வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ஈரான் அதிபரைக் கொல்ல முயற்சியா? ஈரான் மறுப்பு

டெஹ்ரான்,ஆக5:ஈரான் அதிபர் அஹ்மதி நிஜாதை கொல்ல முயற்சி நடந்ததாக கூறும் செய்தியை ஈரான் மறுத்துள்ளது.

ஹமதான் மேற்கு நகரத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கெடுக்கச் சென்ற நிஜாதின் வாகனத்தின் மீது வெடிப்பொருட்கள் வீசப்பட்டதாக ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் இத்தகையதொரு தாக்குதல் நடைபெறவில்லை என ஈரானின் அதிகாரப்பூர்வ சேனலான பிரஸ் டிவி தெரிவிக்கிறது.

சமீப பகுதியில் வெடிப்பொருள் வெடித்ததை தாக்குதல் நடந்ததாக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வர நிஜாதிற்கு சிரமமொன்றும் ஏற்படவில்லை. விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் கால்பந்து மைதானத்திற்கு செல்லும் வழியில்தான் நிஜாதின் வாகனத்தின்மீது தாக்குதல் நடந்ததாக அதிபர் அலுவலக வட்டாரங்களை சுட்டிக்காட்டி ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

வெடிப்பொருட்களை எறிந்தவர்களை கைதுச்செய்துள்ளதாக துபாயில் அல் அராபியா சேனலும் செய்தி வெளியிட்டிருந்தது. இச்சம்பவத்தில் வேறு சிலருக்கு காயம் ஏற்பட்டதாக பல சேனல்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

பட்டாசு வெடித்ததாக ஒருவரை கைதுச் செய்துள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: