ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

சென்னையில் பெருநாள் தொழுகை-தமுமுக தலைவர் ஈகைத்திருநாள் உரை (Audio)

சென்னை பிராட்வேயில் ஈகைத்திருநாள் தொழுகையில் பங்குக் கொண்ட மழலையர்

உலகின் பல்வேறு பகுதிகளில் ஒரே தினத்தில் (வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10) பெருநாள் கொண்டாடப்படுவது பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியது. இந்தியாவில் தமிழ்நாடு, புதுவை, கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நேற்று பெருநாள் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தூத்துக்குடி, விருத்தாசலம், திண்டுக்கல் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய ஊர்களில் வியாழன் மாலை பிறை தென்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஈகைப் பெருநாள் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்தார்.

பிராட்வேயில் ஈகைத்திருநாள் தொழுகையில் பங்குக் கொண்ட பெண்களின் ஒரு பகுதி


இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் ஈகைத் திருநாள் (செப்டம்பர் 10) அன்று பிராட்வே டான் பாஸ்கோ விளையாட்டு திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பெருநாள் பேரூரை ஆற்றினார். அவர் தமது உரையில் முஸ்லிம்களுக்கிடையே ஒற்றுமை இருப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

Download Audio

ஈகைத்த ாழுகைக்கு பிறகு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் தமுமுக தலைவரும் பொதுச் செயலாளரும்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி உட்பட தமுமுக நிர்வாகிகள் ஏரளாமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பங்குக் கொண்டார்கள். மழையின் காரணமாக திடல் நனைந்திருந்ததால் அங்கேயே மாற்று ஏற்பாடு செய்து தொழுகை நடத்தப்பட்டது.

பெருநாள் தொழுகையில் தமுமுக தலைவர் ஆற்றிய உரை விரைவில் இன்ஷா அல்லாஹ் இணையத்தில் பிரசுரமாகும்.

கருத்துகள் இல்லை: