சனி, 10 அக்டோபர், 2009

நரோடா பாட்டியா கலவரம் - குற்றப் பத்திரிகை தாக்கல்


நரோடா பாட்டியாவில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான மதக் கலவரத்தை விசாரித்து வந்த சிறப்பு விரைவு தனி நீதிமன்றம் கடந்த வியாழன் அன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாநில மந்திரி மாயா கோட்னானி உட்பட 60 பேர் மேல் அவர்களுடைய குற்றங்களை பதிவு செய்தது.

கோட்னாணியை தவிர்த்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாவது, பாபு பஜ்ரங்கி, பிபின் பாஞ்சல், மனோஜ் சிந்தி, கிஷன் கொராணி, கிர்பால் சிங்க் சாப்டா, ராஜ்குமார் சாவ்மல் மற்றும் முகேஷ் வாக்கில் ஆவர்.

வழக்கறிஞ்சர் கௌரங் வியாஸ் கூறியதாவது, "கோட்னானி மீது ஒரு பெரும் கும்பலை கலவரத்திற்கு தூண்டியது, ஆயுதங்களை பயன்படுத்தியது, சட்டத்திற்கு புறம்பாக கூடியது ஆகிய குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. மேலும் மற்ற குற்றவாளிகள் மீது சுமத்தப் பட்ட அனைத்து குற்றங்களும் கோட்னானி மீது சுமத்தப் படும், கற்பழிப்பு குற்றத்தை தவிர."

"மேலும் மற்றவர்கள் மீது, கலவரம் செய்தது, கலவரத்தை தூண்டியது, கற்பழிப்பு, கொலை, தனிநபர் சொத்துக்கு சேதம் விளைவித்தல், இரு சமூகத்திற்கு இடையே பிளவு ஏற்படுத்தியது, மற்றும் கிரிமினல் சூழ்ச்சிகள் செய்ததற்கான குற்றங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன."

நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ்

கருத்துகள் இல்லை: