ஐநா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐநா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 பிப்ரவரி, 2010

உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர்: ஐநா

ரோம்: உலகம் முழுவதிலும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று ஐநாவின் வேளான் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி அமைப்பு (ஐஎஃப்ஏடி) தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் 33வது ஆட்சிமன்றக் குழு கூட்டம் புதன் கிழமை அன்று ரோம் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைப்பின் தலைவர் கனாயோ வான்ஸ் பேசுகையில், 'உலகளவில் பசியால் வாடும் மக்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 10 கோடி அளவை தாண்டியிருக்கிறது. உலகில் விவசாயத்தை மேம்படுத்துவது தான் இந்த மக்களின் பசியை போக்குவதற்கான சிறந்த வழியாக நாங்கள் கருதுகிறோம்.
பசியோடு இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக, ஆபத்தான நச்சு கலந்த உணவை உண்பவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. விவசாயத்தை பெருக்குவதன் மூலம் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதோடு, பசியையும் அகற்ற முடியும்' என்றார்.
dinakaran

வியாழன், 19 நவம்பர், 2009

இஸ்ரேல் குடியிருப்புகள்: ஐநா கண்டனம்!


இஸ்ரேல் ஜெருஸலத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் தொடர்ந்து தனது குடியிருப்புகளை நிர்மாணித்து வருகிறது. இந்த செயலை அமெரிக்கா கண்டித்திருந்த போதும், இஸ்ரேல் அதனைக் குறித்துக் கண்டுகொள்ளாமல் தனது குடியேற்றத்தைத் தொடர்ந்து வரும் நிலையில் மத்தியகிழக்கின் அமைதிக்கு இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் குடியிருப்புகளை நிறுத்துவது அவசியம் என ஐநா பொதுச் செயலாளர் பான்கிமூன் வற்புறுத்தியுள்ளார்.

அதேவேளையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேல் தனது ஜெருசலக் குடியிருப்புகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் மத்திய கிழக்கு அமைதிக்கு ஒத்துழைப்பு வழங்க இக்குடியிருப்புகளை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐநா கண்டனம் குறித்தோ, அமெரிக்க அரசின் வேண்டுகோள் குறித்தோ தாம் கவலைப்படப் போவதில்லை என இஸ்ரேலியப் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகெவ் அறிவித்துள்ளார். ஜெருசலக் குடியிருப்புகள் முன்னர் அறிவித்தபடி எவ்விதத் தடங்கலும் இன்றித் தொடரும் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
source:inneram