புதன், 8 செப்டம்பர், 2010

அமெரிக்க யூதர்கள் தீவிரவாதத்தை ஏற்றுமதிச் செய்வதாக சி.ஐ.ஏ

Illustration


வாஷிங்டன்,செப்.8:அமெரிக்காவிலுள்ள யூதர்கள் தீவிரவாதத்தை ஏற்றுமதிச் செய்கின்றனர் என சி.ஐ.ஏவின் ஆவணங்கள் கூறுகின்றன.

கடந்த மாதம் விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் ரகசியமாக உளவறிந்து வெளியிட்ட ஆவணங்களில் இது வெளிப்படுகிறது.

ரெட்ஸெல் என்ற சி.ஐ.ஏயின் பிரிவு கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி தயாரித்த அறிக்கையில் உள்நாட்டு யூத தீவிரவாதப் பிரிவுகளின் செயல்பாடுகளை அமெரிக்க அரசு கண்டும் காணாததுபோல் இருப்பதாக கூறுகிறது.

அமெரிக்க உலகத்திற்கு வெளிப்படுத்துவதுபோல் அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதிச் செய்யப்படும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதமோ, மேற்காசிய, ஆப்பிரிக்க, ஆசிய வம்சாவழியைச் சார்ந்தவர்களுக்கோ தொடர்பில்லை என சி.ஐ.ஏவின் மெமோ கூறுகிறது.

ஆழமாக வேரூன்றியுள்ள இந்த தீவிரவாதத்திற்கு ஆதரவுத் தெரிவிப்பதும், சில நேரங்களில் தாமே அதனை செயல்படுத்துவதும் அமெரிக்க யூதப் பிரிவினர்களாவர்.

இஸ்ரேலின் எதிரிகளுக்கெதிராகத்தான் இவர்களுடைய காய் நகர்த்தல். உதாரணமாக பரூச் கோல்ட்ஸ்டைன் என்ற அமெரிக்க யூதன் ஈடுபட்ட ஒரு சம்பவத்தை சி.ஐ.ஏவின் ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.

நியூயார்க்கைச் சார்ந்த கோல்ட்ஸ்டைன் கடந்த 1994 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு குடியேறி கட்ச் என்ற பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார். ஹெப்ரானில் மஸ்ஜிதுல் தொழுதுக்கொண்டிருந்த 29 ஃபலஸ்தீனர்களை கொன்றது இவனுடைய தலைமையிலான பயங்கரவாத குழுவாகும்.

அமெரிக்காவைச் சார்ந்த யூத புரோகிதரான மெய்ர் கஹானா என்பவர்தான் கட்ச் என்ற யூத பயங்கரவாத இயக்கத்தை தோற்றுவித்தவன்.

எஃப்.பி.ஐ சட்ட-ஒழுங்கை சீர்குலைக்கும் இயக்கங்களின் பட்டியலில் உட்படுத்தியுள்ள யூத டிஃபன்ஸ் லீக்கின்(ஜெ.டி.எல்) ஸ்தாபகரும் கஹானாவாகும்.

1968 முதல் அமெரிக்காவில் ஜெ.டி.எல்லின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஏழுபேராவர். 22 பேருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது.

கலிஃபோர்னியாவில் அமெரிக்க-அரபு பிரிவினை எதிர்ப்பு குழுவின் மாகாண இயக்குநரை கடத்திச்சென்றது ஜெ.டி.எல்லாகும்.

2001 செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்று இரண்டு தினங்கள் கழித்து கலிஃபோர்னியாவில் ஒரு மஸ்ஜிதை குண்டுவைத்து தகர்க்க திட்டமிட்ட இரண்டு ஜெ.டி.எல் உறுப்பினர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் தீவிரவாத எதிர்ப்பு படையினர் கைதுச்செய்ததாக எஃப்.பி.ஐயின் குறிப்பில் காணப்படுகிறது.

ஃபலஸ்தீன் பகுதிகளில் தாக்குதல் செயல்பாடுகளுக்கு அமெரிக்க யூதர்களின் ஆதரவு தற்பொழுது பலமடங்கு அதிகரித்துள்ளது.

மேற்குகரையிலும், ஜெருசலத்திலும் சட்டத்திற்கு புறம்பான நிர்மாணங்களுக்காக 40 அமெரிக்க அமைப்புகள் 20 கோடி டாலர் வரியில்லாத நன்கொடையாக சேகரித்து அளித்ததாக நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை கடந்த ஜூலையில் செய்தி வெளியிட்டிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: