காஸ்ஸா,செப்.3:இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவிற்கும், ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸிற்குமிடையே வாஷிங்டனில் நடந்துவரும் பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது ஹமாஸ்.
"ஃபலஸ்தீனர்களின் பிரதிநிதி என்று கூற உரிமையில்லாதவருக்கும், கொடூரமான ஆக்கிரமிப்பாளருக்குமிடையே பேச்சுவார்த்தைதான் நடைபெறுகிறது.
ஜெருசலத்தை யூதமயமாக்குவதற்கும் நமது பூமியை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்பதற்கும் திரையிடுவதற்கான முயற்சிதான் இது." என்று ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த நேர்முகத்தில் ஹமாஸின் மூத்த தலைவர் மஹ்மூத் ஸஹர் தெரிவிக்கிறார்.
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் தலைமையிலான அரசை சட்டவிரோதமாக கவிழ்த்தைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டில் காஸ்ஸாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் கையிலெடுத்தது.
"இஸ்ரேலுடனான நல்லிணக்கம் என்ற சிந்தனையை ஸஹர் மறுத்தார். ஃபலஸ்தீனர்களின் எதிரி சியோனிஷ்டுகளாவர். மெடிட்டரேனியன்- ஜோர்டான் நதிக்குமிடையேயான பூமிக்குமிடையேயான முழு பூமியையும் விடுவிப்பது ஃபலஸ்தீனர்களின் தார்மீக மற்றும் மார்க்கரீதியான கடமையாகும்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஆயுதம் தாங்கிய தற்காப்பை ஃபலஸ்தீனர்கள் கைவிடமாட்டார்கள். எங்களுடைய பூமியில்தான் யூதநாடு அமைந்துள்ளது." என்று ஸஹர் உறுதிபடக் கூறினார்.
இதற்கிடையே மேற்குகரையில் நேற்று நடந்த தாக்குதல் ஒன்றில் இரண்டு இஸ்ரேலியர்களுக்கு காயம் ஏற்பட்டது. யூத குடியேற்ற மையமான ரிமோனிமினிற்கு அருகில் காரில் பயணித்துக் கொண்டிருந்தோர் மீது வாகனத்தில் வந்த போராளிகள் துப்பாக்கியால் சுட்டனர். தாக்குதலுக்கான பொறுப்பை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது. நேற்று முன் தினம் நடந்த தாக்குதல் ஒன்றில் நான்கு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக