செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

ஒபாமாவுடன் நேருக்கு நேர் பேச தயார்: ஈரான் அதிபர்

சர்வதேச சமுதாயத்திற்கு கவலை அளிப்பதாக உள்ள பிரச்சனை குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் நேருக்கு நேர் பேச தாம் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் முகமத் அகமதுனிஜாத் கூறியுள்ளார்.

ஈரான் நாட்டின் பல்வேறு துறைகளை சார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை அகமதுனிஜாத் மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சி அந்நாட்டு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகியது.

அப்போது மேற்கண்டவாறு கூறிய அவர், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா. சபை கூட்டத்தில் தாம் கலந்துகொள்ள செல்லும்ம்போது, ஒபாமாவை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று தாம் நம்புவதாக தெரிவித்தார்.

சர்வதேச சமுதாயத்திற்கு கவலை அளிப்பதாக உள்ள பிரச்சனைகள் குறித்து, யாருடைய கருத்து சிறந்தது என்பதை தெரிந்துகொள்ளும் விதமாக, ஊடகங்கள் முன்னிலையில் ஒமாபாவுடன் தாம், தாம் நேருக்கு நேர் பேச தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: