செவ்வாய், 12 ஜூன், 2012

மருத்துவர்கள் நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு - தமுமுக கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை:

தமிழகத்தில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட 1349 மருத்துவர் பணியிடங்களில் ஒரு மருத்துவரும் சிறுபான்மை முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் இல்லை என தெரியவருகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள 3.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1349 மருத்துவர் பணியிடங்களில் 47 பணியிடங்கள் சிறுபான்மை முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் பொதுப்பிரிவிலும் சிறுபான்மையின முஸ்லிம் இனத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஒருவரும் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளரும் தற்போதைய முதல்வரும் அறிவித்தார்கள். இந்நிலையில் மருத்துவர்கள் தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாதது மிகவும் வருத்தமளிப்பதுடன் திட்டமிட்டு முஸ்லிம் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கருதுவதுடன் மக்கள் நல்வாழ்வுத் துறையின் இச்செயலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக முதல்வர் அவர்கள் இவ்விஷயத்தில் தலையிட்டு 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவர்களின் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது.

அன்புடன்
(ப. அப்துல் சமது)

கருத்துகள் இல்லை: