமூகத்தின் தரத்தை மதிப்பிடுவதாகவும் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

குழாயடிச் சண்டைகளை; உள்விவகாரங்களை; தனிநபர் தாக்குதல்களை; மூன்றாம் தர எழுத்துக் களை தயவு செய்து இணையங்களிலும், ஃபேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களிலும் பயன்படுத்தக் கூடாது. கோபத்தோடும், அவசரப் பட்டும், பொறுப்பில்லாமலும் கருத்துக் களைப் பதியாதீர்கள். பல சமூகத்தினரும் நம்மை கவனிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெருந்தன்மை, கண்ணியம், தொலை நோக்கு, சமூகப் பொறுப்பு, மன்னிப்பு என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஊடக உலகில் பணியாற்ற வேண்டியுள்ளது.

தனது சிறிய தந்தை ஹம்ஸாவைப் படு கொலை செய்த ஹிந்தாவை மன்னித்த மானுட வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

நபிகள் நாயகத்தை உஹது போர் களத்தில் எதிர்த்த காலித் பின் வலீத் அவர்கள் பின்னாளில் இஸ்லாத்தை ஏற்று பல போர்களில் நபிகள் நாயகத்தோடு அணிவகுத்தார்கள்.

காலமெல்லாம் நபிகள் நாயகத்தை எதிர்த்தே வாழ்ந்திட்டவர் அபுஜஹல். அவரது மகன் இக்ரிமா அவர்கள் இஸ்லாத்தை ஏற்று நபிகள் நாயகத்தோடு பணியாற்றினார்.

இந்த வரலாறுகளுக்கு உரிய சமூகத்தின் உறுப்பினர்கள் நாம் என்பதை உணருங்கள்.

உயரிய அணுகுமுறைகள் பெரும் வெற்றி களைத் தருகின்றன. நாம் சார்ந்த சமூகத்திற்கு நன்மைகளை அளிக்கின்றன.

கருத்துக்களைப் பரப்பும் ஊடக உலகில் கவனமாகப் பணியாற்றுங்கள். நமது எழுத்துக் களால் ஏற்படும் நன்மைகளுக்கு இறைவனிடம் கூலி உண்டு என்பதைப் போலவே, நமது எழுத்துக்களால் ஏற்படும் விபரீதங்களுக்கும் நாளை மறுமை நாளில் விசாரணை உண்டு என்பதை உணருங்கள்.

நடுநிலையாக சிந்திப்பதும், நேர்மையாக செயல்படுவதும், உண்மையாக வாதிடுவதும் நமது இலக்கணங்கள் என்பதை மறவாதீர்கள்.

 ஜஸாகல்லாஹ் :http://www.facebook.com/m.thamimunansari


திங்கள், 18 ஜூன், 2012

திருந்த மாட்டீர்களா சகோதரிகளே ???

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..


சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் இந்த பதிவு..ஃபேஸ்புக் மூலம் நடந்த மற்றொரு பலாத்காரமும், கொலையும்..!


பிரமீளா என்ற இளம் பெண் அவர் வீட்டில் தனியாக இருக்கும் போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்டு கிடந்தார், என்பது தான் அச் செய்தி..போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்த தந்தை தன் மகள் வெளியில் எங்கும் போகாதவள் என்றும் அவளிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் எந்நேரமும் ஃ பேஸ்புக்கில் இருப்பதும் தன்னுடைய ஒவ்வொரு செய்கைகளையும், அதில் பதிவு செய்வது மட்டும் தான் என்பது..

அப்பெண்ணின் கம்ப்யூட்டரை ஓபன் செய்து பார்த்ததில் கடைசியாக இருந்த பதிவில் இங்கு காலிங்பெல் அடிக்கிறது யார் என்று பார்த்து விட்டு வருகிறேன் என்று இருந்தது..அதற்கு லைக் போட்டவர்களை முழுமையாக விசாரிக்கும் போது அவர்கள் பெண்கள் பெயரில் இருக்கும் ஆண்கள் என தெரிய வந்து, அவர்களை பிடித்து விசாரிக்கும் போது ஆமாம் நாங்கள் தான் அக்கொலையை செய்தோம் என்ற உண்மையை ஒப்பு கொண்டுள்ளார்கள்..

அவர்களின் வாக்குமூலம்..         
நாங்கள் பெண்கள் பெயரில் மெயில் ஓபன் செய்து கொண்டு அதன் மூலம் ஃபேஸ்புக்கில் பெண்களின் ஃப்ரெண்டாக சேர்ந்து கொள்வோம்.சில பெண்கள் தன் ஒவ்வொரு செயலையும் ''வால்''லில் பதிவு செய்வார்கள்..அவர்களிடம் நல்ல முறையில் பழகி அவர்கள் நாங்கள் தனியாக இருக்கிறோம் என பதிவு செய்யும் போது அவர்கள் வீட்டுக்கு கொரியர் கொடுப்பது போல போய் கத்தியை காட்டி அவர்களை அனுபவித்து விடுவோம்..இது போல பல முறை நடத்தி இருக்கிறோம்..ஆனால் யாரும் இது வரை போலீசுக்கு போனதில்லை..அதே போல பிரமீளா வீட்டுக்கும் போனோம்..ஆனால் அந்த பெண் சுதாரித்து போன் செய்ய போனதால் நாங்கள் கத்தியை வைத்து அந்த பெண்ணின் கையை வெட்டி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட அந்த பெண்ணை அனுபவித்தோம்..பிறகு அந்த பெண் காட்டி கொடுப்பார் என தோன்றியதால் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து விட்டோம் என்பது தான் அந்த வாக்கு மூலம்..



இதே போல எத்தனை மோசமான கதைகள் இந்த ஃ பேஸ்புக் மூலம்..! ஆனாலும் பெண்களுக்கு புத்தி வந்த மாதிரி தெரிய வில்லை ..இந்த விசயத்தில் தன் சுய அறிவை உபயோகிப்பதில்லை என்ற முடிவில் இருப்பார்கள் போல உள்ளது.. ! தன்னை மிகவும் விரும்பும் தாய்,தந்தை உடன் பிறந்தவர்கள்,தாத்தா,பாட்டி,மற்றும் உறவுகளுடன் பேச முடியாத இவர்கள் போலித்தனமான பாசங்களையும்,காரியத்திற்காக புகழப்படும் புகழ்ச்சிகளையும்,ஒன்றுக்கும் உதவாத நட்புகளையும் உண்மை என நம்பி கொண்டு காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை தன் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்யும் இவர்களை நினைத்தால் மிகவும் கவலையாகவும் கோவமாகவும் வருகிறது..!

இதன் மூலம் வரும் பின்விளைவுகள் தெரிந்தே சில பேர்..! தெரியாமலே சில பேர்..! எல்லாஇடங்களிலும் ஆட்டு முகம் பொருத்திய ஓநாய் மனிதர்கள் இருக்கிறார்கள், என தெரியாமல் போலித்தனமான,கேவலமான மனதுடைய  மனிதர்களை நம்பி தன் புகைப்படம் முதற்கொண்டு தன் வீட்டு விவரங்கள் யாவற்றையும் பொதுவில் பந்தி வைக்கும் இவர்களை என்ன செய்வது..? இதில் யார் நல்லவர் யார் கெட்டவர் என எப்படி அறிவது..? 

அப்படி தனக்கு வேண்டியவர்களுக்கு தெரிவிப்பதற்கு தான் நிறைய தனிப்பட்ட  வழிமுறைகள் இருக்கிறதே பின் என்ன வந்தது இவர்களுக்கு..? அந்த காலத்தில் படிக்காதவர்களான நம் பாட்டிகளிடம் இருந்த ,எதை வெளியில் சொல்ல வேண்டும்,எதை வெளியில் சொல்ல கூடாது என்ற தெளிவும்,அறிவும்,அதிகம் படித்த இந்த மாதிரி பெண்களிடம் இல்லை என்பதே உண்மை .இவர்கள் நிஜத்துக்கும் ,நிழலுக்கும் வித்தியாசம் தெரியாத படித்த மேதைகள்..! 
இன்னும் வேறு வகை பெண்கள் சிலர் இங்கு உண்டு ..காதல் மொழி பேசி வரும் நபரிடம் தன்னை பற்றி அனைத்தையும் சொல்லி உருகி உருகி காதலித்து பின் வெளி இடங்களில் இருவரும் பல முறை சந்தித்து,தன் கற்பை இழந்த பின் அவனுக்கு இவள் அலுத்து அவன் தன் சுயரூபத்தை காட்டியதும் கண்ணீர் விட்டு அழுது மனம் நொந்தபடி கிடப்பது என்று...! இதில் சில தைரியமான பெண்கள் தன் முகத்தை மூடி கொண்டு போலீசில் புகார் கொடுக்க வரும் போது உங்கள் சிந்திக்கும் திறனை எங்கு அடகு வைத்தீர்கள் என கேட்க தோன்றுகிறது...! 

இரைக்காக காத்து இருக்கும் வேடன் போல, பெண் மூலம் தேவையை விரும்புபவன், தேன் சொட்டும்,ஆசை வார்த்தைகளையும்,அதிக படியான வீண் புகழ்ச்சியையும்,பசப்பலான நடிப்பையும் வெளிப்படுத்த தான் செய்வான்..அவனுக்கு தேவை இரை ..அதற்காக என்ன வேண்டுமாலும் செய்வதற்கு தயாராக தான் இருப்பான்..நோக்கம் நிறைவேறியதும் வேறு ஒரு புதிய இரையை தேட போய் விடுவான்..இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்க படுவதென்னமோ பெண் தான்..வாழ்வில் சில விஷயங்களை நாம் இழந்தால் இழந்தது தான்..! அதை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது..! 


தவறு செய்யும் சில ஆண்களை குற்றம் சொல்லும் இந்த இடத்தில் இதே போல குற்றம் செய்யும் பெண்களையும் குறிப்பிட வேண்டும்.. தன் அழகால் வசீகர பேச்சால் ஆண்களை தன் வலையில் விழ வைத்து அவர்களின் பணத்தை சூறையாடும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள்...! தன் குடும்பத்தை விட்டு தன்னந்தனியாக,தனக்கு என்று பெரிதாக ஆசை படாமல் தன் குடும்ப கஸ்டத்தை மட்டுமே மனதில் இருத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரர்கள் பலர் இங்கு உண்டு..

வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சில ஆண்கள் கூட,பெண்களின் மோக வலையில் சிக்குவது என்பது நாம் அனைவரும் நடைமுறையில் அறிந்த ஒன்று..இந்த பலகீனம் உள்ளவர்கள் தான் இந்த மாதிரி பெண்களின் இலக்கு ..அவர்கள் தன் உதிரத்தை வியர்வையாக்கி சம்பாதிக்கும் பணத்தை இந்த பெண்கள் தன் பேச்சு திறமையாலும்,தன் கவர்ச்சிகரமான தோற்றத்தாலும் எளிதில் கவர்ந்து விடுகின்றனர்..இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருக்கும் அப்பாவிகள் பலர்..! சில பெண்கள் சமத்துவத்தை இந்த விஷயத்திலும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்..ஆண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம் இது..!  
இந்த ஃ பேஸ்புக்கால் நன்மை எதுவும் இல்லையா..? என்றால் கட்டாயம் இருக்கிறது..! இங்கு எத்தனையோ சகோதர சகோதரிகள்,தங்களுடைய பல வேலை பளுக்களுக்கு இடையில் நல்லதை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயலாற்றி கொண்டு இருக்கிறார்கள்..! மேலும்  இதன் மூலம் பல நல்ல சமுதாய மாற்றங்களும்,, கல்வி உதவிகளும்,உயிர் காக்கும் பல மருத்துவ தேவைகளும்,பலருக்கு சாத்தியமாகி இருக்கிறது ..எந்த ஒன்றும் நாம் பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது என்பது போல இந்த ஃபேஸ்புக்கையும் நாம் பல நல்ல ஆக்கபுர்வமான விசயங்களை தெரிந்து கொள்வதற்கும்,பகிர்ந்து கொள்வதற்கும் பயன் படுத்தலாம்..
மேலும் இங்கு பல  நல்ல நட்புகள் உள்ளன.. நல்லதை எடுத்து சொல்லி அடுத்தவர் தவறு செய்யும் போது தனி பட்ட விதத்தில் திருத்தும் அருமையான நட்புகள் உண்டு..என்னை போல நல்ல நட்பின் மூலம் பல நல்ல விசயங்களை அறிந்து கொண்ட பலர் இங்கு உண்டு ..வரம்பு மீறாத தன்மையோடும் சரியான புரிதலோடும்,எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இறைவனுக்கு மட்டுமே பயந்து நட்பு கொண்ட பலர் இங்கு உண்டு ..
ஆனால் சமீப காலங்களாக கேள்வி படும் விசயங்கள் நன்மையை விட இந்த இடம் பல தப்பான செயல்களுக்கு தான் அதிகம் துணை போவதாக  தெரிகிறது..எல்லா இடத்திலும் எந்த வழியை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பது நம் கையில் இருக்கிறது..முக்கியமாக பெற்றோர்கள் தன் பிள்ளைகள் எந்த வழியில் இருக்கிறார்கள் என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்..எந்த வழி சரியான வழி என்பதை சுட்டி காட்ட வேண்டிய பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது..
அனைவருக்கும் தெரிந்த உவமை தான் ஆனால் நல்ல உவமை :-
சேலை முள்ளில் மீது பட்டாலும் இல்லை,முள் சேலை மீது பட்டாலும் பாதிப்பு என்னவோ சேலைக்கு தான்..!

டிஸ்கி:-தன் பொறுப்புகளையும்,தன் கடமைகளையும்,புறக்கணித்து, நாளை இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமே என்ற நிலை மறந்து,இந்த மாய உலகத்தில் தன்னை முழுவதுமாக மூழ்கடித்து தன் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் யாராவது ஒரு சகோதரி இந்த பதிவை படித்து விட்டு தன்னை மீட்டெடுத்து கொண்டார் எனில் அது தான் இந்த பதிவின் நோக்கமும் வெற்றியும்..!

நன்றி---சிநேகிதி பத்திரிகை..  
உங்கள் சகோதரி..
ஆயிஷா பேகம்..
நன்றி http://kaiyalavuulagam.blogspot.com/2012/06/blog-post.html

செவ்வாய், 25 மே, 2010

ஃபேஸ் புக்கிற்கு 200 கோடி டாலர் நஷ்டம்

லண்டன்:இறைத்தூதரை அவமதிக்கும் விதமாக கேலிச்சித்திரம் வெளியிட்ட சோஷியல் நெட்வொர்க்கான ஃபேஸ்புக்கிலிருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் பின்வாங்கியதால் இரண்டு பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நபிகளாரை அவமதிக்கும் விதமாக படம் வரையும் போட்டியை அறீவித்ததனால் பல முஸ்லிம் நாடுகளும் ஃபேஸ் புக்கை தடைச்செய்திருந்தன.

மார்க் ஸக்கர்பக் என்ற இஸ்ரேலிய ஆதரவாளரான யூதனுக்கு சொந்தமானதுதான் ஃபேஸ்புக்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்