திங்கள், 2 ஆகஸ்ட், 2010

குண்டுவெடிப்புகளில் தலைவர்களின் பங்கு:ஆர்.எஸ்.எஸ் ஒப்புதல்

புதுடெல்லி,ஆக2:தங்களுடைய மூத்தத் தலைவர்கள் பலர் தேசத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் பங்கேற்றிருப்பதுக் குறித்து தாங்கள் கவலையில் உள்ளதாக ஆர்.எஸ்.எஸ். ஒப்புதல் அளித்துள்ளது. குண்டுவெடிப்பு விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், குண்டுவெடிப்புகளில் சிக்கியவர்களை இயக்கத்திலிருந்து வெளியேற்றப் போவதாகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் மத்திய கமிட்டி உறுப்பினர் ராம் மாதவ் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய தலைவர்கள் குண்டுவெடிப்புகளில் பங்கேற்றுள்ளார்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ் முதன்முதலாக ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மலேகான், அஜ்மீர் தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் தொடர்புக் குறித்து தகவல்கள் சமீபத்தில் வெளியாயின.

குற்றஞ்சாட்டப்பட்டோரில் தேவேந்திர குப்தா மட்டுமே ஆர்.எஸ்.எஸ்ஸில் ஏதேனும் பொறுப்புவகிப்பதாக ராம் மாதவ் தெரிவிக்கிறார்.

குற்றஞ்சாட்டப்பட்ட இதரத் தலைவர்களுக்கு அமைப்புடன் தொடர்பில்லை எனக்கூறி தலைத்தப்புவதற்கு ஆர்.எஸ்.எஸ் முயல்கிறது.

2010 ஆம் ஆண்டு தேவேந்திர குப்தா கைதுச் செய்யப்பட்ட பொழுது அவர் விபாக் பிரச்சாரக்காக செயல்பட்டதாக ராம் மாதவ் கூறுகிறார். மற்றவர்கள் குற்றத்தில் ஈடுபடும் பொழுதோ, கைதுச் செய்யப்படும் பொழுதோ ஆர்.எஸ்.எஸ்ஸில் பொறுப்பு வகிக்கவில்லை என்பது ராம் மாதவின் வாதம்.

சுனில் ஜோஷி, லோகேஷ் சர்மா ஆகியோருக்கு ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பிருந்தது.

2003 ஆம் ஆண்டு வரை மாவட்ட பிரச்சாரக்காக பணியாற்றியவர் சுனில் ஜோஷி. ஜார்க்கண்டில் தியோகரில் எட்டுமாதம் பிரதேச காரியவாஹ் பணியாற்றியவர் சர்மா. இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து பிரிந்துச் சென்றதாக ராம் மாதவ் தெரிவிக்கிறார்.

தற்பொழுது தலைமறைவாகவிருக்கும் சந்தீப் டாங்கேக்கு 2006 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பில்லையாம் ராம் மாதவ் கூறுகிறார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான அசோக் பேரி,அசோக் வர்ஷணேயி ஆகியோரை புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மட்டுமே செய்ததாக ராம் மாதவ் தெரிவிக்கிறார். இந்த்ரேஷ் குமாருக்கு குண்டுவெடிப்புகளுக்கான சதித்திட்டத்தில் பங்கில்லையாம்.

கோவா குண்டுவெடிப்பை நடத்திய சனாதன் சன்ஸ்தானுடன் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு பங்கில்லையாம். அபினவ் பாரத்தின் செயல்பாடுகளில் மர்மம் உள்ளதாம். புரோகித்தையும், தயானந்த் பாண்டேயையும் தெரியாதாம். பிரக்யாசிங் ஏ.பி.வி.பியில் உறுப்பினராகயிருந்தது மட்டும் தெரியுமாம், இவ்வாறு தங்களுக்கெதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க நேர்முகத்தில் ராம் மாதவ் முயல்கிறார்.

ஆனால்,குற்றவாளிகளுக்கு சட்டரீதியான உதவி அளிக்கமாட்டோம் என்றுக்கூற ராம் மாதவ் தயாரில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: