புதன், 1 செப்டம்பர், 2010

ஆக்ஸ்போர்ட் அகராதியின் அச்சு பதிப்பு நிறுத்தம்

லண்டன்,செப்.1:ஆங்கில மொழியின் அதிகாரப்பூர்வ வழிகாட்டியாக திகழும் ஆக்ஸ்போர்ட் அகராதியின் அச்சு பதிப்பு நிறுத்தப்பட்டு ஆன்லைன் வழி மட்டும் செயல்படும்.

ஆன்லைன் பதிப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அச்சு பதிப்பை பயன்படுத்துவோரின் பல மடங்கு அதிகரித்துள்ளதாக வெளியீட்டாளர்களான ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிரஸ் அறிவித்துள்ளது.

புதிய பதிப்பில் வார்த்தைகளை சேர்க்கும் பணி பூர்த்தியாகும் வேளையில் அச்சுபதிப்பிற்கு போதிய தேவையுடையோர் இருப்பாகளா என்பது சந்தேகமே! என வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆக்ஸ்போர்ட் அகராதியின் ஆன்லைன் பதிப்பிற்கு மாத சந்தாதாரர்களிடமிருந்து 20 லட்சம் ஹிட்டுகள் கிடைக்கின்றன. 1989-ம் ஆண்டில் வெளியிட்ட 20 வால்யூங்களைக் கொண்ட தற்போதைய அச்சு பதிப்பு 30000 பிரதிகளே விற்பனையாகியுள்ளது.

1165 டாலர் இதன் விலை. ஆக்ஸ்போர்ட் அகராதியின் முதல் பகுதி வெளியானது 1884 ஆம் ஆண்டிலாகும். தொடர்ந்து பிரபலமான அகராதியின் முழுப்பதிப்பும் வெளியானது 1928 ஆம் ஆண்டில்.

சாமுவேல் ஜான்சன் 1755 ஆம் ஆண்டில் வெளியிட்ட ’எ டிக்சனரி ஆஃப் இங்கிலீஸ் லாங்குவேஜ்’ என்ற அகராதிக்கு பிறகு முழுமையான அகராதி ஆக்ஸ்போர்ட் அகராதியாகும்.

அகராதியின் தற்போதைய பதிப்பில் (இரண்டாம் பதிப்பு) 2,91,500 வார்த்தைகள் உள்ளன. ஆக்ஸ்போர்ட் அகராதி ஆன்லைனில் செயல்படத் துவங்கியது 2000 ஆம் ஆண்டிலாகும்.

பணம் கட்டும் சந்தாதாரர்களுக்கு மிக எளிமையாகவும்,வேகமாகவும் வார்த்தைகள் கண்டறிவதற்கான வசதியை இது ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை புதிய வார்த்தைகளை இணைத்து இந்த அகராதி அப்டேட் செய்யப்படும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: