சனி, 31 அக்டோபர், 2009

பாஜக ஆட்சியில் ரூ. 1,60,000 கோடி ஊழல்!

பாஜக ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறையில் ரூ. 1,60,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் அமைச்சர் ஆ. ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

பாஜக தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது செல்போன் சேவை அளித்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் இலவசமாக ஒதுக்கப்பட்டன. டெலிகாம் வரலாற்றில் நடைபெற்ற மிகப் பெரிய முறைகேடு இதுவேயாகும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முரண்பட்ட முடிவுகள் உருவானதற்கும் பாஜக அரசுதான் காரணம். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வது தொடர்பான முடிவு முதலில் கிடப்பில் போட்டதும் பாஜகதான். பின்னர் மிகவும் வசதியான சமயத்தில் 500 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையை பாஜக அமைச்சரவை ஒதுக்கியது.

2004-ம் ஆண்டு இத்துறை அமைச்சராயிருந்த அருண் செüரி, லைசென்ஸ் கட்டணத்தை 2 சதவீதமாகக் குறைத்தார். அருண் செüரி எடுத்த முடிவினால் மட்டும் ரூ. 900 கோடி இழப்பு ஏற்பட்டதாக ராசா குற்றம் சாட்டினார்.


நன்றி:
http://www.dinamani.com

கருத்துகள் இல்லை: