ஜூலை 22, தமிழகத்தில் காலியாக இருக்கும் உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சி, திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியிலும், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 28&வது வார்டிலும் போட்டியிட்டது.
திருச்சி 28&வது வார்டில் திமுக&வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தபோது, கலவரம் ஏற்பட்டதும், பகுருதீன் எனற மமக நிர்வாகியின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதும், அதன் எதிரொலியாக பேருந்துகள் தாக் கப்பட்டதும் கடந்த வார செய்தியாகும்.
மமகவினரை தேர்தல் பிரச் சாரம் செய்ய விடாமல், அவர்கள் மீது ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகளின் வற்புறுத்தலில் வழக் குகள் பதிவு செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக மமகவினரும் பிரச்சாரம் செய்ய முடியாமல் போலீஸ் துணையுடன் தடுக்கப் பட்டனர்.
திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கூட்டணியை தன் னந்தனியாக எதிர்கொண்ட மமக& வை எதிர்கொள்ளத் திராணியற்ற வர்கள், வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்தி, வேட்டி, சேலை, ஆயிரம் ரூபாய் பணம் என கள்ளத் தனமாக வினியோகித்தனர். மமக வினர் துண்டு பிரசுரங்களை மட்டுமே வினியோகித்து, வீடு வீடாக சென்றனர். அதுவும் கடைசி நேரத்தில் அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்து பிரச்சாரமும் செய்ய விடாமல் தடுக்கப்பட்டது. ஜூலை 24 அன்று வாக்குகள் எண்ணப்பட்டது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், முஸ்லிம் லீக் உள்ளிட்ட 10 கட்சி கூட்டணியின் வேட்பாளருக்கு, பதிவான வாக்குகளில் 3318 கிடைத்தது. தன்னந் தனியாக போட்டியிட்ட மமக வேட்பாளர் மீரான் புதிய சின்னத்தில் போட்டியிட்டு 958 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல், சில ஆயிரம் ரூபாய்களை மட்டும் பிரச் சாரத்திற்கு பயன்படுத்தி தன்னந் தனியாக மமகவுக்கு கிடைத்த வாக் குகள் திருச்சியில் பெரும் வரவேற் பை பெற்றிருக்கிறது.
மீஞ்சூர்
மீஞ்சூரில் காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம், முஸ்லிம் லீக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் முதல்நாள் இரவு வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்திருக்கிறார். இங்கு அதிமுகவினர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வேலை செய்தனர். அது பலருக்கும் ஆச்சர் யத்தை அளித்தது. திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகள் ஓரணியில் நின்ற சூழலில், மமக வேட்பாளர் செய்யது அகமது தனித்து நின்று மோதினார். வாக்கு எண்ணப்பட்டதில் திமுக, அதிமுக, ஆதரவோடு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 466 வாக் குகளையும், தனியாக புதிய சின் னத்தில் போட்டியிட்ட மமக வேட் பாளர் 338 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார்.
தனித்து நின்று, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் இவ்வளவு வாக்குகளை பெற்ற மமகவினரை பார்த்து அந்த பகுதியே பாராட்டியது.
உச்சகட்டமாக அந்த பகுதியில் முதல் நாள் வரை மமக வேட்பா ளருக்கு எதிராக தலைமை யேற்று வேலை செய்த திமுக செயலாளர் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், மமக வேட்பாளர் செய்யது அகமது வை வீடு தேடி வந்து பொன்னாடை போர்த்தி, தார்மீக ரீதியாக நீங்கள்தான் ஜெயித்தீர்கள் என வாழ்த்தினார்.
இது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. தோற்ற வேட்பாளரின் பலத்தையும், தங்களின் நேர்மையற்ற செயல்பாடுகளையும் உணர்ந்து, மன சாட்சி உறுத்தியதால் அந்த திமுக செயலாளர் தோற்ற வேட்பாளரை பாராட்டியிருக்கிறார்.
இரு இடங்களிலும் தோற்றாலும், இரண்டாமிடத்திற்கு மமக முன்னே றியது பெரிய விஷயமாகும்.
கேவலமான முறையில் ஜெயிப் பதைவிட, நேர்மையான முறையில் தோற்பது உயர்ந்தது.
-தமிழ்செல்வன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக