ஜெருசலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெருசலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 அக்டோபர், 2010

பாலஸ்தீன் : சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் கைது

ஆக்கிரமிப்பு ஜெருசலம்: யூதரால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட கார் விபத்தில் கடும் காயமடைந்த பாலஸ்தீன் சிறுவர்களில் ஒருவர் இஸ்ரேலிய போலிசாரால் கைதுசெயப்பட்டுள்ளான். முஹம்மத் சராப் என்ற பாலஸ்தீனிய சிறுவன் விபத்தில் ஏற்பட்ட கடும் காயங்களுக்கான சிகிச்சை முடிவதற்கு முன்னரே கைதுசெயப்பட்டுள்ளான்.
பாலஸ்தீன் சில்வண் மாவட்டத்தில் யூத குடியேற்றங்களுக்கான தலைவர் டேவிட் பீறி தனது காரில் வந்துகொண்டிருக்கும் போது முஹம்மத் சராப் உட்பட பல பாலஸ்தீனிய சிறுவர்கள் மீது வேண்டுமென்றே தனது கரை ஏற்றினார். அவர்கள் அனைவரும் தனது காரின் மீது கல்லெறிந்ததாகவும் அதற்காகவே தான் தனது காரை அவர்களின் மீது இடிக்க நேர்ந்தது என்று பின்னர் அவர் கூறியிருந்தார்

ஆனால் அடிபட்ட சிறுவன் முதல் அடியிலே தூக்கி வீசப்பட்டு பின் மீதும் அதே காரில் மீண்டும் அடிபட்டது அப்படியே புகைப்படமாக தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது, பாலஸ்தீனியர்களின் மீது இஸ்ரேலிய அத்துமீறிய செயல்கள் இந்த புகைப்படம் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளது

பாலஸ்தீனிய கைதிகளுக்கான அமைப்பு ஒன்று சிறுவன் முஹம்மத் சராபை விடுதலை செய்ய முயற்சி செய்யுமாறு அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது, மேலும் இஸ்ரேல் தனது கடும் குற்றங்களை மறைக்க சிறுவர்களின் மீதான தனது தீவிர வாதத்தை கட்டவிழ்த்து விடுகின்றது என்றும் அவ்வமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

புதன், 13 அக்டோபர், 2010

நீதிக்கான போராட்டத்தை தொடரும் ரேச்சல் கொரியின் பெற்றோர்

ஜெருசலம்,அக்.13:ஃபலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்துவிடும் அக்கிரமங்களுக்கெதிராக போராடி உயிரைத் தியாகம் செய்த அமெரிக்க மனித உரிமைப் போராளி ரேச்சல் கொரியின் பெற்றோர் நீதிக்கான போராட்டத்தை அவர் மரணித்து ஏழு ஆண்டுகள் கழிந்த பிறகு தொடர்கின்றனர்.

கொரியின் மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதோ, விசாரணை செய்வதோ சாத்தியமாகாவிட்டாலும் கூட அந்த குற்றவாளிகளின் முகத்தை ஒருமுறையாவது காண இயலுமா என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 -ஆம் தேதி ஃபலஸ்தீனில் ஒருவருடைய வீட்டை இடிக்க முயன்ற இஸ்ரேலிய ராணுவத்தினரை தடுப்பதற்கு முயன்ற பொழுது புல்டோஸர் ஏற்றப்பட்டு கொல்லப்பட்டார் ரேச்சல் கொரி.

கொரியின் கொலையின் மூலம் இஸ்ரேல் எவ்வளவுதூரம் மனிதத் தன்மையற்று ஃபலஸ்தீனர்களுடன் நடந்துக் கொள்கிறது என்பதை மனிதநேய ஆர்வலர்கள் உலக சமூகத்தின் முன்னால் எடுத்துரைத்தனர்.

கொரியின் பெற்றோர்கள் நீதிமன்றத்தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரியிருப்பது இரண்டு விஷயங்களாகும்.
1.ரேச்சல் கொரியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை நேரில் சந்திக்க அனுமதிக்க வேண்டும்
2.இச்சம்பவத்தில் ராணுவம் மன்னிப்புக் கோருவதுடன், வழக்கு தொடர்பாக செலவழித்த பணத்தை தரவேண்டும் என்பதாகும்.

ஆனால், கொரியின் பெற்றோர்கள் தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கில் விசாரணை நடைபெறும் பொழுது புல்டோஸரின் ஓட்டுநரையும், அச்சம்பவத்திற்கு தலைமை வகித்த ராணுவ கமாண்டரையும் வெளியில் காண்பிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கெதிராக கொரியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இவ்வழக்கை நடத்துவதற்கு இதுவரை தங்களுக்கு ஒரு லட்சம் டாலர் செலவானதாக கொரியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தை விசாரணைச் செய்த அதிகாரிகள் கொரியின் மரணம் விபத்து என பதிவுச் செய்துள்ளனர். மேலும் இந்த அக்கிரமச் செயலில் ஈடுபட்ட புல்டோஸர் ஓட்டுநரையும், ராணுவ அதிகாரியையும் குற்றமற்றவர்கள் எனக் கூறுகிறது விசாரணை அறிக்கை.

புல்டோஸரின் ஓட்டுநர் புகைப்படலத்தின் காரணமாக கொரி நிற்பதை கவனிக்காமல் புல்டோஸரை ஓட்டியதாக அவ்வறிக்கையில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நஷ்ட ஈட்டைக்கோரி கொரியின் பெற்றோர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.

ஃபலஸ்தீன் மக்களின் துயரங்களைக் குறித்து ஒன்றுமே தெரியாமலிருந்த ரேச்சல் கொரியின் பெற்றோர் தற்பொழுது ஃபலஸ்தீனர்களுக்காக உலகை சுற்றி வருகின்றனர்.

கொரியின் தாயார் சின்டி கொரி, ரேச்சல் கொரியின் மரணத்திற்கு முன்பு ஒரு முறை கூட வெளிநாட்டிற்கு சென்றதில்லை. தந்தை க்ரைக கொரியோ வியட்நாம் போரில் அமெரிக்காவிற்கு உதவுவதற்காக நாட்டை விட்டு வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

புதன், 10 பிப்ரவரி, 2010

ஃபலஸ்தீன் மின்சார நிலையங்களுக்கெதிராக இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது

ஜெருசலம்:ஃபலஸ்தீன் மின்சார நிலையங்களுக்கெதிரான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது. 2009 ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக ரெட் கிரஸண்ட் சொசைட்டி குற்றஞ்சாட்டுகிறது.

கடந்த வருடம் மேற்கு கரையிலும், கஸ்ஸாவிலும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு எதிராக 15 தடவைக்கும் மேல் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒருவர் கொல்லப்பட்டார். 10க்கு அதிகமானோருக்கு காயமும் ஏற்பட்டது.

காஸ்ஸா போரின் போது ரெட் கிரஸண்ட் சொசைட்டியின் தலைமையகத்தின் மீது சர்வதேச அளவில் தடைச்செய்யப்பட்டுள்ள வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது எனவும், இஸ்ரேல் ராணுவம் 440 தடவை சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது எனவும் ரெட் கிரஸண்ட் சொசைட்டி சுட்டிக்காட்டுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

ஃபலஸ்தீன்:மேற்கு கரையில் பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்த யூத குடியேற்றவாசிகள்


ஜெருசலம்: அக்கிரமக்காரர்களான யூத குடியிருப்புவாசிகள் மேற்குகரையில் மஸ்ஜித் ஒன்றில் அத்துமீறி நுழைந்ததுடன், நூலகத்தையும் மஸ்ஜிதின் கார்பெட்டையும் தீவைத்துக்கொழுத்தினர்.

மேற்குகரையில் யூத குடியேற்றத்தை 10 மாதங்களுக்கு நிறுத்தி வைத்த இஸ்ரேலின் நடவடிக்கை குடியேற்றக்காரர்களை கோபமூட்டியுள்ளது.
ஃபலஸ்தீனர்களின் பூமியை கைப்பற்றி வீடுகளை நிர்மாணித்த இவர்கள் ஃபலஸ்தீன மக்களுக்கெதிராக பரவலான தாக்குதலை நடத்திவருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை போலீசுடன் மோதிய யூதர்கள் யூசுஃப் கிராமத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து தீவைத்தனர். மஸ்ஜிதின் சுவரில் ஹீப்ரு மொழியில் மிரட்டல் விடுக்கும் வார்த்தைகளை எழுதியுள்ளனர். இந்நிகழ்வைத்தொடர்ந்து அப்பிரதேசத்தில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த தினம் ஃபலஸ்தீனர்களின் 3 வீடுகளையும், வீட்டையும் தீவைத்துக்கொழுத்தி நாசப்படுத்தினர்.

மஸ்ஜிதுக்குள் அத்துமீறு நுழைந்த யூதர்களின் செயலை ஃபலஸ்தீன் பிரதமர் ஸலாம் ஃபய்யாதும், அதாரிட்டி அதிபர் மஹ்மூத் அப்பாஸும் கண்டித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 11 ஜூலை, 2009

இஸ்ரேல் எழுப்பிய மதில் சுவரை இடிக்க ஐ.நா வலியுறுத்தல்


ஜெருசலம்: சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட பிரிவினை மதிலை தகர்க்கவேண்டுமென்ற சர்வதேச நீதி நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச சட்டங்களை பேணாமல் இஸ்ரேல் கட்டிய மதில் ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீன மக்களின் சுதந்திரத்தை பறிப்பதாக ஜெருசலத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலர் தெரிவித்தார்.
ஃபலஸ்தீன் போராளிகளின் தாக்குதலை தடுப்பதற்கு என்ற பெயரில் 2002 ஆம் ஆண்டு மேற்குக்கரையை ஃபலஸ்தீன் பூமியிலிருந்து தனிமைப்படுத்த இஸ்ரேல் இந்த மதிலை கட்ட ஆரம்பித்தது. மதிலை சுற்றிலும் கிடங்குகளும் மின்சார கம்பிகளும் இருப்பதால் அங்குள்ள மக்களுக்கு வெளி உலகத்தோடு தொடர்புக்கொள்ள முடியாத சூழல் இருந்தது. 2004இல் சர்வதேச நீதிக்கான நீதி மன்றம் மதில் சுவரை எழுப்புவதற்கெதிராக எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை அலட்சியப்படுத்திவிட்டு இஸ்ரேல் மதில் சுவர் கட்டும் பணியைத்தொடர்ந்தது. இதுவரை மதிலின் 3‍இல் 2 பாகம் பூர்த்தியாகிவிட்டது. மதில் சுவர் கட்டும் பணி பூர்த்தியாகும்பொழுது 35 ஆயிரம் ஃபலஸ்தீனர்கள் தனிமைப்படுத்தப்படவும், ஒன்றேகால் லட்சம் ஃபலஸ்தீனர்கள் 3 பிரதேசங்களில் பிரிக்கப்படவும்செய்வார்கள். ஃபலஸ்தீனர்களின் சுதந்திரத்தின் மீது இஸ்ரேல் அரசு நடத்தும் கடுமையான கட்டுப்பாடுகள்தான் அடிப்படையான பிரச்சனை. ஆதலால் மதில் சுவரை உடனே தகர்க்கவேண்டும் என்றும் மதில் சுவரை கட்டியதால் பாதிப்படைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டுமென்றும் வலியுறுத்திய ஐ.நா ஹைக்கமிஷனர் நவநீதம் பிள்ளை நீதி மன்ற உத்தரவை செயல்படுத்த உலகநாடுகள் இஸ்ரேலை நிர்பந்திக்கவேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.