போலி என்கவுண்டர் வழக்கை திசைதிருப்ப முயன்றதாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி மீது சி.பி.ஐ புதிய புகார் ஒன்றை கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் இக்குற்றச்சாற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், சொராபுதீன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க கீதா லோகேரி தலைமையில் அப்போது சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தமக்கு ஆதரவாக செயல்பட காவல்துறை உயரதிகாரிகளான அமேஷ் சுதர்சமா, என்.கே.அமீன் ஆகியோரை மோடி திட்டமிட்டே விசாரணை குழுவுக்கு இடம் மாற்றம் செய்ததாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வழக்கு விசாரணையை தவறான வழியில் நடத்த வேண்டும் என்று லோகேரிக்கு உத்தரவிட்டதாகவும் இல்லையெனில் அவரது கணவர் கைது செய்யப்படுவார் என்று மோடி மிரட்டியதாக சி.பி.ஐ குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடைய சமர்பதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமீத் ஷாவின் பிணை மனு அகமதாபாத் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக