புதன், 8 செப்டம்பர், 2010

லைலத்துல் கத்ரின் புண்ணியந்தேடி மஸ்ஜிதுல் ஹரமில் 30 லட்சம் முஸ்லிம்கள்

மக்கா,செப்.8:ஆயிரம் மாதங்களை விட புண்ணியமான ரமலானின் லைலத்துல் கத்ர் இரவின் பலனை அடைவதற்காக நபி(ஸல்...)அவர்கள் அவ்விரவை தேட கட்டளையிட்ட ரமலானின் கடைசி ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றான 27 ஆம் இரவு மஸ்ஜிதுல் ஹரமில் 30 லட்சம் முஸ்லிம்கள் வருகை புரிந்திரிந்தனர்.

தராவீஹ்,கியாமுல் லைல் (இரவுத்தொழுகை) ஆகிய வணக்கங்களுக்காக உம்ராவிற்கு வந்த முஸ்லிம்களின்பெரும் எண்ணிக்கையினால் ஹரமின் உள்புறம் மூச்சுத் திணறியது.

மஸ்ஜிதுல் ஹரமிற்கு வருகைத் தந்த முஸ்லிம்களை வரவேற்க சவூதி அரசு எல்லாவித வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 4500 போலீஸ்காரர்களும், மஸ்ஜிதுல் ஹரமையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பாதுகாக்க பத்தாயிரம் தொழிலாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

புண்ணிய யாஸ்திரிகர்களுக்கு குடிநீருக்காக 20 ஆயிரம் வாட்டர் கூலர்களும் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன. பெரும் மக்கள்திரள் மஸ்ஜிதுல் ஹரமில் கூடியபொழுதும் எவ்வித போக்குவரத்து இடைஞ்சலோ விபத்துக்களோ பதிவுச் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மக்காவிலுள்ள அனைத்து ஹோட்டல்களும், அபார்ட்மெண்டுகளும் புண்ணிய யாஸ்திரீகர்களால் நிரம்பி வழிந்தன. மஸ்ஜிதின்உள்புறத்தில் இடமில்லாததால் முஸல்லாக்கள் (தொழுகை விரிப்புகள்) வாங்குபவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில்அதிகரித்திருந்தது. முஸல்லாக்களின் தேவை அதிகமானதால் அதன் விலையும் 15 ரியாலிலிருந்து 20 ரியாலாக உயர்ந்தது.

மதீனாவில் மஸ்ஜிதுல் நபவியிலும் தராவீஹ்,கியாமுல் லைல் தொழுகைகளுக்காக பெரும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதில் பெரும்பாலும் தொழிலாளர்களும், வெளிநாடுகளை சார்ந்த புண்ணிய யாத்ரீகர்களுமாவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: