இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
சனி, 20 பிப்ரவரி, 2010
உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர்: ஐநா
நவீன ஏவுகணை தாங்கிய கப்பலை அறிமுகப்படுத்தியது ஈரான்
தெஹ்ரான்:ஈரான் தனது நாட்டு பாதுகாப்பிற்காக தயாரித்த முதல் ஏவுகணை கப்பலை அறிமுகப்படுத்தியது.
ஈரான் ஆன்மீகத்தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னியின் முன்னிலையில் ஜம்ரான் என்ற பெயரிலான நவீன தொழில்நுட்பத்தில் தயாரான கப்பலை நாட்டுக்குஅர்ப்பணிக்கப்பட்டது. 30 நாட்டிக்கல் (கடல் நீட்டலளவை அலகு) மைல் வேகத்தில் செல்லும் இக்கப்பலில் நவீன ரேடாரும், விமான எதிர்ப்பு கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 140 பேர் பயணம் செய்யலாம். பீரங்கிகள், ஆயுத பாதுகாப்பு சாலைகள் ஆகியன இதில் உள்ளன.
ஏவுகணைகளை ஏவவும், தடுக்கவும் இதனால் இயலும். இதன் நீளம் 94 மீட்டர் ஆகும். தடைகளுக்கு மத்தியிலும் புதியதொரு திட்டத்தை செயல்படுத்த முடிந்ததற்கு காரணம் இந்நாட்டின் பேரார்வத்தை காண்பிப்பதாக காமினி தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ்
ஹமாஸ் தலைவர் கொலையில் மொஸாத் பயன்படுத்தியது ஆஸ்திரியா சிம்கார்டு- 2008 மும்பைத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது
விசாரணை நடந்து வருவதால் இதுக்குறித்து அதிகம் கூற இயலாது என அவர் தெரிவித்தார். 7 ஆஸ்திரியா சிம் கார்டுகளை கொலையாளிகள் பயன்படுத்தியுள்ளனர். 2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போதும் இத்தகைய சிம் கார்டுகளை பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஸீ நியூஸ் சானல் கூறுகிறது.
வியாழன், 18 பிப்ரவரி, 2010
ஹமாஸ் தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளில் ஏழுபேர் வசிப்பது இஸ்ரேலில்
வீடியோ காட்சிகள் மூலம் கண்டறியப்பட்ட 11 பேரில் பிரான்சைச் சார்ந்தவர் தவிர மற்ற அனைவரும் போலி பாஸ்போர்ட்டுகளில் பயணம் செய்துள்ளனர். இவர்களின் உண்மையான நாடு எது என்பது குறித்து குழப்பம் தொடர்கிறது. குற்றவாளிகளின் பெயர் கொண்ட ஏழுபேர் தற்ப்பொழுது இஸ்ரேலில் வசித்துவருவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இவர்கள் இக்குற்றத்தை செய்யவில்லை எனக் கூறுகின்றனர்.
பிரிட்டீஷ் பாஸ்போர்ட்டில் பயணம் செய்தவர்களில் ஆறுபேர் போலி முகவரியிலான பாஸ்போர்ட்டை பயன்படுத்தியுள்ளனர். பெயரும் நம்பரையும் மாற்றாமல் புகைப்படத்தை மாற்றியுள்ளனர். இவர்களுக்கு ஒருமாதம் முன்பு பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இவர்களில் ஏழுபேர் தற்ப்பொழுது இஸ்ரேலில் வசிக்கின்றனர். தங்களுக்கு இக்குற்றத்தில் பங்கில்லை என அவர்கள் ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
அதே வேளையில் இக்கொலையை செய்தவர்கள் மொஸாத் தான் என்று ஹமாஸின் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் வலுவடைந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி துபைக்கு வந்த இவர்கள் பின்னர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இவ்விவகாரத்தில் இஸ்ரேல் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
ஆனால் பிரிட்டீஷ் பாஸ்போர்ட்டை போலியாக பயன்படுத்தியதைக் குறித்து விசாரணை நடத்தப்போவதாக பிரிட்டீஷ் பிரதமர் அறிவித்ததாக சி.என்.என் கூறுகிறது. இஸ்ரேல் குடிமகன்கள் பிரிட்டீஷ் பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தியதாக கண்டறிந்தால் தூதரக உறவில் அது இன்னொரு பிரச்சனைக்கு காரணமாகும் என தெரிகிறது.
அந்த நாள் ஞாபகம் இருக்கிறதா? புதைக்கப்பட்ட உண்மைகள்
தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டது தமுமுக ஆயிரக்கணக்கானோர் கைது-புகைப்படங்கள்
போரூரில் உடலை தோண்டிய விவகாரம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தமுமுக போராட்டம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் இந்த அத்துமீறிய செயலைக் கண்டித்தும், வரம்பு மீறி செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், சேக் மாணியம் வக்ஃபு சொத்தை முஸ்ம்களிடம் ஒப்படைக்க கோரியும் தமிழ்நாடு முஸ்ம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான இடஒதுக்கீடு நமது டெல்லி பிரகடனமே தீர்வு!
ஆந்திர மக்களின் அன்புத்தலைவர் மறைந்த டாக்டர் ராஜசேகர ரெட்டி, காங்கிரஸ் வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு எனத் தேர்தலில் வாக்களித்தார். முஸ்லிம்களின் பேராதரவோடு வென்றார்.முதல்வர் பதவியேற்றதும், காலங்கடத்தாமல் முஸ்லிம் அமைப்புகளைக் கெஞ்ச வைக்காமல், முஸ்லிம்கள் விரக்தியின் விளிம்புக்கே போய் போராட்ட அறிவிப்பு செய்யாமல், சொன்னதைத் செய்து காட்டினார் ஆந்திர முதல்வர் மறைந்த Y.S.R. அவர்கள்.
சமூக அநீதியாளர்கள், நீதிமன்றம் மூலம் முட்டுக்கட்டை போட்டனர். ஆந்திர அரசு ஆணையம் அமைத்துப் பரிந்துரை பெறாமல் வழங்கிய இந்த இடஒதுக்கீடு செல்லாது என்றது நீதிமன்றம் உழ்.வ.ந.த. அசரவில்லை. நான் கொடுத்தேன் நீதிமன்றம் தடுத்துவிட்டது. நான் என்ன செய்வேன் என்று பசப்பி முஸ்லிம்களை ஏமாற்றவில்லை.உடனே, ஆந்திராவின் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திலிருந்து பரிந்துரையைப் பெற்றார். இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம் களுக்குத் தனி இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக்கினார் Y.S.R..
கே.கொண்டால ராவ் என்ற வழக்கறிஞர் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அனில்ரமேஷ் தவே தலைமையிலான நீதிபதிகள் குழு இச்சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இதன் மூலம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் அரசியல் சாசனத்துக்கும் சிக்கல் ஏற்படுத்தியுள்ள னர் இந்த நீதி மான்கள்(?) ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் என்பது மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பு. அது சட்டங்களை இயற்றும். நீதிமன்றம் என்பது சட்டத்தை இயற்றுகிற அமைப்பல்ல. மாறாக இயற்றப்பட்ட சட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்துகிற அமைப்பு. சட்டமன்றத்தின் அதிகாரத்தில் நீதிமன்றம் குறுக்கிடுவது ஜனநாயகத்தைக் காயப்படுத்தும் செயலாகும்.ஆந்திர உயர் நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து, மாநில முதல்வர் ரோசையா, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளார். முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு சட்டத்திற்குச் சிறப்பு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யுமாறு மாநிலத் தலைமை வழக்குறைஞருக்கு ஆணையிட்டுள்ளார்.
ஆந்திர உயர்நதிமன்றதின் தீர்ப்பு அனைவருக்கும் புதிய சிந்தனையை தோற்றுவிக்க வழிகோலியிருக்கிறது. அதாவது, நீதிமன்றங்களின் சமூக நீதிககு எதிரான சேட்டைகளை நிரந்தரமாக சரி செய்ய வேண்டுமெனில், அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் செய்வது ஒன்றுதான் சரியான தீர்வு. த.மு.மு.க. மார்ச்லி7, 2007 அன்று தலைநகர் டெல்லியில் நடத்திய பேரணி மற்றும் மாநாட்டில் இதைத்தான் முதன்மைப்படுத்தி அதை டெல்லி பிரகடனம் என முழங்கியது. அந்த டெல்லி பிரகடனம் செயல்படுத்தப்பட வேண்டுமெனில் நாம் மாபெரும் பரப்புரை இயக்கத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.
அரசியல் நிர்ணய அவையில் விவாதங்கள் நடந்த காலத்தில், Backward Class, அதாவது பிற்படுத்தப்பட்டோர் சமூக சமத்துவம் பெற, கல்வி வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்குவது தான் சமூக நீதி என அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு, அது ஏற்கப்பட்டது. ஈப்ஹள்ள் என்பது சிறுபான்மை முஸ்லிம்களையும் உள்ளடக்கும் (Class in cludes minorities) என்ற வாக்கியத்தை அரசியல் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என ஆணித்தரமாக வாதிட்டார். தமிழகப் பிரதிநிதியான கண்ணியமிகு காயிதே மில்லத்.
Class என்பது சிறுபான்மையினரையும் உள்ளடக்கியது தான் என்று பதிலளிக்கப்பட்டது. அதைத் தெளிவுபடுத்தி, Class என்பது சிறுபான்மையினரையும் உள்ளடக்கும் என்ற வாசகத்தை அரசியல் சாசனத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். என காயிதே மில்லத் மீண்டும் மீண்டும் வாதாட, எதிர்காலத்தில் Class என்பதில் சிறுபான்னையினர் சேரமாட்டார்கள் என எந்த அறிவாளியும் (?) சொல்லமாட்டார் என கேலியாக பதிலளித்தாராம் வல்லபாய் பட்டேல்.
துருபிடித்த மனங்கொண்ட அந்த இரும்பு மனிதரின் கேலிதான், இன்று வார்த்தை விளையாட்டு நடத்தி, வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களின் வாழ்க்கையில் விளையாடும், வன்னெஞ்சர்களுக்கு வாய்ப்பாகிவிட்டது. டி.ஏ.பாய் ஃபவுண்டேஷன் வழக்கில், Class என்பதில் சிறுபான்மையினரும் சேர்க்கப்படுவது தான் அரசியல் சாசன வடிவமைப்பாளர்களின் எண்ணமாக இருந்தது.
செவ்வாய், 16 பிப்ரவரி, 2010
குஜராத் முஸ்லிம்களை சிறைப்படுத்த ஒரு சட்டம்!
2009 ஜூலை மாதம் 28ந் தேதி பயங்கரவாத தடுப்புச் சட்ட மசோதாவை குஜராத் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மோடி அரசு அதனை மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்தது. அதன் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அது முயற்சித்தது.
இன்னொரு புறம், இந்தச் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ள ஆட்சேபகரமான சட்டப் பிரிவுகளை குஜராத் அரசுக்கு சுட்டிக்காட்டி அந்த சட்டப்பிரிவுகளை நீக்கி புதிய மசோதா தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது.
அது என்ன ஆட்சேபகரமான இரண்டு பிரிவுகள்?
அடுத்தது, குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் ஜாமீன் கோரி மனு செய்யும் பட்சத்தில், அரசு வழக்கறிஞர் ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபித்தால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பது!
இதற்காக மத்திய அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற பொருந்தாக் காரணத்தைக் கூறி மீண்டும் இந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைத்தது குஜராத் அரசு. மஹாரஷ்டிராவில் தற்போது உள்ள அமைப்பு சார்ந்த குற்ற எதிர்ப்புச் சட்டத்தைப் போன்று தான் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் அதனால் இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வியாக்கியானமும் செய்தது தான் அந்தப் பொருந்தாக் காரணம்!
ஆனால் சளைக்காத மத்திய உள்துறை அமைச்சகமோ, நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசு, மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து சட்ட மசோதாவை பழைய வடிவிலேயே அனுப்பியுள்ளது. இதனால் இச்சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என குடியரசுத் தலைவரை மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால் நரேந்திர மோடி அரசோ, கறுப்புச் சட்டத்தை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை மீண்டும் கருவறுக்கத் துடிக்கிறது. இந்தச் சட்டம் இல்லாத நிலையிலேயே குஜராத் முஸ்லிம்கள், அடுத்து என்ன நடக்குமோ என அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். 2002 குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது மோடி அரசின் காவல் துறையும், சட்டத் துறையைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், நீதிபதிகள் சிலரும் கூட முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டனர் என்பதை டெஹல்கா வார இதழ் வாக்கு மூலங்களாக வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், போலிஸ் அதிகாரி முன்பு தரப்படும் வாக்குமூலத்தை அப்படியே ஏற்க வேண்டும், அரசு வழக்கறிஞர் ஆட்சேபித்தால் ஜாமீன் வழங்கக் கூடாது என்பது போன்ற சட்டப் பிரிவுகளை இந்தச் சட்ட மசோதாவில் சேர்த்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்கும் மோடி அரசின் உள்நோக்கம் எதைக் காட்டுகிறது என்பது எல்லோருக்கும் விளங்கும்.
இதை நாம் சொல்லவில்லை, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச் செயலாளர் மோகன் பகவத் சொல்கிறார்.
மனித வுரிமை மீறல்களை பற்றி பேச அமெரிக்காவுக்கு எந்த அருகதையும் இல்லை: சொல்கிறது ஈரான்
இதன்போது கருத்து தெரிவித்த மனித உரிமைகள் பேரவைக்கான இரானிய தூதுவர், சர்வதேச உடன்பாடுகளுடன் இரான் இசைவான போக்கையே கொண்டுள்ளதாகவும், மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் நேர்மையான அணுகு முறைகளையே இதுநாள் வரை கைக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார். உலகம் முழுவது மனித வுரிமை மீறல்களை நடத்திவரும் இவர்கள் மனித வுரிமை பற்றி பேச எந்த அருகதையும் இல்லாதவர்கள் என்றும் கூறினார்.
கத்தரில் கருத்து சுதந்திரத்திற்கு தடையில்லை: டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி
கர்தாவி தனது சீடர்களின் சங்கம நிகழ்ச்சியின் இறுதியில் உரையாற்றும் பொழுது இதனை தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது, "தீவிரவாதிகளுக்கு நான் ஊக்கமளிக்கிறேன் என்றுக்கூறி கருப்பட்டியலில் எனது பெயரை உட்படுத்த முயலும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது கத்தரின் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியாவார். வகுப்புகள், ஜும்ஆ குத்பா, ரேடியோ-டெலிவிஷன் உரைகள், அல்ஜஸீராவில் நேர்முகம் உள்ளிட்ட வழிகளின் மூலம் நான் ஏற்றுக்கொண்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதற்கு கத்தர் அரசு ஒரு தடையையும் இதுவரை ஏற்படுத்தவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
ஹைத்தியில் இஸ்ரேல் உடல் உறுப்புகளை திருடியதுப் பற்றி விசாரிக்க வேண்டும் என்றுக் கோரியவரின் பதவி பறிப்பு
ஹைத்தியில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை அங்கு சென்ற இஸ்ரேலிய ராணுவம் திருடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஜூவிஸ் க்ரோணிகிள் என்ற பத்திரிகைக்கு பாரணஸ் அளித்த பேட்டியில் கோரியிருந்தார்.
யூ ட்யூபில் பரவலாக பரப்பப்படும் இந்தக் குற்றச்சாட்டைக் குறித்து இஸ்ரேல் ராணுவமும், இஸ்ரேல் மருத்துவக் குழுவும் சுதந்திரமான விசாரணைக்கு தயாராகவேண்டும் என்றும், ஹைத்தியில் தங்களுடைய குழுவினர் மீதான சந்தேகத்தை போக்கவேண்டும் என்றும் பாரணஸ் கோரியிருந்தார்.
இக்குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளவியலாததும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியதும் என சுட்டிக்காட்டி பாரணஸை லிபரல் டெமோக்ரேடிக் பார்டி தலைவர் நிக் க்ளக் கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
குண்டுவெடிப்புகளை தடுப்பது எப்படி?
ஆனால் புனே சம்பவம் மீண்டும் பீதியை கிளப்புகிறது. இந்நாட்டின் ஸ்திரத்தன்மையை தகர்க்கும் தீய சக்திகள் தூங்கவில்லை என்றும் அவர்கள் தூங்குவதுபோல் நடித்து அவசரத்தை எதிர்பார்த்து இருக்கின்றார்கள் என்பதும் பேக்கரி குண்டுவெடிப்பு சம்பவம் உணர்த்துகிறது.
ஊடகங்கள் மீண்டும் ஊகங்களுடன் களமிறங்கிவிட்டன. வழக்கம் போல் முஸ்லிம் பெயருடனான ஒரு அமைப்புதான் குற்றஞ் சாட்டப்படுவதில் முதல் இடத்தில் உள்ளது. சிலர் லஷ்கரை நோக்கி விரல் நீட்டுகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுவது போல், ஊகங்கள் உண்மையான குற்றவாளிகள் தப்பிப்பதற்கு தடுப்பாக பயன்படுகிறது.
பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் சந்தேக பட்டியலில் முதலிடத்தில் வருவது இயல்பு. பாகிஸ்தானில் நடைபெறும் தொடர் குண்டுவெடிப்புகள் அனைத்தும் இந்தியா ஸ்பான்சர் செய்தது என்று பாகிஸ்தான் அரசும், ஊடகங்களும் நிரந்தரமாக கூறிக்கொண்டிருக்கவே லஷ்கரின் பழிவாங்கும் முயற்சிகளை மறுப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது. எந்தவொரு பிரிவினரையும் புறந்தள்ளிட இயலாது என்பதுதான் தற்போதைய நிலை.
பல்லில்லாத வயதான சிங்கமான பால்தாக்கரேயை அவருடைய கோட்டையிலேயே சர்வசாதாரணமாக சென்று வந்த ராகுல் காந்தியும் தொடர்ந்து ஷாருக்கானும் சிறுமைப்படுத்தியதற்கு பழிவாங்க சிவசேனாக்காரர்களை தூண்டியிருக்கலாம். தமக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து தப்பிப்பதற்கு எந்த வஜ்ராயுதத்தையும் பயன்படுத்த தயங்காதவர்கள் தான் தாக்கரேயும், பரிவாரங்களும். தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் தடுப்பதில் இந்திய அரசு ஜாக்கிரதையோடு செயல்படுகிறது என்பது மறுக்க முடியாததுதான். ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் உதைத்து விளையாடும் கஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முடிவை எட்ட பேச்சுவார்த்தையின் மூலம் பரிகாரம் காணாமல் இந்திய துணைக் கண்டத்தில் வாழும் மக்களுக்கு நிம்மதியாக உறங்குவது சாத்தியமில்லை என்பது உண்மை. அதனால் பேச்சுவார்த்தையின் மூலம் பரிகாரம் காணும் முயற்சிகளை தடுப்பதற்கு நடக்கும் முயற்சியாக ஏன் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கக்கூடாது என்பதையும் அலசி ஆராயவேண்டும். இந்தக்குண்டு வெடிப்புகளால் யாருக்கு ஆதாயம் என்ற கேள்வியுடனே விசாரணை துவங்கப்பட வேண்டும்.
ஆதரவுத்தேடி ஹிலாரி கிளிண்டன் மத்திய ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம்
அணுசக்தி திட்டத்துடன் முன்னேறிச் செல்லும் ஈரானுக்கெதிராக தடையை வலுப்படுத்தத்தான் இந்த சுற்றுப்பயணம் என கூறப்படுகிறது. அத்துடன் ஒரு வருடமாக முடங்கிக்கிடக்கும் ஃபலஸ்தீன் இஸ்ரேலுக்கிடையேயான சமாதான பேச்சுவார்த்தைக்கான முயற்சியை துவங்குவதுமாகும். அமெரிக்கன் இஸ்லாமிக் வேல்ட் ஃபாரம் மாநாட்டில் உரைநிகழ்த்துவதற்கு முன்பு ஹிலாரி முக்கியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இடஒதுக்கீடு சலுகை அல்ல உரிமை: இ.எம்.அப்துற்றஹ்மான்
"இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் அவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ற உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வரையறுத்துள்ளது. இது சமூக ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமேயல்லாது பொருளாதார ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று வரையறுக்காதது குறிப்பிடத்தக்கது. 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்த உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, அனைத்து சமுதாயங்களை விட மிக மோசமான அளவுக்குப் பின் தங்கிய நிலையிலேயே இன்று இந்திய முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
முஸ்லிம் சமுதாயத்தின் பின் தங்கிய நிலையினை முன்னேற்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிசன் மட்டும் தான் 10 சதவீத இடஒதுக்கீடு அனைத்து முஸ்லிம்களுக்கும் வழங்குவது மட்டுமே சரியான தீர்வு என்று அரசுக்குப் பரிந்துரை செய்தது. முஸ்லிம் சமுதாயத்துக்குப் பாதுகாவலன் என அவ்வபோது கண்துடைப்பு நாடகம் நடத்தும் காங்கிரஸ், அந்தப் பரிந்துரையை வாங்கி அழகாக அட்டைப் போட்டு, குளிர்சாதன அறையில் ஒதுக்கி வைத்து விட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின், பிரதமருக்கு அளிக்கப்பட்ட அந்த அறிக்கை லீக்கான விஷயம் மட்டும் நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய விஷயமாக பேசப்பட்டது. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பரிந்துரைக்கப்பட்ட அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதை விட்டுத் தடுப்பது மட்டும் தான் அதன் நோக்கம் என்பதை எவரும் அறிந்து கொள்ள முடியும். இந்த விஷயத்தில் மதச்சாரபற்ற வேடமிடும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளிலிருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களாக நாடாளுமன்றம் கண்ட 30 முஸ்லிம் எம்பிக்களில் ஒருவர் கூட மிஸ்ரா கமிசன் பரிந்துரையை நாடாளுமன்ற ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதைக் குறித்து வலியுறுத்தாதது மகா அயோக்கியத்தனமாகும்.
திங்கள், 15 பிப்ரவரி, 2010
ரியாத் சர்வதேச இந்தியப் பள்ளியில் தீவிபத்து
பள்ளியின் மகளிர் வளாகப் பகுதியில் இந்த விபத்து நடந்தது. இந்த வளாகம் 3 மாடிக் கட்டடமாகும். அங்குள்ள பாதுகாப்பாளர் அறைக்கு வெளியே தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொருட் சேதமும் ஏற்படவில்லை என்று பள்ளியின் தலைவர் இம்தியாஸ் தெரிவித்தார்.
தீவிபத்து குறித்து ஆசிரியை ஒருவர் கூறுகையில், வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென புகையுடன் தீ கிளம்பியதால் அனைவரும் மாடிக்கு ஓடினோம். அங்கிருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டு வெளியேற்றினோம். இதனால் மாடிப்படிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் யாரும் காயமடையவில்லை என்றார்.
தீவிபத்தைத் தொடர்ந்து அனைவரும் வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி மைதானத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
வேலூர் ஹோட்டல்களில் எலி புழுக்கை... நெளியும் புழுக்கள்... கெட்டுப்போன சிக்கன்..!
கடந்த வாரம், வேலூர் மாநகராட்சியின் நகர்நல அலுவலர் பிரியம்வதா தலைமை யிலான மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் அடங்கிய டீம், பல ஹோட்டல் களிலும் அதிரடியாக ஆய்வு செய்தது. அந்த டீம் முதலில் சென்றது, வேலூர் முழுக்க பல நடுத்தர மற்றும் உயர்தர ஹோட்டல்கள் நடத்துபவருக்கு சொந்தமான ஓர் உயர்தர ஹோட்டலுக்கு. பேருந்து நிலையம், கோயில்கள் அருகில், மாவட்ட கலெக்டர் வளாகம் அருகில் என நகரில் பல ஹோட்டல்கள் இவருடையது. இங்கெல்லாம் அனைத்து உணவுப் பண்டங்களின் ரேட் ஹை! அந்த ஹோட்டலில் உள்ள ஸ்டோர் ரூமுக்குள் அடியெடுத்து வைத்த அதிகாரிகள், அங்கு அடித்த கெட்ட வீச்சத்திலேயே திணறிவிட்டனர்.டீமில் இருந்த ஒருவர் நம்மிடம், ''அங்கு பாத்திரங் களில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பருப்பு வகையறாக்களில் கறுப்புக் கலராக தென் பட்டதை கையிலெடுத்து வெளிச்சத்தில் பார்த்தபோதுதான், அது எலிப் புழுக்கை என்பதைக் கண்டு அதிர்ந்தோம். சாப்பிட்டு முடித்தவுடன் வாயில் போட்டுக்கொள்ளும் கல்கண்டு உள்பட அங்கிருந்த அனைத்துப் பொருட்களிலும் எலிப் புழுக்கை நீக்கமற நிறைந்திருந்தது. கோதுமை மாவு, மைதா மாவு ஆகியவற்றில் சிறிய வகை வண்டுகள் ஓடியாடி விளையாடின!
'எதை மொதல்ல சரி செய்யறீங்களோ இல்லையோ... ஸ்டோர் ரூமுக்கு வெள்ளை யடிச்சி சுத்தமா வெச்சிக்கோங்க. சிலந்தி வலை பின்னி, கரப்பான் பூச்சியும், எட்டுக்கால் பூச்சி ஓடற மாதிரியா வெச்சிருப்பீங்க?' என்று சத்தம் போட்டோம். அடுத்தது, புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் இன்னொரு ஆடம்பர ஹோட்டல். காலை டிஃபனுக்குப் பிறகு மீந்த - கெட்டுப்போன தேங்காய் சட்னியை 'வேஸ்ட்' பண்ண விரும்பாமல், மதிய உணவுக்கான சாம்பாரில் கலந்து அதை சப்ளை செய்வதைக் கண்டுபிடித்தோம்! வேக வைத்த பீன்ஸ் பொரியலை ஃபிரிஜ்ஜுக்குள் வைத்து அடுத்தடுத்த வேளைக்கு பயன்படுத்துவதையும் கண்டோம். அங்கிருந்த தோசை மாவை கையிலெடுத்துப் பார்க்க... அதில் புழுக்கள் ஜோராக நெளிவதைக் கண்டு கேட்டால், 'மாவு கரைக்க யூஸ் பண்ற தண்ணியில இந்தப் புழுக்கள் இருந்துச்சோ என்னவோ' என்று ஹோட்டலில் வேலை செய்பவர்கள் அலட்டிக்காம சொன்னதைக் கேட்டு ஆய்வுக் குழுவினரே நொந்துபோயிட்டோம்..!'' என்றவர், மற்ற ஹோட்டலில் நடந்த விஷயங்களையும் புட்டுப்புட்டு வைத்தார்.
''ஒரு பஞ்சாபி தாபா ஹோட்டலின் கிச்சனுக்குள் சென்றபோது, நான்கு நாட்களுக்கு முன்பு வேகவைத்து அழுகிய நிலையில் இருந்த காளான் துண்டுகளை, காளான் கிரேவி கேட்டு சாப்பிடக் காத்திருந்தவருக்காக வாணலியில் போட்டு வதக்கும்போது கையும் களவுமாகப் பிடித்தோம்.
இன்னொரு ஹோட்டல் விசிட்டில், மசாலா தடவப்பட்ட நிலையில் இருந்த கோழி இறைச்சியை ஆட்கள் நடமாடும் பகுதியில் கீழே கொட்டி வைத்திருந்தார்கள்! கிச்சனுக்கு வெளியே குடும்பம் குடும்பமாக குழந்தைகளோடு சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்களைப் பார்க்கவே பாவமாக இருந்தது...'' என்றார்கள்!
இது இப்படி என்றால், நடுத்தர வகை ஹோட்டல்களில் கிச்சனுக்குள் நுழையவே முடியாத அளவுக்கு கழிவு நீர் குட்டை போல நின்றதாம். கிச்சனில் வேலை செய்பவர்கள் எல்லாம் 'தமிழ்ல எங்களுக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை சுத்தம்தான்!' என்கிற ரீதியில் காட்சியளித்தனராம். பலருக்கு தொடர்ந்து தண்ணீரில் கைகளை நனைத்துக்கொண்டே வேலை செய்து வந்ததில், கைவிரல்கள் எல்லாம் வெள்ளையாகி, தோல் உரிந்த நிலையிலும், கையுறைகள் எதுவும் அணியாமல் வேலை செய்து கொண்டிருந்தார்களாம். எல்லாவற்றுக்கும் மேலாக பல ஹோட்டல் களில், அதை நடத்துவதற்குண்டான தகுதிச் சான்றிதழே இல்லாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, ஆய்வுக்குச் சென்ற அனைத்து ஹோட்டல்களுக்குமே நோட்டீஸ் கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.
நகர்நல அலுவலர் பிரியம்வதாவிடம் பேசி னோம். ''அதிரடி ஆய்வில் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், வேலூரில் உள்ள ஹோட்டல்கள் சாப்பிடுவதற்கே லாயக்கற்றவையாக இருக்கின்றன. சுகாதாரக் கேடு ஒரு பக்கம், அஜினமோட்டோ போன்ற பொருட்களை அளவுக்கு அதிகமாக உணவுப் பொருட்களில் கலந்து விற்பது ஒருபக்கம்... என பல வகைகளிலும் மோசமாக இருக்கின்றன ஹோட்டல்கள். அங்கிருந்த கெட்டுப்போன பொருட்களை எடுத்துவந்து பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். சம்பந்தப்பட்ட எல்லா ஹோட்டல்களுக்கும் நோட்டீஸ் முறையாக அனுப்பப்பட்டிருக்கிறது. பரிசோதனை முடிவு வந்தபிறகு, அந்த ஹோட்டல்களுக்கு சீல் வைப்பதற்குண்டான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்! மேலும், அனைத்து ஹோட்டல்களுக்கும் சுகாதாரமான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று மாநகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறோம்!'' என்றார்.
இந்த விசிட்டில் இன்னொரு விஷயமும் சொல்வதற்கு இருக்கிறது! வேலூர் மாநகராட்சி மேயரான ப.கார்த்திகேயனுக்கும் சொந்தமாக 'பேபி ரெசிடென்சி' என்ற உயர்தர ஹோட்டல், வேலூரின் பிரதான பகுதியில் இருக்கிறது. அதிரடி சோதனை செய்த சுகாதார குழு, மேயரின் ஹோட்டல் பக்கம் எட்டிப் பார்க்குமா என்ன!
இந்த நிலைமை வேலூரில் மட்டும்தானா இருக்கும்? நேர்மையான, அதிரடியான சோதனையை மாநிலமெங்கும் சி.பி.ஐ. ரெய்டு ரேஞ்சுக்கு ஒரேநாளில் திடீரென நடத்தினால் எல்லா குட்டும் அம்பலமாகாதா என்ன? அரசு அதைச் செய்யுமா... அல்லது, பாராட்டு விழா கொண்டாட்டங்களுக்கு ஹோட்டல் அதிபர்களிடம் நிதி வாங்கியே திருப்தி அடைந்துவிடுமா?
ஹோட்டலுக்குப் போகிற ஒவ்வொரு மனிதனும், காசைக் கொடுத்து தன் ஒட்டுமொத்த உயிரையும் அங்கே நம்பி ஒப்படைக்கிறான் என்பதை மறந்துவிடக்கூடாது!
படங்கள்: எம்.ஆர்.பாபு
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010
மறைபொருள் குறும்பட விமர்சனம்!
சுட்டி: http://www.youtube.com/watch?v=O9Ukt5-rXls&NR=1
அதனைப் பற்றிய பார்வையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
அழகான கவிதை போன்று இப் படத்தைக் கொடுத்துள்ள பொன்.சுதா - விற்கு முதலில் வாழ்த்துக்கள்! டெக்னிலாக ஓரிரு குறைகள் கண்ணில் பட்டாலும் கருப் பொருளுக்குத் தொடர்புடைய, மனதில் தோன்றிய சில கருத்துக்களை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்.
உடை உடுத்துவதற்கு ஒவ்வொரு சமூகத்தினரும், நாட்டவரும் மாறுபட்ட அளவுகோல்களை நிர்ணயித்துள்ளனர் என்பதை நன்கு அறிவோம்.
நடக்கும் போது கால் இடைவெளியில் தொடை தெரிவதால் வேட்டி கட்டி நாம் கம்பீரமாக நடப்பதையும், மேலே இறுக்கமான Vest / ஜாக்கெட் மற்றும் வயிற்றுப் பகுதி , முதுகு வெளியே தெரிய நம் பெண்கள் புடவை அணிவதையும் "ஆபாச உடைகள்" என்று நக்கல் அடிப்பர் இந்தியாவின் வட மாநிலத்தினர்.
அதே நேரத்தில் நாகரீக உடை என்று கருதி மேற்கத்தியர் அணியும் ஸ்கர்ட்டை நம் பெண்கள் அணிந்தால் "ஆபாசமாகக் கால்கள் தெரிகின்றன..." என்போம். ஆபாசம் பார்வைக்கு பார்வை வேறுபடுகின்றன. அதே போன்று உடைகளின் அளவு கோலும்...
ஆனால், உலக அளவில் எல்லோருக்கும் பொதுவான temperament ஒன்று உள்ளது. ஆணொருவன் பொது இடங்களுக்கு தன் மனைவியையோ, சகோதரியையோ அழைத்துச் செல்லும் போது எவனோ ஒருவன் அவர்களைத் தவறான இடத்தில் உற்றுப் பார்த்தால் மட்டும் "மனிதனின் பார்வை மோசமானது" என்பதை உணருவோம். ஆத்திரம் எழும் அதே வேளையில் தப்பெண்ணத்தை தடுக்க, நம் தரப்பில் மறைப்பை நாடுவோம். இது தான் மனித இயல்பு! ஹிஜாப் என்ற திரையும் இதைத் தானே சொல்கிறது?
குறும்படத்தில் வரும் பெண், பொறுமையாக நேரம் எடுத்து உடையுடுத்தி மேக்கப் செய்கையில் உற்சாகமாக செல்லும் பின்னணி இசை, அவர் புர்காவைக் கையில் எடுத்த நொடியில் சடாரென்று சோகத்திற்கு மாறுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. இஸ்லாமிய அடிப்படை எதுவென அறிந்து கொள்ளா(மல்) சில முஸ்லிம்களின் இயல்பான நடைமுறையைக் காட்டியுள்ளீர்கள்.
ஆனால், படத்தில் உருவகப் படுத்துவது போன்று புர்காவைக் கையில் எடுக்கும் முஸ்லிம் பெண்களுக்கு எல்லாம் இவ்வாறு சோகம் ஏற்படுகிறதா என்றால் இல்லை ;-)
இஸ்லாமிய அடிப்படையில் பார்த்தால், புர்கா என்று நாம் புரிந்து வைத்திருக்கும் "கறுப்பு அங்கி" அணியும் முன்னரே, இந்தப் பெண் ஹிஜாபில் (புர்காவில்) தான் இருக்கிறார், தலை முடியை மறைப்பது தவிர... ஏனெனில் பெண் ஒரு குறிப்பிட்ட நிற ஆடையைத் தான் அணிந்து தனது உறுப்புக்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆபாசமின்றி அழகான முறையில் உடற்கூறுகளை மறைக்குமாயின், அவர் அணிந்திருக்கும் சுடிதாரே கூட போதுமானது.
பார்த்துப் பார்த்து அணியும் ஆடை அணிகலன்களை பிறருக்குக் காட்டி மகிழ முடியவில்லையே எனும் எண்ணம் மேலிடாமல் இல்லை. இத்தகைய கட்டுப்பாடுகள் எல்லாமே "ஆபாசப் பார்வை"களைத் தவிர்க்க மட்டுமேயொழிய பெண்களுக்கிடையேயான கூடி மகிழ்தலில் எவ்வித கட்டுப் பாடுகளும் இல்லையே?
அத்துடன், இங்கே சித்தரிக்கப் பட்டுள்ள முகத்தை மறைக்கும் "நிகாப்" (niqab) இஸ்லாத்தில் அவசியம் என வலியுறுத்தப்பட்ட ஒன்று அல்ல. அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. It is an extra degree of observance.
பொன்.சுதா சமூக சிந்தனையுடன், நல்ல சிந்தனைகளை தொடர்ந்து முன் வைப்பதோடு எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்ட பார்வையுடன் நிறுத்தி விடாமல் அதன் முழு பரிணாமங்களையும் அலச வேண்டும் என்பதே என் அவா.
சனி, 13 பிப்ரவரி, 2010
ஒண்ட இடம் தேடும் பால்தாக்ரே கும்பல்!
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி
தற்போது இந்திய அரசியலில் நந்தவனத்து ஆண்டி என்ற பட்டப்பெயர் பால்தாக்கரே கும்பலுக்கு கச்சிதமாகப் பொருந்தும் எனலாம்.
இரண்டு தடவையாக ஆட்சிக்கு வரும் வாய்ப்பிழந்ததோடு மக்களின் செல்வாக்கினை சுத்தமாக தொலைத் துக்கட்ட அவர்களே வலிந்து எடுத்த முயற்சிகளின் பலனாக பால்தாக்கரே, உத்தவ்தாக்கரே, ராஜ் தாக்கரே கும்பல்களின் கூச்சல்கள் எடுபடாமலேயே போய்விட்டது. அப்பாவி பீகாரிகளின் மேல் சிவ சேனா என்ற பாம்பின் குட்டியான மகராஷ்ட்ரா நவநிர்மான் சேனாவின் வெறியாட்டம் அதனைத் தொடர்ந்து அப்பாவி பீகாரிகள் வடித்த கண்ணீர் இனவெறியர்களின் செல்வாக்கினை மங்கச்செய்தது.
ஹிந்தியில் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட அபூ ஆஸ்மியின் மீது மகராஷ்ரா நவநிர்மான் சேனா சட்டமன்ற உறுப்பினர்கள் பாய்ந்து பிறாண்டிய சம்பவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அபூ ஆஸ்மி அகில இந்திய பிரபலமானார்.
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனிதனைக்கடித்த கதையாக தாக்க ரேக்களின் வெறியாட்டம் எல்லை மீறியது.
அரசியல் இனம் மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஒருங்கிணைப்பது விளையாட்டுக் கலை போன்றவையாகும்.
ஆனால் அதிலும் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தது தாக்கரேகும்பல். பாகிஸ்தானின் அயலுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்வார்கள்? விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்கிற ரீதியில் கருத்து கூறிய ஷாரூக்கான் மீதும் தனது குதறலை தொடங்கி வைத்தார் தாக்கரே. ஆனால் இதில் எதிர் மறையாக மிகப்பெரிய மூக்கறுப்பை எதிர் கொள்ள வேண்டியவரானார்.
சாதாரண மும்பைவாசிகள் கூட தாக்கரேயின் பைத்திய காரத்தனமான வாதத்தினைக் கண்டு பரிகசிக்க தொடங்கியுள்ளனர்.
தாக்கரேயின் வீழ்ச்சியுகம் உறுதியானது. மும்பை ஒன்றும் தர்மசத்திரம் அல்ல என தாக்கரே கூறினார். உண்மை தான் மும்பை ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல தாக்கரே கூட்டம் குத்தாட்டம் போடுவதற்கு? என்று கேள்வி கேட்க ஆளில்லை. எனினும் இந்தியர்கள் அனைவருக்கும் மும்பை சொந்தமானது என அடித்துக் கூறி தாக்கரே கும்பலின் முகத்தில் கரியையும், அடிவயிற்றில் நெருப்பையும் அள்ளிக்கொட்டினார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி.
ராகுல் காந்தியின் போர்ப்பிரகடனத்தைக் கண்டு சீற்றமடைந்த கிழட்டுச் சிங்கம் கர்ஜிக்க முயற்சித்தது. சிங்கத்தின் வாயிலிருந்து கர்ஜனைக்கு பதிலாக மியாவ் என்ற குரலே வெளிப்பட்டது.
ராகுல் காந்திக்கு மும்பை நுழைவதற்கு முன்பே கறுப்புக் கொடி காட்டப்போவதாக திரிந்து போன 'பால்'தாக்கரே அறிவித்தார்.
ஆனால் ராகுல் காந்தி தாக்கரே கும்பலின் எச்சரிக்கையை அலட்சியம் செய்தார். சிவசேனாவினர் ராகுல் காந்தியை முற்றுகையிடுவார்கள் என எதிர்பார்த்ததற்கு மாறாக மின் தொடர் வண்டியில் பணயம் செய்தார். மும்பை மாநகரையே ரவுண்டு கட்டினார்.
மாணவர்களுடன் சந்திப்பு, ஏ.டி.எம்மில் பணம் என முமைபையில் சர்வ சாதாரணமாக உலாவினார். ராகுல்காந்தி. காகிதப்புலிகளின் காட்டுக்கூச்சல் எடுபடவில்லை. அதைத் தொடர்ந்து பாண்டிச் சேரியிலும், கேரளாவிலும் உற்சாகமாக முழங்கினார் ராகுல். பிரிவினைவாதிகளை வளர விடமாட்டோம் என்று சூளுரைத்தார்.
வெறும்பேச்சோடு இல்லாமல் சூளுரைத்தப்படியே சுளுக்கெடுங்கள் ராகுல் நாடே ஆவலாக காத்திருக்கிறது.
-தமிழ்மாறன்
ஸ்ரீராமசேனா தீவிரவாதிகள் கத்தியால் குத்தி பள்ளி இம்மாம் மற்றும் ஒருவர் பலத்த காயம்.
பெங்களூரில் வைத்து ஸ்ரீராமசேனா தலைவன் பிரமோத் முத்தலிக்கின் முகத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கறுப்பு சாயம் பூசியதைத் தொடர்ந்து மங்களூரில் வன்முறையில் ஈடுபட்டனர் ஸ்ரீராமா சேனா குண்டர்கள்.பண்டுவால் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸை தடுத்து நிறுத்தி அதில் பயணம் செய்த குத்ரோளி நடுவள்ளி என்ற இடத்திலிலுள்ள மஸ்ஜிதில் இமாமாக பணியாற்றும் உஸ்மான் ஃபைஸி(வயது 32), அவரது சகோதரர் முஹம்மது அஷ்ரஃப் ஃபைஸி(வயது 29) ஆகியோரை குத்திகாயப்படுத்தினர்.
காயமடைந்த இருவரும் மங்களூர் ஹைலேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மஞ்சேஷ்வரம்,தலப்பாடி ஆகிய இடங்களில் போலீஸ் கடும் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் சில இடங்களில் தீவைப்பும், வாகனங்களுக்கும் அலுவலகங்களுக்கும் நேராக கல்வீச்சும் நடைபெற்றது. இதற்கிடையே கருப்புச்சாயம் முத்தலிக்கின் முகத்தில் வீசியதைக் கண்டித்து மங்களூரில் ஸ்ரீராம சேனா அழைப்புவிடுத்த முழு அடைப்பினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்களுக்கு எதிராகவும் கடைகளுக்கு எதிராகவும் கல்வீச்சு நடைபெற்றது.
காதலர் தினத்தையொட்டி ஒரு தனியார் சேனல் ஏற்பாடுச் செய்த விவாதத்தில் பிரமோத் முத்தலிக் கலந்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் இளைஞர் காங்கிரசார் முத்தலிக்கின் முகத்தில் கறுப்புச்சாயத்தை பூசினர். கடந்த ஆண்டு மங்களூரில் பொதுவிடுதிக்கு காதலர் தினத்துக்காக வந்த ஏராளமான பெண்களை ஸ்ரீராம சேனாவினர் தாக்கினர். இதைத் தொடர்ந்து முத்தலிக்கை போலீஸ் கைதுச்செய்திருந்தது.மேலும் மங்களூரில் 14 சர்ச்சுகள் தாக்கப்பட்டதின் பின்னணியிலும் பிரமோத் முத்தலிக் உள்ளார். இதனால் மங்களூரில் நுழைவதற்கு போலீஸ் பிரமோத் முத்தலிக்கிற்கு தடைவிதித்திருந்தது.
கடந்த ஆண்டு பிரமோத் முத்தலிக் கூறும்பொழுது, "காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்களை பிடித்து திருமணம் முடித்துக் கொடுப்போம்" என்றார். இதனால் கோபம் கொண்ட இளைஞர் காங்கிரசார் முத்தலிக்கின் முகத்தில் கறுப்புச்சாயம் பூசியுள்ளனர்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
இஸ்ரேல்லுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை.
டெஹ்ரான்: முதல் தொகுதி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து விட்டோம். இனி நாங்களும் அணு ஆயுத நாடுதான். இஸ்ரேல் எங்களிடம் வாலாட்ட முயன்றால் அதை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவோம் என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதநிஜாத் அறிவித்துள்ளார். உயர் ரக செறிவூட்டப்பட்ட (highly enriched uranium) யுரேனியத்தை 2 நாட்களிலேயே தயாரித்துள்ளதாகவும் அகமதிநிஜாத் அறிவித்துள்ளார்.
ஈரான் இப்போது ஒரு அணு ஆயுத நாடாகும். 20 சதவீத எரிபொருளில், முதல் தொகுதி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாம் தயாரித்து விட்டோம். அதை தற்போது விஞ்ஞானிகளிடம் கொடுத்துள்ளோம். 2 நாட்களில் இதைச் செய்துள்ளோம் என்றார் அகமதிநிஜாத்.
தன்னிடம் உள்ள யுரேனியத்தை செறிவூட்டும் பணியை தொடங்கியிருப்பதாக செவ்வாய்க்கிழமைதான் அறிவித்தது ஈரான். இந்த நிலையில் முதல் தொகுதி செறிவூட்டும் பணியை 2 நாட்களில் அது முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணு உலைகளில் எரிபொருளாக பயன்படுத்துவார்கள். அதேசமயம், இதை வைத்து அணுகுண்டுகளையும் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
யுரேனியம் செறிவூட்டும் பணியை நிறுத்துமாறும், அதைத் தொடரக் கூடாது என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எச்சரித்துள்ளன. ஆனால் அதை ஈரான் நிராகரித்து விட்டது. தடை விதிப்போம் என்று ஐ.நா. விடுத்த மிரட்டலையும் அது புறக்கணித்து விட்டது.
எங்களிடம் உள்ள அனைத்து யுரேனியத்தையும் செறிவூட்டும் பணியை தொடருவோம் என்றும் ஈரான் கூறி விட்டது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிக்கப்பட்ட செய்தியை நாட்டு மக்களுக்கு அறிவித்த கையோடு சிரிய அதிபர் பாஷர் அல் அஸாத்தைத் தொடர்பு கொண்டு பேசினார் அகமதிநிஜாத்.
அவரிடம் பேசுகையில், ஜியோனிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்கள், காஸா மக்களிடமும், லெபனானின் ஹிஸ்புல்லாவிடமும் பட்ட தோல்விக்குப் பழி வாங்க ஈரான் மீது ராணுவ நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
அது ஒரு முட்டாள்தனமான நடவடிக்கையாகவே அமையும். அதுபோல ஒரு தாக்குதல் நடந்தால், அதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். நீங்களும் எதிர்க்க வேண்டும்.
அவர்கள் வைத்துள்ள இஸ்ரேல் என்ற பெயரிலான நாடே இல்லாத அளவுக்கு, அடையாளம் தெரியாத அளவுக்கு அதை அழித்து உருக்குலைத்து விடுவோம்.அத்தோடு ஜியோனிஸ்டுகளின் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு கட்டி விடுவோம்.
சிரியா, லெபனானன், பாலஸ்தீனம் ஆகியவற்றின் பக்கம் எப்போதும் ஈரான் துணை நிற்கும். விரைவில் ஜியோனிஸ்டுகள் அழிவது உறுதி என்றார் அகமதிநிஜாத்.இஸ்ரேல் என்ற நாட்டை ஈரான் இதுவரை அங்கீகரிக்கவில்லை. அந்த நாட்டை ஜியோனிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்கள் என்றுதான் ஈரான் அழைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் வழக்கறிஞர் ஷாஹித் அஸ்மி சுட்டு கொலை: கொன்றது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளா?
புதுடெல்லி:மாலேகான் மற்றும் மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வாடிவரும் ஏறத்தாழ 50 முஸ்லிம் இளைஞர்களுக்காக வாதாடிய எதிர்தரப்பு வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி 11/02/2010 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.
இச்சம்பவம் மும்பை குர்லா கிழக்கு பகுதியில் டாக்ஸிமேன் காலனியின் அருகில் அமைந்துள்ள அவருடைய சேம்பரில் வைத்து நடந்தது. 5 அடையாளம் தெரியாத நபர்கள் கிளையண்டுகள் என்றுக் கூறிக்கொண்டு அவருடைய சேம்பரில் நுழைந்து 5 ரவுண்டுகள் சுட்டதில் நிலைகுலைந்த ஆஸ்மியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபொழுது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
32 வயதாகும் ஷாஹித் ஆஸ்மி மஹாராஷ்ட்ரா மாநிலம் ஜம்மியத்துல் உலமா சார்பாக மாலேகான் மற்றும் மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வாடும் கிட்டதட்ட 50 முஸ்லிம் இளைஞர்களுக்காக வாதாடிவரும் வழக்கறிஞராவார்.
ஆஸ்மியின் நெருங்கிய நண்பரான முஸ்லிம் அரசியல் கவுன்சிலின் தலைவர் டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி தெரிவிக்கையில், "ஆஸ்மி 16 வயதாக இருக்கும்பொழுது தடா ச்சட்டத்தில் கைதுச் செய்யப்பட்டு சிறைச் சென்றவர். பின்னர் அவர் குற்றமற்றவர் எனக்கூறி விடுதலைச் செய்யப்பட்டார். அவர் நெஞ்சுறுதியும், அறிவுத்திறனும், திறமையும், தாழ்மையும் கொண்டவர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குறைந்த கட்டணத்திலேயே வழக்குகளில் வாதாடுவார். இவரது கொலைக்குப்பின்னால் எவர்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சதிச்செய்து தீவிரவாத வழக்குகளில் சம்பந்தப்படுத்தினார்களோ அவர்களாகத்தான் இருப்பார்கள்" என்றார்.
மலேகானைச் சார்ந்த உம்மித் டாட் காம் என்ற இணையதள இதழ் தெரிவிக்கையில், "ஷாஹித் ஆஸ்மி கடந்த 7/11 மற்றும் இதர தீவிரவாத வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை கையாண்டபொழுதுதான் வெளியில் தெரியவந்தார். மஹாராஷ்ட்ரா மாநில அரசுக் கொண்டுவந்த MCOCA தீவிரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான ஜம்மியத்துல் உலமா சார்பாக ஆஸ்மி தாக்கல் செய்த மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பிற்காக கிடப்பில் உள்ளது." என்று கூறுகிறது.
மார்ச் 7 மதுக்கடை மறியல் ஏன்?
மதுவின் மூலமாக கிடைக்கும் வருமானத்தின் மூலமாக தமிழக மக்களுக்கு இலவசங்களை கொடுத்து சமாதானப்படுத்துகிறது. தமிழக அரசு ஆனால் மக்களின் உடல் நலமும், வாழ்க்கையும் கலாச்சாரமும் சீரழிவதைப் பற்றி அரசுக்கு கவலை இல்லை.
முதியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஏன் பெண்கள் கூட இன்று மதுவுக்கு அடிமையாகும் கொடுமை கொஞ்சம், கொஞ்சமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரவகளின்படி சுமார் 40 சதவீதம் மாணவர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சமூகத்தின் இளைஞர்கள் இன்று மதுவுக்கு அடிமையாகி தங்கள் எதிர்கால வாழ்வை தொலைத்து வருகின்றனர். உழைப்பாளி தனது வருமானத்தை மதுவிலே தொலைக்கிறான். இப்படி மனித வாழ்வை சீரழிக்கும் மது அரக்கனை தமிழகத்தை விட்டே ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும். என்ற சிந்தனை மக்கள் மனதிலே ஊட்டப்பட வேண்டும்.
மதுகுடித்து மதி மயங்கி கொலை, கொள்ளைகளிலே கற்பழிப்பிலே ஈடுபடும் செய்திகள் தினசரி செய்திகளாகி விட்டன.
அரசு குடிகொடுத்து மக்கள் குடியை கெடுக்கும் கொடூரம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மது இல்லாத மதவெறி இல்லாத மாநிலமாக தமிழகம் தழைக்க வேண்டும். அதற்காகத்தான் மதுக்கடைகளின் முன் மாபெரும் மறியல் போரை மனிதநேய மக்கள் கட்சி அறிவித்திருக்கிறது.
பூரண மதுவிலக்கை தமிழக அரசு கொண்டு வரும்வரை நமது போராட்டம் ஓயாது. மதுக்கடை மறியல் போர் மாநிலம் தழுவிய எழுச்சியாகட்டும். மதுக்கடை மறியல் மக்கள் மனதிலே புதிய புரட்சியை ஊட்டப்படும். மதுக்கடைகள் தமிழகத்தை விட்டே ஓட்டம் காணட்டும்.
அணி திரள்வோம் ! ஆர்ப்பரிப்போம் !
வியாழன், 11 பிப்ரவரி, 2010
முஸ்லிம் இயக்கங்கள் தேச அளவிலான போராட்டத்திற்கு தயாராகின்றன
அனைத்து முஸ்லிம்களையும் ஒ.பி.சி பிரிவில் உட்படுத்தவேண்டும் என்றும் முஸ்லிம் அமைப்புகளின் 300 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துக்கொண்ட மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.மேலும் இதற்கான ஒருங்கிணைந்த கமிட்டி ஒன்றும் உருவாக்கப்பட்டது.இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்காக சட்டரீதியான போராட்டம் நடத்தப்படும்.
இடஒதுக்கீட்டிற்கு எதிராக அரசியல் சட்டத்திற்கு விரோதமான சமீபகாலங்களில் வழங்கப்பட்ட நீதிமன்றத்தீர்ப்புகள் பற்றி கேள்வி எழுப்பப்படும். இம்மாநாட்டில் ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த், ஜமாஅத்தே இஸ்லாமி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், அஹ்லே ஹதீஸ், ஆல் இந்தியா மைனாரிட்டி கமிட்டி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு அமைப்பின் பிரதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநிலங்களின் ஒ.பி.சி பட்டியலில் வேறுபாடுகள் உள்ளது மிகப்பெரிய குழப்பமானது என்று மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். முஸ்லிம்களுக்கிடையில் சாதிகள் இல்லையென்பதால் இடஒதுக்கீட்டின் பலன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து முஸ்லிம்களையும் ஒ.பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அரசியல் சட்டம் இடஒதுக்கீட்டிற்கு தடையாக இல்லை.மாறாக அரசியல் சட்டத்திற்கு விரோதமான நீதிமன்றத் தீர்ப்புகளும், அரசியல் கட்சிகளும்தான் இடஒதுக்கீட்டு விவகாரத்தை சிக்கலாக்குகின்றனர் என்ற அபிப்ராயம் தெரிவிக்கப்பட்டது. 27 சதவீதம் மக்கள் தொகைக் கொண்ட மேற்குவங்காளத்தில் தற்ப்பொழுதுதான் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அதுவும் எல்லா முஸ்லிம்களுக்கும் இந்த இடஒதுக்கீடு கிடையாது என்றும் மேற்குவங்காள மாநிலத்திலிருந்து கலந்துக்கொண்ட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
அரசு வேலையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வெறும் 2.1 சதவீதமானதால் அனைத்து முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு பயன் கிடைக்க வேண்டும். கேரளத்தில் இடஒதுக்கீடு இருந்தும் முஸ்லிம்கள் பிற்பட்ட நிலையிலிருப்பதற்கு காரணம் வளைகுடா நாடுகளுக்கு செல்வதாலோ அல்லது கல்வி இல்லாததாலோ அல்ல என்றும் ஒவ்வொரு மாநிலத்தின் நிலை வித்தியாசமானது என்றும் இம்மாநாட்டில் தலைமைவகித்த சச்சார் கமிட்டின் முன்னாள் உறுப்பினரான டாக்டர்.அபூஸாலிஹ் ஷரீஃப் தெரிவித்தார்.
கல்வி ரீதியாக முஸ்லிம்கள் ஆதிவாசிகளைவிட பின் தங்கிய நிலையிலில்லை.ஆனால் அரசு வேலைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பரிசோதித்தால் பல மாநிலங்களிலும் முஸ்லிம்கள் ஆதிவாசிகளைவிட பின் தங்கிய நிலையில் உள்ளது தெளிவாவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜாமிஆ ஹம்தர்த் பல்கலைக்கழக வைஸ் சான்ஸ்லர் செய்யத் ஹாமித் மாநாட்டை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.பி.செய்யத் ஷஹாபுத்தீன், முஜ்தபா பாரூக், ஸஃபர் செய்புல்லாஹ், ஷாஹித் சித்தீகி ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
ஸ்ரீநகர்:இளைஞரைக் கொன்றது பி.எஸ்.எஃப் படை வீரர். மூத்த அதிகாரி ஒப்புதல்
கடந்த வெள்ளிக்கிழமை 16 வயதேயான ஷாஹித் ஃபாரூக் ஷேக் கஷ்மீரின் கோடைக்கால தலைநகரான ஜம்முவில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தது கஷ்மீர் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதுத்தொடர்பாக பி.எஸ்.எஃபின் ஸ்பெஷல் டைரக்டர் ஜெனரல் பி.பி.எஸ்.சந்து பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று(புதன்கிழமை) பேட்டியளிக்கையில், "கடந்த வெள்ளிக்கிழமை நிஷாத் பகுதியில் வைத்து 16 வயது ஷாஹிதை பி.எஸ்.எஃபின் 68-வது பட்டாலியன் பிரிவைச் சார்ந்த லக்விந்தர்சிங் என்ற வீரர் சுட்டுக்கொன்றார் என்பதற்கு முதல் ஆதாரம் தெரிவிக்கிறது. தொடர்விசாரணைக்காக அவரை நாங்கள் உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்.
இந்தியா-பாகிஸ்தானை பிரிக்கும் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அமைந்துள்ள குல்பார்க் பகுதியின் பாதுகாப்புப் பிரிவில் இடம் பெற்றிருந்த லக்விந்தர்சிங் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கமான மெடிக்கல் செக்-அப்பிற்கு செல்லும் வழியில் நிஷாத் பகுதியில் வைத்து ஏ.கே.47 துப்பாக்கியால் ஷாஹிதை சுட்டுள்ளார். இது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது." என்று அவர் கூறினார்.
காவல்துறை ஐ.ஜி ஃபாரூக் அஹ்மத் பி.எஸ்.எஃப் லக்விந்தர்சிங்கை ஒப்படைத்ததை ஒப்புக்கொண்டார். முதல் அமைச்சர் உமர் அப்துல்லாஹ் இந்தக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித் தரப்படும் என உறுதியளித்திருந்தார்.
பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் முற்றிலும் போலியானது: டெல்லி இமாம்
முஸ்லிம்களோ அல்லது ஆஸம்கர் வாசிகளோ தீவிரவாதிகளல்ல என்றும் அரசு அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
காங்கிரஸின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முஸ்லிம்களை வேட்டையாடுகிறது எனவும் இமாம் அஹ்மத் புஹாரி தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டி கைதுச் செய்யப்பட்டுள்ள ஷஹ்ஷாதின் உறவினர்களை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றிருந்தார் இமாம்.
"முஸ்லிம்களை முட்டாள்களாக்க வேண்டிதான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் ஆஸம்கருக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டார். இங்கே கூறிய விஷயங்களை டெல்லிக்கு திரும்பிச் செல்லும்போது வேறுவிதமாக கூறியுள்ளார். ஒன்றுக் கொன்றுத் தொடர்பில்லாத அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டு நீதியான ஒரு விசாரணைக்கு உத்தரவிடாமலிருப்பது ஏன்?" என இமாம் கேள்வியெழுப்பினார்.
பொய் வழக்குகளை சுமத்தி சிறையிலடைக்கப்பட்ட குற்றமற்ற முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யாமல் ஆஸம்கரில் அவர்களின் குடும்பத்தினரை காண்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வந்தால் அதனை கடுமையாக எதிர்ப்போம் என இமாம தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
லட்சியப்பாதை சி.டி. வெளியீடு
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஏற்கனவே மூன்று பிரச்சார பாடல்கள் தேர்தல் நேரத்தில் வெளிவந்தன. பி. அப்துல் ஸமது அவர்கள் மேற்பார்வையில் ஒன்றும், ஜே.ஹாஜாகனி மேற் பார்வையில் ஒன்றும் கோவை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஒன்றும் வெளிவந்த நிலையில், கோவை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி இளைஞரணி சார்பில் லட்சியப்பாதை என்ற கொள்கை விளக்கப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு மாநாட்டில் வெளியிடப்பட்டது.
கவிஞர் ஹக், புலவர் அப்துர் ரஹ்மான் எழுதிய பாடல்கள், கோவை அசாக், கோவை ஜலீல் ஆகியோர் குரலில் எம்.தமிமுன் அன்சாரியின் வசன தொகுப்பில் வெளிவந்துள்ள குறுந்தகடை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட முதல் பிரதியை தலைமை செயற்குழு உறுப்பினர் பி.எஸ்.ஹமீது பெற்றுக் கொண்டார்.
அடுத்தடுத்த பிரதிகளை கோவை மாவட்ட நிர்வாகிகள் சுல்தான், அமீர், பஷீர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அமீன், செய்யது முஹமது ஃபாரூக், நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் ஷேக், அப்துல் ஸமது குறுந்தகடு தயாரிப்பாளர் கோவை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மீன் அப்பாஸ் கவிஞர் ஹக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
2010 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 இந்தியர்களில் ஒருவராக டாக்டர்.ஜாஹிர் நாயக்.
புதுடெல்லி:பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் டாக்டர்.ஜாஹிர் நாயக் பிரபல நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள 2010 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 இந்தியர்களில் ஒருவராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்தப் பட்டியலில் 7 முஸ்லிம்களும் இடம் பிடித்துள்ளனர். டாக்டர் ஜாஹிர் நாயக் 89வது இடத்தை பிடித்துள்ளார்.ஆனால் இந்துமத குருவாக கருதப்படும் பாபா ராம்தேவிற்கு 99-வது இடமும், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு 100-வது இடமுமே கிடைத்துள்ளது. இந்தப்பட்டியல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசின் துணை ஏடான சண்டே எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்படுள்ளது.
இதர முஸ்லிம்கள் பிடித்துள்ள தரவரிசை வருமாறு:காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஹ்மத் பட்டேல்(10-வது இடம்). ஏ.ஆர்.ரஹ்மான்(31-வது இடம்), அமீர்கான்(39-வது இடம்), ஷாருக்கான்(47-வது இடம்), உமர் அப்துல்லாஹ்(57-வது இடம்), அஸீம் பிரேம்ஜி(60-வது இடம்). 100 சக்தி வாய்ந்த இந்தியர்களின் பட்டியலில் 89-வது இடத்தைப் பெற்றிருக்கும் ஜாஹிர் நாயக்கிற்கு 44-வயது ஆகிறது. 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆன்மீக தலைவர்கள் பட்டியலில் டாக்டர் ஜாஹிர் நாயக் பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தை பிடித்திருந்தார். ஆனால் 2010 ஆம் ஆண்டில் அவர்கள் இருவரையும் முந்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ஜாஹிர் நாயக் சமீபத்தில் வெளியான உலகை அதிகம் ஈர்த்த 500 முஸ்லிம்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அமெரிக்காவிலிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
டாக்டர் ஜாஹிர் நாயக்கைப் பற்றி சண்டே எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள சுருக்கமான அறிமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறது. "சூட் கோட்டை அணிந்து ஆங்கிலத்தில் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் இவாஞ்சலிஸ்ட் ஜாஹிர் நாயக் சக்தி வாய்ந்த பேச்சாளர். இவரது உரையை இவர் நிறுவியுள்ள Peace TV யின் வாயிலாக 125 நாடுகளைச்சார்ந்த 100 மில்லியன் மக்கள் பார்க்கின்றார்கள். கடந்த ஆண்டு வட அமெரிக்காவிலும் Peace TV தனது ஒளிபரப்பை துவங்கியது. இவ்வலைவரிசையின் உருது சானலை 50 மில்லியன் மக்கள் பார்க்கின்றார்கள்.
கடந்த 14 ஆண்டுகளில் இவர் 1300 பொதுநிகழ்ச்சிகளில் உரை நிகழ்த்தியுள்ளார். இதில் 100 உரைகள் கடந்த 2009 ஆம் ஆண்டிலாகும். கடந்த ஆண்டு நவம்பரில் மும்பையில் நடைபெற்ற Peace Conference இல் 10 லட்சம் மக்கள் கலந்துக்கொண்டனர். டாக்டர் ஜாஹிர் நாயக்கின் உரையை மட்டும் கேட்க 2 லட்சம் மக்கள் கூடினர். இதில் மலேசியாவின் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹீமும் உட்படுவார். இந்த ஆண்டு டிசம்பரில் Peace TV பெங்காளி மொழியில் அலைவரிசையைத் துவக்குகிறது. செய்திச்சானல்களை 2012 அல்லது 2013 ஆண்டுல் துவக்கும்.
புதன், 10 பிப்ரவரி, 2010
பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அபூஸாலிஹ்
பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!தேசிய சராசரியை விஞ்சியது முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம்!
பெண்களின் முன்னேற்றமே, நாட் டின் நிலையான முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதாகும். நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் சமூகமான முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக சூழ்நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சச்சார் அறிக்கை அபாய எச்சரிக்கை செய்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் National University of Education Planing and Administration (NUEPA) அமைப்பின் வருடாந்திர அறிக்கை பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 633 மாவட்டங்களிலும் உள்ள 12 லட்சத்து 29 ஆயிரம் அரசு அங் கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 2008லி2009 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி ஆரம்ப கல்வி நிலையில் ஒரு கோடியே 48லட்சத்து 30 ஆயிரம் முஸ்லிம் குழந்தைகள் படித்து வருவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. ஆரம்பகல்வியில் முஸ்லிம் குழந்தை களின் சேர்க்கை கணக்கு மொத்த எண்ணிக்கையில் 11.03 சதவீதம் ஆகும்.
நடுநிலை வகுப்புகளில் 40 லட்சத்து 87 ஆயிரம் முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கை விகிதமாக உள்ளது. இது மொத்தத்தில் 9.13 சதவீதமாகும்.
2006லிலிருந்து 2007லிம் ஆண்டு வரை ஆரம்பக்கல்வியில் சேர்ந்த முஸ்லிம் மாணவமணிகளின் எண்ணிக்கை 9.39 சதவீதமாக இருந்தது. அதுவே 2007லி2008 ஆம் ஆண்டு 10.49 ஆக உயர்ந்தது. 2008லி2009 ஆண்டில் 11.03 ஆக உயர்ந்திருக்கிறது.
நடுநிலைப்பள்ளி சேர்க்கை விகிதத்தில் 2006லி2007ல் 7.52 சதவீதமாக இருந்த முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 2007லி2008ல் ஆம் ஆண்டில் 8.54 சதவீதமாகவும், 2008லி2009ஆம் ஆண்டு 9.13 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
ஆரம்ப கல்வி வகுப்புகளில் மொத்த முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கையில் குறிப்பாக முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கையில் 48.93 சதவீதமாக உயர்ந்துள்ளது.(கடந்த ஆண்டு 48.67) இது தேசிய விகிதாச்சார விகிதமான 48.38 விகிதத்தை விட அதிகமாகும்.
கடந்த ஆண்டு முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கை 49.49. சதவீதமாகும், இது தேசிய விகிதச்சாரமான 47.58விட அதிகமாகும்.
கடந்த ஆண்டு ஆரம்ப நிலைக் கல்வியில் 87 ஆயிரத்து 690 பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை 25 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி விகிதத்தை எட்டியது.
ஜம்முலிகாஷ்மீரில் 12 மாவட்டங்களில் 90 சதவீதம் முஸ்லிம் மாணவமணி களின் வருகை உள்ளது. ஜம்முலி காஷ்மீரில் 15 மாவட்டங்களிலும் பீகார், மேற்கு வங்காளம், ஆந்திரா, லட்சத்தீவுகள் மற்றும் கேரளா மாநிலங் களில் தலா ஒரு மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவு முஸ்லிம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் 5 மாவட்டங் களில் முஸ்லிம் மாணவர்களின் வருகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, இது ஒரு வியப்புக்குரிய விஷயம் எனினும் அதே அஸ்ஸாம் மாநிலத்திலும், கேரளா, உத்தர்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஆரம்பநிலை மற்றும் நடுநிலை வகுப்புகளில் பள்ளிச்சேர்க்கை திருப்திகரமான அளவில் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அருணாச்சலப்பிரதேசம், பீகார், சத்தீஸ் கர், கோவா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், மேகாலயா, மிஜேராம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை விகி தாச்சாரத்திற்கேற்ப ஆரம்பநிலை மற்றும் நடுநிலைக் கல்விக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை அமையவில்லை என அதிர்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது
இஸ்லாமியர்களுக்கு சமூக நீதி: நிசமாவது எப்போது?
நமது நாட்டின் மக்கள் தொகையில் 14 விழுக்காடு உள்ள இஸ்லாமிய மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றில் உரிய பங்கினை அளித்து சமூக நீதியை தெளிவாக உறுதி செய்ய வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.
இதற்கு மேலும் ‘வசதி’யானக் காரணங்களைக் கூறி, அவர்களுக்கு உரிய சமூக நீதியைத் தவிர்க்க இயலாத நிலையை நேற்று(08-02-2010) நடந்த இரண்டு நிகழ்வுகள் உருவாக்கியுள்ளன.
ஒன்று, ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்துவரும் இஸ்லாமிய மக்களில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையிலுள்ள சமூகத்தினருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து அம்மாநில அரசு வெளியிட்ட உத்தரவை, ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு, தனது பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் நிராகரித்துவிட்டது.
இரண்டாவது, மேற்கு வங்கத்தில் வாழ்ந்துவரும் இஸ்லாமிய மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா வெளியிட்டுள்ள அறிவிப்பு.
ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு 5-2 நீதிபதிகளின் தீர்ப்பு என்று வழங்கியுள்ள பெரும்பான்மை தீர்ப்பின் முக்கிய அம்சம், இந்த இட ஒதுக்கீடு (இஸ்லாமிய) மதத்தை மையமாகக் கொண்டு வழங்கப்படுகிறது, எனவே அது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், இப்படி மதத்தை மையப்படுத்தும் இட ஒதுக்கீடு மத மாற்றத்தை ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்தியாவின் ஜனநாயக அமைப்பில், நமது நாட்டின் சமூக கட்டுமானத்தின் அங்கமாகவுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஆகியன உரிய அளவிற்குக் கிடைத்திட வேண்டும் என்று விரும்புவோர் அனைவருக்கும் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஏமாற்றத்தை அளித்திருக்கும்.
கல்வி, வேலை வாய்ப்பில் ஆந்திரத்தில் வாழும் இஸ்லாமியர்களில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்ற பரிந்துரை செய்த பி.எஸ். கிருஷ்ணா ஆய்வுக் குழுவின் அறிக்கையில் உள்ள குறைபாடுகளை - அது தரகுகளை சேகரித்த விதம் முழுமையானதல்ல - என்று கூறி, அதனடிப்படையில் வெளியிடப்பட்ட ஆந்திர அரசின் உத்தரவை நிராகரித்துள்ளது ஆந்திர உயர் நீதிமன்றம்.
அரசமைப்பு உறுதி செய்துள்ள இட ஒதுக்கீடு!
இந்தியாவின் சமூகக் கட்டமைப்பில் அங்கமாகவுள்ள எந்த ஒரு சமூகமானாலும், அது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் இருந்தால், அவைகளின் மேம்பாட்டிற்காக (Advancement) சிறப்பு ஏற்பாடுகளை (இட ஒதுக்கீட்டை) செய்வதற்கு தடையேதுமில்லை என்று இந்திய அரசமைப்பின் பிரிவு 15 (4) கூறுகிறது (சமூக நீதிக்காக தந்தை பெரியார் நடத்திய கிளர்ச்சியைத் தொடர்ந்து 1951ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பில் செய்யப்பட்ட முதல் திருத்தம் இது என்பதுக் குறிப்பிடத்தக்கது).
இதே அடிப்படையில், அதாவது சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள சமூகங்களின் மேம்பாட்டிற்காக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும், பட்டியல் சமூகத்தினருக்கும் தனியார் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு செய்வதற்கும் வழி செய்கிறது கடந்த 2005ஆம் ஆண்டு அரசமைப்பில் செய்யப்பட்ட 15 (5) திருத்தமாகும்.
இது மட்டுமல்ல, நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் - அதாவது அரசுப் பணிகளில் - இப்படி கல்வி, சமூக ரீதியான இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிய பிரதிநிதித்தும் (Adequate Representation) பெற மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு செய்யலாம் என்கிறது இந்திய அரசமைப்புப் பிரிவு 16 (4). இச்சட்டப்பிரிவின் அடிப்படையிலேயே - மண்டல் அறிக்கையின் பரிந்துரையின்படி - இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை 1990ஆம் ஆண்டு பிரதமர் வி.பி.சிங் பிறப்பித்தார். பின்னாளில் அதனை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் 6-5 என்ற பெரு்ம்பான்மை தீர்ப்பின் மூலம் ஆமோதித்தது.
ஆக, நமது நாட்டின் சமூகக் கட்டமைப்பில் பின்தங்கிய நிலையிலுள்ள சமூகத்தினரை (சாதியாகவும் இருக்கலாம், மதப் பிரிவினராகவும் இருக்கலாம்) கல்வி, சமூக ரீதியாக அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்க அரசமைப்பில் வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பு நமது நாட்டிலுள்ள இந்து மதத்தின் உட்பிரிவுகளாகக் கருதப்படும் தாழ்த்தப்பட்ட (பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிகள்), பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குத்தான் உறுதி செய்யப்பட்டுள்ளதே தவிர, அதற்குத் தகுதிபெற்ற இஸ்லாமிய, கிறித்தவ மதங்களைச் சேர்ந்த, அதன் உட்பிரிவு மக்களுக்கு கிடைக்காத நிலை தொடருகிறது.
மதப் பிரிவாக இருப்பது சமூக நீதிக்குத் தடையா?
இது சமூக நீதிக்கும், இந்திய ஜனநாயகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட நெறிமுறைகளுக்கும் முரணானதாக உள்ளது. இந்து மதம் மட்டுமின்றி, நமது நாட்டிலுள்ள எந்த மதமானாலும் அதில் பல்வேறுபட்ட உட்பிரிவுகள் உள்ளதும், அவர்களின் கல்வி, சமூக வாழ்நிலைகளில் பெருத்த வேறுபாடு நிலவி வருவதும் யாரும் அறியாதது அல்ல.
அப்படிப்பட்ட மத உட்பிரிவுகளை - அவைகள் கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனவா என்பதை மட்டும் உறுதி செய்து, அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு - குறிப்பாக அரசுப் பணிகளில் உரிய இட ஒதுக்கீடு செய்ய முடியும் என்பதை மேற்கண்ட அரசமைப்புப் பிரிவுகளை ஊன்றி படிக்கையில் எவருக்கும் புரியும். ஆனால், அப்படிப்பட்ட அடிப்படையில் மத உட்பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்போது, அது சமூக ரீதியானது அல்ல, மத ரீதியானதாகவே உள்ளது என்று பலமுறை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்படுகிறது. ஆந்திர உயர் நீதிமன்றம் ஏற்கனவே அப்படிப்பட்ட ஒரு அரசு உத்தரவை செல்லாது என்று அறிவித்துள்ளது. இது சமூக நீதி மறுப்பிற்கும், ஜனநாயக ரீதியான ஆட்சி அதிகார பிரதிநிதித்துவ உரிமைக்கும் எதிரானதாகவே ஆகிறது.
இது நியாயமல்ல. இப்போது ஆந்திர உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூட, இது மத ரீதியாக மையப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு என்று கூறப்பட்டுள்ளது. ஆந்திரத்தில் வாழும் இஸ்லாமிய மக்களில் பல்வேறு பிரிவினர்களை, அவர்களின் கல்வி, சமூக நிலைகளின் அடிப்படையில் பகுத்து, மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள சில பிரிவுகளுக்கு (ஈ பிரிவு) மட்டுமே பி.எஸ். கிருஷ்ணா குழு இட ஒதுக்கீட்டிற்கு பரிந்துரைத்துள்ளது! ஆனால் அதையும் நீதிமன்றம், மத ரீதியாக மையப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு என்று எப்படி புரிந்துகொண்டுள்ளது என்பது புரியவில்லை.
அது மட்டுமல்ல, இப்படிப்பட்ட இட ஒதுக்கீடு மதமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இது ஆச்சரியமான ஒரு நிலையாகும். இட ஒதுக்கீடு பெறுவதற்காக ஒருவர் மதம் மாறுவார் என்பதை வாதத்திற்கு ஏற்றாலும், அந்த மதப்பிரிவி்ன் - இட ஒதுக்கீட்டிற்குத் தகுதி பெறும் அந்தக் குறிப்பிட்ட பின்தங்கிய பிரிவிற்கு எப்படி மாற முடியும்? எனவே நீதிபதிகளின் கருத்து பிழையுடையதாகும்.
ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவு, அந்த மாநில அரசின் மதிப்பீட்டின்படி, கல்வி, சமூக ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளதா என்பதை, தனக்கு அளிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்வது மட்டுமே நீதிமன்றத்தின் நியாயப் பணியாக இருக்க வேண்டுமே தவிர, அதன் விளைவு என்னவாகும் என்பதைப் பற்றியெல்லாம் அது வினவுவதும், அதனடிப்படையில் அரசின் நிலையை நிராகரிப்பதும் அப்பட்டமான நீதி மறுப்பே ஆகும்.
இஸ்லாமியர்களின் நிலை என்ன?
நமது நாட்டின் மக்கள் தொகையில் 13.4 விழுக்காடாக உள்ள இஸ்லாமிய சமூகத்தின் கல்வி, பொருளாதார, சமூக நிலை எப்படியுள்ளது என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை அளித்த நீதிபதி இராஜேந்திர சச்சார் குழு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட 15 பரிந்துரைகளை மத்திய அரசிற்கு செய்துள்ளது.
அந்த அறிக்கையில் நீதிபதி இராஜேந்திர சச்சார் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள முக்கிய புள்ளி விவரங்களாவன:
1) இந்திய மக்கள் தொகையில் 13.4 விழுக்காடு இருந்தும், இஸ்லாமியர்களில் 4.9 விழுக்காட்டினர் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
2) அவர்களில் பெரும்பான்மையினர் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
3) இவர்கள் பெற்றுள்ள வேலை வாய்ப்புகளிலும் 98.7 விழுக்காட்டினர் மிகவும் கீழ்மட்ட வேலைகளிலேயே உள்ளனர்.
4) உயர் மட்ட வேலைகளில் அவர்களின் பங்கு வெறும் 3.2 விழுக்காடாக மட்டுமே உள்ளது. இது இந்திய அளவிலான நிலையாகும்.
5) மாநிலங்களில் எடுத்துக் கொண்டால், மேற்கு வங்க மாநிலத்தின் மக்கட் தொகையில் 25.2 விழுக்காடு இஸ்லாமியர்கள். ஆனால் பணி வாய்ப்பு பெற்றவர்கள் 4.7 விழுக்காடு (இப்போது முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா அறிவித்துள்ள வேலை ஒதுக்கீடு கூட 10 விழுக்காடுதான்).
6) பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 18.5 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள், வேலை வாய்ப்பு 7.5 விழுக்காடு.
7) அஸ்ஸாமில் இவர்களின் மக்கள் தொகை 30.9விழுக்காடு. வேலை வாய்ப்பு பெற்றோர் 10.96%
8) கல்வியைப் பொறுத்தவரை எழுத்தறிவு பெற்றவர்கள் 5.91 விழுக்காடு, பட்டம் பெற்றவர்கள் 3.4 விழுக்காடு
9) வறுமை எனும் அளவுகோலை எடுத்துக் கொண்டால், இவர்களில் 31 விழுக்காட்டினர் ஏழ்மையில் உழல்கின்றனர்.
10) இதில் அடித்தட்டு மக்களில் 10 விழுக்காடு கடுமையான வறுமை சூழலில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
11) மாநிலங்களைப் பொறுத்தவரை அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மதிப்பிடப்படும் கேரளத்தில் மொத்தமுள்ள இஸ்லாமிய மக்களில் 9 விழுக்காட்டினரின் மாத வருவாய் ரூ.300க்கும் கீழ்தான்.
இப்படிப்பட்ட நிலையிலுள்ள ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்காக, அவர்களுக்கு உரிய அதிகாரப் பங்கு அளிப்பதற்காக, மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் சட்ட ரீதியான தடைகளை தாண்ட இயலாமல் அடிபட்டுப் போய்விடுகிறது. இந்த நிலை நீடித்தால், அவர்களுக்கு நியாயப்படி வழங்க வேண்டிய சமூக நீதி - திட்டமிட்டு மறுக்கப்படுவதாக ஆகாதா?
கிறித்தவர்களுக்கும் இதே அநீதிதான்
இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்படும் அதே உரிமை மறுப்பு, தாழ்த்தப்பட்டோராக இருந்து மதமாறிய கிறித்தவர்களுக்கும் மறுக்கப்படுகிறது. இந்து மதத்தின் சாதிய தாக்கம் எல்லா மதங்களிலும் உள்ளதை நமது நாட்டின் சமூக ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்கின்றனர். இந்த நிசத்தை உணராதவர்களாகவோ அல்லது மறுப்பவர்களாகவோ தான் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்கள் உள்ளனர்.
மதம் மாறியதால் அவர்களின் நிலை மாறியதா? என்ற கேள்விக்கு இதுநாள்வரை இவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அவர்களுக்கு உரிய கல்வி, வேலை வாய்ப்பு கிடைத்திட வகைசெய்யும் சட்ட ரீதியான வழிமுறைகளுக்குத் தொடர்ந்து தடையாக இருந்து வருகிறார்கள்.
ஒரு குடும்பம் இந்து மதத்தின்படி தாழ்த்தப்பட்டதாக உள்ளது, அது கிறித்தவ மதத்திற்கு மாறுவதால், இதுகாறுமிருந்த அதன் சமூக, கல்வி நிலை (அந்தஸ்து) எவ்வாறு மாறுவிடும்? கும்பிடும் தெய்வமும், சென்றிடும் வழிபாட்டுத் தலமும்தான் மாறுகிறதே தவிர, சமூக, கல்வி நிலை அப்படியேதானே உள்ளது.
அதுமட்டுமா? அவர்களைப் பற்றிய சமூக (உயர் சாதியப்) பார்வை மாறுகிறதா? அவர்கள் ஏற்கனவே இருந்த சாதியின் பெயருக்கு முன் மதத்தை சேர்த்து அர்ச்சிப்பதை இன்றளவும் காண்கிறோமே! இதுதானே இந்தியாவின் சமூக சிந்தை நிலை! இது ஏன் நீதிபதிகளுக்குப் புரியாமல் போகிறது என்பது தெரியவில்லை.
சமூக எதார்த்தம் இவ்வாறிருக்கையில், மதம் மாறிய தாழ்த்தப்பட்ட கிறித்தவருக்கு பட்டியல் சாதிக்குறிய இட ஒதுக்கீடு உரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு மாற்றப்படுகிறார்கள். இதற்கும் மத மாற்றக் காரணமே கற்பிக்கப்படுகிறது.
நமது நாட்டுச் சமூகத்தின் அடிதட்டு மக்களை மேம்படுத்த வகுக்கப்பட்ட அரசமைப்பு ரீதியான உரிமைகள், மத கலப்புடன் கூடிய சமூகப் பார்வையால் மறுக்கப்படுவதை எத்தனை காலத்திற்கு அனுமதிப்பது?
இந்த நிலை நீடிப்பது நமது நாட்டின் சமூக கட்டமைப்பிற்குள் பலவீனத்தையும், எதிர்வினையாற்றலையும் உருவாக்காதா?
மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். சமூக நீதியை நிலைநிறுத்த, அரசமைப்புச் சட்டமளிக்கும் உரிமைகள் அனைத்தும் தங்கு தடையின்றி அம்மக்களுக்கு சென்று சேரும் வகையில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். இன்று இதனை செய்யாவிடில், நமது நாட்டின் சமூகக் கட்டமைப்பு பலவீனப்பட இந்த அநீதியே காரணமாகிவிடும்.
நன்றி : வெப்துனியா.
பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ வின் தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர் மரணம்
சொத்துத் தகராறுத் தொடர்பாக உறவினரான ஆர்.கே.நஸீமை விநோத் சர்மா தாக்கியதாக கூறப்படுகிறது.கடந்த 29 ஆம் தேதி காவல்துறை சர்மாவை கைதுச்செய்தது. பாட்லா ஹவுஸ் வழக்கு மட்டுமல்லாமல் ஜெசிக்கா லால் கொலை வழக்கு, பிரியதர்ஷினிமட்டு கொலைவழக்கு ஆகியவற்றிலும் எதிர் தரப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர் நஸீம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
ஃபலஸ்தீன் மின்சார நிலையங்களுக்கெதிராக இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது
கடந்த வருடம் மேற்கு கரையிலும், கஸ்ஸாவிலும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு எதிராக 15 தடவைக்கும் மேல் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒருவர் கொல்லப்பட்டார். 10க்கு அதிகமானோருக்கு காயமும் ஏற்பட்டது.
காஸ்ஸா போரின் போது ரெட் கிரஸண்ட் சொசைட்டியின் தலைமையகத்தின் மீது சர்வதேச அளவில் தடைச்செய்யப்பட்டுள்ள வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது எனவும், இஸ்ரேல் ராணுவம் 440 தடவை சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது எனவும் ரெட் கிரஸண்ட் சொசைட்டி சுட்டிக்காட்டுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செப்டம்பர்-11 விசாரணை நியூயார்க்கில்தான்: ஒபாமா
செப்டம்பர் 11 தாக்குதலில் முக்கிய குற்றவாளி என அமெரிக்காவால் குற்றஞ்சாட்டப்படும் காலித் ஷேக் முஹம்மது உட்பட்டவர்களுக்கான விசாரணை நியூயார்க்கில் நடத்துவது பற்றி பாதுகாப்பு பிரச்சனை எடுத்துக் காட்டப்பட்டாலும் விசாரணை நியூயார்க்கில் தான் நடைபெறும் என ஒபாமா சி.பி.எஸ் நியூஸிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி போலீஸும் மேயரும் தொழில்துறையை சார்ந்தவர்களும் விசாரணையை எதிர்க்கும்பொழுது அதனை புறக்கணிக்க இயலாவிட்டாலும், விசாரணையை மேற்க்கொள்ளாமல் பின்வாங்க அரசால் இயலாது என ஒபாமா தெரிவித்தார்.பாதுகாப்பு பிரச்சனையும், தொழில்துறையை சார்ந்தோரின் எதிர்ப்பும் காரணமாக விசாரணையை நியூயார்க்கிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற நியூயார்க் மேயர் கோரியிருந்தார்.
விசாரணையை நியூயார்க்கில் நடத்துவதற்கு டெமோக்ரேட் கட்சியினர் மட்டுமல்லாமல் ஒபாமாவின் குடியரசுக்கட்சியனரும் எதிர்க்கின்றனர். அதேவேளையில் விசாரணையை நியூயார்க்கிலேயே நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஒபாமா மேற்க்கொண்டு வருகின்றார்.
நியூயார்க்கிலிருந்து வேறொரு இடத்திற்கு விசாரனையை மாற்றினாலும் இதே பிரச்சனைகள் ஏற்படும் என்பது ஒபாமாவின் வாதம். விசாரணைத் தொடர்பாக அமெரிக்க சட்டத்துறை இந்த வாரம் தீர்மானமெடுக்கும் என்று பத்திரிகைகள் கூறுகின்றன.
இரும்புத் திரை
துல்கர்னைன் என்றொரு சக்தி வாய்ந்த மன்னர். கிழக்கும் மேற்குமாகப் பிரயாணம் செய்து வரும்போது இரு மலைகளுக்கிடையே பள்ளத்தாக்கிலுள்ள ஒரு நகரத்தை அடைகிறார். நிறைய மக்கள். அவர்களை இரு அக்கிரமக்காரக் கூட்டம் சர்வ அட்டூழியம் புரிந்து நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது. அலங்கோலப்பட்டுக் கிடக்கும் அவர்களுக்கு இவரைப் பார்த்ததும் அநேக நம்பிக்கை. துல்கர்னைனிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
"இந்த அக்கிரமக் கூட்டத்திடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். ஏதாவது ஒரு தடுப்பு ஏற்படுத்துங்கள். அதற்கு நாங்கள் எங்களாலான ஊதியம் அல்லது நன்கொடையை அளித்து விடுகிறோம்."
"அதெல்லாம் வேண்டாம், எனக்குக் கூலி பரிகாரம் வழங்க அல்லாஹ் போதுமானவன். ஒத்தாசை மட்டும் புரியுங்கள்" என்கிறார்.
இரும்புத் துண்டுகள் அல்லது பாளங்கள் எடுத்து வரப்பட்டு இரு மலைகளுக்கிடையே அடுக்கடுக்காய் நிரப்பி அதன் மேல் உருக்கிய செம்பு ஊற்றி, பெரியதொரு இரும்புத்திரை ஏற்படுத்துகிறார். அந்த மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு ஏற்படுகிறது.
இந்த வரலாற்றை அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா அல்குர்ஆனின் 18ஆவது அத்தியாயமான சூரா கஹ்பின் 83-97 வசனங்களில் விவரிக்கிறான்.
இப்பொழுது வரலாறு தலைகீழாய் மாற்றம் கண்டுள்ளது. ஒரு இரும்புத்திரை கட்டப்பட்டல்ல; நடப்பட்டு வருகிறது. என்ன விசித்திரம் என்றால் அதனை நடுவது நவீன யாஜுஜ் மாஜுஜ் கூட்டம்.
கஸ்ஸா, எகிப்தின் வட எல்லையில் உள்ளது. இஸ்ரேலை எதிர்த்து ஹமாஸ் இங்கு யுத்தம் நடத்தி வருகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி நடக்கும் யுத்தம் இல்லை. குண்டு, துப்பாக்கி, ஏவுகணை, மனித வெடிகுண்டு என, கைவரப்பெற்ற அத்தனை ஆயுதங்களுடன் ரத்தம் ரத்தமாய் இறைத்து. அதன் நியாயம் வெறும் சுதந்தரப் போர் மட்டுமல்ல; பட்டப்பகலில் வெட்டவெளிச்சத்தில் அபகரிக்கப்பட்ட தன் நிலம் என்பதையும் தாண்டியது. இஸ்லாத்தின் மூன்றாவது புனித ஸ்தலத்தை மீட்டெடுப்பதை உள்ளடக்கியது. சகோதர சகோதரிகள் சின்னாபின்னாமாகி அழிவதைத் தடுப்பது.
அவர்களுக்கு அஹிம்சை அல்ல மொழி. மாறாய் முள்ளை முள்ளால் எடுக்கும் பணி. ஹமாஸைப் பொருத்தவரை அது திருப்பணி.
சொந்த நாட்டில் ஓட ஓட விரட்டி நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு மீதமுள்ளவர்களை மேற்குக் கரை, கஸ்ஸா என்று இரண்டு ரொட்டித் துண்டுகளாக்கிவிட்டது வந்தேறிகள் கூட்டம். அதில் கஸ்ஸா தக்ணூண்டு அளவில் எகிப்தின் வடமேற்கு எல்லையோரம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
இந்தக் கஸ்ஸாவிலுள்ள ஃபலஸ்தீனின் மிச்ச, சொச்ச மக்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமை, கௌரவம், உணவு, தண்ணீர், அடிப்படை சுகாதார வசதி என அனைத்தும் பகிரங்கமாய் மறுக்கப்பட்டு வருகின்றன. ரகசியமெல்லாம் அல்லாமல் நேரடியான ஒரே குறிக்கோள் - அந்த மக்களைத் தனிமைப்படுத்தி, குரல்வளையை நெறித்து, பட்டினிப் போட்டு, மூச்சுத் திணற அடிக்கும் ஒரே குறிக்கோள்.
கொஞ்ச நஞ்சம், உண்மையை உணரும் அமைப்புகளும், நடுநிலையாளர்களும் முன்னேறி வந்து ஒடுக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவி என்று ஏதோ கொஞ்சம் பரிமாற எடுத்து வரும்போது எதிரி இஸ்ரேலும் பங்காளி எகிப்தும் தடுத்து முட்டுக்கட்டை போட்டால் என்ன செய்வார்கள் அவர்கள்? ஓட்டை போட்டார்கள். நிலத்திற்கு அடியில்!
போட்டது கொஞ்சம் பெரிய ஓட்டை. சுரங்கப் பாதை. கஸ்ஸாவிற்கும் எகிப்திற்கும் மேலே உள்ள எல்லையை பூமிக்கு அடியில் கடக்கும் சுரங்கப்பாதை. வேறு என்ன செய்வார்கள்? அனைத்து ஆசிகளுடனும் வாழ்த்துகளுடனும் வான், நில, நீர் மார்க்கமாகப் பணம், ஆயுதம், லொட்டு, லொசுக்கு என அனைத்தும் அளித்தருள வல்லரசு நாடு ஏதும் அவர்களுக்கு நண்பனில்லை. ஐ.நா. எனும் அமைப்போ கோட்டு சூட்டு போட்ட சர்வர். எனவே தங்களின் அறப்போருக்கு அவர்களால் முடிந்த சாத்தியம் அது.
எகிப்து கண்டும் காணாமல்தான் இருந்தது. ஆனால் இஸ்ரேலுக்கு முடியவில்லை. அனைத்து இகலோக சக்திகளுடன் ராட்சசனாய் அமர்ந்திருக்கும் அவர்களுக்கு ஹமாஸிடம் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் தீபாவளிப் பட்டாசு துப்பாக்கி ரேஞ்சுக்குத்தான்.
ஆனாலும் முடியவில்லை. அதை வைத்துக் கொண்டே ஹமாஸ் அவர்களுக்குத் தண்ணி காண்பித்து வருவது மாபெரும் தலைவலியாய் இருந்து வருகிறது. ஏனெனில் அதனை ஏந்தியுள்ள நெஞ்சங்களில் கலிமாவின் சுவாசம் ஓடிக்கொண்டிருப்பது ஓர் அடிப்படைக் காரணமாய் இருக்கலாம்.
அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தவர்களுக்கு எதிராளியைக் காலை ஒடித்தால் ஓட்டப் பந்தயத்தில் வென்றுவிட முடியும் எனும் நல்லெண்ணம் தோன்றியது. அதற்கு என்ன செய்யலாம்? பங்காளியின் கையை முறுக்கி, சுவர் நட வைத்து விடலாம். கையை முறுக்கக் காத்திருக்காமல், சும்மா குலுக்கியதுமே ஒத்துக் கொண்டார் எகிப்து அதிபர்.
எந்த ஒரு அலுவலுக்கும், பதவிக்கும் அது குறித்த குறைந்தபட்சமான அறிவாவது இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. டாக்டர் என்றால் குறைந்தபட்சம் MBBS, என்ஜீனியர் என்றால் அந்தத் துறையின் பொறியியல் ஞானம், ஒரு ரிக்-ஷா ஓட்ட வேண்டுமென்றால் பெடல் மிதிக்க, அவ்வளவு ஏன்? பிச்சை எடுக்க வேண்டுமென்றாலும் அட்லீஸ்ட் கையேந்தத் தெரிந்திருக்க வேண்டும் என்பது யதார்த்தமாய் அனைவர் மனதிலும் இருக்கும் ஓர் எதிர்பார்ப்பு, கருத்து.
ஆனால் அரசியலில் மட்டும்தான் விசித்திரமான விலக்கு. எந்தவித அறிவோ ஞானமோ இல்லாமல் அயோக்கியத் தனமும் கொள்ளையடிப்பதும் மட்டுமே குறைந்த பட்சத் தகுதியாய் இருந்தால் போதும். உதாரணம் சற்று மிகையாய் இருக்கலாம். ஆனால் உண்மை சற்றேறக்குறைய அதுதான். இது லோக்கல் பஞ்சாயத்துத் தொடங்கி, அதிபர், ஜனாதிபதி, ராஜாவரை ஒரே நியதிதான் - உலகம் முழுக்க!
எகிப்து அதிபர் மட்டும் என்ன விதிவிலக்கா? இனமாவது, சகோதரத்துவமாவது? மண்ணாங்கட்டி. நியாயங்களையெல்லாம் ஓரமாக நிறுத்துவிட்டு, நன்றாகக் கையைக் குலுக்கி திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார்.
எகிப்து, கஸ்ஸாவை ஒட்டி நீண்டுள்ள தனது எல்லையில் பூமிக்கு அடியில் இரும்புச் சுவர் பதித்து வருகிறது. 10 அல்லது 11 கி.மீ. நீளத்திற்கு நிலத்தின் அடியில் 18 மீட்டர்கள் ஆழம் நடப்பட்டு வரும் இரும்புச் சுவர் அது. தற்போதுள்ள சுரங்கப் பாதைகளை அடைத்து, மேற்கொண்டு சுரங்கப் பாதை ஏதும் ஏற்பட்டுவிடாமல் அந்தச் சுவர் தடுக்கும். இது நிலத்திற்கு அடியில் படு ஆழமாய்ப் பதிக்கப்படுகிறது என்பதால் அதை நோண்டித் துளையிடுவதெல்லாம் இயலாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
"அமெரிக்கா தயாரித்து அளிக்கும் மகா வலுவான எஃகுச் சுவர் அது. வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும் பாச்சாவெல்லாம் அதனிடம் பலிக்காது. அந்த இரும்புச் சுவரை நோண்டவோ, நுங்கெடுக்கவோ, சூட்டால் உருக்கி இளக வைக்கவோ முடியாது", என்பதெல்லாம் பிபிசி அளிக்கும் தகவல்கள்".
அமெரிக்க அதிகாரிகள், "நோ நோ! இந்த மாதிரி சுவரெல்லாம் நாங்கள் தயாரிக்கவும் இல்லை, விநியோகிக்கவும் இல்லை" என்று மறுத்துள்ளார்கள்.
ஓர் உரிமைப் போர் இதனால் தடுக்கப்பட்டு, செயலிழக்கப்படும் என்று யாஜுஜ் மாஜுஜ் கூட்டம் எதிர்பார்ப்போடு உள்ளது. ஆனால் வரலாறு புகட்டிய பாடங்கள் பலவற்றை அவர்கள் அலட்சியம் செய்து விட்டு, அந்த வல்லானின் சக்தியை அறியாமல் போவது கைச்சேதம் என்றுதான் சிம்பிளாய்ச் சொல்ல வேண்டும்.
எல்லா அதிபர்களையும்போல் எகிப்து அதிபர் பற்றியும் உலாவரும் நகைச்சுவை ஒன்று உண்டு.
ஷைத்தானுக்கு வேலையே வழிகெடுப்பதுதானே? பொதுவாய் மனதில் "கிசுகிசுப்பது" அவனது எளிய தந்திரம். எகிப்து அதிபர் நேரடி தோஸ்தாகவே நடந்து கொள்வதால், அவர் பக்கத்தில் சம்மணமிட்டு உட்கார்நது கொண்டு, "நீ அப்படிச் செய், இப்படிச் செய்" என்று சொல்லிக் கொண்டிருந்தானாம். ஆனால் அவர் ஒவ்வொன்றிற்கும், "அது அப்பவே செஞ்சாச்சு, முன்னமேயே செஞ்சாச்சு" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். தொணதொணப்பு தாங்காமல் ஒரு கட்டத்தில் அவர் வெறுத்துப் போய், "இங்கு வா நான் சொல்கிறேன்" என்று ஷைத்தானின் காதில் கிசுகிசுத்திருக்கிறார்.
"இத்தகுல்லாஹ் யாஷேக்" (அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள் தலைவா!) என்று. ஷைத்தானே பதறியடித்து ஓடிவிட்டானாம்.
'இரும்புத்திரை' என்றால் ஒருகாலத்தில் பெருவல்லரசாகத் திகழ்ந்த ஒன்றுபட்ட ரஷ்யா நினைவுக்கு வந்தது. இனிமேல் எகிப்தும் நினைவுக்கு வரக்கூடும்.
நாம் வருத்தப் படலாம். அல்லது சிரித்துக் கொண்டே அந்த இரும்புச் சுவரில் முட்டிக் கொள்ளலாம். தகர்ந்து விடும் ஒருநாள், இன்ஷாஅல்லாஹ்.
ஆக்கம் : நூருத்தீன்
-நன்றி சத்தியமார்க்கம்.காம்