திங்கள், 12 அக்டோபர், 2009

கோவையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கைது

காவலர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் காக்கும் பொறுப்பேற்று இருப்பவர்கள், இவர்களை நம்பி சில அதிகாரங்களை அரசாங்கம் வழங்கி இருக்கிறது.

நாட்டு மக்களை காக்கும் பொறுப்புக்கு வரக்கூடியவர்களுக்கு கடுமையான சோதனைகளை தாண்டி இந்த பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த அடிப்படை உணர்வுகளுக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக நேற்று (11.10.2009) சில சி.ஆர்.பி.ஏஃப் (Central Reserve Police Force) வீரர்கள்(?) கோயம்புத்தூர் முஸ்லிம் தெருக்களில் புகந்து அங்குள்ள பெண்களை சீண்டியுள்ளார்கள்.

பொதுமக்களை காக்க சபதம் எடுத்துக் கொண்ட நவ்ஜவான்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்துள்ளனர். அடி தாங்க முடியாமல் 2 நவ்ஜவான்கள் தப்பியோடி விட்டனர். 3 வீரர்களை(?) பொதுமக்கள் பிடித்து உக்கடம் போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.

அந்த 3 வீரர்களும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஓட்டம் பிடித்த 2 வீரர்களை கோவை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.

இவர்கள் அனைவரும் குடிபோதைiயில் இருந்தனர் என்றும் வீடுவீடாக சென்று மணி எத்தனை என்று கேட்டனர் என்றும் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து 20 நிமிடங்கள் அங்கிருந்தனர் என்றும் இது காலை 11:00 மணிக்கு நடந்தது என்று முகமது ரபீக் கூறினார்.

இவர்களில் அலெக்ஸான்டர் சென்னையையும் சத்தியன் ஆந்திராவையும் கமல்தத்தன் உத்திரபிரதேசத்தையும் சேர்ந்தவர்கள்.

சி.ஆர்.பி.எஃப் போன்ற காவலர் பொறுப்புக்களுக்கு ஒழுக்கமுள்ளவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் ஆசை.

கருத்துகள் இல்லை: