
கேரள மாநில உயர்நீதிமன்றத்தில், மலையாற்றூர் பகுதியில் கல் குவாரி தொடர்பான வழக்கு வெள்ளிகிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதி சிரிஜகன் முன்னிலையில் நடந்து வந்த விசாரணையின் போது நீதிபதி கூறியதாவது: அரசியல்வாதிகளும், மாபியா கும்பலும் தான் அரசை பயன்படுத்தி லாபம் அடைந்து வருகின்றனர்.
அரசை யாராவது பின்னால் இருந்து இயக்குகின்றனரா என்பது குறித்து விளக்க வேண்டும்.சாதாரண பொது மக்களுக்கும், நீதிபதிகளுக்கும் மட்டும்தான் தற்போது சட் டத்தை பயன்படுத்தி வரு கின்றனர்.
மாநில காவல்துறையினரால் சட்டப்படி செயல்பட முடியாவிடில், ராணுவத்தை வரவழைக்க உயார்நீதிமன்றம் உத்தரவிட முடியும். பணம் இருந்தால், எந்த நீதிமன்ற உத்தரவையும் தாண்டி செயல்பட முடியும் என்ற நிலைதான் தற்போது இருந்து வருகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.
உயர்நீதிமன்ற நீதிபதியின் கடும் விமர்சனம், மாநிலத்தை ஆளும் கூட்டணி அரசுக்கும்,நீதித்துறைக்கும் இடையே இருந்து வரும் பிணக்கை வெளிப்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக