திங்கள், 2 ஆகஸ்ட், 2010

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு ஒருபோதும் மன்னிப்புக் கோர மாட்டேன்' - கல்யான் சிங்

லக்னோ,ஆக2:முன்னாள் உத்தரபிரதேச முதலமைச்சர் கல்யான் சிங் பிஜேபி யில் இணைவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஆட்சிக்காக பிஜேபி பல முக்கிய ஹிந்துத்துவா கொள்கைகளில் சமரசம் கொள்வதாகவும் ஆனால் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு தான் ஒரு போதும் மன்னிப்பு கோர மாட்டேன் என்பதாக கல்யான் சிங் தெரிவித்துள்ளார்.

ஜன கிராந்தி கட்சியின் முதல் தேசிய பொதுக்கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய அவர்,"எப்படி பிஜேபி இனவாத கட்சி என்று கருதப்படுகிறதோ, அதேபோல் தான் காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகி கட்சிகளும் இனவாத கட்சிகள்" என்று கூறினார்.

ராமர் கோவில்,பொது சிவில் சட்டம்(பிரிவு 370) ஆகிய முக்கிய ஹிந்துத்துவா கொள்கைகளில் பதவிக்காக பிஜேபி சமரசம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும்,"புதிதாக துவக்கப்பட்டுள்ள எங்கள் கட்சியின் பெயரை சீர்குலைப்பதற்காக சதி நடைபெறுகிறது' என்றும் அவர் விமர்சித்தார்.

முஸ்லிம்களிடம் முலாயம் சிங் மன்னிப்பு கேட்டதை கடுமையாக சாடிய அவர், இதன் மூலம் அவர் ஹிந்துக்களை புண்படுத்தி விட்டார், ஆகவே ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியதற்காக ஹிந்துக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

ராம பக்தர்களின் மீது தாக்குதல் நடத்தியதற்காக வரலாறு அவரை சபிக்கும் என்று உரத்துக் கூறிய கல்யான் சிங், தானோ பாபரி மஸ்ஜித் இடிப்பதற்கு பாடுபட்டதாக தெரிவித்தார்.

"எங்களுக்கு முஸ்லிம்களின் ஓட்டுக்களும் தேவைத்தான், ஆனால் அதற்கு நான் ஒரு போதும் ஹிந்துத்தவ கொள்கைகளில் சமரசம் மேற்கொள்ளமாட்டேன்." என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: