ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

தமிழகத்திலும் போபால்கள்! ஓர் அபாய எச்சரிக்கை

இந்தியாவில் 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த போபால் விஷவாயு சம்பவத்தில் 35 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியானார்கள். லட்சக்கணக்கான மக்கள் இன்னமும் அந்த பாதிப்பிலிருந்து மீளவில்லை.

போபால் நகரமே சின்னாபின்னப் படுத்தப்பட்டு சீரழிந்த நிலையில் இருந்தது. இன்னமும் சுகாதார இழப்பு மருத்துவ குறைபாடுகளில் இருந்து மக்கள் மீட்கப்படவில்லை.

ஜப்பானின் நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்புகளுக்கு அடுத்தபடியாக போபால் விஷவாயு பாதிப்பையே சர்வதேச சமூக நல ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

பன்னாட்டு நிறுவனங்களானாலும் சரி, உள்நாட்டு நிறுவனங் களானாலும் சரி மக்களை திடீர் விபத்துக்களிலிருந்து பாதுகாக் கவோ, திடீர் விபத்துக்கள், தொழிற்சாலை பேரழிவுகள் திடீரென ஏற்பட்டாலோ அதிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்க எவ்வித ஏற்பாடுகளும் தொழிற்சாலை நடத்துபவர்களிடம் இல்லை என்ற அதிர்ச்சிகர தகவல்கள் நாட்டு மக்களை பதைபதைப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

கோடிகளுக்கு ஆசைபட்டு அல்லலுக்கு ஆட்படுத்தி ஜனநாயக நாட்டை பிணக்காடாக மாற்றும் அவலநிலை குறித்து ஆதிக்க சக்திகளுக்கு வால்பிடிக்கும் சில அரசியல் கட்சிகள் வேண்டு மானால் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் சமூகநலன் நாடும் அமைப்புகள் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.

சென்னை அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் ஃபாக்ஸ் கான் என்ற செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 240 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவரும் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்ற வாரம் நடந்த சம்பவத்தில் மெலதியான் என்ற வாயு கசிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மனித உயிர்களின் மீதான அலட்சியம் அப்பட்டமாக தெரிந்தது.

ஒரு மாத காலத்திற்கு மேலாக தடையில்லா சான்று வாங்காம லேயே தொழிற்சாலை இயக்கப்பட்டு வருவது குறித்து விளக்கம் கேட்டு காஞ்சி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ள தகவல்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன.

விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை வழங்காமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்தது ஏன்?

தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள், அவர் களைப் பாதித்த விஷவாயுவின் தன்மைகள் குறித்த விவரங் கள் வெளிவந்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்தில் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதில் மற்றொரு அதிர்ச்சிகர சம்பவமும் நிகழ்ந்தது. விஷவா யுவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளிவந்த 26 பேருக்கு வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய கெடு தல்கள் களையப்பட வேண்டும். மற்றொரு போபால் பேரழிவை இந்த நாடு தாங்காது. உரிய நடவடிக்கைகள் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை: