நர்சிங் படிப்புக்கான கல‌ந்தா‌ய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நர்சிங் படிப்புக்கான கல‌ந்தா‌ய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஆகஸ்ட், 2009

ஆகஸ்ட் 17: நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

செ‌ன்னை ‌கீ‌ழ்‌ப்பா‌க்க‌ம் மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரி‌யி‌ல் நர்சிங் படிப்புக்கான கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 17ஆ‌ம் தே‌தி தொட‌ங்கு‌கிறது.

தமிழகத்தில் 105 நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை ஆகிய 3 அரசு மருத்துவ கல்லூரிகளும் அடங்கும்.

102 தனியார் கல்லூரிகள் உள்ளன. பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கு 5,855 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அரசு கல்லூரிகளில் 125 இடங்கள் உள்ளன. இதற்கான கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 17ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி தேர்வுக் குழு செயலர் டாக்டர் ஷீலா கூறுகையில், பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கான கல‌ந்தா‌ய்வு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் தொடங்குகிறது. ஒரு வாரம் க‌ல‌ந்தா‌ய்வு நடக்கும் என்றார்.