ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

பேராசிரியர் மீதான தாக்குதல் தொடர்பாக ஜமாஅத்-எ-இஸ்லாமி நிர்வாகி வீட்டிலும் ரெய்டு– கேரளாவில் தொடரும் முஸ்லிம் விரோதப் போக்கு

கொச்சி,ஆக,1:இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களை கொச்சைப்படுத்திய பேராசிரியர் தாக்குதல் விவகாரத்தில், கேரள ஆழுவா நகரில் உள்ள ஜமாஅத்-எ-இஸ்லாமி நிர்வாகி டாக்டர் ரனிஃப் என்பவரின் வீட்டை கேரள போலீசார் நேற்று ரெய்டு செய்தனர்.

சோதனையின் போது ஜமாஅத்-எ-இஸ்லாமியின் நிறுவனர் மௌலான அபுல் ஹசன் மௌதூதி எழுதிய பல புத்தகங்களும், இஸ்லாமிய சி.டி.க்களையும் போலீசார் கைப்பற்றினர்.

புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயரில் போலீசார் எப்.ஐ.ஆர்.களை பதிவுசெய்து,பின்னர் ஆழுவா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சமீபத்தில் பாப்புலர் ஃபிரண்டை குறிவைத்து கம்யூனிஸ்ட் அரசும் கேரள போலீசாரும் பல சட்டவிரோத போக்குகளில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஜமாஅத்-எ-இஸ்லாமி நிர்வாகிகளும் குறிவைக்கப்படுவது, கம்யூனிஸ்ட்களின் பிரித்தாளும் யுக்தியை காட்டுவது மட்டுமல்லாமல் விரைவில் நடைபெறும் தேர்தலை கணக்கில் வைத்து, உயர் ஜாதி ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்கான நடவடிக்கை என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

கருத்துகள் இல்லை: