டெஹ்ரான்,ஆக,1:ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக, 274 பேர் காயமடைந்தனர்.

ஈரான் நாட்டின் வடகிழக்கு பகுதியில்,டெஹ்ரானில் இருந்து 700 கி.மீ., தொலைவில் உள்ள டோர்பட் இ ஹைதரியா நகரில் நேற்று முன்தினம் மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. வீடுகள் குலுங்கியதையடுத்து, மக்கள் அலறியடித்து தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.
நேற்று காலை தெற்கில் உள்ள கெர்மான் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி, 274 பேர் காயமடைந்தனர்.அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்று வருகின்றனர்.உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக