
நேற்று-ம் வழக்கம் போல விநாயகர் ஊர்வலம் நமதூரில் நடந்தது, மரக்கடையில் வைக்க பட்டிருந்த விநாயகர் சிலை-யுடன் மரக்கடை M.S.செல்லப்பா, லெட்சுமாங்குடி A.சொற்கோ, S.ஐயப்பன் தலைமையில் ஹிந்து முன்னணியினர் ஊர்வலம் எடுத்து சென்றனர் போலீஸ் பாதுகாப்புடன். வழக்கம் போல செல்ல கூடிய வழியில் செல்லாமல் புதிதாக, வளமைக்கு மாறாக முஸ்லிம்கள் வாழும் பகுதியான கூத்தாநல்லூர்-க்கு தாரை தப்பட்டையுடன் விநாயகர் ஊர்வலத்தை கொண்டு வந்து மேல கடை தெருவில் உள்ள மேல பள்ளிவாசலின் முன்பு முஸ்லிம்கள் மக்ரிப் தொழும் நேரத்தில் முஸ்லிம் மக்கள் மனது புண் படும் விதமாக கோஷங்களையும் எழுப்பியும், தொழுகின்ற நேரத்தில் பள்ளிவாசல் முன்பு தாரை தப்பட்டை அடித்து ஊர்வலத்தை கொண்டு சென்றுள்ளனர். உடனே L.M.அஸ்ரப் அவர்கள் போலீஸ்-க்கு போன் செய்து இதை தடுக்குமாறு கூறினார்.
இதை அறிந்த கூத்தாநல்லூர் முஸ்லிம் இளைஞர்களும், இஸ்லாமிய இயக்கங்களான பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக சகோதரர்கள் களத்தில் குதித்தனர். சற்று நேரத்தில் பொதக்குடி, பூதமங்கலம் வரை செய்தி பரவி அங்குள்ள இளைஞர்களும் கூத்தாநல்லூர்-க்கு விரைந்து வந்தனர். அனுமதி அளிக்க படாத வழியில் ஊர்வலத்தை எடுத்து சென்ற ஹிந்து முன்னணி அமைப்பினருக்கு எதிராகவும் இதை தடுக்க தவறிய கூத்தாநல்லூர் காவல் துறை ஆய்வாளர் நடராஜ்-ஐ கண்டித்தும் 150-க்கு மேற்பட்ட இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறை ஆய்வாளர் நடராஜ் அவர்கள் " நான் புதிதாக பணியில் சேர்ந்ததால் எனக்கு ஊர்வல பாதை தெரியாது,
என நமதூர் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்டார். மன்னிப்பை ஏற்க்க மறுத்த நமதூர் இளைஞர்கள் திருவாரூர் SP மற்றும் தாசில்தார் நேரில் வரும் படி முறையிட்டனர்.
முத்துபேட்டை-க்கு பாதுகாப்பு பணிக்க சென்றிருந்த திருவாரூர் SP P.மூர்த்தி அவர்கள் நேரில் வந்து நமதூர் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக சம்பந்தபட்ட கூத்தாநல்லூர் ஆய்வாளர் நடராஜ் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் இனிமேல் இந்த வழியில் விநாயகர் ஊர்வலம் வராமல் பார்த்துகொள்கிறோம் என்றும் SP P.மூர்த்தி மற்றும் தாசில்தார்-ரிடம் எழுதி வாங்கிய பிறகு சாலை மறியல் வாபஸ் செய்ய பட்டது.
அல்லாஹ்-வின் மாபெரும் கருணையால் நமதூர் எந்த ஒரு மத பிரச்சனை-யும் இன்றி இந்து முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர், இதை பொருத்து கொள்ள முடியாத ஹிந்துதுவா சக்திகள் நமதூர் மட்டும் இன்றி இந்திய அளவில் முஸ்லிம்களை அழிப்பதையே குறிகோளாக கொண்டுள்ளனர், விநாயகர் சதுர்த்தி என்ற ஒன்று தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவிலே இல்லாத ஒரு பண்டிகை, RSS என்ற இயக்கம் இதை உருவாகியதின் முக்கிய நோக்கமே கலவரம் செய்ய தான், விநாயகர் ஊர்வலத்தில் அமைதியாக செல்லாமல் முஸ்லிம் மக்கள் மனம் புண் படும் படியாக " 10 பைசா முறுக்கு, பள்ளிவாசல நொறுக்கு" " துலுக்கனை வெட்டு, துலுகச்சியை கட்டு" போன்ற ஆபாசமான கோஷம் எழுப்புவதும், பள்ளிவாசல் மீது கல் எரிவதுமே, முஸ்லிம்கள் ஊர்வலத்தின் எதிரே வந்தால் அடிபதுமே கொள்கையாக கொண்டுள்ளனர்.
இதை கேட்டவுடன் உடனே ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டு நீதி கேட்ட நமதூர் முஸ்லிம் இளைஞர்-களையும், பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக சகோதர்களையும் பாராட்டுகிறோம். இதை நாம் கண்டிக்க தவறினால் இன்று மேலபள்ளி வரை வந்தவர்கள் ஊரின் மைய பகுதிக்கே வந்து பிரச்சனை செய்வார்கள், நமதூரை பொறுத்தவரை ஹிந்து முன்னணியினர் யாரும் வெளிபடையாகவே இல்லை, பசு தோல் போர்த்திய புலியாகவே இருக்கிறார்கள். காங்கிரஸ், DMK, ADMK போன்ற அரசியல் கட்சியில் இருந்து கொண்டு செயல் படுகின்றனர். இவர்களிடம் நாம் விழிபுனர்வாக இருக்க வேண்டும்.
நமதூர் ஜமாஅத் இதை உடனே கண்டிக்க வேண்டும், ஊர்வலம் கொண்டு வந்தவர்களின் மேல் உடனே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நமதூர் இளைஞர்கள் சார்பாக ஜமாஅத்-ஐ கேட்டு கொள்கின்றோம். நாம் அனைவரும் இந்த பாசிச சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நின்று இவர்களை வெற்றி கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக