இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்க்குழுக் கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பர்தன், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
“ஒவ்வொரு நாளும் சூழ்நிலை மோசமாகிக்கொண்டே போகிறது. மூன்று நாட்களில் 9 பேர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகியுள்ளனர். காவல் துறையினரும், ஆயுதப்படையினரும் மக்கள் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இதற்காக மாநில அரசை கலைத்திட வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளுடனும் பேசுமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம். காஷ்மீர் பிரச்சனைக்கு இறுதித் தீர்வு அம்மாநிலத்திற்கு முழு சுயாட்சி வழங்குவதேயாகும். ஆனால் இறுதித் தீர்வு என்று வரும்போது, காஷ்மீர் ஒரு பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே பேச்சுவார்த்தை நடத்தும்போது இரு தரப்பையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக