இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
திங்கள், 5 அக்டோபர், 2009
விபச்சாரிகளுக்கு புர்காவா ? காவல்துறைக்கு கண்டனம் ?
பர்தாவுடன் ஆஜரான பஜாரிகள்
விபச்சாரிகளுக்கு புர்கா அணிவித்து முஸ்லிம் பெண்களை இழிவு படுத்தும் காவல்துறையின் போக்கைக் கண்டித்து காவல்துறை ஆணையரிடம் தமுமுக மனு
(தமுமுக மாநிலச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜா கனி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:)
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி மற்றும் சில விபச்சாரப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் கண்ணியத்துடன் அணிகின்ற புர்காவை அணிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளன. மேலும், விபச்சார வழக்கில் கைதாகும் கழிசடைப் பெண்களுக்கு முஸ்லிம் பெண்களுக்கே உரிய கண்ணியமான புர்காவை அணிவித்து, அழைத்து வரும் கயமைத்தனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பத்திரிக்கைகளிலும் வெளிவருகிறது.
இதனால் முஸ்லிம் சமுதாயப் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர். புர்கா அணிந்து செல்லும் பெண்கள் கேலி செய்யப்படும் வாய்ப்பும் இதனால் உருவாகியுள்ளது. விபச்சாரிகளுக்கு புர்கா அணிவிக்கும் தரங்கெட்ட செயலைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக முதல்வருக்கும், தமுமுக தலைவர் பேரா. டாக்டர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதியுள்ளார் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தமுமுக மாநிலச் செயலாளர் , பி.எஸ்.ஷாகுல் ஹமீத், வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.செய்யது அபூதாஹிர் ஆகியோர் தமுமுக சார்பில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக