திங்கள், 20 செப்டம்பர், 2010

போதை பொருளுக்காக போர் செய்த அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த தாலிபான்களை நீக்கிவிட்டு பொம்மை ஆட்சியை ஏற்படுத்தி அங்கே போதை பொருள் உற்பத்தியை அதிகபடுத்தி உலகமெங்கும் போதை பொருளை சப்ளை செய்கின்றது அமெரிக்க கூட்டுபடை.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் கனடாவைச் சேர்ந்த வீரர்கள் ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக இங்கிலாந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தி சண்டே டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தி…
ஹெல்மாண்ட் மாகாணம், கேம்ப் பாஸ்டியனில் நிலை கொண்டுள்ள இங்கிலாந்து வீரர்களும், காந்தஹார் விமான நிலையத்தில் நிலை கொண்டுள்ள கனடா நாட்டு வீரர்களும் இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த இரு இடங்களிலும் உள்ள விமான நிலையங்கள்தான் ஆப்கானிஸ்தானின் முக்கிய விமானப் போக்குவரத்து தலமாக உள்ளது. இந்த விமான நிலையங்களைத்தான் நேட்டோ படையினர் போக, வர பயன்படுத்தி வருகின்றனர்.


ஆப்கானிஸ்தான் போதைப் பொருளுக்குப் பெயர் போனது. குறிப்பாக அங்கு ஓபியம் விளைச்சல் கிட்டத்தட்ட விவசாயம் போலவே உள்ளது. ஆனால் (தாலிபான் ஆட்சியில்) 2001ம் ஆண்டு வாக்கில் ஓபியம் விளைச்சல் குறைவாகவே இருந்தது. இந்த ஓபியத்திலிருந்துதான் ஹெராயின் பிரித்தெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 2001க்குப் பிறகு அதாவது அமெரிக்கா தலைமையில் நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுறுவிய பின்னர் அங்கு ஓபியம் உற்பத்தி கிடுகிடுவென அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் போதைப் பொருள் ஏஜென்ட் ஒருவர் ஈரானின் பிரஸ் டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், வெளிநாடுகளைச் சேர்ந்த போதைப் பொருள் முதலைகளுக்குப் பிறகு அதிக அளவில் ஓபியம், ஹெராயின் உள்ளிட்டவற்றை வாங்குவது ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டு ராணுவத்தினர்தான்.

(அமெரிக்க படை எடுப்பிற்க்கு பிறகு) உலக அளவில் உள்ள ஹெராயினில் 90 சதவீதம் ஆப்கானிஸ்தானில்தான் உற்பத்தியாகிறது.
அமெரிக்கா ஒசாமாவை தேட படை எடுத்ததா? ஹெராயின் போதை பொருளை தேட படை எடுத்ததா? என்பதை மக்கள் இப்போது தெரிந்துகொண்டுள்ளனர். தாலிபான் ஆட்சியில் போதை பொருள் உற்பத்தி குறைந்திருந்தது. ஆப்கானில் தாலிபான் ஆட்சியை நீக்கி பொம்மை ஆட்சியை உருவாக்கி உலக அளவில் போதை சப்ளை செய்துகொண்டு இருக்கின்றது அமெரிக்க கூட்டு படை. பொது விமான நிலையங்களில் இப்படி கடத்தலில் ஈடுபட்டால் மக்களுக்கு எளிதில் தெரிந்துவிடும் என்பதற்க்காக பிற நாடுகளில் தனி விமான தளங்களை அமைக்கின்றது அமெரிக்கா.

தேங்க்ஸ் டு : மணற்கேணி டைம்ஸ்

கருத்துகள் இல்லை: