வியன்னா,செப்.4:மஸ்ஜித் மினாராக்களையும் முஅத்தின்களையும்(அதான் கூறுபவர்) சுட்டுத்தள்ளும் ஆன்லைன் கேமிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆஸ்திரியாவில் வலதுசாரி கட்சியான ஃப்ரீடம் கட்சியின் இணையத்தளத்தில் இந்த கேமின் லிங்க் உள்ளது.
மோஷி பாப(பை பை மஸ்ஜித்) என்ற இந்த கேமில் மஸ்ஜிதுகளையும், மினாராக்களையும், முஅத்தின்களையும் சுட்டு வீழ்த்த கார்ட்டூன் உருவங்களுக்கு 60 வினாடிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதிகமானவற்றை சுட்டு வீழ்த்துபவர்களுக்கு அதற்கு உகந்தவாறு பாயிண்ட் அளிக்கப்படும்.
ஸ்ட்ரியா பகுதியில் போட்டியிடும் ஃப்ரீடம் கட்சியின் வேட்பாளர் ஜெராட் குர்ஸ்மானின் பிரச்சார கருவியாக இந்த கேம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாதம் 26 ஆம் தேதி உள்ளூர் தேர்தல் அங்கு நடைபெறுகிறது. இந்த கேம் முடிவடையும்பொழுது ஸ்ட்ரீயாவில் மினாராக்களும், மஸ்ஜிதுகளும் நிர்மாணிக்க அனுமதிக்கலாமா? என்ற சர்வேயில் பங்கெடுக்க இணையதளம் பார்வையாளர்களிடம் கோரிக்கை விடுக்கிறது.
அதேவேளையில், 1.6 சதவீதம் முஸ்லிம் மக்களைக் கொண்ட ஸ்ட்ரீயாவில் மினாராக்களைக் கொண்ட ஒரு மஸ்ஜித் கூட இல்லை என ஆஸ்திரியாவின் ப்ரஸ் ஏஜன்சி ஒன்று கூறுகிறது.
ஆஸ்திரியா முழுமைக்கும் மினாராக்களைக் கொண்ட இரண்டு மஸ்ஜித்கள் மட்டுமே உள்ளன. மதவிரோதமும், வீணான அச்சமும் தான் இதற்கு காரணம் என ஆஸ்திரியாவின் இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் அனஸ் ஷாக்கிஃப் தெரிவித்துள்ளார்.
சோஷியல் டெமோக்ரேட்டுகளும், க்ரீன் பார்டியும் இந்த கேமிற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக