இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
செவ்வாய், 28 ஜூலை, 2009
சிரியாவை சரிகட்ட அமெரிக்க தூதர் டமாஸ்கஸில்
முஸ்லிம்களை சீண்டும் சினிமாத்துறை!
இடைத் தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு
மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் இன்று சென்னையில் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
மனிதநேய மக்கள் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியவுடன் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு 2011ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகமெங்கும் கட்சியை வலுப்படுத்தும் பணியில் மனிதநேய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது. இச்சூழலில் தமிழக சட்டமன்றத்திற்கு ஐந்து தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் எவ்வித முக்கியத்துவமில்லாத தேர்தல் என மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது. எனவே இந்த இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று தீர்மானிக்கப்படுகின்றது.
இளையாங்குடி தொகுதியில் மனிதநேய கட்சி போட்டியிட வேண்டுமென மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விடுத்த அன்பு வேண்டுகோளுக்கு மனிதநேய மக்கள் கட்சி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி எந்த கூட்டணிக்கு ஆதரவு என்பதை சென்னையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறவுள்ள தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்படுகின்றது
திங்கள், 27 ஜூலை, 2009
சென்னை: அவசரமாக தரையிறங்கிய ஷார்ஜா விமானம்
இஸ்லாத்தின் மீதான அவதூறு - மன்னிப்புக் கேட்டது பிபிஸி!
இஸ்லாத்தின் மீது பெரும் அவதூறைச் சுமத்தியதற்காக பிபிஸி நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அத்துடன் தனது தவறுக்கு வருந்தி, தான் அவதூறு பரப்பிய பிரிட்டனிலுள்ள முஸ்லிம் பேரவையின் (Muslim council of Britain) தலைவரான டாக்டர். முஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்குகிறது.
பிபிஸியின் "கேள்வி நேரம்" நிகழ்ச்சி ஒன்றின் போது பிரிட்டிஷ் படை வீரர்களைக் கடத்திக் கொலை செய்வது பற்றிய ஒரு விவாதத்தில் அவதூறான சில கருத்துக்களை பிபிஸி நடுவர் குழு தெரிவித்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்த முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் இச்செயலை முழு மனதுடன் ஆதரித்துப் பேசினார் என இந்நிகழ்ச்சியை நடத்தும் நடுவர் குழு பழி சுமத்தியது.
இது முற்றிலும் பொய்யான அவதூறாகும் என்று முஹம்மத் அப்துல் பாரி இதனை எதிர்த்துத் குரல் எழுப்பினார். தான் கூறாத ஒரு கருத்தைத் தான் கூறியதாகவும் அதுவே இஸ்லாத்தின் நிலைபாடாகவும் பொய்யான செய்தி வெளியிட்ட பிபிஸிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். கடந்த 2007 இல் ஈராக்கில் பிரிட்டிஷ் படைவீரர்கள் கொல்லப் பட்டதை எதிர்த்து தான் பேசியதாகவும், அதனை பிபிஸி நடுவர்கள் குழு திரித்து அவர்கள் கொல்லப்படுவதைத் தான் ஆதரித்துப் பேசியது போன்று தம் மீதும் தூய இஸ்லாமிய நெறிகள் மீதும் பிபிஸி பழி சுமத்தியுள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
பதிவான நிகழ்ச்சியை மீண்டும் ஆராய்ந்த பிபிஸி இறுதியில் தனது தவற்றினை முழுமையாக ஒப்புக் கொண்டு முஹம்மத் அப்துல் பாரி அவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. இச்செய்தி பிபிஸி தளத்திலும் வெளியாகியுள்ளது.
சம்பவத்துக்குக் காரணமான கேள்வி நேரம்(Question Time) நிகழ்ச்சியினைக் கடந்த மார்ச் 12, 2009 இல் பிபிஸி பதிவு செய்தது. அதில், பிரிட்டிஷ் படை வீரர்களை எதிர்த்து ஈராக் மற்றும் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பற்றிய நிகழ்வு தொடர்பாக ஒரு பார்வையாளர் எழுப்பிய கேள்விக்கு முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் பதில் அளித்திருந்தார்.
பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட வேண்டுமா? என்று பார்வையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்கு முஹம்மத் பாரி பதில் சொல்ல முற்படுகையில் குறுக்கிட்ட நடுவர் குழு, "பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் பிரிட்டிஷ் படைவீரர்களை எதிர்த்து இத்தகையப் போராட்டங்கள் பல நடந்தும் அதனைக் கண்டனம் செய்யத் தவறியதால் முஹம்மத் பாரி இதனை ஆதரிக்கிறார் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும்!" என்று கருத்துத் தெரிவித்தது.
அத்துடன் நில்லாமல் "பிரிட்டிஷ் படைவீரர்கள் மீது நிகழும் இத்தகைய கடத்தல் மற்றும் கொலைகளை முஹம்மத் பாரி அவர்கள், ஏகமனதாக ஆதரிக்கிறார்" என்றும் "இதுவே இஸ்லாம் கூறும் வழியாகும்!" என்றும் சர்வதேச அளவில் நிகழ்ச்சியைக் காணும் பார்வையாளர்கள் அதிரும் வண்ணம் நடுவர் குழு அந்நிகழ்ச்சியில் பழியும் சுமத்தியது. பிபிஸி நடுவர் குழுவின் இத்தகைய அவதூறான பேச்சில் மறைமுகமாக பிரிட்டனின் முஸ்லிம் பேரவையைக் குறிவைத்துத் தாக்கியிருந்தது வெளிப்பட்டுள்ளது.
பிபிஸியின் மோசமான இந்தச் செயல்பாட்டை எதிர்த்து முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து, பிபிஸி தன்னுடைய இஸ்லாமிய விரோத அவதூறுக்கு மன்னிப்பு கேட்டு வருந்தியதோடு முஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்கவும் சம்மதித்துள்ளது. இந்தத் தொகையினைத் தாம் அறக்கட்டளைகளுக்கு தர்மமாக வழங்கி விடப் போவதாக முஹம்மத் பாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
source :
http://news.bbc.co.uk/2/hi/programmes/question_time/8153401.stm
http://www.mcb.org.uk/media/presstext.php?ann_id=362
http://www.satyamargam.com/
ஞாயிறு, 26 ஜூலை, 2009
மோடியிடம் உண்மை அறியும் சோதனை நடத்த வேண்டும்'
இதுகுறித்து அவர் ராஜ்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத் கலவரம் தொடர்பாக மோடியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்.
குஜராத் கலவரம் தொடர்பாக எஸ்.ஐ.டியிடம் ஒரு மாதிரியும், நானாவதி கமிஷனிடம் வேறு மாதிரியும் பேசி வருகிறது மோடி அரசு.
எனவே உண்மையைக் கண்டறிய மோடிக்கும் அவரது அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த வேண்டும்.
நானாவதி கமிஷன் விசாரணைக்கு ஒத்துழைக்கும் மோடி, சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஒத்துவர மாட்டேன் என்கிறார் வகேலா.
சனி, 25 ஜூலை, 2009
சுதந்திர இந்தியாவில் மறைமுக சித்திரவதை சிறைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- அசாவுத்தீன் உவைசி
கடந்தவாரம் மீடியாக்கள் மூலம் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்ப்படுத்திய மறைமுக சித்ரவதை சிறைச்சாலைகளைப் பற்றியும் அங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சித்ரவதை செய்யப்படுவது பற்றியும் மக்களவையில் கேள்வி எழுப்பாததைப்பற்றி அனைத்திந்திய முஸ்லிம் மஜ்லீஸ் இத்திகாதுல் முஸ்லிமீன் உறுப்பினரும் ஹைதராபாத் எம்.பி யுமான அசாவுத்தீன் உவைசி யிடம் கேட்கையில்; தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை பிடிப்பதும் அவர்களை சிறையில் அடைத்து ஆதிக்க அமெரிக்காவில் இருக்கும் குவான்டனமோ மறைமுக சிரைச்சாலையில் நடக்கும் சித்ரவதையைப் போன்று சுதந்திர இந்தியாவில் நடக்கும் இந்த மாபாதக செயலை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; அது மட்டும் இல்லாமல் அது போன்ற சிறைச்சாலைகளை மூடும்படி இந்திய அரசை வற்புறுத்த போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஹைதராபாதில் அப்பாவி நிரபராதி இளைஞர்கள் கைது செய்யப்படுவது பற்றி கேட்டதற்கு, ஆம் தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை பிடிப்பதும் அவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை போன்ற தொடரும் கொடுமைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதையும் வலியுறுத்துவேன் என பதில் அளித்தார்.
source: Twocircles
பாட்லா ஹவுஸ்:நீதி விசாரணை நடத்த முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை
இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இலவச தொலைபேசி
வெளிநாட்டு இந்தியர் நலத்துறை அமைச்சகம் இந்த சேவையை வழங்குகிறது. வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் ஏஜெண்டுகளின் கவர்ச்சியான வாக்குறுதிகளைக் கேட்டு ஏமாந்து விடுகின்றனர்.
இதன் காரணமாக மனைவியின் நகைகள், சொத்து உள்ளிட்டவற்றை விற்று பிழைப்பு தேடி வரும் இவர்களில் பலர் தங்களது அறியாமையின் காரணமாக ஏமாற்றப்படுகின்றனர். இத்தகையவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திம் வகையில் இலவச தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த சேவையின் மூலம் ஏமாற்றும் ஏஜண்டுகள் குறித்தும் புகார் தரலாம்.
தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகம், குவைத்,சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் 800 091 202 53 என்ற இலவச தொலைபேசி எண்ணில் வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்
புதன், 22 ஜூலை, 2009
குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக படுதோல்வி
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. 51 வார்டுகளைக் கொண்ட இந்த மாநகராட்சியில் 26 இடங்களை காங்கிரஸ் கட்சியும், 21 இடங்களை பாஜகவும், 3 இடங்களை பகுஜன் சமாஜ் கட்சியும், ஒரு இடத்திலும் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு மாபெரும் வெற்றி கிடைக்காத நிலையில் இந்தத் தேர்தலை பாஜக கெளரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கியது. நரேந்திர மோடியே பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
2004ம் ஆண்டு நட்த மாநகராட்சித் தேர்தலில் பாஜக 35 இடங்களைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தின் முக்கிய நகர்ப் பகுதியான இங்கு நரேந்திர மோடிக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. இப்போது அங்கு பெரும் சரிவு ஏற்பட்டு்ள்ளது.
யூத குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு அமெரிக்காவிலிருந்து குவியும் நிதி உதவி
இன்னொரு அடிமை சாசனம் ?
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடர்- ஒரு சின்ன அலசல்!
கருணாநிதி ஆட்சியில் அன்றாடங்காட்சிக்கு திண்டாட்டம்; அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம் என்ற கருத்து எப்போதும் உண்டு. அடித்தட்டு மக்களை அன்றாடம் பயன்படுத்தும் அரிசி தொடங்கி துவரம் பருப்புவரை பயம்காட்டிக்கொண்டிருக்க, விண்முட்டும் விலைவாசி உயர்வு பற்றி மக்கள் சிந்திக்காமல் இருக்க அவர்களுக்கு கலர் டிவிகளை வழங்கி கனவு காண விட்டுவிட்டு, கனவில் கூட மக்கள் நலனையும், தொகுதி நலனையும் கண்டுகொள்ளாத எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உள்ளிட்ட அனைத்து படிகளையும் உயர்த்தி வறுமைக்கோட்டுக்கு[?] கீழ் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த அவர்களின் வளமான வாழ்வுக்கு வழிகாட்டியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
2005 ஏப்ரலில் அதிமுக ஆட்சியில் எம்எல்ஏக்களின் சம்பளம், படிகள் ஆகியவற்றை ரூ.12,000லிருந்து ரூ.16,000 ஆக உயர்த்தினார் ஜெயலலிதா.2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் செப்டம்பரில் சம்பளம், படிகள் ஆகியவற்றை ரூ.20,000 ஆக உயர்த்தினார் முதல்வர் கருணாநிதி. இது 2007ல் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது.2008 மே மாதத்தில் எம்எல்ஏக்களின் மொத்த ஊதியம் மீண்டும் உயர்த்தப்பட்டு ரூ.30,000 ஆனது.2009ம் ஆண்டு பிப்ரவரியில் இது ரூ.45,000 ஆக உயர்த்தப்பட்டது.இந் நிலையில் நேற்று மீண்டும் ரூ.5,000 உயர்த்தப்பட்டு இப்போது எம்எல்ஏக்களின் மொத்த ஊதியம் ரூ.50,000 ஆகிவிட்டது.இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.தமிழகத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் கடந்த 3 ஆண்டுகளில் [திமுக ஆட்சிக்கு வந்தபின்னர்]ரூ.34,000 உயர்த்தப்பட்டுள்ளது.
இதைத்தான் 'மக வாழ்ற வாழ்க்கைக்கு மாசம் மூணு கெட்டு வெளக்கமாறு' என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். சரி! சம்பளத்தை அள்ளிக்கொடுத்தீர்கள். சபைக்கு வராமலே இருக்கிறார்களே அவர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் வாரி வழங்குவது நியாயமா? சபைக்கு வந்து தலைகாட்டிவிட்டு 'வெளிநடப்பு' என்று தலை தெறிக்க ஒடுபவர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்குவது நியாயமா? குறைந்த பட்சம் அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் உறுப்பினர்களின் அன்றைய ஊதியம் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்படவேண்டாமா? சரி! இவர்களாவது 'சிட்டிங்' எம்.எல்.ஏக்கள். அதனால் அள்ளிக்கொடுத்துவிட்டீர்கள். முன்னால் எம்.எல்.ஏக்களுக்கும் ஊதியத்தை எட்டு ஆயிரத்திலிருந்து பத்து ஆயிரமாக உயர்த்தியுள்ளீர்களே! அவர்கள் என்ன அரசு ஊழியர்களா? ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு? எனக்கு தெரிந்த ஒரு முன்னால் ராணுவவீரர் சொல்வார்; மாப்ளே! நான் பணியில் இருந்தபோது எனக்கு சம்பளம் மூனாயிரம்தான். ஆனா இப்ப எனக்கு ஓய்வூதியம் பதிமூனாயிரம் என்பார்.
அதுபோல் இந்த எக்ஸ் எம்.எல்.ஏக்களுக்கு பணியில் பெற்ற ஊதியத்தைவிட கூடுதலாக ஓய்வூதியம் வழங்குகிறது திமுக அரசு. என்ன செய்வது! மக்கள் இலவசங்களில் இதயத்தை பறிகொடுத்தால் பறிகொடுத்தால் இதுதான் நிலை.
அடுத்து, இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது திருமணங்களை அனைத்து மதத்தினரும் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்ற சட்டம். இந்த சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை கைவைக்கும் முயற்சியாகவும், பொது சிவில் சட்டத்தின் வெள்ளோட்டமாகவும் எமக்கு படுகிறது. ஏனெனில், இந்த சட்டம் குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் துரைமுருகன், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படிதான் இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது.இந்து திருமண பதிவு சட்டம் ஏற்கனவே இருக்கிறது. மற்ற மதத்தினரும் எந்த முறையில் திருமணம் நடத்தினாலும் அதை பதிவு செய்யவேண்டும். இதில் எந்த தவறும் இல்லை. பெண்களுக்கு இது பாதுகாப்புத்தான். மேலும் ஏமாற்றிவிட்டு ஓடமுடியாது. இதன் மூலம் பால்ய விவாகத்தையும், பலதார மனத்தையும் தடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதில் அமைச்சர் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு என்று கூறவில்லை. ஆக இந்த சட்டப்படி முஸ்லிம்கள் தங்களின் திருமணத்தை பதிவு செய்தால், விவாகரத்து தேவையெனில் இப்போது இந்துக்கள் செல்வது போல் கோர்ட்டில் போய்தான் பெறவேண்டுமா? ஜீவனாம்சம் வழங்கும் நிலை வருமா? பலதார மனம் செய்து கொள்ளமுடியாதா? என்பதை அரசும் முஸ்லீம் சட்ட வல்லுனர்களும் விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். தமிழக அரசின் இச்சட்டம் முஸ்லீம் ஷரியத்தை கைவைக்குமானால் அதை முஸ்லிம்கள் ஒருங்கிணைத்து தமது எதிர்ப்பை பதிவு செய்து முறியடிக்கவேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் நாமறிந்தவரை முஸ்லிம்லீக் நீங்கலாக மற்ற அமைப்புகள் தங்களின் கருத்தை தெரிவிக்காதது ஏன் என விளங்கவில்லை.
மத்திய அரசு சார்பில் இலவச சமையல்கலை பயிற்சி
மத்திய அரசின் சுற்றுலாத்துறையால் உருவாக்கப்பட்ட “உணவக மேலாண்மை, சமையல் கலை மற்றும் ஊட்டநெறி தொழில்நுட்பக் கல்லூரி” சென்னையிலுள்ள தரமணியில் இயங்கி வருகிறது.
இங்கு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு ஆகிய நிலைகளில், விருந்தோம்பல், உணவு விடுதி நிர்வாகம் போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில், பணியாளர்களுக்கான திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் பின்வரும் பயிற்சிகளை மைய அரசின் சுற்றுலாத்துறை இலவசமாக அளிக்கவுள்ளது.
3 நாட்கள் தேசிய விருந்தோம்பல் திறன் சான்றிதழ் பயிற்சிக்கு வழக்கமான கல்வி, சான்றிதழ் ஏதுமில்லாமல் அனுபவ அறிவுடன் பெரிய, சிறிய உணவகங்களில் பணிபுரியும் நபர்களுக்கு சமையல்காரர் மற்றும் உணவு பரிமாறுபவர்களுக்கான பயிற்சி அளிக்கப்படும். வயது வரம்பு கிடையாது. பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மதிய உணவும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
8 வாரங்களுக்கு உணவு சமையல்கலை பயிற்சிக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 25 வயதுக்குள்ளவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். ஊக்கத் தொகை ரூ.2000 வழங்கப்படுகிறது. மேலும், சீருடை, சமையல் பொருட்கள், பயிற்சிக்கான பொருட்கள் போன்றவையும், மதிய உணவும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
6 வாரம் உணவு பரிமாறும் முறை பயிற்சிக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 25க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊக்கத் தொகை ரூ.1500 வழங்கப்படுகிறது. மேலும், சீருடை, சமையல் பொருட்கள், பயிற்சிக்கான பொருட்கள் போன்றவையும், மதிய உணவும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி வருகின்ற 03.08.2009 அன்று தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு விருப்பமுள்ள நபர்கள் பின்வரும் முகவரியில் உள்ள இந்நிறுவனத்தை வேலை நாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
உணவு மேலாண்மை நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி அஞ்சல், சென்னை 600 113 (இந்திரா நகர் இரயில் நிலையம் அருகில்) தொலைபேசி எண் 22542029. கல்லூரியின் தொலைபேசி எண். 044 22542029. இணைய தளம் முகவரி www.ihmchennai.org.
செவ்வாய், 21 ஜூலை, 2009
ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்பட்டுதாம்
பயிற்சி வகுப்பின் தொடக்கத்தில், ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன் பேசுகையில், இங்கிலாந்துக்காரர்கள் (அவர்கள் மட்டும்தானா?), முஸ்லீம்களையும், இந்துக்களையும் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக பிரித்து வைத்தனர். அந்த பிரிவினைவாத அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்தான் நம்மைப் பிரித்து வைத்துள்ளது. ஆனால் கலாச்சாரம் நம்மை சேர்த்து வைக்கிறது.
அன்பு, அமைதி ஆகிய தத்துவங்களை மக்களிடையே நாம் பிரசாரம் செய்ய வேண்டும். நாம் அனைவருக்கும் ஒரே மூதாதையர்தான், கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் அனைத்தும் ஒன்றுதான் என்பதை இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் என்ற மாபெரும் மதத்தின் உயரிய தத்துவங்களை நாம் புரிந்து கொண்டு அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும்.
பார்சிகள், யூதர்கள், ஆங்கிலோ இந்தியர்கள்தான் இந்தியாவின் சிறுபான்மையினர். முஸ்லீம்கள் வெளியிலிருந்து இந்தியாவுக்கு வரவில்லை. இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள்தான் முஸ்லீம்கள். தங்களது வழிபாட்டு முறை, மதப் பழக்கங்களை அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கும், இந்து சகோதரர்களுக்கும் ஒரே மூதாதையர்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பின் காப்பாளராக தன்வீர் அகமது, தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக முகம்மது அப்சல், சலாபத் கான் ஆகியோரும், ஒருங்கிணைப்பு செயலாளராக கிரீஷ் ஜுயூல், மக்கள் தொடர்பாளராக உணர் இலியாசி ஆகியோர் செயல்படுவார்கள் என பயிற்சி வகுப்பின்போது அறிவிக்கப்பட்டது.
வருண்காந்திக்கு நோட்டீஸ்
கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பிலிபிட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார் வருண்காந்தி.
இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும்படி பேசியதாகவும், அது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமாதலால் அவரது வெற்றியை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வீரேந்திர மோகன்சிங் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் வரும் ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு வருண்காந்திக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்
ஓரினச் சேர்க்கை தவறல்ல! மாபாதகச்செயலுக்கு துணைப்போகும் உச்சநீதி மன்றம்!!
டெல்லி: ஓரினச் சேர்க்கையாளர்கள் மனம் ஒத்து செக்ஸில் ஈடுபடுவது சட்டப்பூர்வமாக சரியே என்று டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 2ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தீர்ப்பில், ஓரினச் சேர்க்கையாளர்கள், மனம் ஒத்து செக்ஸ் உறவில் ஈடுபடுவது சட்டவிரோதம் அல்ல. இதுதொடர்பான 377வது சட்டப் பிரிவு செல்லாது எனறு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையை எட்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும், ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்வது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
பிள்கள்: உலகம் மீண்டும் ஒரு ர(த்)த யாத்திரை அத்வானி திட்டம்
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பாஜக, இன்னும் அதிலிருந்து மீளவில்லை. தோல்வியையடுத்து, மேல்மட்ட தலைவர்களுக்கு இடையேயான உட்கட்சி பூசல். இதிலிருந்து மீள தனது பிரபலமான ஆயுதமான "யாத்ரா' வை தூசி தட்டி பாஜகவிற்கு உயிரோட்டமளிக்க அத்வானி முடிவு செய்து இருக்கிறார்.
இதுகுறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், இந்த யாத்ரா பிரச்சாரமாக இல்லாமல், கட்சியின் அடிமட்ட தொண்டனை ஊக்குவிக்கும் வகையில் இருக்குமென தெரிகிறது. ஜனநாயக நாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம், ஆகவே அதிலிருந்து மீள்வதற்கான வழியை கண்டுபிடிக்கும் கட்டாயத்திற்கு பாஜக தள்ளப்பட்டிருக்கிறது. பாஜக மீது கட்சியின் தொண்டர்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டுவதுதான் யாத்திரையின் நோக்கமாக இருக்கும் என அத்வானிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
முன்பு இதுபோன்ற பல்வேறு ர(த்)த யாத்திரைகளில் தனது முஸ்லிம் விரோத பேச்சுக்களின் மூலம் பாசிசவாதிகளை சூடேற்றி முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரங்களை தூண்டிவிட்டவர் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்த ஏழு இந்திய ராணுவத்தினர் அதிரடி கைது
லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது அவர் கூறியதாவது:
இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளில், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் உளவு பார்த்ததாக எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, ஏழு ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2006-09ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஒன்பது பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இருந்துள்ளது என்றார்.
தேசத்திற்கு எதிராக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள தேச துரோகிகளின் விபரங்களை மக்கள் முன் வெளியிடுமா அரசு?
சனி, 18 ஜூலை, 2009
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் குண்டு வெடிப்பு:9 பேர் மரணம்
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை?! சீக்கியர்கள் டர்பன் அணிய தடை இல்லை! - பிரான்ஸ் அரசின் பாரபட்சம்
பிரான்சில் பள்ளிகளில் மத அடையாளங்களைத் தடை செய்யும் சட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக பிரெஞ்சு அரசு இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபிற்கு தடை விதித்தநிலையில் பிரான்சில் வாழும் சீக்கிய மக்கள் தலைப்பாகை (டர்பன்) அணிய தடைவிதிக்கப்படாது என அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ்சர்கோஸி தெரிவித்துள்ளார்.
எனினும், பிரான்ஸில் டர்பன் அணிவதற்கு தடைவிதிக்கும் எண்ணம் எதுவும் தமது அரசுக்கு இல்லை என அதிபர் சர்கோஸி தன்னிடம் தெரிவித்ததாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
பிரான்சில் உள்ள 6000க்கும் அதிகமான சீக்கியர்கள், பிரெஞ்சு அரசின் இந்தச் சட்டத்தை தீவிரமாக எதிர்க்கின்றனர். தங்களின் தலைப்பாகை மத அடையாளம் அல்ல; மாறாக தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த ஒன்று என்று அவர்கள் கூறுகின்றனர்.
வியாழன், 16 ஜூலை, 2009
வருண் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
177 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கை, பிலிபித் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
மொத்தம் 38 சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. உ.பி. அரசின் உத்தரவைத் தொடர்ந்து இன்று போலீஸார் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து விரைவில் கோர்ட் குற்றப்பத்திரிக்கையை பரிசீலித்து அதன் நகலை வருண் காந்திக்கு வழங்கும்.
இந்தியர்களைக் குறிவைக்கும் இஸ்ரேலிய அபாயம்!
இஸ்ரேல் இந்த பூமிப் பந்தின் மீது அராஜகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு. மண்ணின் மைந்தர்களான அரபுகளை அழித்தொழிக்கும் யூத வந்தேறிகளின் வன்முறைக்கு அமெரிக்கா காவலுக்கு நிற்கிறது. ஐ.நா.வோ அநீதிகளை அமைதியாய் ஆதரிக்கிறது.
இஸ்ரேல் என்ற தேசத்தை ஏற்கவே கூடாது என்றார் தேசத்தந்தை காந்தி. நீண்ட நெடுங்காலமாக இந்தியாவுக் கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவே இல்லாமல் இருந்தது. நரசிம்மராவ் ஆட்சியில்தான் இஸ்ரேலுடன் உறவு என்ற கேவலம் தொடங்கியது. பின்னர் பாஜக தலைமையிலான அரசு அதை நன்றாக வளர்த்தது.
அதன் உச்சகட்டமாக உலகிலேயே இஸ்ரேலிடம் அதிகமாக ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்த நாடு என்ற அவமானத்தை கடந்த ஆட்சியாளர்கள் பெற்றுத் தந்தனர். அரபு நாடுகளை வேவு பார்க்கும் இஸ்ரேலின் உளவு செயற்கைக்கோள், இந்தியாவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் ரகசியங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ரகசியங்களையும் இஸ்ரேல் அறிந்து கொள்வதற்கு மிகப்பெரிய சதித் திட்டத்தோடு களமிறங்கியுள்ளது.
இந்தியக் குடிமக்கள் அனை வருக்கும் அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்காக இஸ்ரேலிய அரசு நிறுவனம் மும்முரமாக முயற்சி செய்கிறது. மத்திய அரசின் உயர் அதிகாரி களையும் இந்நிறுவனம் உரிய(?) விதத்தில் அணுகி வருகிறது.
Israel International Co-operation Institute (IICI) என்ற இஸ்ரேல் அரசின் பங்கேற்புடைய தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகைதந்து ஒப்பந்தம் பெறுவதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
100 கோடி இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக மொத்த திட்டச் செலவான ஒன்றரை லட்சம் கோடி ரூபாயில், 90 சதவீதம் செலவிடப்பட உள்ளது. இதற்காக சர்வதேச டெண்டரும் விடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை எப்படியும் பெற்றுவிடுவது என்ற முடிவில் இஸ்ரேல் மென்பொருள் மேம்பாட்டுத்துறை நிர்வாகி க்ரின்மெலாமெடின் தலைமையில் இஸ்ரேல் குழுவினர் ஜூலை முதல் வாரத்தில் இந்தியா வந்தனர். 14 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் குழுவினர் இன்போசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி போன்ற இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அவற்றுள் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து, அடையாள அட்டை ஒப்பந்தத்தைப் பெறும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.
சொத்து விவரம், கல்வித் தகுதி, நோய் சிகிச்சை, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 40 முக்கியமான விவரங்கள் இந்த அட்டைக்காக ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்பட்டு, மத்திய சேவை மென்பொருளில் (ஈங்ற்ழ்ஹப் நங்ழ்ஸ்ங்ழ்) பதிவு செய்யப்படும்.
இதன்மூலம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தனிப்பட்ட தகவல்களையும் (டங்ழ்ள்ர்ய்ஹப்) இஸ்ரேல் பார்வையிட முடியும்.
பயங்கரமான சதிகளைச் செய்வதில் கைதேர்ந்த இஸ்ரேலிடம் இந்தியர்களின் அந்தரங்கத் தகவல்கள் சிக்குவது மிக ஆபத்தானது.
இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை எக்காரணத்தை முன்னிட்டும் இஸ்ரேல் தொடர்புள்ள நிறுவனங்களுக்குத் தரக்கூடாது. மேலும், இதில் அந்நிய நிறுவனங்களையும் நுழையவிடக் கூடாது.
மத்திய அரசு இதில் அலட்சியம் காட்டினால் விளைவுகள் வருத்தத்திற்குரியதாகிவிடும் என்பது திண்ணம்.
சிமிக்கு தடை! மாவோயிஸ்டுகளுக்கு வரவேற்பு!!கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடம்!!!
-இனியவன்
மேற்குவங்க மாநிலம் லால்கரில் பழங்குடி மக்கள் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடி மக்கள் நிறைந்த லால்கர் பகுதி மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களுடன் இராணுவம் மற்றும் அரசு இயந்திரங்களை தாக்கி வருகின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு இம் மக்களை புறக்கணித்தது அதன் விளைவு இம்மக்கள் அரசை எதிர்க்கும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. அதுமட்டு மின்றி சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் இம்மக்களின் நிலங்களைப் பறித்து முதலாளித்துவ சேவை செய்ய நினைத் ததுதான் ஏழைப் பங்காளர்களான தோழர்கள் பழங்குடி மக்களிடம் அடிவாங்க முதல் காரணமாய் அமைந்து விட்டது.
போலீசையும்,இராணுவத்தையும் ஆயுதம் கொண்டு பல ஆண்டுகளாக எதிர்த்து தனி அரசை நடத்தி வரும் மாவோயிஸ்டுகள் மீது இப்போதுதான் தடைவிதிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி தடையும் விதித்தது. இதுவரை மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டு அமைப்பு தடை செய்யப்படவில்லை என்பதுதான் காமெடி. மத்திய அரசு தடை செய்தவுடன் மேற்கு வங்க மார்க்சிஸ்ட் அரசு தடையை ஏற்பதா வேண்டாமா? என தவித்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் 'மாவோயிஸ்டுகள் மீதான தடையை ஏற்றுக் கொள்ள முடியாது. தடை போடுவதால் மட்டுமே அவர் களை அடக்க முடியாது.அரசியல் ரீதியாக மட்டுமே மாவோயிஸ்டு பிரச்சினை யில் தீர்வு காண வேண் டும்' என கரிசனம் காட்டியுள்ளார்.
ஆனால், இதுவரை அமைதி காத்த மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தடையை தனது அரசு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். (அவர் வலி அவருக்குத்தானே தெரியும்). ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகளுக்கு தடை விதிக்கத் தயங்கும் இந்தக் கம்யூனிஸ்டுகள்தான் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (சிமி) சட்டவிரோதமாக மத்திய அரசால் தடை செய்யப்பட்ட போது, எந்தக் கேள்வியையும் கேட்காமல் தனது மாநிலத்தில் சிமி அமைப்புக்குத் தடை விதித்தனர். அதன் தலைவர்களையும், உறுப்பினர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிமியைத் தடை செய்த 8 மாநிலங்களில் சிமிஆளும் கேரளா மற்றும் மேற்கு வங்கமும் அடங்கும்.
சிமி தலைவர்களோ உறுப்பினர்களோ அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்யவில்லை. நாட்டின் எந்தப் பகுதி யையும் பிடித்துக் கொண்டு விடுதலைப் பிரதேசமாக அறிவிக்கவில்லை. நாட்டில் நடந்த எந்த குண்டு வெடிப்பிலாவது சிமி அமைப்பு ஈடுபட்டது என்பதற்கான நேரிடையான எந்தவொரு ஆதாரத்தையும் மத்திய அரசு இதுவரை காட்டவில்லை. கம்யூனிஸ்டுகளும் காட்டவில்லை. மாவோயிஸ்டு பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் கம்யூனிஸ தோழர்கள் சிமி அமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜெயில் களி மூலமாக மட்டும்தான் தீர்வு காணுவார்களாம்.
முஸ்லிம் அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக காட்டுவது காங்கிரஸ், பிஜேபி மட்டுமல்ல முற்போக்கு வேடம் போடும் கம்யூனிஸ்டு கட்சியினரின் நிலைப்பாடும் அதுதான். முஸ்லிம்கள் முட்டாள்கள் என்றே இன்றும் மற்ற கட்சிகளோடு கம்யூனிஸ்டுகளும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சரியான பாடத்தை சிறுபான்மை மக்கள் கடந்த தேர்தலில் புகட்டியது போல வரும் தேர்தல்களிலும் புகட்டுவார்கள்.ஏன் இந்த இரட்டை வேடம் தோழ்ர்களே ?.
சிமியை பற்றிய தெஹல்காவின் கட்டுரை
புதன், 15 ஜூலை, 2009
மைசூர் கலவரத்திற்கு பின்னால் ஸ்ரீராம சேனா
மைசூர்:நீதி விசாரணை கோரிக்கையை நிராகரித்தது கர்நாடகா அரசு
செவ்வாய், 14 ஜூலை, 2009
காந்திமாநிலத்தை கள்ளச்சாராய மாநிலமாக்கிய மோடி!
பெண் சாமியார் பிரஞ்யா தற்கொலை மிரட்டல்
மகாராஷ்டிர மாநிலம் மலேகாவ்ன் நகரில் குண்டுவெடிப்புகள் நடத்தி பலர் பலியாகக் காரணமாக இருந்த சாத்வி பிரஞ்யா கைது செய்யப்பட்டு பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையிலும், மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் தான் மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதாக பத்திரிக்கைகளுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், என் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் என்னை ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் போலீஸ் ஜீப்பில் கொண்டு சென்றனர். ஆனால், மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடத்திய அஜமல் கஸாபுக்கு விஐபி ட்ரீட்மெண்ட் தரப்படுகிறது.
நான் இந்துத்துவா போராளி என்பதால் என்னை அவமதிக்கிறார்கள். என்னை இந்த வழக்கில் பொய்யாக சேர்த்துள்ளனர். இதை கண்டித்து நான் சிறையிலேயே தற்கொலை செய்வேன். என்று கூறியுள்ளார்.
மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு வழக்கில் பிரஞ்யா சிங் தாகூர் மற்றும் ராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.
ஞாயிறு, 12 ஜூலை, 2009
மேற்குவங்காளம்:முர்ஷிதாபாத்தில் கலவரம், 6 பேர் மரணம்
மைசூர்:பாப்புலர் ஃபிரண்ட் தலைமையில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் அராஜகம்,ஏராளமானோர் காயம்,நூற்றுக்கணக்கானோர் கைது
அதே இடத்தில் பாபர் மசூதியைக் கட்டி கொடுங்கள்-திருமா
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும், பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்னதாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில்,
கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னதாக மதவெறி கும்பல் ஒன்று பாபர் மசூதியை இடித்தது. அது குறித்து விசாரணை நடந்த லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது.
பொதுவாக எந்தவொரு விசாரணை அறிக்கையும் 6 மாதங்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், லிபரான் தனது அறிக்கையை அரசு அளிக்க சுமார் 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிலரின் உள்நோக்கம் காரணமாக இந்த கமிஷன் சுமார் 48 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து மக்களு முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக அந்த விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். இது தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன்.
இந்த பிரச்சனையின் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாபர் மசூதி மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும் என்றார் திருமாவளவன்.
பாபர் மசூதி வழக்கு பைல்கள் மாயம்
1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு இது தொடர்பான லிபரான் விசாரணை குழு மத்திய அரசிடம் சமீபத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பான 23 பைல்கள் மாயமாகி உள்ளன. கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை இந்த பைல்கள் மாயமானதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதி கூறியுள்ளார்.
கம்ப்யூட்டருடன் பிஎட் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கல்வி அமைச்சர் தகவல்
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர்கள் பொன்னுசாமி, ராஜ்குமார், ஜி.கே.மணி (பாமக), எச். வசந்தகுமார் (காங்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூ), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்) ஆகியோர் கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்:
தமிழ்நாட்டில் 200 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முழுவதும் அரசின் நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளது. மாநில அளவில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும்போது அந்த தீர்ப்புக்கு கண்டுப்பட வேண்டும்.
கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகமா னோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பு துறை தரும் சீனியாரிட்டி அடிப்படையில்தான் பணி உத்தரவு பிறப்பிக்க முடியும்.
தற்போது உயர்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் நியமனத்தில் கம்ப் யூட்டர் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டனர்.
வருங்காலங்களில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சனி, 11 ஜூலை, 2009
ஜியாலஜி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: விண்ணப்பிக்க 20ந் தேதி கடைசி நாள்
வயது 21 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. இதற்கான விண்ணப்ப படிவங்கள் தலைமை தபால் அலுவலகங்களில் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் ரூ.20 ஆகும்.
மேலும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்திலும் தேர்வு பற்றிய தகவல்களை விரிவாக தெரிந்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை இந்த மாதம் 20 ந் தேதிக்குள் டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா:உரும்கியில் அரசு ஏற்படுத்திய தடையை மீறி தொழுகை
இஸ்ரேல் எழுப்பிய மதில் சுவரை இடிக்க ஐ.நா வலியுறுத்தல்
சர்வதேச சட்டங்களை பேணாமல் இஸ்ரேல் கட்டிய மதில் ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீன மக்களின் சுதந்திரத்தை பறிப்பதாக ஜெருசலத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலர் தெரிவித்தார்.
அத்வானி முக்கியக் குற்றவாளி! லிபரான் ஆணைய வழக்குரைஞர் 'அனுபம் குப்தா' பேட்டி!
'அவுட் லுக்' செய்தி ஏட்டிற்கு அனுபம் குப்தா அளித்த நேர்காணலில், பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு அத்வானியும், அவரது இயக்கமும் தான் முழு முதற் காரணம். அவரது தூண்டுதல் இல்லாமல் பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டது என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று அனுபம் குப்தா கூறியுள்ளார்.
அத்வானியின் ராமஜென்ம பூமி இயக்கத்தையும், அதன் ஓர் அங்கமான குஜராத் மாநிலம் சோம்நாத் ஆலயத்திலிருந்து அவர் தொடங்கிய ரதயாத்திரை யையும், இந்தியாவின் மதச்சார்பின்மை வரலாற்றுக்கு எதிரான இயக்கம் என அனுபம் குப்தா வர்ணித்துள்ளார். 2001ம் ஆண்டு லிபரான் ஆணையம் முன்பு உள்துறை அமைச்சராக அத்வானி சாட்சியமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1992 டிசலி6ல் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் இடிப்புச் சம்பவம் தேசந் தழுவிய, முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரத் தின் விளைவாகும். இந்த மதவெறிப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தியவர். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.
லிபரான் ஆணைய அறிக்கையின் விளைவாக பாஜக பழைய நிலையிலிருந்து பல்டி யடித்து உண்மை நிலையை மறைத்து தனது மென்மை (?) நிலையைப் பேசியாக வேண்டும். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள்தான் என் வாழ்வின் சோகமான நாள் என்கிற ரீதியில் அத்வானி கதை விட்டது போல மேலும் பல கரடி களை அவிழ்த்து விட வேண்டும்.
பாபரி மஸ்ஜித் இடிப்புக் குப் பிறகு 1998 முதல் 2004 வரை 6 ஆண்டுகள் பதவி ருசிகண்ட பாஜக, இந்து, இந்தி, இந்தியா கொள்கை யைக் கைவிட்டு, பன்முகப் பண்பாட்டை நாட்டின் பன் முகத் தன்மையை ஆதரிக்கத் தொடங் கியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யில், மதச்சார்பற்ற கட்சி கள் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என பா.ஜ.க ஆசைப் படுகிறது. லிபரான்ஆணைய அறிக்கை பாஜகவின் மதவெறி சதிகளை அம்ப லப் படுத்துவதால், பெயர ளவு மதச் சார்பற்றக் கட்சி களும் தே.ஜ.கூட்டணில் தொடர் வது கேள்விக் குறியாகிறது.
1999ம் ஆண்டு லிபரான் ஆணையத்தின் வழக்குரைஞராக 2007ம் ஆண்டு வரை எந்த விசாரணை குறித்தும் கலந்தாலோசனை செய்யப்பட வில்லை என்று அவரே தெரிவித்துள்ளார்.
நத்தை முதுகில் சவாரி செய்த லிபரான் ஆணையம் விசாரணை அறிக் கையை தாக்கல் செய்துள்ளது. முக்கியக் குற்றவாளியும், உடன் சிக்கிய பிற குற்றவாளிகளும் தண்டிக்கப் படுவார்களா?