செவ்வாய், 27 அக்டோபர், 2009

மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
மேலப்பாளையத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் விநியோகம் செய்யக் கோரியும், 29வது வார்டு மற்றும் 33வது வார்டு பகுதி மக்களுக்கு இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு வழங்காததை கண்டித்தும், மேலப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள ஆடறுப்பு மனையை உடனே திறக்க வலியுறுத்தியும், நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 25.10.2009 காலை 10 மணிக்கு மேலப்பாளையம் சந்தை முக்கில் வைத்து நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். நகர தலைவர் கே.எஸ்.காசீம் பிர்தௌசி, செயலாளர் இ.எம்.அப்துல் காதர், பொருளாளர் ஏ.காஜா, துணைத்தலைவர் கே.கே.அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் ஏ.வாகித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார். தலைமை கழக பேச்சாளர் புளியங்குடி செய்யது அலி சிறப்புரையாற்றினார். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.மைதீன் சேட்கான், த.மு.மு.க.மாவட்ட தலைவர் ஏ.மைதீன் பாரூக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை: