ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

குண்டுவெடிப்பு சூத்திரதாரி சுனில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளே - சுனில் ஜோஷி குடும்பத்தினர்

டெல்லி.ஆக,1:அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளின் முக்கிய சூத்திரதாரியான ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த பிரசாரக் சுனில் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளாலேயே கொல்லப்பட்டதாக ஜோஷியின் மாமா மதன் மோகன் மோடி தெரிவித்துள்ளார்.

பிஜேபி ஆளும் மத்திய பிரதேச அரசிடமிருந்து போலீசாருக்கு இவ்வழக்கை விசாரிப்பதற்கு தடை விதிகப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மத்தியபிரதேச போலீசார் ஒரு சரியான விசாரணையை மேற்கொண்டிருந்தால் இந்நேரம் குற்றவாளிகளை பிடித்திருக்க இயலும், ஆனால் அரசு தரப்பிலிருந்து இவ்விவகாரத்தில் போலீசாருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுவருவதாக மதன் தெரிவித்தார்.

அதேப்போல், போலீசாரும் இதை விசாரிப்பதிலிருந்து தங்களை தவிர்த்து கொண்டுள்ளதாக கூறியுள்ள அவர், சம்பவ தினத்தன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து ஜோஷி அவசர அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறினார். கொலைக்கு பிறகு அவருடன் எப்போதும் இருக்கும் அவரின் ஆர்.எஸ்.எஸ். நண்பர்களும் தலைமறைவாகிவிட்டனர்.

சுனிலின் இரண்டு சிம்கார்டுகளையும் ட்ரேஸ் செய்ய முடியவில்லை என்று கூறிய மதன், ஜோஷி எங்கு சுடப்பட்டான், எதற்காக சுடப்பட்டான் என்பது கூட தங்களுக்குத் தெரியாது என்றார்.

தொலைபேசி அழைப்பு வந்தபொழுது (29,டிசம்பர்'07) சுனில் ஜோஷி தன் தாய் வீட்டில் இருந்துள்ளான். அவ்வழைப்பின் போது மர்ம நபர்களுடன் சுனில் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளான்.

தன் வாகனம் செயல்படாததை தொடர்ந்து, 2 கி.மீ. உள்ள தன் வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளான் சுனில். அவன் செல்லும் பாதையை அறிந்திருந்த மர்ம நபர்கள், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சுனில் சென்று கொண்டிருக்கும் போது அவனை சுட்டுக் கொன்றுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையின் படி, அம்மர்ம நபர்கள் ஒரு மாருதி காரிலும், ஒரு இரு சக்கர வாகனத்திலும் வந்துள்ளதாக தெரிவந்துள்ளது.

சுனில் தன் வீட்டிலிருந்து 1 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருக்கும் போது, அவனை சுட்டுக்கொன்றுள்ள மர்ம நபர்கள், அவனின் 3 சிம்கார்டுகளில் இரண்டை பறித்தும் சென்றுள்ளனர்.

கொலை நடந்த சில நிமிடங்களிலேயே சுனிலுடன் தங்கியிருந்த நான்கு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளும் தலைமறைவாகி விட்டனர்.அவர்கள் பெயர்கள் உட்பட எதுவும் இதுவரை தெரியவரவில்லை.

ஆம்,போலீசாரும் இவ்வற்றை கண்டுபிடிப்பதற்கு அக்கறையும் காட்டவில்லை. இக்கொலையில் துப்பு துலங்குவதிலிருந்து மத்திய பிரதேச போலீசார் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளதாக தேவாஸ் நகர மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வழக்கு மூடப்பட்டுவிட்டது என்ற பதிலைத் தவிர போலீசாரிடம் வேறு பதிலில்லை. "நீதிமன்றம் இவ்வழக்கு மூடப்படவில்லை என்று கருதினால் கூட எங்களைப் பொறுத்த வரையில், இவ்வழக்கு முடிந்துவிட்டது." என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாவன் ஜாய் தெரிவிக்கின்றார்.

Headlines today

கருத்துகள் இல்லை: