வடக்கில் பா.ஜ.க தங்களுக்குள் அடித்துக்கொள்வது போதாதென்று தெற்கேயும் அடித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது.
தற்பொழுது கர்நாடகாவின் முதல்வர் எடியூரப்பாவிற்கும் கர்நாடக கேபினெட் அமைச்சர்களான செல்வ செழிப்புமிக்க பெல்லாரி மாவட்டத்தின் ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டையை தீர்த்து வைக்க பா.ஜ.க வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அருண் ஜெட்லீ கர்நாடகா விரைந்துள்ளார்.
பா.ஜ.க வில் ஏற்பட்டு வரும் உட்கட்சி பூசல் புற்று நோய் போல் நாளுக்கு நாள் பரவி வருகின்றது. இந்த உட்கட்சி பூசலால் அந்த கட்சி ஒவ்வொரு மாநில தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இழப்பு மேலும் அதிகரிக்காமல் இருக்க பா.ஜ.க மத்தியிலிருந்து அருண் ஜெட்லியை கர்நாடகாவிற்கு அனுப்பிவைத்துள்ளது.
கர்நாடகாவில், எடியூரப்பாவிற்கும் ரெட்டி சகோதரர்களுக்கும் ஏற்கனவே பல கருத்து வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. இந்த முறை இவர்களுக்கிடையே கிளம்பியிருக்கும் பிரச்சனை கர்நாடக அரசு புதிதாக விதித்துள்ள வெல்ல நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வண்டிகளுக்கான வரியால் ஏற்பட்டுள்ளது. இந்த வரி இரும்புச் சுரங்கத்தில் செல்வாக்கு மிகுந்து திகழும் தங்களை நேரடியாக பாதிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
இந்த பிரச்சினையை அடுத்து ரெட்டிக்கு நெருக்கமான கலெக்டரும் காவல் துறை ஆணையரும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக முதல்வரிடம் இது பற்றி கேட்டதற்கு, அவர் இதனை மறுத்துள்ளார். அருண் ஜேட்லியின் வரவு பா.ஜ.க விற்கு எதிராக கிளப்பப்பட்டு வரும் புரளிகளைப் பற்றி விசாரணை செய்வதற்காக என்று அவர் கூறினார்.
நன்றி,
NDTV.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக