வியாழன், 22 அக்டோபர், 2009

உய்குரில் காணாமல் போகும் முஸ்லீம்கள்

சீன போலீசாரால் கைது செய்யப்பட்ட உய்குர் முஸ்லீம்களில் பலர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்ந்துள்ளனர். இந்த பட்டியலில் சிறுவர்களும் உள்ளடங்குவார்கள். இதனை மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்பு புதன் கிழமையன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் "43 உய்குர் முஸ்லீம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் சீன போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பிறகு காணவில்லை என்றும் அரசு ஆவணங்களிலும் அவர்களின் பெயர்கள் இல்லை" என்றும் கூறியுள்ளது.

"இந்த எண்ணிக்கை வெறும் சொற்பமாக கணக்கிடப்பட்ட அறிக்கையின் முடிவு தான் என்றும் தீவிரமாக இந்த காணாமல் போனவர்களை ப்பற்றி கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை இது போன்று பல மடங்கு அதிகமாகக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.

இது போன்ற காணாமல் போனவர்கள் பொதுவாக அதிகாரிகளால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும், சட்டத்துக்கு புறம்பாக கொலை செய்யப்படுவதும் ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது.

ஜூலை மாதத்தில் நடந்த கலவரத்தை அடுத்து சீன காவல்துறை அதிகாரிகள் ஜின்ஜியாங் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த கலவரம் சீனாவின் உய்குர் முஸ்லீம்களுக்கும் சீனாவின் பாரம்பரிய தான் இனத்தவருக்கும் இடையே நடைபெற்ற மோதலாகும். இதில் அரசு அறிவிப்பு படி சுமார் 200 தான் இனத்தவர்கள் கொல்லப்பட்டதாக தெரிகின்றது.

இந்நிலையில் காவல் துறையின் தேடுதல் வேட்டையின் பின்பு கைது செய்யப்பட்டவர்களில் பலரின் நிலை என்ன வென்று தெரியவில்லை. உய்குர் முஸ்லீம்கள், காணாமல் போனவர்களை தேடுவதற்கு கூட அச்சப்பட்டு இருக்கின்றனர் என்று Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

காவல் துறையின் இந்த தேடுதல் வேட்டையை பார்த்த பலர், "அவர்கள் வீட்டினுள் சென்று ஆண்களை எல்லாம் பிடித்து சென்றனர். அவர்கள் ஆர்பாட்டத்தின் போது வீட்டில் இல்லாதவரையும் கூட கைது செய்து சென்றனர் என்று கூறுகிறார்கள்.

மேலும், அவர்கள் எங்கள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியே வர சொன்னார்கள். பெண்களையும் வயதானவர்களையும் தனியே நிற்க சொல்லிவிட்டு, 12 வயது முதல் 45 வயதிலான எல்லா ஆண்களையும் அவர்கள் கைது செய்து சென்றனர்.

அவர்கள் அனைவரையும் சுவற்றை நோக்கி வரிசையாக நிற்க வைத்தனர். பலர் முழங்காலில் நிறுத்தப்பட்டனர், பலரை தரையில் கிடத்தி அவர்களின் கைகளை பின்புறம் கட்டையை வைத்து கட்டினர்" என்று ஐசானம் என்ற உய்குர்வாசி கூறினார்.

இது போன்ற மற்றுமொரு நிகழ்வில் 14 வயது சிறுவனான ஷராபுதீனை போலீஸார் கைது செய்து சென்றனர். அன்றிலிருந்து அவனைப் பற்றிய தகவல்கள் ஏதுமில்லை.

அந்த சிறுவனின் தந்தை அப்பகுதி காவல் துறையிடம் அவனைப்பற்றிய தகவலை கேட்டால், "அவனது பெயர் தாங்கள் கைது செய்தவர்களுடைய பெயர் பட்டியலில் இல்லை" என்று கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வுகளை குறித்து கருத்து தெரிவித்த Human Rights Watch இன் இயக்குனர் Brad Adams கூறுகையில், "சர்வதேச சமுதாயம் சீனாவிடம் இது போன்ற காணாமல் போனறவர்கள் பற்றி சீன அரசாங்கம் பதிலளிக்க வற்புறுத்த வேண்டும்" என்று கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சீன அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

சீன அரசாங்கம் ஜூலையில் நடந்த கலவரத்திற்காக இது வரை 12 பேர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி,
அல் ஜசீரா.

கருத்துகள் இல்லை: