அதிபர் மஹ்மூத் அகமதிநிஜாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிபர் மஹ்மூத் அகமதிநிஜாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ஈரான் அதிபரைக் கொல்ல முயற்சியா? ஈரான் மறுப்பு

டெஹ்ரான்,ஆக5:ஈரான் அதிபர் அஹ்மதி நிஜாதை கொல்ல முயற்சி நடந்ததாக கூறும் செய்தியை ஈரான் மறுத்துள்ளது.

ஹமதான் மேற்கு நகரத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கெடுக்கச் சென்ற நிஜாதின் வாகனத்தின் மீது வெடிப்பொருட்கள் வீசப்பட்டதாக ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் இத்தகையதொரு தாக்குதல் நடைபெறவில்லை என ஈரானின் அதிகாரப்பூர்வ சேனலான பிரஸ் டிவி தெரிவிக்கிறது.

சமீப பகுதியில் வெடிப்பொருள் வெடித்ததை தாக்குதல் நடந்ததாக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வர நிஜாதிற்கு சிரமமொன்றும் ஏற்படவில்லை. விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் கால்பந்து மைதானத்திற்கு செல்லும் வழியில்தான் நிஜாதின் வாகனத்தின்மீது தாக்குதல் நடந்ததாக அதிபர் அலுவலக வட்டாரங்களை சுட்டிக்காட்டி ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

வெடிப்பொருட்களை எறிந்தவர்களை கைதுச்செய்துள்ளதாக துபாயில் அல் அராபியா சேனலும் செய்தி வெளியிட்டிருந்தது. இச்சம்பவத்தில் வேறு சிலருக்கு காயம் ஏற்பட்டதாக பல சேனல்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

பட்டாசு வெடித்ததாக ஒருவரை கைதுச் செய்துள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 13 பிப்ரவரி, 2010

இஸ்ரேல்லுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை.


டெஹ்ரான்: முதல் தொகுதி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து விட்டோம். இனி நாங்களும் அணு ஆயுத நாடுதான். இஸ்ரேல் எங்களிடம் வாலாட்ட முயன்றால் அதை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவோம் என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதநிஜாத் அறிவித்துள்ளார். உயர் ரக செறிவூட்டப்பட்ட (highly enriched uranium) யுரேனியத்தை 2 நாட்களிலேயே தயாரித்துள்ளதாகவும் அகமதிநிஜாத் அறிவித்துள்ளார்.

ஈரான் இப்போது ஒரு அணு ஆயுத நாடாகும். 20 சதவீத எரிபொருளில், முதல் தொகுதி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாம் தயாரித்து விட்டோம். அதை தற்போது விஞ்ஞானிகளிடம் கொடுத்துள்ளோம். 2 நாட்களில் இதைச் செய்துள்ளோம் என்றார் அகமதிநிஜாத்.

தன்னிடம் உள்ள யுரேனியத்தை செறிவூட்டும் பணியை தொடங்கியிருப்பதாக செவ்வாய்க்கிழமைதான் அறிவித்தது ஈரான். இந்த நிலையில் முதல் தொகுதி செறிவூட்டும் பணியை 2 நாட்களில் அது முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணு உலைகளில் எரிபொருளாக பயன்படுத்துவார்கள். அதேசமயம், இதை வைத்து அணுகுண்டுகளையும் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

யுரேனியம் செறிவூட்டும் பணியை நிறுத்துமாறும், அதைத் தொடரக் கூடாது என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எச்சரித்துள்ளன. ஆனால் அதை ஈரான் நிராகரித்து விட்டது. தடை விதிப்போம் என்று ஐ.நா. விடுத்த மிரட்டலையும் அது புறக்கணித்து விட்டது.

எங்களிடம் உள்ள அனைத்து யுரேனியத்தையும் செறிவூட்டும் பணியை தொடருவோம் என்றும் ஈரான் கூறி விட்டது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிக்கப்பட்ட செய்தியை நாட்டு மக்களுக்கு அறிவித்த கையோடு சிரிய அதிபர் பாஷர் அல் அஸாத்தைத் தொடர்பு கொண்டு பேசினார் அகமதிநிஜாத்.

அவரிடம் பேசுகையில், ஜியோனிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்கள், காஸா மக்களிடமும், லெபனானின் ஹிஸ்புல்லாவிடமும் பட்ட தோல்விக்குப் பழி வாங்க ஈரான் மீது ராணுவ நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
அது ஒரு முட்டாள்தனமான நடவடிக்கையாகவே அமையும். அதுபோல ஒரு தாக்குதல் நடந்தால், அதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். நீங்களும் எதிர்க்க வேண்டும்.

அவர்கள் வைத்துள்ள இஸ்ரேல் என்ற பெயரிலான நாடே இல்லாத அளவுக்கு, அடையாளம் தெரியாத அளவுக்கு அதை அழித்து உருக்குலைத்து விடுவோம்.அத்தோடு ஜியோனிஸ்டுகளின் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு கட்டி விடுவோம்.

சிரியா, லெபனானன், பாலஸ்தீனம் ஆகியவற்றின் பக்கம் எப்போதும் ஈரான் துணை நிற்கும். விரைவில் ஜியோனிஸ்டுகள் அழிவது உறுதி என்றார் அகமதிநிஜாத்.இஸ்ரேல் என்ற நாட்டை ஈரான் இதுவரை அங்கீகரிக்கவில்லை. அந்த நாட்டை ஜியோனிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்கள் என்றுதான் ஈரான் அழைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 15 ஜூன், 2009

தேர்தல் முடிவுகள் உண்மையானவை: இரானிய அதிபர் அகமதிநிஜாத்

வெற்றி ஊர்வலத்தில் அகமதிநிஜாத் ஆதரவாளர்கள்

இரானில் அதிபர் மஹ்மூத் அகமதிநிஜாத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைக் கொண்டாடும் முகமாக தெஹ்ரானில் நடந்துவரும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெற்றுவருகிறார்கள்.

முன்னதாக செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசிய அகமதிநிஜாத், இந்தத் தேர்தல் முடிவுகள் சுதந்திரமானது, உண்மையானது என்று கூறினார்.

தேர்தல் ஒரு கால்பந்து ஆட்டம்போன்றது, தோற்பவர்கள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அகமதிநிஜாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய வேட்பாளரான மீர் ஹொசைன் முஸாவி, தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக புகார் கொடுத்துள்ளார். அமைதியான வழியில் போராட்டங்கள் நீடிக்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்றிரவு பொலிசார் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் டஜன் கணக்கானோரை கைதுசெய்திருந்தனர். முன்னாள் அதிபர் முகமது கடமியின் சகோதரரும் அவர்களில் ஒருவர். அவர்களில் சிலர் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.