செவ்வாய், 22 நவம்பர், 2011

அடிப்படை வசதிகள் இல்லாத கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை சரி செய்யக் கோரி மனு – மரக்கடை லட்சுமாங்கு கிளை , பத்திரிக்கை செய்தி!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்த மருத்துவனை. 1952 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை கட்டிடம் கட்டபப்ட்டது.

தற்போது இந்த மருத்துவமனையில் அடிப்படைய வசதிகள் ஏதும் இல்லாமலும், சுகாதரமற்றும், கட்டிடம் மிகவும் பழுந்தடைந்தும் உள்ளதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதையரிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லட்சுமாங்கு கிளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த பிரச்சனையை புகைப்பட ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி கடந்த 15-11-2011 அன்று புகார் அளித்துள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த புகார் குறித்து தினகரன் தமிழ் முரசு போன்ற பத்தரிக்கைளில் செய்தி வெளியாகியுள்ளது.

1 கருத்து:

Ansardeen Bob சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்...!
நம்மை சுற்றி நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இதில் தனி நபர் முரண்பாடோ, இயக்கங்களின் அடிப்படையில் பிரிவினையோ வந்து விடக் கூடாது. எல்லோரும் ஒன்றிணைந்து போராடி நம் உரிமைகளை பெற வேண்டும். "அழுதால் தான் பால் கிடைக்கும். போராடினால் தான் உரிமைகள் கிடைக்கும்" என்ற காலச் சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். ஏதோ ஒரு கிராமத்தில், இப்படி ஒரு நிலையில், எந்த ஒரு மருத்துவ மனையாவது இருந்து விட முடியுமா? ஆனால் "நகராட்சி" அந்தஸ்து பெற்ற கூத்தாநல்லூரில் இந்த ஒரு நிலை. "வரி செலுத்தவில்லை என்றால் உங்கள் வீடு ஜப்தி செய்யப்படும்" என்று நகராட்சி விளம்பர வாகனம் மூலம் அறிவிப்பு செய்து வரி வசூலிக்கிறார்கள். நாமும் "அட்வான்ஸ்" நிலையில் தான் வரி செலுத்தி வருகிறோம். இருப்பினும் இந்த ஒரு நிலை நமதூர் மருத்துவ மனைக்கு மட்டும் இல்லை, குப்பை அள்ளுவதிலிருந்து, தெரு விளக்குகள் பராமரிப்பது, சாலைகள் பராமரிப்பது, கழிவு நீர் தேக்கங்கள் அகற்றுவது போன்ற சுகாதார மேம்பாட்டு பணிகள் எதுவுமே திறம்பட நடை பெறுவதில்லை. இவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு நாமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். புதிய நிர்வாகம் அமைந்திருக்கும் இந்த சூழலில், "இவர்களாவது ஏதும் மாற்றம் செய்து விட மாட்டார்களா?" என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் கூடியுள்ள வேளையில் "நம்பிக்கையுடன் காத்திருப்போம்." நம்பிக்கை தானே வாழ்க்கை.