சனி, 17 டிசம்பர், 2011

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8 அன்று தொடக்கம்


பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை தேர்வுத் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2012 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி தொடங்கும் தேர்வுகள் மார்ச் 30 ஆம்திகதி வரை நடைபெறும்.



இந்த வருடம் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வினை 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 மாணவ மாணவிகள் எழுத இருக்கின்றனர். இதில் 3,53,953 பேர் மாணவர்களும் 4,09,171 பேர் மாணவியர்களும் ஆவர்.

தேர்வு கால அட்டவணை :
மார்ச் 8-ந் தேதி - தமிழ் முதல் தாள்.
9-ந் தேதி - தமிழ் 2-வது தாள்.
12-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.
13-ந் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்.
16-ந் தேதி - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்.
19-ந் தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.
20-ந் தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
22-ந் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.
26-ந் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.
28-ந் தேதி- கம்மியூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய பண்பாடு, கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரிவேதியியல், சிறப்பு மொழித்தேர்வு, தட்டச்சு தேர்வு.
30-ந் தேதி - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

அனைத்து தேர்வுகளும் காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு வரை நடைபெறும். மாணவ-மாணவிகள் காலை 10 மணிக்கு முன்னதாக தேர்வு அறையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டு 10.10 மணி வரை வினாத்தாளினை மாணவ மாணவிகள் வாசிக்க நேரம் கொடுக்கப்படும். 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடை எழுதக் கொடுக்கப்படும் தாளில் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்கள் எழுத நேரம் தரப்படுகிறது.

கருத்துகள் இல்லை: