திங்கள், 31 ஆகஸ்ட், 2009

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் விரைவில் அழியும்: லாலுபிரசாத்

பா.ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று லாலு பிரசாத் கூறியுள்ளார்.

பா.ஜனதா கட்சியில் நடைபெற்று வரும் மோதல் குறித்து, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பா.ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

அவர்கள் செய்த பாவங்களுக்கான தண்டனையை அவர்கள் விரைவில் அனுபவிப்பார்கள். ஏழை மக்களுக்கு எதிராக அவர்கள் செய்த தவறுகளுக்கு அவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்.

பா.ஜனதா கட்சியினர் நடத்திய குஜராத் கலவரம் மற்றும் அவர்கள் செய்த அனைத்து தவறுகளையும் மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.

பா.ஜனதா கட்சியினர் விரைவில் தங்கள் கட்சியை ஒழுங்குப்படுத்தி மீண்டும் எதிர்கட்சி பணியை ஆற்ற வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றார்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

ஜின்னா நல்லவரா? கெட்டவரா?


எழுத்துதான் உலகத்தின் மிகப்பெரிய ஆயுதம் என்பதை ஜஸ்வந்த்சிங் மீது பா.ஜ.க. எடுத்திருக்கும் நடவடிக்கை மீண்டும் உணர்த்துகிறது. இந்திய வரலாறு இது வரையில் சரியான முறையில் மூன்று முக்கிய அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை, 1935 முதல் 1948 வரையில் உள்ள காலகட்டத்தை இவர்கள் பார்த்தவிதம், எடுத்து வைத்த அரசியல் வாதங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த மூன்று முக்கிய தலைவர்கள் : தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா ஆகியோர்.

அரசியல் என்பது சாமானிய மக்களுக்கு அதிகாரம் தருவதாக இருக்க வேண்டும். மேலாதிக்கம் என்பதை எதிர்க்க உதவும் ஒரு கருவிதான் அரசியல். மதம், சாதி மற்றும் மொழியின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள்தான் இவர்கள். ஆனால் இன்று இந்த மூன்று முக்கிய தலைவர்களின் அரசியல் பங்களிப்பு மிகவும் சுருங்கிய பார்வையில் அடைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் வெறும் தமிழகத் தலைவராக மட்டும் அகில இந்திய அளவில் பார்க்கப் படுகிறார். அம்பேத்கரை வெறும் ஒரு தலித் தலைவராக சுருக்கும் முயற்சியில் மேலாதிக்கவாதிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஜின்னாவின் நிலை இன்னும் மோசம். இவரை ஒரு பிரிவினைவாதி, பாகிஸ்தானை உருவாக்க இந்தியாவை துண்டாக்கியவர், ஒரு முஸ்லிம் மதவாதி என்று இந்திய இந்து வலதுசாரிகள் சித்தரிக்க, அந்த பிம்பம்தான் பொதுவான தளத்தில் மக்களின் கற்பனையை கவர்ந்துள்ளது.

இந்த நிலையை குறுகிய அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முடியும். ஆனால், பரந்த அரசியல் புரிதலுக்கு இதுபோன்ற வறட்டு வாதங்கள் உதவாது. ஜின்னாவைப் பற்றி நம்முடைய பார்வையை மீள் ஆய்வுக்கு உட்படுத்த உதவியிருக்கும் ஜஸ்வந்த்சிங்குக்கும், அவரை கட்சியை விட்டு நீக்கிய பா.ஜ.க. தலைமைக்கும் நாம் ஒருவிதத்தில் கடமைப்பட்டுள்ளோம்.

ஜின்னாவின் அரசியலைப் புரிந்துகொள்ளுவதற்கு முன் அவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தை அறிந்துகொள்வது அவசியம். 25-12-1876 அன்று கராச்சி நகரில் மித்திபாய் மற்றும் ஜின்னாபாய் பூஞ்சா என்கிற செல்வந்தருக்கும் முதல் மகனாய் ஜின்னா பிறந்தார். அவரது தாய்மொழி குஜராத்தி. கராச்சியிலும் மும்பையிலும் பள்ளிக் கல்வி கற்ற ஜின்னா, சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார். தன்னுடைய 19-வது வயதில் மிக குறைந்த வயதுடைய வழக்கறிஞராக இங்கிலாந்து நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டார்.

அரசியல் ரீதியாக இங்கிலாந்தில் அப்போது பிரபலமாக இருந்த வில்லியம் களாட்ஸ்டோனின் "லிப்ரல் பார்வையால்' கவரப்பட்டு, முற்போக்கு கொள்கைகளும் ஜனநாயக மரபுகள் மீதும் அதிக நம்பிக்கை வைத்தார். 1900-ல் இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தாதாபாய் நௌரோஜியின் வெற்றிக்கு பாடுபட்டவர்களில் மிகவும் முக்கியமானவர் ஜின்னாதான்.

நவீனத்துவம் என்பது மதவாதிகளின் கைகளில் சிக்கி, வளர்ச்சிக்கு எதிராகப் போய்விடக்கூடாது என் பதில் மிகவும் அக்கறை கொண்ட ஜின்னா நவீனத் துவத்தின் ஒரு அடையாளமாக எப்பொழுதும் கோட் மற்றும் சூட்தான் அணிந்து காட்சியளித்தார். முஸ்லிம் மதவாதிகள் சிலர் அந்த காலத்து உடை விஷயத்தில் குறிப்பாக பெண்கள் உடை விஷயத்தில் கடைபிடித்த பிற்போக்கான நிலையை தன்னுடைய எழுத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னுடைய மனைவி மற்றும் சகோதரிகளின் ஆடை அணியும் முறையிலும் கட்டுபெட்டித் தனத்தை எதிர்த்து செயல்பட்டவர்தான் ஜின்னா.

1902-ல் குடும்ப வியாபாரத்தை கவனிக்க இந்தியா திரும்பிய ஜின்னா, மும்பையில் ஒரே ஒரு ஆண்டுதான் வியாபாரத்தில் ஈடுபட்டார். 1903 முதல் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக செயல்பட ஆரம்பித்தார். இரண்டே ஆண்டுகளில் இந்தியாவின் பிரபல வக்கீல்களில் அவரும் ஒருவர் என்கிற புகழைப் பெற்றார்.

1905-ல் பாலகங்காதர திலகர் மீது தேசகுற்றம் சுமத்தி ஆங்கில அரசு கைது செய்தபோது, திலகரின் சார்பாக வாதிட்டவர் ஜின்னாதான். அவருடைய வாதங்கள்: "சுதந்திரம் கேட்பது பிறப்புரிமை, தேச குற்றமல்ல. சுயஆட்சி என்பதுதான் முறையே அன்றி அந்நிய ஆட்சி அல்ல'' -இந்த வாதங்களே பின்னாளில் இந்திய சுதந்திர வேட்கையை வழிநடத்திச் செல்ல உதவிய வாதங்கள்.

கோபாலகிருஷ்ண கோகலே, பிரோஷா மேத்தா மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோரின் அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்ட IMPERIAL LEGISLATIVE COUNCIL உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்னா, குழந்தை திருமண தடை சட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். முஸ்லிம் மக்களுக்கு வஃக்ப் வாரியத்தை உரு வாக்கினார். பின்னர் SANDHURST COMMITEE-யில் உறுப்பினராகச் சேர்ந்து இந்தியாவின் முதல் ராணுவப் பயிற்சிக் கல்லூரியான INDIAN MILITARY ACADEMYஐ டேராடூன் நகரில் உருவாக்கியதும் ஜின்னாதான்.

1906-ல் அகில இந்திய முஸ்லிம் லீக் உருவானபோது அதில் சேர முடியாது என்று அறிவித்த ஜின்னா, அரவணைத்துச் செல்லும் அரசியலுக்கு மத அடிப்படையில் கட்சி அமைத்தது எதிரான செயல் என்று நம்பினார். ஆனால் 1905-ல் வங்க மாகாணத்தை பிரித்தவுடன் ஏற்பட்ட இந்து மேல்ஜாதி அமைப்பினரின் வகுப்புவாதம் அவரை மிகவும் வாட்டியது. விளைவு... 1913-ல் முஸ்லிம் லீக்கில் ஜின்னாவே சேர்ந்தார். 1916-ல் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியும் லீக்கும் அந்த ஆண்டே ஒரு ஒப்பந்தத்தை போட்டு, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு பொது நிலையை எடுக்க உதவி செய்தார். 1918-ல் ரத்தன்பாய் பெட்டிட் என்கிற பார்சி பெண்ணை திருமணம் செய்துகொண்ட போது, முஸ்லிம் தலைவர்களும், பார்சி தலைவர்களும் ஒன்றாக இந்த கலப்புத் திருமணத்தை எதிர்த்தனர். 1919-ல் இந்த தம்பதிகளுக்கு பிறந்த ஒரே ஒரு குழந்தை டினா ஜின்னா. இந்த டினா ஜின்னாவின் மூத்த மகன்தான் பாம்பே டையிங் கம்பெனியின் இன்றைய தலைவர் நுஸ்லி வாடியா.

1924 முதல் முஸ்லிம் லீக்கை முழுவதும் சீராக்கி, இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க ஏழு ஆண்டுகள் பாடுபட்டார். "இந்திய விடுதலைக்கு இந்திய-முஸ்லிம் ஒற்றுமையே அடிப்படை காரணமாக இருக்க முடியும் என்பதை திரும்பத் திரும்ப கூறுகின்றேன். இதற்கு எதிரான நிலையை யாரும் எடுத்தால் அவர்களை முஸ்லிம் மக்களின் விரோதி என்று அழைக்கத் தயங்கமாட்டேன்'' என்று லாகூர் நகரில் பிரகடனப்படுத்தியவர்தான் ஜின்னா. 28-3-1929-ல் தன்னுடைய புகழ்பெற்ற 14 அம்ச அறிக்கையை ஜின்னா வெளியிட்டார். இந்த அறிக்கை இந்து-முஸ்லிம் உறவுகளை மேம்படுத்தி பரந்த அதிகார பரவலாக்கலை உருவாக்கும் என்று ஜின்னா நம்பினார். ஆனால், இந்த நம்பிக்கை எடுபடாமல் போய்விட்டது என்பதே உண்மை.

எப்படி காங்கிரசுடன் எந்த உறவும் வைக்க முடியாது என்ற முடிவுக்கு 1920-களில் பெரியார் வந்தாரோ, அதேபோல் ஒரு முடிவுக்கு ஜின்னா 1929 முதல் தள்ளப்பட்டார் என்பதே வரலாற்று உண்மை. மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரம் -குறிப்பாக ஸ்டாலின் தலைமையில் சோவியத் நாடுகளில் ஏற்பட்ட அதிகார கட்டமைப்பு மத்தியில் இருக்கும் முறையை- நேரு அவர்களும், பட்டேல் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் என்பது உண்மை.

1927 சைமன் கமிஷன் முன்பு முஸ்லிம் மக்களுக்கு தனி வாக்கு தொகுதிகள் வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தபோது, அதை நேரு நிராகரித்தார்.

தொடர்ந்து வட்டமேஜை மாநாடுகள் தோல்வியடைய, 1936-ல் இந்தியா திரும்பிய ஜின்னா, தேர்தலில் போட்டியிட்டு முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளை பெற முடிவு செய்தார். அந்தத் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் லீக் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ்தான் பெருவாரியான இடங்களைப் பெற்றது. இந்த நிலையில் லீக்கும், காங்கிரசும் இணைந்து செயல்படுவது சீக்கிரம் சுதந்திரத்தை அடைய வழிவகுக்கும் என்று கருதிய ஜின்னா, இதற்காக அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராஜேந்திரபிரசாத்துடன் பேச்சுவார்த்தையை நடத்தினார். இந்த முயற்சிக்கு எதிராக செயல்பட்ட பல காங்கிரஸ் தலைவர்கள், 1938-ல் காங்கிரஸ் மற்றும் லீக்குக்கு இடையிலான பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்ததாக அறிவித்தனர். இதுவே பாகிஸ்தான் என்கிற கோஷம் உருவாக காரணமாக அமைந்த விஷயம். 1940-க்கு முன்பு பாகிஸ்தான் என்று ஒரு சொல்லே அகராதியில் கிடையாது. 1940-ல் லாகூர் நகரில் நடைபெற்ற லீக் மாநாட்டில்தான் இந்த சொல் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

சிறுபான்மையினர் உரிமை என்கிற அடிப்படையில் உருவான இந்த கருத்தாக்கம் பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. TWO NATION THEORY என்று பல்வேறு பரிமாணங்கள் உடைய இந்தியாவை இந்து-முஸ்லிம் என்று இரு தேசிய அடையாளமாக சுருக்கியதுதான் ஜின்னாவின் மிகப்பெரிய பலவீனம். மதத்தின் அடிப்படையில் உருவான பாகிஸ்தான், 1971-ல் மொழியின் அடிப்படையில் பாகிஸ்தான்-பங்களாதேஷ் என்ற பிரிவு TWO NATION THEORY என்பதின் தவறான புரிதலின் வெளிப்பாடு ஆகும்.

மதத்தின் அடிப்படையில் தேசியத்தை கட்டமைக்காமல் சிறுபான்மையினர் என்கிற முறையில் ஜின்னா தன்னுடைய அரசியலை நடத்தியிருந்தால் இன்றைய உலக அரசியல் வேறு ஒரு அழகிய பரிமாணத்தைப் பெற்றிருக்க முடியும். இதை அவர் செயல்படுத்த முடியாமல் போனதற்கு அவரே ஒரு காரணம் என்றாலும், காங்கிரஸ் கட்சியின் ""மத்தியில் அதிகார குவிப்பு'' என்கிற நிலைதான் ஊற்றுக்கண் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்பதைத்தான் ஜஸ்வந்த்சிங்கின் நூல் எடுத்துரைக்கிறது.

அதற்காக அவர் கொடுத் திருக்கும் விலை தான் உருவாக்கிய கட்சியிலிருந்து நீக்கப்படும் நிலை. இது ஒன்றும் பெரிதல்ல என்றே நாளைய வரலாறு தீர்மானிக்கும்.

-நன்றி நக்கீரன்

ராசல்கைமாவில் நடைபெற்ற மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு


முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ராசல்கைமா மண்டலம் சார்பாக 28.08.2009 அன்று வெள்ளிக் கிழமை இரவுத் தொழுகைக்கு பின்பு திருக்குர்ஆன் மாநாடு மு.மு.க அமீரக துணைத் தலைவர் ஹுசைன் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி இஸ்மாயில்ஷா மன்பயீ அவர்கள் கிராஅத் ஓதி மிக அருமையான விளக்கவுரையாற்றினார். மண்டல பொருளாளர் கடியச்சை ஹாஜா முகையதீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். மண்டலத் தலைவர் ஜாஃபர் சாதிக் முன்னிலை வகித்தார்.

ஷார்ஜா மண்டல முமுக முன்னாள் நிர்வாகியும், இஸ்லாமிய அழைப்பாளருமான திருச்சி அப்துல் ரஹ்மான் அவர்கள் ரமலானில் நாம் எடுக்கும் பயிற்சி நமக்கு எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும், குர்ஆன் ஹதிதை பின்பற்றி அனைவரும் நடக்க வேண்டுமெனவும், திருமறைக் குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டுமெனவும், அழைப்புப் பணி அனைவரின் மீதும் உள்ள கடமை என்றும் வலியுறுத்தி சிறந்ததொரு உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து பேசிய முமுக-வின் அமீரக அலுவலகச் செயலாளர் சகோதரர் ஹசன் எண்ணத்தின் அடிப்படையில் அல்லாஹ் கூலி வழங்குகின்றான், எண்ணத்தில் இருக்கும் தூய்மைக்கு தகுந்த சிறந்த பரிசை அல்லாஹ் வழங்குவான் என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.

இறுதியாக சிறப்புரையாற்றிய தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை ஜாஹிர் அவர்கள் மறுமை,மண்ணறை குறித்து பேசுகையில், நபி (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்ததாக அறிவித்த பின்பும் அவர் அல்லாஹ்வை அதிகமதிகம் நின்று வணங்கி அல்லாஹ{க்கு நன்றி செலுத்தியது போன்ற பல விஷயங்களை எடுத்துக் கூறி உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு சிறந்த உரையாற்றினார்கள். மாநாட்டில் திரளாக கலந்துக் கொண்ட ஆண்களும், பெண்களும் கண்ணீர் மல்க அவரது உரையை செவிமடுத்தார்கள்.

மண்டலச் செயலாளர் பொதக்குடி முஹம்மது ஷாஜஹான் அவர்கள் நன்றிவுரை கூறி துவா ஓதி நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. இது போன்ற மாநாடுகள், இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் இந்த பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என கலந்துக் கொண்டவர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். மக்களை ஒருங்கிணைக்கும் பணியை ராக் சிட்டி பகுதியில் பாம்பன் அப்துல்லாஹ் அவர்களும்,ஜூல்ஃபார் கேம்ப் பகுதியில் பஷீர் அவர்களும்,எம்.பி.எம்.கேம்ப் பகுதியில் பீர் முஹம்மது அவர்களும்,ஸ்டார் சிமெண்ட் கேம்ப் பகுதியில் மன்சூர் அவர்களும் திறம்பட செய்திருந்தார்கள்.

திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இந்தப் புனிதமிகு மாதத்தில் திருக்குர்ஆன் மாநாடு மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியதென்றால் அது மிகையில்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

சனி, 29 ஆகஸ்ட், 2009

அத்வானி கூறுவது முழுப் பொய்

வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 28, 2009, 9:53 [IST]

டெல்லி: ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானப் பயணிகளை மீட்க தீவிரவாதிகளை விடுவிக்கும் முடிவை அமைச்சரவை எடுத்தபோது அந்தக் கூட்டத்தில் அத்வானியும் இருந்தார். ஆனால், தனக்கு அந்த விஷயமே தெரியாது என்று அத்வானி கூறுவது முழுப் பொய் என்று பாஜக மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹாவும், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ராவும் போட்டு உடைத்துள்ளது.

இதனால் அத்வானி மீதான மரியாதை மேலும் சரிந்துள்ளது.

1999ம் ஆண்டில் நேபாளத்தில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தஹாருக்கு கடத்தப்பட்டதையடுத்து தீவிரவாதிகளை மத்திய அரசு விடுவித்து பயணிகளை மீட்டது.

தொடர்ந்து பொய்...

ஆனால், தனக்குத் தெரியாமலேயே தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் தீவிரவாதிகளுடன் ஜஸ்வந்த் சிங் ஆப்கானிஸ்தான் செல்லப் போகிறார் என்பதே எனக்குத் தெரியாது என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார் அத்வானி. இதன்மூலம் வாஜ்பாய் மீது முழுப் பழியைப் போட்டுவிட்டு அவர் தப்ப முயன்று வருகிறார்.

ஆனால், அத்வானி சொல்வது பொய் என்பதை ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜஸ்வந்த் சிங் ஆகியோர் போட்டு உடைத்தனர். இந் நிலையில் இப்போது வாஜ்பாயின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிஜேஷ் மிஸ்ராவும், நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவும் அத்வானி பொய் சொல்வதாகக் கூறி மானத்தை வாங்கியுள்ளனர்.

கசப்பான முடிவு:

இது குறித்து சி.என்.என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பிரிஜேஷ் மிஸ்ரா அளித்துள்ள பேட்டி:

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைப் பயணிகளுடன் பயங்கரவாதிகள் காந்தஹாருக்குக் கடத்திச் சென்றவுடன் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 1999 டிசம்பர் 31ம் தேதி கூடியது. அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோருடன் நானும் அக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

பயணிகளை மீட்க அவர்கள் கேட்டபடி சிறையிலிருந்து 3 பயங்கரவாதிகளை உடனே விடுதலை செய்து அழைத்துச் சென்று ஒப்படைப்பதுதான் ஒரே வழி என்ற கசப்பான முடிவை எடுத்தோம்.

இந்த முடிவு அந்தக் கூட்டம் தொடர்பான குறிப்பேட்டிலும் இடம் பெற்றிருக்கிறது. அதை படித்துப் பார்த்தாலே உண்மை தெரியும். அந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் அனைத்துமே ஒரு மனதாக எடுத்தவைதான். அதை அத்வானி எதிர்க்கவும் இல்லை.

அத்வானியை வாஜ்பாய் நீக்கியிருக்க மாட்டார்...

பின்னர் பாகிஸ்தான் சென்ற அத்வானி, ஜின்னாவை புகழ்ந்து பேசினார். அதை ஆர்எஸ்எஸ் தலைமை கடுமையாகச் சாடியது. ஆனாலும் வாஜ்பாய் அத்வானியைக் கண்டிக்கவில்லை. கட்சியின் தலைவராக வாஜ்பாய் இருந்திருந்தால் ஜஸ்வந்த் சிங்கைக் கட்சியிலிருந்து இப்படி நீக்கி இருக்க மாட்டார்.

ராஜஸ்தானிலும் கட்சித் தலைமைக்கே சவால்விடும் வகையில் வசுந்தரா ராஜே இப்போது நடந்துகொள்வதைப் போன்ற நிலைமை ஏற்பட விட்டிருக்க மாட்டார். வசுந்தராவை அழைத்து, கட்சித் தலைமை என்ன நினைக்கிறது என்பதைக் கூறி, வசுந்தராவை கட்சியின் நலனில் அக்கறை கொண்டு உரிய முடிவை எடுக்க வைத்திருப்பார்.

கட்சிக்குள் வாஜ்பாய் கோஷ்டிகளை வளர்க்கவில்லை. ஆனால், இப்போதுள்ள தலைமை அப்படி பக்குவமாகச் செயல்படத் தவறிவிட்டது என்றார் பிரிஜேஷ் மிஸ்ரா.

அத்வானிக்கு எல்லாம் தெரியும்-யஷ்வந்த்:

இந் நிலையில் யஷ்வந்த் சின்ஹா அளித்துள்ள பேட்டியில்,

பிரிஜேஷ் மிஸ்ரா சொல்வது முழுக்க முழுக்க உண்மை தான். காந்தஹாருக்கு விமானத்தில் பயங்கரவாதிகளை ஏற்றிச் செல்கிறார் ஜஸ்வந்த் சிங் என்பது அத்வானிக்கு முழுமையாகவே தெரியும். இதில் பொய் சொல்லிப் பயனில்லை.

ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்தில் ஜின்னாவைப் புகழ்ந்தும் நேரு, வல்லபாய் படேல் ஆகியோரை விமர்சித்தும் எழுதிய கருத்துகள் தனக்கோ கட்சிக்கோ உடன்பாடல்ல என்று தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஆனால், அதற்கு விளக்கம் கூட கேட்காமல் அவரை கட்சியிலிருந்து நீக்கியது சரியல்ல. அவரை நீக்கிய விதத்தை என்னால் ஏற்க முடியாது.

மிஸ்ரா-சின்ஹாவுக்கு நன்றி: ஜஸ்வந்த்

இவர்களது பேட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜஸ்வந்த் சிங்,

காந்தஹார் விவகாரத்திலும் கட்சியிலிருந்து நீக்கிய விஷயத்திலும் என் பழைய தோழர்கள் மிஸ்ராவும் சின்ஹாவும் எனக்காகப் பரிந்து பேசியிருப்பது மகிழ்ச்சியையும் தெம்பையும் அளித்திருக்கிறது.

அதே சமயம் அத்வானி சொல்வது உண்மை அல்ல என்று அவரோடு இருந்தவர்களே சொல்ல ஆரம்பித்திருப்பது வேதனையாக உள்ளது. இதைத்தான் நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தேன். நிலைமை இந்த அளவுக்கு வரும் வகையில் அத்வானி நடந்திருக்கக் கூடாது.

சில பேருக்கு நினைவு தவறலாம், நடந்தவை மறந்து போகலாம். அதற்காகத் தொடர்ந்து ஞாபக மறதிக்காரரைப் போலவே பேசுவதன் மூலம் அத்வானி எதைச் சாதிக்க விரும்புகிறார் என்று தெரியவில்லை. (இதைத் தான் செலக்டிவ் அம்னீசியா என்றாரோ ஜெயலலிதா!)

காந்தஹாருக்கு நான் போவது பற்றி ஏதுமே தெரியாது என்று ஒரு முறை அல்ல, பலமுறை கூறினார் அத்வானி. பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னது வருத்தமானது. இப்போது உண்மை வெளியில் வந்துவிட்டது என்றார் ஜஸ்வந்த்.

ஜஸ்வந்த் பாக். போகமாட்டார்...

இந் நிலையில் தனது ஜின்னா குறித்த புத்தக விற்பனைக்காக ஜஸ்வந்த் பாகிஸ்தான் போக இருப்பதாக வெளியான செய்திகளை அவரது மகன் மன்வேந்திர சிங் மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், எனக்கு தெரிந்து அவர் பாக்கிஸ்தான் செல்ல விசா எதற்கும் விண்ணப்பிக்கவில்லை. இந்த புத்தகத்தின் பாகிஸ்தான் பிரதியை வெளியிடும் எண்ணமும் இல்லை என்றார்.

அத்வானி மன்னிப்பு கோர வேண்டும்:

இதற்கிடையே அத்வானி பொய் சொன்னது அம்பலமாகிவிட்டதால் அவர் முதலில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

விலக மறுப்பு-ராஜே டெல்லிக்கு அழைப்பு:

இதற்கிடையே பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் உத்தரவை ஏற்று ராஜஸ்தான் மாநில எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக மறுத்து வரும் வசுந்தரா ராஜேவை வரும் 31ம் தேதி டெல்லிக்கு வந்து கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவை சந்திக்குமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

பதவி விலக அவருக்கு 30ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தட்ஸ்தமிழ்

புதன், 26 ஆகஸ்ட், 2009

தொடரும் மின்வெட்டு - மத்திய, தென் சென்னை மக்கள் குமுறல்

சென்னை: தென் சென்னை மற்றும் மத்திய சென்னைப் பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் பெரும் குமுறலுடன் உள்ளனர்.

திருவான்மியூர், அடையார், கோட்டூர்பூரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் மின்சாரத் தடை பெருமளவில் ஏற்பட்டு வருகிறதாம். இதனால் தூங்க முடியாமலும், உரிய நேரத்தில் எழுந்திருக்க முடியாமலும் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இதில் முஸ்லீம்கள் தான் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர் என்று கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஜரீனா பெளஸா என்பவர் கூறுகிறார்.

அவர் கூறுகையில், அதிகாலையில், நோன்பு திறக்கும் நேரத்திலும், அதேபோல நோன்பு முடியும் நேரத்திலும் மின்சாரம் போவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதிகாலையில் மின்சாரம் போவதால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் போகிறது என்றார்.

மின்வெட்டால் ஜரீனா தனது வீட்டில் வைத்திருக்கும் மருந்துகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். ஸ்கிளீராஸிஸ் நோய்க்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் விலை உயர்ந்தவை. ஒரு அட்டை மருந்து ரூ. 20,000 விலை கொண்டது. ப்ரீஸரில்தான் இதை வைக்க முடியும். மின்சார வெட்டால் இந்த மருந்துகள் பாதிக்கப்படுவதாக அவர் குமுறுகிறார்.

ரேவதி என்பவர் கூறுகையில், எனது 3 வயது மகனும், 7 வயது மகளும் இரவெல்லாம் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். அதிகாலையில் வேகமாக எழுந்திருத்து பள்ளிக்குப் போவதால் அவர்கள் வகுப்பறையில் தூங்கும் நிலை ஏற்படுகிறது. தொடர் மின்வெட்டால் அனைவருக்குமே கடும் பாதிப்பு ஏற்படுகிறது என்றார்.

இப்படி தொடர்ந்து மின்தடை ஏற்படுவதற்குக் காரணம், சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு தேவையான விளக்குகளைப் போடுவதற்காக மின்சாரத்தை திருட்டுத்தனமாக எடுப்பதுதான் காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் மின்தடையும், குறைந்த மின்அழுத்தமும் ஏற்படுவதாக மக்கள் குமுறுகிறார்கள். இதைத் தடுக்க போலீஸார் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அடையாரைச் சேர்ந்த சாமுவேல் கூறுகையில், ஜூலை மாதத்தைப் போல இப்போது வெயில் இல்லை. எனவே பெரும்பாலான வீடுகளில் இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் ஏசி போடுவதில்லை. அப்படி இருந்தும் மின்வெட்டு இந்த அளவுக்கு ஏற்படுவது மிகவும் மோசமானது என்றார்.

ஏன் இந்த அவல நிலை என்று மின்துறை அதிகாரிகளிடம் கேட்டால், வேளச்சேரி - அடையார் - கோட்டூர்பும் சப்ளை லைன் ஒன்றில் பழுது ஏற்பட்டிருப்பதாகவும், அதனால்தான் இந்த திடீர் மின்தடைக்குக் காரணம் என்றும் தெரிவித்தனர்.

மேலும் சமீப காலமாக ஏசிக்களின் எண்ணிக்கை பெருகி விட்டதும் மின் உபயோகம் அதிகரிக்க முக்கிய காரணம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாலையோர பிள்ளையார் சிலைகளுக்கு தேவையான மின்சாரத்தை யாரும் திருட்டுத்தனமாக எடுப்பதில்லை என்றும் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தியோ அல்லது முறையாக அனுமதி வாங்கியோதான் பயன்படுத்துகிறார்கள் என்றும் மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜின்னா மதச்சார்பற்றவர், ஒருங்கிணைந்த இந்தியாவையே விரும்பினார் ஜின்னா- சுதர்சன்

Sudarshan
இந்தூர்: பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்தாலும் முகமது அலி ஜின்னா மதச்சார்பற்றவராகவே இருந்தார் என்று ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சுதர்சன் கூறியுள்ளார்.

ஜின்னாவை புகழ்ந்து எழுதியதற்காக பாஜகவிலிருந்து மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பாஜகவின் முக்கிய அங்கமான ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் சுதர்சன் ஜின்னாவை ஆதரித்துப் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ஒரு கட்டத்தில் லோகமான்ய திலகருடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க முகம்மத் அலி ஜின்னா பாடுபட்டார்.

ஜின்னாவுக்கு பல்வேறு முகங்கள் உண்டு. வரலாற்றை சரியாக படித்தால் அவர் திலகருடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இந்தியா உருவாக பாடுபட்டது நன்றாகத் தெரியும்.

மகாத்மா காந்தி வலியுறுத்தியிருந்தால் பாகிஸ்தான் பிரிவினையைக்கூட ஜின்னா கைவிட்டிருப்பார். அப்படிப்பட்ட மிகச் சிறந்த மதச்சார்பற்றவர் தான் ஜின்னா.

துருக்கியில் காலிப் ஆட்சியை, பிரிட்டிஷார் கலைத்ததைக் கண்டித்து அலி சகோதரர்கள் இந்தியாவில் கிலாஃபத் இயக்கத்தைத் தோற்றுவித்தனர். பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட கிலாஃபத் இயக்கத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்து-முஸ்லிம்களின் ஒற்றுமை வலுவடையும் என காந்திஜி கருதினார்.

ஆனால் இதற்கு ஜின்னா எதிர்ப்புத் தெரிவித்தார். கிலாபத் இயக்கத்தில் தலையிட வேண்டாம், அரசியலில் மதத்தை கொண்டு வர வேண்டாம் என்றார். அவரது வாதத்தை காந்தி உள்பட யாரும் ஏற்கவில்லை. இது அவருக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. இதனால் அவர் காங்கிரஸிலிருந்து அவர் வெளியேறினார்.

காங்கிரஸை விட்டு விலகியதும் இங்கிலாந்து சென்ற அவர் 1927ம் ஆண்டுதான் மீண்டும் இந்தியா திரும்பினார்.

பிரிவினை வேண்டாம் என காந்தி திட்டவட்டமாக ஜின்னாவிடம் வலியுறுத்தியிருந்தால் நிச்சயம் பிரிவினை வந்திருக்காது. ஆனால் காந்தி அதைச் செய்யவில்லை.

பாகிஸ்தான் குறித்து அத்வானி கருத்து தெரிவித்தபோது அதற்கு ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால் அத்வானி உரிய விளக்கத்தை அளித்ததால் அதைத் நான் ஏற்றுக் கொண்டேன்.

அதே நேரத்தில் பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் சிங் வெளியேற்றப்பட்டது அந்தக் கட்சியின் உள் விவகாரம். அதில் நான் கருத்து சொல்ல ஏதுமில்லை என்றார் சுதர்சன்.

சுதர்சன் அளித்த பேட்டி குறித்து கருத்துத் தெரிவித்த ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், பிரிவினைவாத வரலாறு குறித்து மட்டுமே சுதர்சன் பேசியுள்ளார் என்று கூவிட்டு நிறுத்திவிட்டார்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

பணம் கேட்டு மிரட்டல் - குறி சொல்லும் பெண் சாமியார் கைது

திருவண்ணாமலை: மது குடித்து விட்டு குறி சொல்லும் பெண் சாமியார் பண மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தையையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை புது கார்கானா தெருவை சேர்ந்தவர் துரை. 60 வயதான இவர் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் சுதா. இவருக்கு 27 வயதாகிறது.

இருவரும், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், கருப்பசாமி கோட்டை என்ற ஆசிரமத்தை நிறுவினர். அங்கு சுதா கடந்த 3 மாதமாக கருப்பசாமி தன்மேல் வந்து அருள்வாக்கு கூறுவதாகச் சொல்லி, பக்தர்களுக்கு குறி சொல்லி வந்தார்.

சுதா குறி சொல்லும் போது, அவருக்கு ஒரு வித சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக வேல் ஒன்றை அவரது தந்தை துரை வழங்குவார். பின்னர் குறி சொல்லும் சுதாவுக்கு பக்தர்கள் காணிக்கையாக பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களை வழங்குவார்கள். அந்த மதுபானங்களை சுதா அப்படியே குடித்தபடியும், சுருட்டை எடுத்துப் புகைத்தபடியும் குறி சொல்வாராம்.

சுதா காணிக்கை விஷயத்தில் படு கறாராக இருப்பாராம். குறி சொல்லி பலிக்கவில்லையே என்று வந்தாலும் கூட அவர்களிடமும் பணம் பறிப்பாராம் சுதா.

அவர் மீது போலீஸில் பொதுமக்கள் பெருமளவில் புகார்களைக் குவித்தனர். இதையடுத்து குறி சொல்வதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்ததாக சுதா, தந்தை துரை ஆகிய இருவரையும் இன்ஸ்பெக்டர் கெங்கைராஜ் கைது செய்தார்.

இருவர் மீதும் மோசடி மற்றும் மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோடி மீது நடவடிக்கை-வாஜ்பாயை தடுத்த அத்வானி: ஜஸ்வந்த் சிங்!

டெல்லி: குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தையடுத்து அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியை பதவி நீக்கம் செய்ய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்தார். ஆனால், அதை அத்வானி தான் தடுத்தார் என்று பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

மேலும் விமானப் பயணிகளை மீட்க தீவிரவாதிகளை விடுதலை செய்தது தனக்குத் தெரியாது என்று அத்வானி சொல்வது பச்சைப் பொய் என்றும் அவர் கூறியுள்ளார்.

என்டிடிவியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சேகர் குப்தாவின் 'வாக் த டாக்' நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜஸ்வந்த் சிங் கூறுகையில்,

2002ம் ஆண்டில் குஜராத்தில் மதக் கலவரம் தீவிரமாக நடந்த நேரம் அது. பிரதமர் வாஜ்பாய், அத்வானி, நான், அருண் ஷோரி ஆகியோர் பாஜக கூட்டத்தில் பங்கேற்க கோவாவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தோம்.

அப்போது, வாஜ்பாய் எங்களிடம், குஜராத் விஷயத்தில் நாம் என்ன செய்வது என்றார். அவருக்கு யாரும் பதில் சொல்லவில்லை. நிசப்தம் நிலவியது. பின்னர் அவரே தொடர்ந்து, குஜராத் விஷயத்தில் அப்படியே விட்டுவிட முடியாது. (நரேந்திர மோடி) விஷயத்தில் ஏதாவது கடும் நடவடிக்கை அவசியம். என்ன செய்யலாம் என்றார்.

அவர் அத்வானி எழுந்து டாய்லெட் போய்விட்டார்.

இதையடுத்து என்னிடம் திரும்பிய வாஜ்பாய், அவரிடம் (அத்வானி) கேளுங்கள்.. என்ன செய்வது என்று கேட்டுச சொல்லுங்கள் என்றார்.

டாய்லெட்டில் இருந்து திரும்பி வந்த அத்வானியிடம் நான் போய், குஜராத் விவகாரத்தில் என்ன செய்யலாம் என்று கேட்டேன்.

அதற்கு அத்வானி, (நரேந்திர மோடி மீது) நடவடிக்கை ஏதாவது எடுத்தால் பெரும் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார்.

இதன்மூலம் நரேந்திர மோடி மீது எந்த நடவடிக்கையையும் எடு்க்கவிடாமல் வாஜ்பாயை அத்வானி தடுத்துவிட்டார். இதனால் மோடி விஷயத்தில் வாஜ்பாய் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலும் குஜராத் கலவர நாட்களில் மிகவும் வருத்தத்தோடு தான் இருந்தார் வாஜ்பாய்.

ஒரு கட்டத்தில் கட்சி விவகாரங்களால் மிகவும் புண்பட்டுப் போயிருந்த வாஜாய் ராஜினாமா செய்யக் கூட தயாராவிட்டார். ஒரு நாள் நான் வீட்டில் இருந்த நிலையில் மறைந்த பிரமோத் மகாஜனிடம் இருந்து போன் வந்தது. சீக்கிரம் பிரதமர் அலுவலகத்துக்கு வாருங்கள் என்றார்.

நானும் விரைந்தேன். அப்போது என்னிடம் ஓடிவந்த பிரமோத், வாஜ்பாய் ராஜினாமா செய்யத் தயாராகிறார். அவரது செயலாளரை அழைத்து ராஜினாமா கடிதம் தயார் செய்யச் சொல்லியிருக்கிறார் என்றார்.

நான் வாஜ்பாயிடம் ஓடினேன். அப்போது அவரது செயலாளர் ராஜினாமா கடித நோட்ஸ் எடுக்க வாஜ்பாயிடம் வந்தார். நான் அவரை அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுங்கள்.. இப்போதைக்கு வாஜ்பாய் கூப்பிட்டாலும் வராதீர்கள் என்று திருப்பி அனுப்பினேன்.

நீ என்ன செய்கிறாய் என்று என்னைத் திட்டியபடியே, ஒரு பேப்பரை எடுத்து தானே கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுத ஆரம்பித்தார் வாஜ்பாய். நான் அவரது கையைப் பிடித்துக் கொண்டேன். பேப்பரை பறித்துவி்ட்டு, தயவு செய்து இந்தக் காரியத்தை செய்துவிடாதீர்கள் வாஜ்பாய்ஜி என்று கெஞ்சினேன். நீண்ட முயற்சி்க்குப் பின் ஒருவழியாக அவரை அமைதிப்படுத்தினேன்.

என் மீது பாஜக நடவடிக்கை [^] எடுக்குமாம்.. அதை அத்வானி அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பாராம்.. இந்தச் செயல் மூலம் அத்வானி தார்மீகரீதியி்ல் தரம் தாழ்ந்துவிட்டதையே காட்டுகிறது.

மத்திய அரசு [^] மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துபோது ஏற்பட்ட ஓட்டு நோட்டு விவகாரத்தில், பாஜக எம்பிக்களை விட்டு நாடாளுமன்றத்தில் பணத்தை கொட்ட வைத்து நடத்தப்பட்ட நாடகத்தை நான் கண்டித்தேன். இந்த விவகாரத்திலிருந்து நாம் விலகி இருப்பதே நல்லது என்று அத்வானியிடம் கூறினேன். அவர் கேட்கவில்லை. அவரை அவரது அலுவலகத்திலேயே சந்தித்து இது வேண்டாம் என்றேன். அவர் கேட்கவில்லை.

ஆனால், என்ன ஆனது.. அப்படியெல்லாம் நாடாளுமன்றத்திலேயே பணத்தைக் கொட்டி நாடகம் போட்டதால் தேர்தலில் ஏதாவது வித்தியாசம் ஏற்பட்டதா?. தேர்தலில் இதனால் பாஜகவுக்கு ஓட்டு கிடைத்ததா?. இல்லையே.

1999ம் ஆண்டில் இந்திய விமானம் காண்டஹாருக்குக் கடத்தப்பட்டபோது மசூத் அஸார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை விடுவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டதில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிக்கும் முழுப் பங்கு உண்டு. அவர்களை விடுவிப்பது தொடர்பாக பிரதமர் தலைமையில் கேபினட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபோது அங்கு அத்வானியும் இருந்தார்.

(ஆனால், சமீபத்திய மக்களவைத் தேர்தலின்போது, தனக்கு தீவிரவாதிகள் [^] விடுவிக்கப்பட்டது தெரியாது என்று அத்வானி கூறித் திரிந்தது குறிப்பிடத்தக்கது).

உள்துறை அமைச்சருக்குத் தெரியாமல், அதுவும் அத்வானி போன்றவருக்குத் தெரியாமல் தீவிரவாதிகளை விடுவித்துவிட முடியுமா?.

முதலில் அந்த விமானத்தை அம்ரிஸ்தரில் இருந்து காண்டஹாருக்கு தப்ப விட்டதே பெரும் தவறு. இந்தியாவை விட்டு எப்போது அந்த விமானம் வெளியே போனதோ அப்போதே நமக்குத் தோல்வி ஏற்பட்டுவிட்டது. விமானம் அம்ரிஸ்தரை விட்டுச் சென்றதற்கு உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி தானே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றார் ஜஸ்வந்த் சிங்.

(3 தீவிரவாதிகளை தனி விமானத்தில் அழைத்துச் சென்று காண்டஹாரி்ல் தலிபான்களிடம் ஒப்படைத்துவிட்டு 160 இந்திய விமானப் பயணிகளை திருப்பி அழைத்து வந்தவர் அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் என்பது குறிப்பிடத்தக்கது).

வாஜ்பாயை சந்திக்கும் ஜஸ்வந்த்?:

இந் நிலையில் ஜஸ்வந்த் சிங், இன்று பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயை சந்திப்பார் என்று தெரிகிறது. வாஜ்பாய் [^]க்கு மிக நெருக்கமானவரான ஜஸ்வ்த் கட்சியை விட்டு நீக்கப்பட்டபின் அவரை சந்திப்பது இதுவே முதன் முறையாகும்.

அத்வானி-ராஜ்நாத் சந்திக்கும் வசுந்தரா:

இந் நிலையில் ராஜஸ்தான் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை விட்டு விலக மறுத்து, கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்குடன் மோதிய வசுந்தரா ராஜே இன்று அத்வானியையும் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்கிறார்.

அத்வானி கோஷ்டியைச் சேர்ந்த இவருக்கு எதிராக ஜஸ்வந்த் போர்க் கொடி தூக்கியதும் அவரது நீக்கத்துக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

எங்களுக்குத் தொடர்பில்லை-ஆர்எஸ்எஸ்:

இந் நிலையில் பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டதில் ஆர்எஸ்எஸ்சுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அதன் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ்சுடன் நெருங்கிய தொடர்பு இல்லாததும் ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

படேலை அவமானப்படுத்திய பாஜக-லாலு:

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் [^],

நாட்டின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் சர்தார் படேல். எப்போது அத்வானியை இரும்பு மனிதர் என்று பாஜகவினர் அழைத்தார்களோ அப்போதே சர்தார் படேல் அவமானப்பட்டு விட்டார் என்றார்.

தமிழக இடைத்தேர்தல்:படு கேவலமாக தோற்ற பா.ஜ.க‌



தமிழகத்தில் நடைபெற்ற 5 சட்டமன்ற இடைத்தேர்தலில் தனியாக போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சியை அத்தொகுதிகளின் மக்கள் முற்றிலும் ஒதுக்கி தள்ளிவிட்டனர்.
மதவாதக்கட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் தமிழக வாக்காளர்கள்.

முகவரியில்லாமல் இருந்த சங்க்பரிவாரத்தின் அரசியல் கட்சியான பாரதீய ஜனதா கட்சியை தமிழக வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தி அண்ட இடம் கொடுத்தவர்கள் தமிழகத்தின் திராவிடக்கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள்.பின்னர் இக்கட்சிகள் பா.ஜ.க வை கைக்கழுவியதை அடுத்து கடந்த பாராளுமன்றத்தேர்தலில் நடிகர்கள் சரத்குமார்,கார்த்திக் ஆகியோரின் சில்லறைக்கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது.ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாமல் களத்திலிருந்து துரத்தப்பட்டது.இந்நிலையில்தான் தமிழகத்தின் 5 சட்டமன்றத்தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் நம்பிக்கையிழக்காமல் போட்டியிட்டது.அ.தி.மு.க இடைத்தேர்தலை புறக்கணித்ததால் சந்தடிசாக்கில் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் இருந்த பா.ஜ.க விற்கு கேவலமான தோல்வியை வழங்கி 5 சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

ஆப்பசைத்த குரங்கான பா.ஜ.க எதிர்காலத்தை நினைத்து விழி பிதுங்கி நிற்கிறது.பாசிச பா.ஜ.க விற்கு தமிழக மண்ணில் இடம் இல்லை என்று மீண்டும் ஒரு முறை தீர்ப்பளித்த 5 சட்டமன்ற வாக்காளர்களுக்கும் மனித நேயம் கொண்டவர்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

5 தொகுதியில் பா.ஜ.க பெற்ற வாக்குகள் விபரம்:

இளையாங்குடியில் 1,487, தொண்டாமுத்தூரில் 9,045, பர்கூரில் 1,482, கம்பத்தில் 946, ஸ்ரீவைகுண்டத்தில் 1,797 வாக்குகளையே பெற்றுள்ளது. இந்தக் கட்சி 5 தொகுதிகளிலும் சேர்த்து 14,757 வாக்குகளைத் தான் பெற்றுள்ளது.

இந்துக்களே விழிமின்,எழுமின், கல்கி வந்துவிட்டார். வாருங்கள் அவரைப் பின்பற்றுவோம்!!மோட்சம் பெறுவோம்!!!

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

இதை தமிழில் மொழி பெயர்த்த சகோதரி சுமஜ்லா அவர்களுக்கு நன்றி!!


--------------------------------------------------------
ஆங்கிலத்தில் படிக்க http://comparativestudy.blogspot.com

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 13 பேர் பலி: அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகிலே சாலைவிபத்துக்கு அதிக உயிர்களை பலி கொடுக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இங்கு ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு சுமார் 13 பேர் பலியாகி வருகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தனது முதல் சாலை பாதுகாப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போது ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் சுமார் 12 லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால் 2030ம் ஆண்டு சாலை விபத்துக்கள் பெரும் பிரச்சனையாக மாறிவிடும். உலக அளவில் அதிக உயிர்களை பலி கொள்ளும் வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடிக்கும்.

தற்போது சாலை விபத்துக்களிலும் உயிரிழப்பவர்களில் 90 சதவீதம் பேர் வளரும் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்தவர்கள். ஆனால், இங்கு உலக வாகனங்களில் 48 சதவீதம் தான் இயக்கப்படுகிறது. மீதம் 52 சதவீத வாகனங்கள் இயக்கப்படும் வளர்ந்த நாடுகளில் விபத்துக்களில் உயிரிழப்பு பெருமளவுக்கு தடுக்கப்பட்டுவிட்டது.

அதேநேரம் சாலைவிபத்தில் இந்தியர்கள் தான் அதிகம் பலியாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட வேண்டியுள்ளது. இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கூட சாலைவிபத்தில் பலியாவோர்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 2007ல் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பலியாகி இருக்கிறார்கள். ஆனால், சீனாவில் வெறும் 89 ஆயிரத்து 455 பேரும், அமெரிக்காவில் 42 ஆயிரத்து 642 பேரும் பலியாகியுள்ளனர். இது இங்கிலாந்தில் வெறும் 3 ஆயிரத்து 298 ஆக இருக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 13 பேர் பலியாகி வருகின்றனர். அதாவது 5 நிமிடத்துக்கு ஒருவர் பலியாகுகிறார்கள்.

இந்தியாவில் அதிக சாலைவிபத்துகள் ஆந்திராவில் தான் நடக்கிறது. மொத்த விபத்துக்களில் 12 சதவீதம் இங்கு நிகழ்கிறது. இதை தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 11 சதவீத விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இந்தியாவில் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதே காரணம். சராசரி வேகத்தை விட 5 சதவீதம் அதிவேகத்தில் செல்பவர்களுக்கு விபத்தினால் காயம் ஏற்படும் வாய்ப்பு 10 சதவீதமும், மரணம் சம்பவிக்கும் அபாயம் 20 சதவீதமும் அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஐநாவின் ஆசிய சாலை பாதுகாப்பு கமிஷன் தலைவர் ரோகித் பலுஜா கூறுகையில்,

இந்தியாவில் விஞ்ஞானபூர்வமான சாலை பாதுகாப்பு முறைகள் இன்னும் கொண்டு வரப்படவில்லை. இந்த முறைகள் 1930களில் இருந்தே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்து வருகிறது என்றார்

காஷ்மீர்:என்ன நடக்குது அங்கே ? புத்தக வெளியீட்டு விழா !



(பெரிதாக காண படத்தின் மேலே சொடுக்கவும்)

இடம் - புக் பாய்ண்ட் அரங்கம்,அண்ணா சாலை, ஸ்பென்செர் எதிரில்
நாள் -19.08.2009 மாலை 6 மணிஅளவில் , புதன் கிழமை
தலைமை
வழக்கறிஞர் மு.ஜைனுல் ஆபிதீன் (செயலாளர்,தமுமுக மாணவரணி)
வரவேற்புரை
தாம்பரம் அசார்
சிறப்புரை
பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், பேரா.ஹாஜா கனி,தோழர்.சுகுமாரன்.
ஏற்புரை
பேரா.மார்க்ஸ்
நன்றியுரை
புதுமடம் அனிஸ்

மறைக்கப்பட்ட உண்மைகளை அறிய அழைக்கிறது

த.மு.மு.க மாணவரணி

இந்தியா&பாகிஸ்தான் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா காரணம் அல்ல--பா.ஜனதா தலைவர் ஜஸ்வந்த் சிங்!


இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளையர்கள் சுதந்திரம் அளித்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்று 2 நாடுகளாக உருவானது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனிநாடாக உருவாகவும், நாட்டின் பிரிவினைக்கு அவரே காரணமாக இருந்தார் என்று முஸ்லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவைக் கூறுவார்கள். இது குறித்து, பா.ஜனதா கட்சியின் முன்னாள் வெளியுறவு மந்திரியும், மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் ஜின்னா-இந்தியா: பார்ட்டிசன், இன்டிபென்டன்ஸ் என்ற 674 பக்க சுயசரிதையை எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தின் வெளியீடு இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடக்கிறது.
இந்த புத்தகத்தில், ஜஸ்வந்த் சிங், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா காரணம் அல்ல என்று அவரை புகழ்ந்தும் நேருவே இந்தியா உடைய காரணமாக இருந்தார் என குற்றம் சாட்டியும் உள்ளார்.நேரு விரும்பிய இந்தியாசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த புத்தகம் குறித்து, ஜஸ்வந்த் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, உயர் அதிகாரம் கொண்ட மத்திய ஆட்சி ஒருங்கிணைந்த இந்தியாவில் அமையவேண்டும் என்று விரும்பினார். அதுதான் அவர் விரும்பிய இந்தியாவாகவும் இருந்தது. ஆனால் முகமது அலி ஜின்னா, கூட்டு அதிகார ஆட்சி முறையை விரும்பினார். அதை மகாத்மா காந்தியும் கூட ஏற்றுக் கொண்டார். ஆனால் நேருவுக்கு இதில் உடன்பாடு கிடையாது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடக்கும் 1947ம் ஆண்டு வரை நேரு இதே நிலையைத்தான் கொண்டிருந்தார்.அப்போது காங்கிரஸ் மட்டும் கூட்டு அதிகாரப் பகிர்வு கொண்ட ஆட்சி முறைக்கு ஒப்புக் கொண்டிருந்தால் ஒருங்கிணைந்த இந்தியா என்ற நிலையை நாம் அடைந்திருப்போம். ஆனால் ஜவகர்லால் நேரு அதிக அதிகாரம் கொண்ட மத்திய ஆட்சி முறையை விரும்பியதால்தான் பிரச்சினையே ஏற்பட்டது.நேருவுக்கு பதிலாக, மகாத்மா காந்தி, ராஜாஜி அல்லது ஆசாத் ஆகியோர் இது குறித்து இறுதி முடிவை எடுத்திருந்தால் நிச்சயம் ஒருங்கிணைந்த இந்தியாவை நாம் அடைந்திருப்போம் என்றே நான் நம்புகிறேன்.வெறுப்பு கிடையாதுமுகமது அலி ஜின்னாவுக்கு இந்துக்கள் மீது வெறுப்பு கிடையாது. அப்படி நினைப்பது முற்றிலும் தவறானது. அவருக்கு காங்கிரசின் கொள்கைகளில்தான் கருத்து வேறுபாடு இருந்தது. மற்றபடி இந்துக்கள் மீது அவர் வெறுப்பு கொண்டிருக்கவில்லை.எனவே, பிரிவினையை ஏற்படுத்திய வில்லனாக முகமது அலி ஜின்னாவை கருதக் கூடாது. தவிர, பிரிவினைக்கான முதன்மையான காரண கர்த்தாவும் அவர் அல்ல.மேற்கண்டவாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.
இந்தியா&பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜவகர்லால் நேருவும், காங்கிரசும்தான் முக்கிய காரணம் என்று ஜஸ்வந்த் சிங் கூறியிருப்பதால் புதிய அரசியல் சர்ச்சை உருவாகி இருக்கிறது.

நன்றி;தினத்தந்தி

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

ஆங்கிலேயர்களின் சிம்மசொப்பனம் ஹைதர்-திப்பு!


செய்தியின் மீது கிளிக் செய்து படிக்கவும்.
நன்றி;தினத்தந்தி

சத்தியத்தின் பாதையில் கல் போட்டாலென்ன? முள் போட்டாலென்ன?

சர்வதேசப் பிரிவு: இத்தாலி நாட்டு முஸ்லிம் விவசாய மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் எதிர்வரும் ரமழானில் நோன்பிருப்பதை தடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றம் தடைச்சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.



மேற்படிச் சட்டத்தின்படி, முஸ்லிம் தொழிலாளி நோன்பு நோற்றால், இதுகுறித்து முதலில் எச்சரிக்கப்படும். இதுதொடருமாயின் குறித்த தொழிலாளியை வேலை நிறுத்தம் செய்ய முதலாளிக்கு அதிகாரமுண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று முஸ்லிம் தொழிலாளர் நோன்பிருக்காத வகையில் பலாத்காரமாக நீர்புகட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் தொடருகின்ற இஸ்லாமிய வளர்ச்சி, அந்நாட்டுத் தலைவர்களை தளரச் செய்துள்ளது. இதனால் இப்படியான சட்டங்களை ஏற்படுத்துவதன் மூலம் முஸ்லிம்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்க முயற்சித்து வருகின்றனர். இவற்றின் மூலம் இஸ்லாமிய எழுச்சியை முடக்குவதே இவர்களின் குறிக்கோளாகும்.
சத்தியத்தின் பாதையில் கல் போட்டாலென்ன? முள் போட்டாலென்ன? உபாதை செய்யும் இது போன்ற செயல்கள் நம் ஈமானை பலப்படுத்துமே தவிர நம் ஈமான் குன்றிவிடாது.மேலும் இது அல்லாஹ் தந்த சத்தியமார்கம் இதை சுன்டைக்காயெல்லம் அழித்துவிட முடியாது. மேலும், வேகமாக இஸ்லாம் இத்தாலியில் வளரக்கூடிய ஆரம்பத்தின் அறிகுறிதான் இது.

சனி, 15 ஆகஸ்ட், 2009

ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு ரகசியம் கசிவு-சிபிஐ

Currency
டெல்லி: 2005ம் ஆண்டு அச்சிடப்பட்ட நோட்டுகளின் வடிவமைப்பு ரகசியம் அடங்கிய 'டெம்ப்ளேட்' (template) வெளியில் கசிந்துவிட்டதால் தான் 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிகரித்துவிட்டதாக என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

நாட்டில் கள்ள நோட்டு அச்சடிப்பு அதிகரித்து வருவது குறித்து சிபிஐ, வருவாய் புலனாய்வுப் பிரிவினர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், மத்திய தடயவியல் ஆய்வக அதிகாரிகள் அடங்கிய குழு தீவிர விசாரணை நடத்தியது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும்போது அதில் பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படும் சங்கேத குறியீடு, வடிவமைப்பு ரகசியங்கள் அடங்கிய 'டெம்பிளேட்' கள்ள நோட்டு அச்சிடும் கும்பல்களின் கையில் எப்படியோ போய்ச் சேர்ந்துள்ளது.

இதைக் கொண்டு தான் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை இந்தக் கும்பல்கள் அச்சிட்டு வெளியிட ஆரம்பித்துள்ளன.

கள்ள நோட்டுகள் அச்சடிப்போருக்கு அது எந்த காகிதத்தில் அச்சடிக்கப்படுகிறது, அதற்கு எந்த வகை மை பயன்படுத்தப்படுகிறது, அது எங்கு கிடைக்கும், நோட்டுகளின் மையத்தில் உள்ள சில்வர் பார், வாட்டர் மார்க் வடிவமைபபு போன்ற தகவல்கள் எளிதாகக் கிடைத்து வருகின்றன என்றும் சிபிஐ கூறியுள்ளது.

மேலும் எந்த வகையான மையை, எந்தெந்த அளவில் பயன்படுத்தினால் உண்மையான நோட்டுகளுக்கு நிகராக தன்மையைக் கொண்டு வர முடியும் போன்ற விவரங்களையும் இந்தக் கும்பல்கள் அறிந்து வைத்துள்ளன என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த ரகசியம் வெளியில் கசிந்ததில் பாகிஸ்தானின் உளவுப் பிரிவின் கைவரிசை இருக்கக் கூடும் என்று சந்தேகி்க்கப்படுகிறது.

நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் வரை ரூ. 1,69,000 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வெளியடும் சுதந்திர திருநாள் வாழ்த்துச் செய்தி

நாட்டு மக்கள் அனைவருக்கும் 63வது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பெரும் மகிழ்ச்சி அடைகிறது. இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடாக இன்று பரிணமித்திருப்பதும் அதன் குடிமக்களாக நாம் வாழ்வதும் மகிழ்ச்சிகுரியதாகும். இருப்பினும் நமது நாட்டின் குடிமக்களில் கனிசமானவர்கள் இன்னும் வறுமையின் கடும் பிடியில் சிக்கி தவிப்பதும், கழிவிடம் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பதும் வேதனை அளிப்பதாக உள்ளது. அரசு இதற்காக பல திட்டங்கள் தீட்டினாலும் இம்மக்களின் துன்பங்கள் முழுமையாக துடைக்கப்படவில்லை. இந்த விடுதலை திருநாளில் வறுமையில் சிக்கித் தவிக்கும் நமது சக குடிமக்களின் துன்பங்களையும் துயரங்களையும் உறுதி எடுப்போமாக.

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

செத்துவிட்டதய்யா சனநாயகம்.

குஜராத் கலவர வழக்கில் குற்றவாளிகள் 29 பேர் விடுதலை
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கிலிருந்து 29 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிராக மிகப் பெரிய கலவரத்தை சங் பரி்வார் அமைப்புகள் தொடங்கின. இதில் சிக்கி 10,000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.பல்வேறு இடங்களில் நடந்த கலவரங்கள், கொலைகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அபாசனா என்ற கிராமத்தில் 6 முஸ்லீம் சமுதாயத்தினர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் 31 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் இருந்தபோது 2 பேர் இறந்து விட்டனர். மற்ற 29 பேர் மீதும் விசாரணை நடந்து வந்தது.இந்த நிலையில் இவர்கள் 29 பேர் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து விட்டது.
நாளை கொலைக்குற்றவாளிகள் அவர்கள் இந்துகளாக இருந்தால் குறிப்பாக முஸ்லிம்களை கொலை செய்தால் சி.பி.ஐ உள்பட எந்த உயர் துறையும் கைது செய்யவோ ,வழக்குத் தொடரவோ முடியாது போகலாம்!காரணம் மத்திய அரசு சொல்வதை குஜராத் கேடி அரசு எதையும் பின்பற்றுவதில்லை காவிகள் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூச்சலிடுவதுபோல் நாட்டில் குஜராத்திற்கு சிறப்பு அங்கிகாரம் ,சட்டம் கொண்டு வந்தாலும் வரலாம்

விசாரணை சிறைவாசிகளை விடுதலை செய்! சென்னை ஊர்வலத்தில் எழுச்சி!!

இனியவன்



ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளான செப்டம் பர் 15ஆம் தேதி அன்று 7 வருடம் தண்டனையை அனுபவித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை தமிழக அரசு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்து வருகிறது. ஆனால் ஏழு வருடம் முடித்த சிறைக் கைதி களின் பட்டியலில் மதக் கலவர வழக்குகளில் சம்பந்தப்பட்ட தாகக் கூறி முஸ்லிம் கைதிகள் விடுதலையாவதை அரசு தடுத்து வருகிறது. மேலும் விசாரணை என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்வாடி வரக்கூடிய கைதிகள் தமிழக சிறைகளில் பலர் உள்ளனர். குணங்குடி அனிபா, தடா ரஹீம் போன்ற வர்கள் விசாரணைக் கைதிகளாகவே சுமார் 11 வருடங்களாக சிறையில் வாடி வருகின்றனர். இவர்களின் மீதான வழக்கே முடியும் தருவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் களுக்கு எதிராக எந்த சாட்சியங் களும் இல்லாத சூழ்நிலையிலும் இவர்கள் இதுவரை விடுதலை செய்யப் படாதது நீதித்துறைக்கு பெரும் களங்கமாகும்.


இந்நிலையில் வரும் அண்ணா பிறந்த நாளன்று ஏழு ஆண்டுகள் தண்டனை முடிந்த ஆயுள் சிறைவாசிகள் லி அவர்கள் எக்குற்றத்தைப் புரிந்திருந் தாலும் பாரபட்சமின்றி அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், ஆயுள் தண்டனை பெறாத மற்ற சிறை யாளிகளுக்கு தண்டனை குறைப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும், ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ள விசாரணை சிறைவாசிகளை பிணையில் விடுதலை செய்ய உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் மிகப் பெரும் பேரணி ஒன்றை தமிழக மக்கள் உரிமைக் கழகம் ஒருங்கிணைத் திருந்தது.



காலை 11 மணியளவில் மன்றோ சிறையி­ருந்து புறப்பட்ட இப்பேர ணியை பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல் லாஹ் துவக்கி வைத்தார். இப்பேரணி யில் நூற்றுக்கணக்கான மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். தமுமுக மற்றும் ம.ம.க.வினர் பெருளவில் பங்குகொண்டது குறிப் பிடத் தக்கது. கோஷங்களை எழுப்பிய படி கைகளில் கோரிக்கை வாசகங்கள் எழுதிய அட்டைகளோடு நீண்ட வரிசையில் சென்ற பேரணியை தமிழ மக்கள் உரிமை கழக ஒருங்கிணைப்பு செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி தலைமை ஏற்று நடத்திச் சென்றார். அவருடன் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பேராசிரியர் கல்யாணி, தோழர் தியாகு, தோழர் பாவேந்தன், தோழர் வடிவு, தோழர் சங்கர் ஆகியோர் முன்வரிசையில் முழக்க மிட்டபடி பேரணியை வழிநடத்திச் சென்றனர்.

பேரணியின் பின்வரிசையில் பெண் ளும் அணிவகுக்க தேசிய லீக் இனாயத்துல்லாஹ், அக்ரம்கான் ஆகியோர் கோஷ மிட்டபடியே வந்தனர். பேரணியில் வந்தவர்கள் விசா ரணை சிறைவாசிகள் குணங்குடி அனிபா, தடா ரஹீம் ஆகியோரை விடுதலை செய்! 17 ஆண்டுகளாய் சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்! என முழக்கமிட்டனர்.



பேரணி கட்டுக்கோப்பாக போக்குவரத்துக்கு எந்த இடை யூறும் இன்றி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை வந்தடைந்தது. அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் தலைவர்கள் உரையாற்றினர். பேரா. கல்யாணி பேசும்போது கைதிகளைப் பார்க்க சிறையில் வரும் உறவினர்கள் அவர்களுடன் பேசுவதற்கு படும் கஷ்டங்களை விவரித்தார். கைதிகளுக்கான ரேஷன் பொருட்களில் நடைபெறும் ஊழல்களையும் எடுத்துச் சொல்லி தலித்துகளும், முஸ்­ம்களும் சிறையில் படும் துயரங்களை விவரித்தார். தோழர் தியாகு பேசும்போது, மும்பை குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதாகக் கூறி முஸ்­ம் களுக்கு வழக்குகளை விரைந்து நடத்தி மரண தண்டனை அளிக்கப்படுகிறது. ஆனால் பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை நடத்தியவர்களுக்கு என்ன தண்டனை? என கேள்வி எழுப்பினார். சிறைவாசிகள் படும் துயரங்களை சிறை சென்ற தனது அனுபவத்தோடு எடுத்துரைத்தவர், 8 வருடங்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் மனரீதியாகவே சிறைவாசி கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து குற்றப்பிரிவுகளை பாராது, அவர்கள் 7 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்து இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இறுதியாகப் பேசிய தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேரணியின் நோக்கங்களை எடுத்துரைத்து அரசு அவற்றை வரும் அண்ணா பிறந்த நாளன்று நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் அடுத்தக் கட்ட போராட்டம் தொடரும் என எச்சரித்தார். (பேராசிரியரின் உரை தலையங்கமாக) இறுதியாக நன்றியுரைக் குப் பின் கூட்டம் எழுச்சியோடு முடிவுற்றது. தலைநகரில் நடந்த பேரணி மனித உரிமை ஆர்வாளர்களின் மீடியா மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததைப் போல் அரசின் கவனத்தை யும் ஈர்த்திருக்கும். மனித உரிமை ஆர்வலர்களின் நியாய மான கோரிக் கையை அரசு ஏற்குமா?

புதன், 12 ஆகஸ்ட், 2009

தீண்டாமை தீண்டாத இஸ்லாம்- அர்ஜுன்சம்பத்!

தீண்டாமை தீண்டாத இஸ்லாம்- அர்ஜுன்சம்பத்!

தினமணி நாளிதழில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு. அர்ஜுன்சம்பத் அவர்கள் 'தீண்டாமை தீண்டாத இஸ்லாம்' என்ற தலைப்பில் தனி இடஒதுக்கீடு தொடர்பான அழகான கட்டுரை வரைந்துள்ளார். அதை படிக்க இங்கே கிளிக் செய்க;http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=12267&boxid=33657156&archive=false

குருத்வாராவில் ஆபாசப் படம்-சீக்கிய பூசாரி கைது

லூதியானா: சீக்கிய குருத்வாராவில் ஆபாசப் படம் பார்த்த பூசாரியை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பஞ்சாபில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அந்த பூசாரி, ஆபாசப் படங்களை தனது மொபைல் போனில் ஸ்டோர் செய்து வைத்திருந்தார்.

லூதியானாவில் உள்ளது ஜர் சஹாப் குருத்வாரா. இந்த கோவிலில் பூசாரியாக இருந்தவர் குர்பிரீத் சிங். இந்தக் கோவிலுக்கு ஒரு பக்தர் தரிசனத்திற்கு வந்தார்.

அப்போது பூசாரி குர்பிரீத் சிங் சரியான முறையில் பூசை செய்யவில்லை. மாறாக அவரது கவனம் முழுவதும் அங்குள்ள ஒரு டேபிளுக்குக் கீழ்தான் இருந்ததாம்.

இதைப் பார்த்த அந்த பக்தர், டேபிளை எட்டிப் பார்த்தபோது செல்போனில் ஆபாசப் படம் இருந்ததையும், அதைத்தான் பூசாரி மிகக் கவனமாக கவனித்துக் கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ந்து போனார்.

அந்த டேபிளில்தான் சீக்கியர்களின் புனித நூலான ஆதிகிரந்தம் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளதாம்.

இதையடுத்து தலைமை பூசாரி ஜஸ்பால் சிங்குக்கு தகவல் போனது. அவர் விரைந்து வந்து குர்பிரீத் சிங்கை கையும் களவுமாக பிடித்தார்.

இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் குர்பிரீத் சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

என்கவுன்டர்கள்

-நன்றி: டெஹல்கா

இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள்! (நன்றி: டெஹல்கா)

சொங்காம் சஞ்சித் (Chongkham Sanjit) என்ற இளைஞரின் வயது 27. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மக்கள் விடுதலைப்படை என்ற இயக்கத்தில் சிறிது காலம் இருந்தார். 2000ஆவது ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டில் உடல் நலம் குன்றியதால் மக்கள் விடுதலைப்படையிலிருந்து விலகினார். எனினும் 2007ம் ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டு தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 23ம் தேதி காலையில், இம்பால் நகரின் சட்டசபை வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் க்வைரம்பான்ட் கெய்தல் கடைவீதிப்பகுதியில் மணிப்பூர் போலிஸ் கமாண்டோப் படை தீவிரவாதிகள் மீதான தேடுதல் வேட்டையை நடத்தியது. அப்போது அப்பகுதியில் சஞ்சித் இருந்துள்ளார்.



கமாண்டோ படையினர் அவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.



கமாண்டோ படையினருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அவர் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.



அவரிடம் ஆயுதங்கள் இருந்ததற்கான அறிகுறியே தெரியவில்லை.
அவர் முகம் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் மிகவும் இயல்பாக இருந்தது.



திடீரென சஞ்சித்தை வளைத்துப்பிடித்தனர் கமாண்டோ படையினர்.


அவரை அருகிலிருந்த மைமு மருந்துக்கடையினுள் இழுத்துச் சென்றனர்.


எந்த ஆயுதமும் வைத்திருந்ததற்கான முகாந்திரமற்ற நிலையில், சஞ்சித்தை சுற்றி ஆயுதபாணிகளான கமாண்டோப் படையினர் சூழ்ந்தனர். சில விநாடிகளில்...


சஞ்சித்தின் சடலம் வெளியே இழுத்து வரப்பட்டது. அவரது உடல் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டது அப்போது அவரது உடலின் அருகில் கமாண்டோ படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரபினா தேவி என்ற கர்ப்பிணி பெண்ணின் உடல் கிடந்தது.



சஞ்சித்தை விசாரிக்க முனைந்தபோது அவர் 9எம்எம் கைத்துப்பாக்கியால் சுட முயற்சி செய்ததாகவும், எனவே வேறு வழியின்றி கமாண்டை படையினரின் தற்காப்புக்காக அவர் கொல்லப்பட்டார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.


ஆனால் சஞ்சித்தின் குடும்பத்தினரோ, நோயுற்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவரது உறவினருக்கு மருந்து வாங்குவதற்காகவே சஞ்சித் அப்பகுதியில் இருந்ததாகவும், அவரிடம் ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர்.


இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரர், அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அச்சம் இருப்பதால் இந்த புகைப்படத்தை வெளியிட துணியவில்லை. ஆனால் டெஹல்கா பத்திரிகையின் செய்தியாளர் தெரசா ரஹ்மானுக்கு இந்த சம்பவம் குறித்தும், புகைப்படம் குறித்தும் தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிப்பூர் கமாண்டோ படையினரின் இந்த வீரசாகசம் டெஹல்கா, 8 ஆகஸ்ட் 2009 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சி நடப்பதாக கூறும் இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளே நடந்து வருகின்றன. ஆனால் இதுபோன்ற புகைப்பட ஆதாரங்கள்தான் சிக்குவதில்லை.

ஈ ஆடும் தனியார் பி.இ. கல்லூரிகள்

தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளை இம்முறை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். கவுன்சிலிங் முடிந்த நிலையில் பலவற்றில் 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கைக்கான கவுன்சிலிங் முடிவடைந்தது. 1 லட்சத்து 9 ஆயிரத்து 829 இடங்களுக்கு நடத்தப்பட்ட கவுன்சிலிங் முடிவில் 78 ஆயிரத்து 664 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள சுமார் 31 ஆயிரம் சீட்கள் காலியாக இருக்கின்றன.

இது கடந்த ஆண்டு சேர்க்கையை (75 ஆயிரத்து 92) விட சுமார் 3 ஆயிரத்தும் கூடுதலாக இருந்தாலும், இந்த ஆண்டு புதிததாக 92 கல்லூரிகள் திறக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில், தமிழகத்தில் இருக்கும் 440 பொறியியல் கல்லூரிகளில் 26ல் தான் அனைத்து சீட்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இவற்றில் 24 அண்ணா பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்.

இந்த கல்லூரிகளில் இருந்த 10 ஆயிரம் சீட்கள் முடிந்துவிட்டன. மாநிலத்தில் உள்ள 32 தனியார் கல்லூரிகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். அந்த கல்லூரிகளில் 80 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்றார் மன்னர் ஜவஹர்.

இதை தவிர்த்து, 135 சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால், அரசு பொறியியல் நிறுவனங்களுக்கு நல்ல மதிப்பு உருவாகியுள்ளது. 38 அரசு கல்லூரிகளல் 99 சதவீதத்துக்கு மேலான இடங்கள் நிரம்பிவிட்டன.

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் வி.கே.ஜெயகொடி கூறுகையில்,

தற்போது காலியாக இருக்கும் சீட்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் மாதம் 4ம் தேதி கடைசி நாள் என்றார் அவர்.

இந் நிலையில் பிளஸ் 2 தேர்வில் உடனடி மறு தேர்வின் மூலம் தேறிய சுமார் 880 மாணவர்கள் இன்று கவுன்சிலிங்கில் கலந்து கொள்கின்றனர்.

நாளை அருந்ததியர் உள் ஒதுக்கிட்டில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதன் பின்னரும் சுமார் 30 ஆயிரம் சீட்கள் காலியாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 17: நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

செ‌ன்னை ‌கீ‌ழ்‌ப்பா‌க்க‌ம் மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரி‌யி‌ல் நர்சிங் படிப்புக்கான கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 17ஆ‌ம் தே‌தி தொட‌ங்கு‌கிறது.

தமிழகத்தில் 105 நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை ஆகிய 3 அரசு மருத்துவ கல்லூரிகளும் அடங்கும்.

102 தனியார் கல்லூரிகள் உள்ளன. பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கு 5,855 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அரசு கல்லூரிகளில் 125 இடங்கள் உள்ளன. இதற்கான கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 17ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி தேர்வுக் குழு செயலர் டாக்டர் ஷீலா கூறுகையில், பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கான கல‌ந்தா‌ய்வு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் தொடங்குகிறது. ஒரு வாரம் க‌ல‌ந்தா‌ய்வு நடக்கும் என்றார்.

இந்தியப் பொருளாதாரத்தைக் காக்கும் சக்தி பொதுத் துறை நிறுவனங்களுக்கே உண்டு! - ஐஎம்எப்

லண்டன்: முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியின் திட்டங்கள் எத்தகைய தொலைநோக்குத் தன்மை கொண்டவை என்பதை இந்தியர்கள் புரிந்து கொள்ள இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்றைய மோசமான பொருளாதாரச் சூழல் உலகையே விழுங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்க, இந்தியப் பொருளாதாரம் மட்டும் இன்னும் தாக்குப் பிடிக்கக் காரணம், இந்தியாவின் பலமான பொதுத் துறை நிறுவனங்களே என சர்வதேச நிதி நிறுவனமான ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

மேலும் உலகில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர மொத்தம் 11.9 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பணம் தேவைப்படும் ஐஎம்எப் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை உலகின் மொத்த வருவாயில் 5-ல் ஒரு பகுதியாகும்.

அதாவது உலகில் உள்ள சிறு குழந்தைகள் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் ரூ. 140076 செலவழிக்கப்பட வேண்டும் என ஐஎம்எப் கூறுகிறது.

இந்த 11.9 ட்ரில்லியன் டாலர் நிதியில் பெரும்பகுதி வளர்ச்சியடைந்த நாடுகளால் செலவிடப்படக் கூடியதாக இருக்குமாம். 1.7 ட்ரில்லியன் டாலர்கள் மட்டுமே வளரும் நாடுகள் செலவிட வேண்டியிருக்கும் என இந்நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் பயப்படும் அளவுக்கு வீழ்ச்சியடையவில்லை என்றும், அதனைச் சீர்படுத்த குறைந்த அளவு தொகையே தேவை எனறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்கள், பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்கும் அளவு பலமானவை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ. 25 லட்சம், 65 பவுன் மோசடி-பில்லி, சூனிய சாமியார் கைது

நெல்லை: பில்லி, சூன்யம் நீக்குவதாக கூறி ரூ. 25 லட்சம் பணம், 65 பவுன் நகைகளை மோசடி செய்த சாமியார் கைது செய்யப்பட்டார்.

பாபநாசம் பொதிகையடியில் அய்யாவழி என்று கூறிகொண்டு சுவிசேஷமுத்து என்பவர் குறி சொல்லி வந்தார். அவருடன் அவரது மனைவி ராமலெட்சுமி உதவி செய்து வந்துள்ளார்.

சுவிசேஷமுத்து அங்கு வருபவர்களுக்கு பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகள் மாந்தரீகம் மூலம் சரி செய்வதாக கூறுவார். மேலும் தனக்கு சாமி அருள் வந்ததாக சொல்லி ஆடுவாராம். குறி சொல்லும் போது தன்னிடம் வந்தவர்களிடம் பணம் வாஙகி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

சில வாரங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த அய்யாபிள்ளை மனைவி அன்னலெட்சுமி என்பவர் சுவிசேஷமுத்து மீது போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஓன்றை கொடுத்தார். அந்த புகாரில் சுவிசேஷமுத்து தனது பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி தன்னிடம் 65 பவுன் நகையையும், ரூ. 25 லட்சமும் வாங்கி மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சுவிசேஷமுத்துவை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3ம்தேதி சுவிசேஷமுத்து முன்ஜாமீன் பெற்று, தினமும் காவல் நிலையத்தில் வந்து கையெழுத்து போட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று அம்பை வேலாயுதப்புரத்தை சேர்ந்த விவசாயி மணி மற்றும் வழுதூரை சேர்ந்த பிரம்மநாயகம் ஆகியோர் தங்களிடம் சுவிசேஷமுத்து ரூ.35 ஆயிரம் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில் டாணா பஸ் நிலையத்தில் சுவிசேஷமுத்துவை போலீசார் கைது செய்து அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்தோனேசியாவில் விமானம் விழுந்து நொறுங்கியது

இந்தோனேசியா அருகேயுள்ள பபுவா நியூகுனியா நாட்டில் இருந்து கோகோயாவுக்கு ஒரு பயணிகள் குட்டி விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 13 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 9 பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள்.

கோகோயா அருகே சென்றபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த விமானம் ஒரு காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

தகவல் அறிந்ததும் கோகோயா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். ஆனால், அங்கு சீதோஷ்ண நிலை சரியில்லை. இதை தொடர்ந்து அவர்களால் காட்டுப் பகுதிக்குள் செல்ல முடியவில்லை. விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

முஸ்லிம்களுக்கு ஐ. ஏ. எஸ். தேர்வுக்கான பயிற்சி மையம்

மும்பையில் உள்ள ஹஜ் ஹவுஸ் (Haj House) எனும் ஹாஜிகள் இல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நீண்ட நாளாக எதிர்பார்க்கப் பட்ட முஸ்லிம்களுக்கான ஐ.ஏ.எஸ் (Indian Administrative Service) தேர்வு பயிற்சி மையத்திற்கான இறுதி வடிவத்தை இந்திய ஹஜ் கமிட்டி, தனது ஹஜ் இல்லக் கட்டடத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் முன் வைத்தது.

முஸ்லிம்களில் தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ் (Indian Administrative Service) தேர்வுக்கான கட்டணப் பற்றாக்குறை போன்ற குறைபாடுகளால் தேர்ச்சிபெற இயலாமலாகி விடும் மாணவர்களின் துயரத்துக்குத் தீர்வாக, இந்தப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டத்தை நான்கு மாதத்திற்கு முன்னர் இந்திய ஹஜ் கமிட்டி கையெடுத்தது. இதுவரை ஆய்வில் இருந்த இந்தத் திட்டத்திற்கு நேற்று மும்பையில் இறுதி வடிவம் அளிக்கப்பட்டது.

மும்பையில் இதுவே ஐ.ஏ.எஸ் (Indian Administrative Service) தேர்வுக்காக ஏழை முஸ்லிம் மாணவர்களுக்குக் கிடைக்கும் முதல் இலவசப் பயிற்சி வாய்ப்பாகும்.

நேற்று மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் மும்பையிலுள்ள அக்பர் பீர்பாய் கல்லூரியின் முன்னாள் தலைமைப் பேராசிரியர் எஸ்.ஏ.எம் ஹாஷ்மீ அவர்கள் இதன் தலைமை இயக்குனராகத் தேர்வு செய்யப்பட்டார்கள். மும்பையின் பிரபலமான ஹஜ் ஹவுஸ் கட்டிடத்தின் நான்கு மாடிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் மாணவர்களுக்காக வகுப்பறை, ஹாஸ்டல் வசதி, தங்கும் அறை மேலும் உணவகமாகவும் கீழ்மாடி நூலகமாகவும் செயல்படும்.

பயிற்சிக்கு முதற்கட்டமாக 50 மாணவர்கள் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தொடர்புக்கு

Haj Committee of India,

7-A, Haj House,

M.R.A. Marg (Palton Road),

Mumbai - 400 001.

Phone : 022-22618862/22612989

022-22613110/22652393

Fax : 022-22620920/22630461

Email : hajcommittee@hathway.com எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்

http://www.hajcommittee.com

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தைச் சார்ந்த UPSC தகுதியுடையவர்கள் இந்தத் தேர்வில் பங்கு பெறலாம். தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர்களில் பொருளாதார வசதியுடையவர்கள் மாதந்திரக் கட்டணமாக ரூ 2,000/ (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) கட்ட வேண்டும். மேலும் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும்.

இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமை நிர்வாகி ஜனாப் முஹம்மது உவைஸ் அவர்கள் கூறுகையில், "இந்த மையம் மாணவர்களின் பயிற்சிக்கு தேவையான அனைத்து சாதனங்களையும் வசதிகளையும் வழங்கும். தகுதியும் திறமையும் உள்ள ஆசிரியர்களின் சேவை இந்த பயிற்சி மையத்திற்குக் கிடைத்திடும் முயற்சியில் அவர்களோடு நாங்கள் தொடர்பு கொண்டு வருகிறோம். மேலும் நாங்கள் இந்த நற்செய்தியை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் நாட்டின் எல்லாப் பகுதி மக்களுக்கும் சென்றடைய செய்து அதன் மூலம் நாட்டின் எல்லாப் பகுதியில் உள்ள முஸ்லிம் மாணவர்களும் பலனடைய வேண்டும் என்பதற்காக இச்செய்தியைப் பரவலாக்குகிறோம்" என்று கூறினார்.

மேலும் எதிர்வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி (16th August 2009 ) பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தை சமர்பிக்கும் இறுதி தேதியாகும் என்றும் தேர்வுத் தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

அரசு கல்வி உதவித்தொகை

மத்திய அரசின் சிறுபான்மையினர் நல வாரியம் கடந்தசில நாட்களுக்குமுன் நாளிதழிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது.. சிறுபான்மையினர் கல்விபயிலும் கலாசாலைகளில் சிறுபான்மையினர் கல்வி உதவிதொகைக்கான விண்னப்பங்களை செலுத்தி கல்வி உதவி தொகைகளை மத்திய அரசால் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்தமுறை மத்திய அரசால் வழங்கப்பட்ட இதுபோன்ற உதவி தொகைகளை சிறுபான்மையினர் பெற்றுகொள்ள முன்வராத காரணத்தால் அந்த தொகை திருப்பியனுப்பியுள்ளதை நாமெல்லாம் அறிந்த ஒன்று எனவே இம்முறை இதுபோன்ற அரசு சலுகைகளை பெற்றால் தான் இனிவரும் சலுகைகளை முறையாக பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை கீழ்கண்ட வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். இந்த உதவியை தண்ணார்வலர்கள் செய்து இறைபொருத்ததை பெற்றுக்கொள்ளவும்.

www.minorityaffairs.gov.in

குறிப்பு:இந்த விண்னப்பங்களை பெற்றுக்கொள்ள மறுக்கும் கல்வி ணிலையங்களை மாவட்ட ஆட்ச்சியாளரிடம் புகார் தெரிவிக்கலாம். எல்கெஜி முதல் அனைத்து வகுபினருக்கும் இது பொருந்தும்

அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களால் அரசு பஸ் நிறுவனத்திற்கு ரூ. 7.5 லட்சம் நஷ்டம்?



முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன்திமுகவில் சேருவதற்கு திங்கள் கிழமை சென்னை வந்த வகையில், மதுரையை தலைமையிடமாகக் கொண்ட அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டத்துக்கு ரூ. 7.50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.
தனி நபர்கள் அரசு பஸ்களை வாடகைக்கு எடுத்துச் செல்லவிரும்பினனால் 55 இருக்கைகளுக்கு ஒன்றரை மடங்கு கட்டணம் என்ற அடிப்படையில் பணம் செலுத்தவேண்டும் என்பது விதி . தனியாக எடுத்துச் செல்வதால் இடையில் வேறு பயணிகளை ஏற்றமுடியாது என்பதால், அரைப் பங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இப்போது அரசு பஸ்களில் கிலோ மீட்டருக்கு 28 பைசா கட்டணம் உள்ளது. இருந்தாலும், எக்ஸ்பிரஸ், பி . பி . என்றபெயர்களில் கிலோ மீட்டருக்கு 32 பைசாவரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் மதுரை கோட்டத்தில் 60 அரசு பஸ்களை வாடகைக்கு எடுத்து, சென்னை வந்தனர்.இவர்களுக்கு கிலோ மீட்டருக்கு 28 பைசா என்ற அளவிலேயே கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் ஒன்றரை மடங்கு வசூலிக்கப்படவில்லை. ஒரு பங்கு மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு இருக்கைக்கும் ரூ. 245 என்ற அளவி ல் போக்குவரத்துக் கழகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களுக்காக பஸ்கள் கொடுத்ததில் இந்தப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 7.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் மாநாடுகளுக்கு வாடகை இல்லாமல் தனியார் பஸ்களை எடுத்துச் செல்கிறார்கள் என்று முன்பு குற்றஞ்சாட்டப்படுவது உண்டு. அரசு பஸ்களும் கூட இவ்வாறு பயன்படுத்தப்படுவதாகக் கூறியதுண்டு . இப்போது அதில் மாற்றங்கள் வந்துவிட்டன. இருந்தாலும், ஒரே நாளில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்டத்துக்கு ரூ. 7.50 லட்சம் நஷ்டம் ஏற்படுவதற்கு ஆளுங்கட்சியில் புதிதாகச் சேர்ந்துள்ள தொண்டர்கள் காரணமாக இருந்துள்ளனர்.

இதுபற்றி யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் மவ்னமாக உள்ளனர்.

நன்றி;தினமணி, 11 -08 -09

ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் அவசியம்: சசி தரூர்

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு பாஸ்போர்ட் கட்டாயம் தேவை என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் சசி தரூர் கூறியிருக்கிறார்.


உரிய பயண ஆவணங்கள் இருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று சவுதி அரேபிய அரசு இந்த முறை கூறிவிட்டதால், ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் கட்டாயம் என்று அவர் கூறினார்.

இதுவரை ஹஜ் பயணிகள் சிறப்பு யாத்ரிகர் அனுமதி பெற்று சவுதி அரேபியாவிற்கு சென்று வந்தனர். ஆனால் இந்த முறை பாஸ்போர்ட் உடன், வைரஸ் காய்ச்சல் தடுப்பு குறித்த சான்றிதழும் அவசியம் என்று அந்நாட்டு அரசு கோரி விட்டதாக தெற்கு மற்றும் மேற்கு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகளைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசி தரூர் கூறினார்.

பல்வேறு மாநில ஹஜ் கமிட்டிகளால் ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேரில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகர்களுக்கான சிறப்பு பாஸ்போர் பெறுவதற்கான தேதி ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டபோதிலும், இதுவரை பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்காதவர்கள், உடனடியாக விண்ணப்பிக்குமாறு சசி தரூர் கேட்டுக் கொண்டார்.

சிறப்பு பாஸ்போர்ட் 8 மாத காலத்திற்கு செல்லுபடியாகக் கூடியது.