வாஷிங்டன்,செப்.2:ஈராக்கில் அமெரிக்காவின் பணி முடிவடைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.
ஈராக்கினை சுதந்திரம் அடையச் செய்வதற்கான பணி முடிவடைந்துவிட்டது. ஈராக்கின் எதிர்காலத்தை அங்குள்ள மக்களின் கரங்களில் அளிக்க அமெரிக்க மிகப்பெரிய விலையை கொடுக்க நேர்ந்தது.
அமெரிக்காவின் பொருளாதார கட்டமைப்பை புனர் நிர்மாணிப்பதுதான் இனி நமது பணி என ஈராக் போர் முடிவடைந்துவிட்டதாக தேச மக்களுக்கு அளித்த செய்தியில் ஒபாமா குறிப்பிட்டார்.
பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் உள்ளதாக கூறி கடந்த 2003 ஆம் ஆண்டில் ஈராக் என்ற சுதந்திரதேசத்தின் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போரைத் துவங்கியது. ஆனால், பல மாதங்களுக்குப் பின்னால் அத்தகைய பேரழிவு ஆயுதங்கள் ஒன்றும் ஈராக்கில் இல்லை எனக்கூறி பணி முடிவடைந்துவிட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்.w.புஷ் அறிவித்தார்.
தொடர்ந்து ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போகிறோம் எனக்கூறி அங்கு அமெரிக்க படைகள் தொடர்ந்து இருந்து வந்தன.
2004 ஆம் ஆண்டில் அமெரிக்க ராணுவம் ஃபலூஜாவில் பயன்படுத்திய ஆயுதங்கள் தலைமுறைகளை பாதிப்பிற்குள்ளாக்குவதாகும். இரண்டாம் உலகப்போரின் பொழுது ஜப்பானின் ஹிரோஷிமாவிலும், நாகஷாகியிலும் அணுத்தாக்குதல் நடந்தபொழுது ஏற்பட்ட சூழல்தான் ஃபலூஜாவிலும் என இதுத்தொடர்பான ஆய்வு ஒன்றுத் தெரிவிக்கிறது.
4500 அமெரிக்க ராணுவத்தினர் ஈராக்கில் பலியாகியுள்ளனர். ஈராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதற்காக 50 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் ஈராக்கில் தொடர்வர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக