ஒருவனுக்கு சொல் புத்தி இருக்க வேண்டும். அல்லது சுயபுத்தி இருக்க வேண்டும். இரண்டும் இல்லாதவன் அறிவிலும், ஆற்றலிலும் நியாயத்தை எடைபோடும் விஷயத்திலும் இரண்டும் கெட்டானாகவேகருதப்படுவான். அதற்கு உடனடி உதாரணம் குமுதம் ரிப்போர்ட்டரில் 'செல்வா' என்பவரின் பெயரில் எழுதப்பட்டிருக்கும் இளம் பெண்களைக் குறிவைக்கும் 'லவ் ஜிகாத்' மிரண்டு கிடக்கும் பெற்றோர் என்ற தலைப்பில் வெளியான செய்தியைக் கூறலாம்.
வடமாநிலங்களிலும், கர்நாடகாவிலும் பரப்பிய மதவெறித் தீயைப் போல கேரள மாநிலத்தில் வழிபாட்டுத்தலம் தொடர்பான சர்ச்சைகளை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதை சங்பரிவார் அனுபவப்பூர்வமாக உணர்ந்து பலமுறை படுதோல்விகளை பரிசாகப் பெற்றதால் கச்சிதமாக திட்டமிட்டு கேரள மாநிலத்தில் கரையேறலாம் என்பதற்காக சங்பரிவார் நச்சு சிந்தனைகளின் தலைமைப்பீடம் கண்டுபிடித்த 'அவதூறு கற்பிதம்'தான் லவ் ஜிஹாத் என்ற திரிபுவாதமாகும்.
இந்த விவகாரத்தின் வீரியம் அறியாது தனது பெயரையும், இதழியல் அறத்தையும் தொலைத்துவிட்டு தரம் தாழ்ந்தது குமுதம் ரிப்போர்ட்டர்.
'லவ் ஜிஹாத்' என்ற குதர்க்கமான பிரச்சார வாசகத்தை வைத்து நாட்டையே கலவரக்காடாக்க சங்பரிவார் திட்டமிட்டிருப்பதும் அதற்கு நாட்டின் அதிமுக்கிய துறைகளில் உள்ள பொறுப்பு வாய்ந்த பெரிய மனிதர்களும், சில நச்சு சிந்தனை கொண்ட ஊடகங்களும் துணை போகும் கொடுமையை விலாவாரியாக விவரிக்கத் தொடங்கினால் நெஞ்சம் கொதித்துப் போகும்.
சமீபத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள், இரண்டு முஸ்லிம் இளைஞர்களைக் காதலித்து பின்னர் இஸ்லாமிய நெறியை ஏற்றுக்கொண்டு திருமணமும் முடித்துக் கொண்டனர். இரண்டு பெண்களில் ஒருவர் கேரள மாநில பாரதீய ஜனதா தலைவர் ஒருவரின் மகள். மற்றொருவர் கேரள மாநில போலீஸ் உயர் அதிகாரியின் மகள். (இந்த விவரங்களை குமுதம் ரிப்போர்ட்டர் சாமர்த்தியமாக மறைத்துவிட்டது).
இந்த இரண்டு இளம்பெண்களும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொள்ள மதரஸா என்னும் மார்க்க கல்விக்கூடத்தில் சேர்ந்து இஸ்லாமியக் கல்வி கற்றனர்.
இந்த நிலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இரண்டு பெண்களின் அப்பாக்க ளும் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் என்று அழைக்கப்படும் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இளம்பெண்கள் இருவரும் ஹிஜாபுடன் நீதிமன்றத் தில் ஆஜர் ஆனார்கள். ஹிஜாபுடன் வந்த ஹிந்து பெண்கள் என ஒரு பதட்டப்பிரச்சாரத்தை மீடியாக்கள் பரப்பின. இரண்டு இளம் பெண்களின் தகப்பன்மார்களும் தங்கள் பெண்களை வற்புறுத்தி மிரட்டி மதம் மாறச் செய்தனர் என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
ஆனால், அது அவதூறு நிறைந்த பொய்ப் புகார் என்பதை நீதிமன்றத்திற்கு வந்த இரண்டு இளம் பெண்களும் நிரூபித்தனர். கட்டாயப்படுத்தி மதம் மாற்றியிருந்தால் அவர்கள் ஏன் ஹிஜா புடன் நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்ற கேள்வி அனைவரின் உள்ளங்களிலும் எழுந்தது. ஆனால் இரண்டு இளம் பெண்களும்.... ஹிஜாபுடன் நீதிமன்றம் வந்த தகவலை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் கட்டாயப் படுத்தி மதம் மாற்றப்பட்டனர் என்று வெளியிட்டது. தன்னையறியாமல் உண்மையைக் கூறியதோடு உளறியும் கொட்டியது.
இரண்டு முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டதால் இரண்டு இளைஞர்களும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் நீதிபதி முஸ்ம் இளைஞர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்ததோடு, லவ் ஜிஹாத் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என உள்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
லவ் ஜிஹாத் என்ற சொல் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. உள்ளிட்ட தீவிர மதவெறி அமைப்புகள் திட்டமிட்டு பரப்பிய பொய் வாதமாகும். லவ் ஜிஹாத் குறித்து மதவெறி அமைப்புகள் பொதுக்கூட்டங்கள், துண்டுப் பிரசுரங் களை வெளியிட்டு கேரளாவை பதட்டத் தின் பிடியில் ஆழ்த்தின. மதவெறி பிற்போக்கு சக்திகள் பயன் படுத்திய அதே வார்த்தையை மாண்புமிகு நீதிபதி பயன்படுத்தி, தான் எங்கிருந்து தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தியிருப்பதாகவே படுகிறது.
காதலிப்பதும், காதலுக்காக மதம் மாறு வதும், தொன்று தொட்டு நடை பெற்று வரும் ஒன்று தான். முஸ்லிம் இளைஞர்களை பிற சமூகப் பெண்கள் காதலிப்பதும் மதம் மாறுவதும் பரவலாக இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம் ஆனால் இதனை உள்நோக்கத்தோடு பாசிஷ சக்திகள் பரப்புவது அவர்களது பிறவிக் குணம். ஆனால் நீதித்துறையில் உள்ள சிலரும், குமுதம் ரிப் போட்டர் போன்ற ஊடகங்களிலும் விஷவைரஸ்கள் புகுந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. நாட்டில் வீண் பதட்டத்தையும், வன்முறையையும் விதைத்து அதை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக