MMK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MMK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 மே, 2012

சிறுபான்மை மக்களுக்கென தனியாக மருத்துவக்கல்லூரி தொடங்க சட்டசபையில் மமக ஆலோசனை

முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு சிறப்பான சாதனையை செய்வதற்கான ஒரு ஆலோசனையை இந்த அவையில் முன் வைக்க விரும்புகிறேன். வக்ப் வாரியத்தின் சார்பாக சிறுபான்மை மக்களுக்கென தனியாக ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இஸ்லாமிய சமுதாயத்திற்கு நீண்டகாலமாக இருந்துவரும் இந்த ஆசையை, தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
அதுபோல 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், நெல்லிக்குப்பம் மற்றும் கடலூர் Old town, பழைய நகரத்தில் வக்ப் வாரியத்திற்கு சொந்தமான இடங்களிலே புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அரசாங்கம் வீடு கட்டுவதற்கு முன்வந்தாலும் கூட கட்ட முடியவில்லை. ஏனென்றால் அந்த இடம் வக்ப் - க்கு கீழே இருக்கின்றது. எனவே, அரசாங்கம் வக்ப் வாரியத்திற்கு பணம் கொடுத்து வக்ப் வாரியத்தின் மூலமாக வீடு கட்டி அந்த மக்கள் பயனடைவதற்கு வழிவகை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முஸ்லிம் மகளிர் உதவி சங்கம் திறப்பதற்கு அரசாங்கம் இணையான நிதியை அரசு தரும் என்ற ஒரு நிலையிலிருந்தது. அது கடந்த திமுக ஆட்சியிலே மாற்றப்பட்டு அதிகபட்சமாக matching grant, இணை நிதியாக 10 இலட்சம்தான் தருவோம் என்று சொன்னார்கள். என்னுடைய கோரிக்கை என்னவென்றால், அந்த மகளிர் சங்கங்கள் வலுவாக அமைவதற்கு இந்த அரசாங்கம் matching grant ஆக பார்க்காமல் 10 இலட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகத்தினுடைய பணிகள் விரிவாக்கப்பட வேண்டும். Co-operative bank இல் ஒழுங்காக லோன் தருவதில்லை. அதனைச் சீர் செய்ய வேண்டும். நான் இந்த ஆட்சியைப் பற்றி சொல்லவில்லை. கடந்த காலங்களிலே Co-operative bank மட்டுமல்லாமல், Nationalized Bank களிலிருந்து அந்த லோன் பெறுவதற்கான வழிவகை செய்ய வேண்டும். TAMCO விற்கும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்திற்கும் விரைவிலே தலைவர்களும், உறுப்பினர்களும் நியமிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, நல்ல வாய்ப்பைதந்த மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து அமர்கிறேன்

சனி, 13 பிப்ரவரி, 2010

மார்ச் 7 மதுக்கடை மறியல் ஏன்?

தமிழகத்தின் தெருக்களிலே இன்று மதுக்கடைகள் பெருகி மது ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. அரசாங்கமே மது விற்பனையை நடத்துவதால் மக்கள் கூடும் இடங்களிலே பள்ளிக்கூடம், வழிபாட்டுத் தலங்களின் அருகிலே கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை ஜோராக நடக்கிறது.

மதுவின் மூலமாக கிடைக்கும் வருமானத்தின் மூலமாக தமிழக மக்களுக்கு இலவசங்களை கொடுத்து சமாதானப்படுத்துகிறது. தமிழக அரசு ஆனால் மக்களின் உடல் நலமும், வாழ்க்கையும் கலாச்சாரமும் சீரழிவதைப் பற்றி அரசுக்கு கவலை இல்லை.

முதியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஏன் பெண்கள் கூட இன்று மதுவுக்கு அடிமையாகும் கொடுமை கொஞ்சம், கொஞ்சமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரவகளின்படி சுமார் 40 சதவீதம் மாணவர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சமூகத்தின் இளைஞர்கள் இன்று மதுவுக்கு அடிமையாகி தங்கள் எதிர்கால வாழ்வை தொலைத்து வருகின்றனர். உழைப்பாளி தனது வருமானத்தை மதுவிலே தொலைக்கிறான். இப்படி மனித வாழ்வை சீரழிக்கும் மது அரக்கனை தமிழகத்தை விட்டே ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும். என்ற சிந்தனை மக்கள் மனதிலே ஊட்டப்பட வேண்டும்.

மதுகுடித்து மதி மயங்கி கொலை, கொள்ளைகளிலே கற்பழிப்பிலே ஈடுபடும் செய்திகள் தினசரி செய்திகளாகி விட்டன.
அரசு குடிகொடுத்து மக்கள் குடியை கெடுக்கும் கொடூரம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மது இல்லாத மதவெறி இல்லாத மாநிலமாக தமிழகம் தழைக்க வேண்டும். அதற்காகத்தான் மதுக்கடைகளின் முன் மாபெரும் மறியல் போரை மனிதநேய மக்கள் கட்சி அறிவித்திருக்கிறது.

பூரண மதுவிலக்கை தமிழக அரசு கொண்டு வரும்வரை நமது போராட்டம் ஓயாது. மதுக்கடை மறியல் போர் மாநிலம் தழுவிய எழுச்சியாகட்டும். மதுக்கடை மறியல் மக்கள் மனதிலே புதிய புரட்சியை ஊட்டப்படும். மதுக்கடைகள் தமிழகத்தை விட்டே ஓட்டம் காணட்டும்.

அணி திரள்வோம் ! ஆர்ப்பரிப்போம் !

சனி, 25 ஏப்ரல், 2009

மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை மகளிர் அணி செயல் வீரர்கள் கூட்டம்

சென்னை, ஏப்.23- மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை மகளிர் அணி செயல் வீரர்கள் கூட்டம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி, மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, வட சென்னை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைவர் அப்துல் ஹமீது தென்சென்னை மாவட்ட தலைவர் சீனி முஹமது மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மத்திய சென்னை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலியின் வெற்றிக்கு பாடுபடுவது என்றும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று பெண்களையும் பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை ம.ம.க வேட்பாளர் கும்பகோண் பிஷப்பிடம் ஆதரவு கேட்டார்.




கும்பகோணம்,ஏப்.25
மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவா ருல்லா குடந்தை மறை மாவட்ட ஆயரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

பிஷப்பிடம் ஆதரவு
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட் பாளரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவருமான ஜவாருல்லாஹ் தனது கட்சி யினருடன் நேற்று கும்பகோணம் பிஷப் ஹவுஸில் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமியை நேரில் சந்தித்து தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் பிஷப் பிடம் ஆலோசனை நடத்திய அவரிடம் பிஷப் அந்தோணி சாமி, பல நல்ல காரியங்களை செய்ய நாங்கள் எப்போதும் ஒத்துழைப்பு நல்குவோம் என்று தெரிவித்தார்.

10 கட்டளைகள்
அவரிடம் த.மு.மு.க சார்பில் இஸ்லாமிய மக்களுக்கு செய்துள்ள தொண்டுகள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது அந்தோணிசாமி கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் சார்பில், வாக்காளர்களுக்கு பத்து கட்டளைகள் என்று தயாரிக் கப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தை ஜவருல்லாவிடம் பிஷப் வழங்கினார்.

கிறிஸ்தவர்களிடம் வரவேற்பு
பின்னர் நிருபர்களிடம் ஜவாருல்லா கூறிதாவது:
மயிலாடுதுறை பாராளு மன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் நான் போட்டியிடுகிறேன்.

த.மு.மு.க.வினர் பேராதர வோடு தொடங்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி 15வது நாடாளுமன்ற தேர்தலில் புதியதமிழகம், இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு போட்டியிடுகிறது. சமூக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவு தந்துள்ளது. சிறுபான்மையினர் அரசியலில் சுயமுகவரியுடன் வருவதை கட்சிகள் விரும்பாததால், செயல்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளோம். மயிலாடுதுறை தொகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற் சாலைகளை அமைப்பேன். சிறு சிறு அணைக்கட்டுகள் ஏற்படுத்தி ஆக்கப்பூர்வ வளர்ச்சிக்கு பாடுபடுவேன். தரமான கல்லூரிகள், மருத்துவக்கல்லூரி அமைக்க பாடுபடுவேன். மனித நேய மக்கள் கூட்டணிக்கு கிறிஸ்தவர்கள் அமைப்பிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரு கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தியாகிகள் கோரிக்கை
பின்னர் ஜவாருல்லாஹ் பட்டீஸ்வரத்திலுள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் நலச் சங்கத்திற்கு சென்று தியாகி களிடம், அவர்களது கோரிக் கைகள் பற்றி கேட்டறிந்து, அவர்களிடம் ஆதரவு திரட்டினார். தியாகிகள் நலச் சங்கத்தின் மாவட்டதலைவர் கணேசபஞ்சாபிகேசன் மற்றும் தியாகிகள் ஜவாஹிருல்லாவிடம் 8 அம்ச கோரிக்கைகள் பற்றி எடுத் துரைத்தனர். கோரிக்கைகள் நிறைவேற தான் பாடுபடுவதாக தியாகிகளிடம் ஜவாஹிருல்லா உறுதி அளித்தார்.
மாநில மாணவரனி செயலாளர் அமீன், மாவட்ட செயலாளர் முகமது சுல்தான், உமர் ஜஹாங்கீர், த.மு.மு.க. மாவட்ட தலைவர் முகமது செல்லப்பா, மாவட்ட செயலாளர் கனி, மக்கள் தொடர்பு அலுவலர் சலீம் உள்பட பலர் ஜவாருல்லாவுடன் சென்றனர்.
நன்றி: தின்த்தந்தி 25-4-2009

நேரில் சென்று மக்கள் குறை தீர்ப்பேன் மத்திய சென்னை வேட்பாளர் வாக்குறுதி

நேரில் சென்று மக்கள் குறை தீர்ப்பேன் மத்திய சென்னை வேட்பாளர் வாக்குறுதி